குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

13.1.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நபி மொழி தொகுப்பு
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே...


தூய எண்ணம்
அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.


(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:

சீர்திருத்தத்திற்கும், ஒழுக்கப் பயிற்சிக்கும் மிகத் தேவையான, முக்கியமானதொரு நபிமொழியாகும் இது. நபியவர்களின் இந்தப் பொன்மொழிக்குப் பொருள் இதுதான். நற்செயல்களின் விளைவுகள், எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எண்ணம் சரியானதாக இருப்பின், அந்க நற்செயலுக்கான கூலி கிடைக்கும். இல்லையெனில் கிடைக்காது அச்செயல் பார்ப்பதற்கு எவ்வளவு நல்லதாகாத் தோன்றினாலும் சரியே.

அச்செயல் இறைவனின் திருப்திக்காகச் செய்யப்பட்டு இருந்தால்தான் மறு உலகில் அதற்கான நற்கூலி கிடைக்கும். அந்தச்செயலை அவன் செய்வதற்கு உலக ஆசை தூண்டுகோலாய் இருக்குமானால், உலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவன் அதனைச் செய்திருந்தால். மறுஉலகில் அச்செயல் விலை போகாது; அதற்கு மதிப்பு இருக்காது. ஆவனுடைய இந்தச் செயல் அங்கு செல்லாக்காசாகத்தான் கருதப்படும்.

இந்த உண்மையைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை எடுத்துக்காட்டாகக் கூறி தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஹிஜ்ரத் என்பது எவ்வளவு பெரிய நற்செயல்! இருப்பினும் எவராவது இந்த நற்செயலை இறைவனுக்காகவும், இறைத்தூதருக்காகவும் புரிந்திடாமல் தம் உலகாதாய நோக்கங்களைப் பெற்றிட இதனைச்செய்வாராயின் வெளிப்படையாகப் பார்த்தால், அது மிகப் பெரிய நற்செயலாகத் தென்படும். ஆனால், இந்தச் செயலால் மறுஉலகில் எவ்விதப் பலனும் கிட்டாது. இதற்கு நேர்மாறாக அச்செயல் புரிந்தவர் போலித்தனம், மோசடி ஆகிய குற்றங்களுக்குத்தான் ஆளாவார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். புpறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்:

நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?

அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறைநீதிமன்றத்தில்; நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள்நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்:

இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?

இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருற்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில்; நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.

அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருற்தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்

இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப் புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசிவிடுங்;கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். (முஸ்லிம்)

விளக்கம்:

மேற்சொன்ன மூன்று அறிவிப்புகளும் தெளிவுபடுத்தும் உண்மை இதுதான்: மறுமை வாழ்வில் ஒரு நற்செயலின் புறத்தோற்றத்தைக் கொண்டு எந்த வெகுமதியும் கிடைத்துவிடாது. அங்கு இறைவனின் திருப்திக்காகவும் உவப்புக்காகவும் செய்யப்படும் நற்செயலே நற் கூலிக்கு உரியதாய் கணிக்கப்படும். ஏக இறைவனை விடுத்து மற்றவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவோ மக்களிடம் உயர் மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ ஒரு செயல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு இறைவனின் பார்வையில் எள்ளளவும் மதிப்பில்லை, அது எவ்வளவு பெரிய நற்செயலாகத் தென்பட்டாலும் சரியே! மறுஉலகில் அச்செயலுக்கு எந்த மதிப்பும் இருக்காது. இறைவனின் துலாக்கோலில் அது செல்லாக் காசாகத்தான் கணிக்கப்படும்.

மேற்சென்ன தன்மைகள் கொண்ட இறைநம்பிக்கை அங்கு ஒருவனுக்கு எந்தப் பலனையும் தராது. அத்தகைய வணக்கங்கள் எந்த புண்ணியமும் ஈட்டித் தராது.

யதார்த்த நிலை இதுதான். இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. நுpலைமை இவ்வாறிருக்க வெளிப்பகட்டுக்காகவும், புகழாசைகளுக்காகவும் செயல்படும் உணர்வுகள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவை பெரும் நாசத்தை விளைவிக்கக்கூடாது. இல்லையெனில் நம் உழைப்பு, முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். நம்முடைய இந்த முதலீடு வீணாகிவிட்டதே என்று நாம் மறுமையில் கை பிசைந்து நிற்போம். சின்னஞ்சிறு நற்செயலும் நமக்கு முணை செய்;யாதா என்று தவித்து நிற்கும் அந்த மறுமைநாளில், நம்முடைய வாழ்வின் முதலீடு முழவதும் முற்றிலும் வீணாகிவிட்டிருப்பது தெரியவரும்.

வணக்கங்கள்

;தொழுகையின் முக்கியத்துவம்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

'உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?' என பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், 'இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது' என்றார்கள். 'இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:

பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம், தொழுகை மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சிறந்த சாதனம் எனும் பேருண்மையினைத் தெளிவுபட விளக்கியுள்ளார்கள். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் உணர்த்துகிறார்கள்: தொழுவதினால் ஒருவனின் உள்ளத்தில் நன்றியுணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பயனாக இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டிய பாதையில் சிறப்பாக முன்னேறிச் சென்றவண்ணம் இருக்கின்றான். இறைவனுக்கு கீழிப்படியாமை, மாறுசெய்தல் ஆகியவற்றிலிருந்து அவன் தூர விலகிக்கொண்டே செல்கிறான். எப்பொழுதேனும் அவனிடம் தவறெதுவும் நிகழ்ந்து விட்டால்கூட அது அறிந்தும் புரிந்தும் அவன் செய்ததாய் இருக்காது. அறியாமல் ஏற்பட்;ட பிழையாகவே இருக்கும். ஆயினும், அதனை உணர்ந்த உடனே அவன் தனது இறைவனின் திருமுன் தலைகுனிந்து விடுகின்றான். அழுதழுது மன்னிப்புக் கோருகின்றான்.

45.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். 'நம் கதி என்னவாகுமோ?'என நினைத்து அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார்.

செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.

'பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.' (திருக்குர்ஆன் 11:114)

இதைக்கேட்ட அந்த மனிதர் 'எனக்கு மட்டும்தானா?' என வினவினார்.

'இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்' என நவின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி,முஸ்லிம்;)

விளக்கம்:

தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது என்பது இங்கும் உறுதிப்படுத்தப்படுகிறது.

வேண்டுமென்றே பாவம் செய்யாத ஓர் இறைநம்பிக்கையாளரைப் பற்றியே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையாளர்தான் என்றாலும் அவரும் ஒரு மனிதர்தானே? உணர்ச்சிகளுக்குப் பலியாகி, ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டுவிட்டார். பிறகு வெட்கமும் அவமானமும் ஏற்பட்டு அவர் உள்ளத்தை உறுத்தின. இந்த மனவுறுத்தல்தான் அவரை நபியவர்களிடம் ஓடிவரச் செய்தது. செய்த தவறைச் சொல்லி தண்டிக்கும்படியும் கேட்க வைத்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஹூத்' அத்தியாயத்தின் மேற்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

இரவிலும் பகலிலும் தொழுகையை நிலைநாட்டுவதை இறைவன் நம்மீது கட்டாயமாக்கியுள்ளான் என்பதும், மேலும் பாவங்களுக்குப் பரிகாரம் நற்செயல்கள் புரிவதே என்பதும் தெளிவாகிறது.

செய்த தவறை தாமாகவே முன் வந்து ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு எத்தகையச் சிறந்த பயிற்சியை அளித்திருந்தார்கள் என்பதும் நமக்குத் தெளிவாகிறது.

45 யு. அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) நவின்றார்கள்: 'ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ - இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.' (அபூதாவூது)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: 'எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்கார்.' (முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்)

விளக்கம்:

இந்த நபிமொழியில் 'முஹாஃபளத்' எனும் வினைச்சொல் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் கவனித்தல், கண்காணித்தல், பேணுதல் என்பதாகும். தொழுகின்ற மனிதன் நாம் ஒழுங்காக ஒளூ செய்தோமா இல்லையா என்றும், ருகூஉழூ, ஸுஜூதுழூ ஆகியவற்றின் நிலை என்ன என்றும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். இறுதியாக அவன் கவனித்துப் பார்க்க வேண்டிய விஷயம் இதுவாகும்: தொழுகையின் போது அவனது உள்ளத்தின் நிலைமை எப்படி இருந்து வருகிறது? 'உரகப் பணிகளிலும் - கற்பனை எனும் ஓடைகளிலும் தடுமாறித் திரிந்து கொண்டிருக்கிறதா? அல்லது தனது இறைவனின் பக்கம் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறதா?' என்று கண்காணிக்க வேண்டும். எவர் இத்தகைய வெனத்தடனும் கண்காணிப்புடனும் தொழுகைகளைத் தொழுது வந்தாரோ,எவருடைய உள்ளத்தின் நிலை இவ்வாறு இருந்ததோ, அவர் வாழ்க்கையின் பிற விவகாரங்களிலும் இறைவனுக்கும அடிபணியும் அடியானாக வாழிந்திட முயற்சி செய்வார், மறுமையிலும் வெற்றியடைவார்.

ழூருகூஉ: தொழுகையின்போது கைகளை முழங்காலில் வைத்துக் கொண்டு குனிந்து நிற்கும் நிலைக்கு ருகூஉ எனப்படும்.

ழூஸுஜூது: தொழுகையில் இரு உள்ளங்iகாளையும் தரையில் ஊன்றிக் கொண்டு முழந்தாளிட்டு, நெற்றியை பூமியில் வைத்து வழிபடும் நிலைக்கு ஸுஜூது எனப்படும்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணைவைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களைழூ கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.' (முஸ்லிம்)

ழூரக்அத்: இது தொழுகையின் ஒரு பகுதியாகும். இதில் தொழுபவர் இறைவன் முன் தலைகுனிந்து கைகட்டிக் கொண்டு நிற்கின்றார், ஓதுகின்றார். பிறகு ருகூவும், ஸுஜூதும் செய்கின்றார்.

விளக்கம்:

இந்த நபிமொழியின் வாயிலாக இறைநம்பிக்கையாளன், நயவஞ்சகன் ஆகிய இருவருடைய தொழுகைக்குமிடையேயுள்ள வேறுபாடு தெளிவாக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையாளன் தன் தொழுகையை நேரப்படி தொழுகிறான். ருகூவும், ஸுஜூதும் சரியாக - ஒழுங்காகச் செய்கிறான். அவனது உள்ளம் இறைவனின் நினைவிலேயே லயித்திருக்கின்றது. நயவஞ்சகன் சரியான நேரப்படி தொழுவதில்லை. அவனது உள்ளம் இறைவனின் முன்னால் இருப்பதில்லை. ஒவ்வொரு தொழுகையும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்றாலும், ஸுப்ஹு (அதிகாலை )த் தொழுகை மற்றும் அஸ்ரு (மாலை)த் தொழுகை ஆகியவற்றில் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் உள்ளது. பொதுவாக அந்த நேரத்தில்தான் மக்கள் தம்முடைய வாணிபங்களில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே அது தொழுகையைக் குறித்து மறதி ஏற்படும் நேரமாகும். இலவு வருவகற்குள் கொடுக்கல் - வாங்கலை முடித்துக் கொள்ள வேண்டும், பரந்து விரிந்திருக்கும் தங்களின் பணிகளைச் சுருக்கமாக முடித்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புவார்கள். இறைநம்பிக்கையாளனின் உள்ளம் விழிப்புணர்வோடு இருக்காவிட்டால், 'அஸ்ரு' தொழுகையை நிறைவேற்றாமலிருக்கும் ஆபத்திற்குள்ளாக நேரிடலாம், ஸுப்ஹு தொழுகையின் முக்கியத்துவத்திற்துக் காரணம் இதுதான். ஸுப்ஹு நேரம் உறங்கிக் கொண்டிரக்கும் நேரம். இரவின் இறுதிப்பகுதியில் வரும் உறக்கம் மிக ஆழிந்ததாயும் இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இத்தகைய நேரத்தில் மனிதனின் உள்ளத்தில் இறைநம்பிக்கை உயிர்த்துடிப்புடன் இல்லாவிட்டால், தனக்கு விருப்பமான உறக்கத்தை விட்டுவிட்டு இறைவனை நினைவு கூர்வதற்காக அவனால் எழுந்திட முடியாது!

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர - இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கம் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, 'நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?' என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,

'நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்'என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:

வைகறைத் தொழுகைக்கும் மாலைநேர (அஸர்)த் தொழுகைக்கும் உள்ள முக்கியத்துவத்தை நன்கு புலப்படுத்துகின்றது, இந்த நபிமொழி. வைகறைத் தொழுகையில் இரவில் பணியாற்றிய வானவர்களும், பகலில் பணியாற்றப்போகும் வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள். இதேபோன்று மாலைத் தொழுகையிலும் இவ்விரு தரத்து வானவர்களும் நம்பிக்கையாளர்களுடன் தொழுகையில் இணைந்து கொள்கிறார்கள்.இறைநம்பிக்கையாளர்களுக்கு வானவர்களுடன் சேர்ந்து தொழும் வாய்ப்பைவிட நற்பேறு வேறு உளதோ?

உமர்பின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ - அதனைக் கண்காணித்தவண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் மழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான்.(மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக்கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணெருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.'(புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)

நான் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் 'வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!' (முஸ்னத் அஹமத்)

விளக்கம்:

இந்த அருள்மொழியின் மூலம் நபியவர்கள் ஓர் உண்மையை விளக்கிக்காட்ட விரும்புகிறார்கள், அதாவது எந்த ஒரு நற்செயலைக் செய்தாலும் இறைவனின் திருக்தியைப் பெறும் நோக்குடன் செய்ய வேண்டும். 'இது என் அதிபதியாகிய இறைவனின் கட்டளை, அவனுடைய உவப்பை பெறுவதே என் நோக்கமாகும்' எனும் எண்ணம் இருக்கவேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் நல்லவன் போல் நடித்து, அவர்களை மகிழ்விப்பதற்காகவே ஒருவன் நற்பணியாற்றுவானாகில் அச்செயலுக்கு எவ்வித மதிப்பும் இல்லை. இறைவனின் உவப்பைப் பெறும் பொருட்டுப் செய்யப்படும் நற்செயலுக்கே இறைவனிடம் நன்மதிப்புண்டு.

அணிவகுப்புத் தொழுகை

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் '(ஷரீஅத் அனுமதி தந்திருக்கும் காரணங்களின்றி) முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்து தனியே பிரிந்து சென்று தொழுபவர்களைவிட ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவோருக்கு இருபத்தேழு பங்கு அதிகமான நன்மை கிடைக்கின்றது.' (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :

மூலத்தில் 'பஸ்ஸி' எனும் அரபிச் சொல் கையாளப்பட்டுள்ளது. அதன் பொருள், தனியே பிரிந்து செல்பவன் என்பதாகும். அணிவகுப்புத் தொழுகையில் அரசன் என்றும், ஆண்டி என்றும், உயாதர ஆடையை உடுத்தியவனென்றும், அழுக்கடைந்த பழைய ஆடையை உடுத்தியவனென்றும் பேதமில்லாது எல்லாத் தரத்து முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றார்கள். தூன் எனும் அகம்பாவத்துடன், செல்வச் செருக்கில் தன்னை மறந்து வாழிபவர்கள்தாம் தம்முடன் பிறரும் சேர்ந்து நிற்பதை விரும்புவதில்லை. எனவே அத்தகையவர்கள் தொழுகைகளைத் தம் வீட்டிலேயே நிறைவேற்றுகிறார்கள். போருமானார் (ஸல்) அவர்கள் இத்தகைய மனநோயைக் களையவே வீட்டிலோ, பள்ளியிலோ தனித்துத் தொழக்கூடாது என்றம், அணிவகுப்பாக நின்றே தொழவேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்கள்.

இதில் மற்றொரு நன்மையுமுண்டு. பொதுவாகவே அணிவகுப்பில் நெர்ந்து தொழுவதால் ஷைத்தானின் தூண்டுதல் குறைவாகின்றது. முனிதனுக்கு இறைவனோடு தொடர்பும் வலுப்பெறுகின்றது. இதன் காரணமாகவே அணிவகுப்புத் தொழுகையின் சிறப்பும், அதற்கான நன்மையும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க இருபத்தேழு மடங்கு அதிகமாகின்றது.

அறிவிப்பாளர் : உபைபின் கஅப் (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.)'(அபூதாவூது)

அறிவிப்பாளர் : அபுத் தர்தா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் 'ஒரு பேரூரில் அல்லது சிற்றூரில் முஸ்லிம்களில் மூவர் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்படவில்லையானால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதை இன்றியமையாததெனக் கொள்! ஏனென்றால், இடையனை விட்டும், மந்தையை விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் (எளிதில்) வேட்டையாடுகிறது.' (அபூதாவூது)

விளக்கம் :

ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவோர் மீது இறைவனின் அருள் பொழிகின்றது, அவர்களை அவன் பாதுகாக்கின்றான் எனும் பேருண்மை இந்த நபிமொழியில் உணர்த்தப்படுகின்றது. ஆயினும் எவ்வூரிலேனும் ஜமாஅத் ஏற்படுத்தப்படவில்லையாயின் அங்குள்ளோரைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அல்லாஹ் தன்னை விடுவித்துக் கொள்கின்றான். பிறகு அவர்கள் ஷைத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். அவன் (ஷைத்தான்) அவர்களை விரும்பிய வழியில் வேட்டையாடுகிறான். வுpரும்பிய வழியில் செலுத்துகிறான்.

இதற்கு ஓர் உவமை கூறி இங்கு விளக்கப்படுகின்றது.

அதாவது, ஆட்டுமந்தை எப்போதும் மன்னை மேய்க்கும் இடையனின் அருகிலேயே இருந்து வந்தால் அதற்கு இருமடங்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. ஒன்று, இடையனின் கண்காணிப்பு. மற்றொன்று, தமக்கிடையேயுள்ள கூட்டுவலிமை. இந்த இரண்டு காரணங்களால் அவற்றை ஓநாயால் வேட்டையாட முடிவதில்லைஇ எனினும் மந்தையிலுள்ள ஓர் ஆடு மேய்ப்பனின் விருப்பத்திற்கு மாறாக மந்தையை விட்டுப் பிரிந்து, மற்ற ஆடுகளுக்கு முன்போ, பின்போ வெகுதூரம் சென்றுவிட்டால் மிக எளிதில் ஓநாய் அதனை வேட்டையாடிவிடும். ஏனென்றால் அது ஒரு வலுவற்ற சிற்றுயிர், மேலும் அது இடையனின் பாதுகாப்பையும் இழந்து நிற்கின்றதே!

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'ஒருவன், முஅத்தின் (பாங்கு சொல்பவர் ) தொழுகைக்காக விடுக்கம் அழைப்பினைச் செவியேற்றதும் - அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமைநாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.'

அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், 'காரணம் என்று கூறினீர்களே, அது என்ன? எவை எவை காரணங்களாக அமைய முடியும்?' என வினவ, 'அச்சமும் நோயும் தாம்!' என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள்.(அபூதாவூத்)

விளக்கம் :

'அச்சம்' என்று இங்கு பொதுவாகக் கூறப்பட்டதன் கருத்து, பகைவனால், கொடிய விலங்குகளால், பாம்பு போன்ற நச்சுப் பிராணிகளால் அழிவு நேரும் எனும் அச்சமாகும்.

ஒருவன் பள்ளிவாசல் வரை சென்றுவர வலிமையற்றுப்போகும் நிலையினையே 'நோய்' எனும் சொல் இங்கு உணர்த்துகின்றது. புயற்காற்று, மழை, வழக்கத்திற்கு மாற்றமான கடும் குளிர் முதலிய காரணங்களும் இதில் அடங்கும், ஆயினும், குளிர் பிரதேசங்களில் காணப்படும் குளிரை ஒரு காரணமாக குறிப்பிட முடியாது. முhறாக, வெப்பப் பிரதேசங்களில் சில சமயம் கடுமையான குளிh ஏற்படுகிறது, அது அவனது உயிருக்கே உலை வைத்துவிடுகின்றது. அத்தகைய குளிரும் ஒரு காரணமாக அமையலாம். இதேபோன்று ஜமாஅத் தொழுகைக்கு 'இகாமத்' சொல்லப்படும் சமயத்தில் ஒருவனுக்கு மலஜலம் கழிக்க வேண்டிய இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டுவிடுமாயின் அதுவும் காரணங்களில் ஒன்றாகவே கருதப்படும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில்) ஊரறிந்த நயவஞ்சகன், நோயுற்றவன் ஆகியோரைத் தவிர எங்களில் எவரும் கூட்டுத் தொழுகையை விட்டும் பின் தங்கமாட்டார்கள். (அம்மக்களின் நிலை எவ்வாறிருந்ததென்றால்) நோயுற்றவர், நோயுள்ள நிலையிலும்கூட இருவரின் ஒத்துழைப்புடன் பள்ளிவாசலை அடைந்து அணிவகுப்புத் தொழுகையில் கலந்து கொள்வார். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) இது தொடர்பாக மேலும் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு 'சுன்னத்துல் ஹுதா'வை (சட்டத்தகுதி கொடுக்கப்பட்டு, உம்மத்தோரனைவரும் பின்பற்றியாக வேண்டும் என்று கட்டளையிடப்பட்ட சுன்னத்துகளை) கற்றுத் தந்தார்கள். பாங்கு முழங்கப்படுகின்ற பள்ளியில் நிறைவேற்றப்படும் தொழுகையும்கூட சுன்னத்துல் ஹுதாவில் அடங்கும்.

மற்றோர் அறிவிப்பில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறு காணப்படுகிறது:

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர் - ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்கு 'சுன்னத்துல் ஹுதா'வைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம். நயவஞ்சகர்கள் தம் தொழுகைகளை வீட்டில் இருந்துகொண்டு நிறைவேற்றுவது போல் நீங்களும் வீட்டில் இருந்தவாறே தொழுகைகளை நிறைவேற்றுவீர்களாயின் நீங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டால் நேரிய வழியை (ஸிராத்துல் முஸ்தகீமை) விட்டவர்களாகின்றீர்கள். (முஸ்லிம்)


இமாமத் : தொழுகையில் தலைமை தாங்குதல்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இமாம் பொறுப்பாளரும், முஅத்தின் (பாங்கு சொல்பவர்) நம்பிக்கையுள்ளவருமாவார்கள். இறைவா! இமாமத் செய்பவர் (தலைமை தாங்குபவர்)களை நல்லவர்களாக்குவாயாக! பாங்கு சொல்வோருக்கு மன்னிப்பை அருள்வாயாக!' (அபூதாவூது)

விளக்கம் :

இமாம் - 'பொறுப்பாளர்' என்பதன் கருத்து இது: அவர் மக்களின் தொழுகைக்குப் பொறுப்பாளராகிறார், அவர் நல்லவராக, ஒழுக்கசீலராக இல்லாது போனால் எல்லோருடைய தொழுகையையும் பாழாக்கிவிடுவார். எனவே, பெருமானார் (ஸல்) அவர்கள் 'இறiவா! இமாம்களை நல்லவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் திகழச் செய்வாயாக!' என்று துஆ செய்தார்கள். முஅத்தின் (பாங்கு சொல்பவர்) 'நம்பிக்கையுள்ளவர்' என்பதன் பொருள் இதுவாகும்: மக்கள் தம் தொழுகை தொடர்பான விவகாரங்களை அவரிடம் ஒப்படைத்திருந்தார்கள். எனவே அவர் உரிய நேரத்தில் பாங்கு சொல்ல வேண்டும். அதனைக் கேட்டுத்தான் மக்கள் தொழுகைக்கு தயாராகி ஜமாஅத்தில் கலந்து கொள்ள விரைந்து வருவார்கள். அவர் உரிய நேரத்தில் பாங்கு சொல்லாது போயின் பெரும்பாலோருக்க ஜமாஅத்தில் கலந்து கொள்ளம் வாய்ப்பு கிட்டாது போய்விடும். அல்லது ஒன்றிரண்டு ரக்அத்துக்கள் தவறிவிடவும் கூடும்.

இந்த நபிமொழி ஒருபுறம் இமாம்களுக்கும் முஅத்தின்களுக்கும் அவர்கள் தம் பொறுப்பினை உணருமாறு அறிவுரை கூறுகின்றது. மறுபுறம் இமாமத் செய்வதற்கு ஒழுக்கமும் இறையச்சமும் உள்ள ஒருவரையும், பாங்கு சொல்வதற்கு பொறுப்புகளை உணர்ந்து செயலாற்றும் ஒருவரையும் தேர்ந்தெடுக்கமாறு முஸ்லிம் சமூகத்தாருக்கு அறிவுரை கூறுகின்றது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் 'உங்களில் எவரேனும் தொழுகை நடத்தினால் (சூழ்நிலையை அனுசரித்தும், தொழக்கூடியவர் எத்தகையவர் என்பதைப் புரிந்து கொண்டும்) இலகுவான முறையில் தொழவைக்கவும். ஏனென்றால், பின் நின்று தொழுவோரில் நோயுற்றவர்கள், இயலாதவர்கள், முதியவர்கள் ஆகியோரும் இருக்கக்கூடும். (ஆயினும்) நீங்கள் மட்டும் (தனித்து) தொழுதால் எவ்வளவு நீண்ட தொழுகை வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம்.' (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அன்ஸாரி (ரலி)

ஒருவர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து 'இன்ன இமாம் அதிகாலை (ஸுப்ஹு) தொழுகையை நீட்டி தொழ வைக்கிறார். இதனால் அதிபாலையில் நடைபெறும் கூட்டுத் தொழுகையில் சற்று தாமதித்தே நான் கலந்து கொள்கிறேன்' என்றார். அன்றைய நாளிலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கோபித்ததைப் போன்று வேறெந்த நாளிலும் நான் காணவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களில் தொழவைக்கக்கூடிய சிலர், அல்லாஹ்வின் பக்தன் இறைவழிபாட்டில் வெறுப்பு கொள்ளும்படிச் செய்து விடுகின்றார்கள். ஏனென்றால் அவருக்குப் பின்னால் (அந்த அணிவகுப்புத் தொழுகையில்) முதியவர்களும், குழந்தைகளும், வேலைகளுக்குப் போகவேண்டியவர்களும் நிற்கக்கூடும்.' (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :

சுருக்கியே தொழவைக்க வேண்டும் என்பதன் கருத்து, தாறுமாறாகவும், அவசர அவசரமாகவும் தொழ வைப்பதோ - நான்கு ரக்அத் தொழுகைகளை இரு வினாடிகளில் தொழ வைத்துவிட்டுப் போய்விடுவதோ அன்று. இவ்வாறான தொழுகை இஸ்லாமியத் தொழுகையாகாது. ஆயினும் தொழ வரக்கூடியவர்களையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

முஆத்பின் ஜபல் (ரலி) பெருமானார்(ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிதே நபவியில் நஃபில் தொழும் நிய்யத்துடன்) தொழுது கொண்டிருந்து விட்டு, பிறகு தம் சமூகத்தாரிடம் சென்று அவர்களுக்கு முன்நின்று தொழுகை நடத்துவார்கள். ஒருநாள் இரவு அவர்கள் இஷா தொழுகையை பெருமானார்(ஸல்) அவர்களோடு நிறைவெற்றிய பின்னர், தம் இனத்தாரிடம் சென்று தொழவைத்தார்கள். தொழுகையில் அல்பகறா அத்தியாயத்தை ஆரம்பித்து விட்;டார்கள். உடனே ஒருவர் ஸலாம் கொடுத்துவிட்டு தம் தொழுகையை தனியே நின்று நிறைவேற்றிவிட்டுச் சென்றுவிட்டார். தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த மற்றவர்கள் (தொழுகை முடிந்ததும்) அவரிடம், 'நீர் நயவஞ்சகச் செயல் புரிந்துள்ளீர்!' என்றனர். அதற்கவர் 'இல்லை. ஒருபோதும் நான் நயவஞ்சகச் செயல் புரியவில்லை' என்றார்.

'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முஆதின் நீண்ட தொழுகையைப் பற்றி முறையிடுவேன்' என்று சொன்னார்.

அவ்வாறே அவர்இ பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரவர்களே! நாங்கள் இறவை ஒட்டகங்களை உடையவர்கள். (அவற்றின் மூலம் கூலி பெற மற்றவர்களின் தோப்புகளிலும், பயிர்களிலும் நீர்பாய்ச்சும் பணியினைச் செய்கிறோம்) பகல் முழுவதும் வேலைகளில் ஈடுபடுகிறோம். இத்தருணத்தில் முஆது தங்களுடன் சேர்ந்து இஷா தொழுதுவிட்டு, தம் இனத்தாரிடம் வந்து (தொழுகையில்) அல்பகறா அத்தியாயத்தை ஆரம்பித்துவிட்;டார். (நாங்கள் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு அலுத்துப்போய் வருகிறோம். அவ்வளவு நேரம் எங்களால் எப்படி நின்று தொழ முடியும்..?' என முறையிட்டார். இதனைக் கேட்டதும் பெருமானார் (ஸல்) அவர்கள் முஆதிடம் சென்று, 'முஆதே! மக்களைக் குழப்பத்திற்கு ஆளாக்குகின்றீரா? (தொழுகையில்) வஷ்ஷம்ஸி வள்ளுஹா(91), வல்லைலி இதா யஃஷா(92) ஸப்பி ஹிஸ்மரப்பிகல் அஃலா(87) போன்ற அத்தியாயங்களை ஓதுவீராக!' என்று அறிவுறுத்தினார்கள். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :

பெருமானார் (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை இரவில் மூன்றிலொரு பங்கு நேரம் கழிந்த பின் நிறைவேற்றுவது வழக்கம். முஆத் (ரலி) அவர்கள் நஃபிலுடைய நிய்யத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்து கொள்வார்கள். தொழுகையை முடித்து விட்டுத் தம் இடத்திற்கு வந்து சேர சிறிதுநேரம் பிடிக்கும். பின்னர் அல்பகறா போன்ற நீண்ட அத்தியாயத்தைத் தொழுகையில் ஓதத்துவங்கி விடுவார்கள். அதிலேயே நீண்ட நேரம் கழிந்துவிடும். அங்குள்ள மக்களின் நிலை எப்படி இருந்ததென்றால், அவர்கள் பகல் பொழுது முழுவதும் வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்து விட்டு சோர்ந்து போய் இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு மதிதியில் தொழுகையை நீண்டநேரம் தொழுதால், அதன் விளைவு மக்கள் தொழுகையை விட்டு ஓடிப்போவதில்தான் முடியும். இதானால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் முஆதுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

அல்லாஹ் முஆத் (ரலி) அவர்களின் மீது தன் அன்பினைப் பொழிவானாக! அவர்களின் செயலால் உம்மத்திலுள்ள இமாம்களுக்கு எத்துணை உயர்ந்த படிப்பினை கிடைத்தது.

ஜகாத், ஸதகா, ஃபித்ரா, உஷ்ர்ழூ

ழூஒரு முஸ்லிமிடம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலாகப் பணம் சேர்ந்து - அது ஒரு வருடத்திற்கு அவருடைய உடைமையில் இருந்தால், அப்பணத்தில் நாற்பதில் ஒரு பங்கு எனும் விகிதத்தில் இறைவழியில் செலவழிப்பது கடமையாகும். இத்தகைய கடமையான தர்மம் 'ஜகாத்' எனப்படும்.

இதைத் தவிர விரும்பி வழங்கும் ஏனைய தானதர்மம் 'ஸதகா' எனப்படும்.

நோன்புப் பெருநாள் காலையில் நோன்பை முன்னிட்டு கட்டாயமாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ள தர்மம் 'ஃபித்ரா' எனப்படும்.

நீர்ப்பாசனமோ பராமரிப்போ இன்றி விளைந்த பயிர்கள், பழங்கள் ஆகியவற்றிலிருந்து கட்டாயமாகச் செய்யப்படும் தர்மம் உஷ்ர் எனப்படும்.

அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது அவர்களக்குள் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்.' (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :

ஸதகா (தானதர்மம்) எனும் சொல் சட்ட ரீதியாகக் கொடுக்கப்படவேண்டிய ஜகாத்துக்காகவும் கையாளப்படுகிறது. இந்த நபிமொழியிலும் இதே கருத்தினைத்தான் கொள்ள வேண்டும். ஒருவன் மனமுவந்து அல்லாஹ்வின் வழியில் தன்னுடைய பொருளைச் செலவு செய்தால் அதற்கும் இச்சொல் பயன்படுகிறது. இதில் 'திருப்பித் தரப்படும்' எனும் சொல்லின் கருத்து - பொருள் வசதி படைத்தவர்களிடம் பெறப்படும் ஜகாத், சமுதாயத்திலுள்ள ஏழை எளியவர்கள், தேவையுள்ளோர் ஆகியோருக்குரிய உரிமை ஆகும். அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் 'ஒருவனுக்கு அல்லாஹ் பொருள் வசதி அளித்திருந்தும் அவன் அதற்குரிய ஜகாத்தைக் கொடுக்கவில்லையாயின், அவனுடைய அப்பொருள் மறுமைநாளில் கொடிய நச்சுத்தன்மை கொண்ட பாம்பாக மாறும். அதன் தலையில் இரு கரும்புள்ளிகள் காணப்படும் (கொடிய நச்சுத்தன்கை கொண்ட பாம்பு என்பதற்கு இது அடையாளமாகும்.) அப்பாம்பு அவனுடைய கழுத்தில் வளையமாகச் சுற்றப்படும். அவனின் இரு தாடைகளையும் பிடித்துக் கொண்டு அப்பாம்பு கூறும்:

'நான்தான் உன்னுடைய பொருள், நான்தான் உன்னுடைய செல்வக் களஞ்சியம்!'

பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

'அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியுள்ளவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அதனை தமக்கு நல்லது என எண்ணிட வேண்டாம். மாறாக அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்துவைத்ததெல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில்; விலங்காகப் பூட்டப்படும்.(அதாவது அது அவர்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும்)'(3:180) (புகாரி)

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

'நான் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்: 'ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத்தைப் பிரித்தெடுக்காவிடில் அது அசல் பொருளையே அழித்துவிடும்.'(மிஷ்காத்)

விளக்கம் :

'அழித்துவிடும்' எனும் வாசகத்துக்கு ஒருவன் தனது பொருளுக்கு உரிய ஜகாத்தை வழங்காமல், தான் மட்டும் அதனை அனுபவித்துக் கொண்டிருந்தானாகில் கண்டிப்பாய் அவனுடைய முழு உடைமையும் அழிந்துபோகும் என்பதல்ல பொருள். மாறாக எதிலிருந்து பயனடைய அவனுக்கு உரிமையில்லையோ, எது ஏழை எளியவர்களுக்கு உரிய பங்கோ அதனை உண்டு அவன் தன்னுடைய தீனையும், ஈமானையும் அழித்துக் கொண்டான் என்பதே பொருளாகும். இமாம் அஹ்மத்பின் ஹன்பல் (ரஹ்) அபர்களும் இதே விளக்கம் தந்துள்ளார்கள். ஆயினும் சிலசமயம் ஜகாத் பொடுக்காமல் உண்டு வாழிபவனின் சொத்து மழுதும் கணப்பொழுதில் அழிந்து போகின்றது என்பதையும் பார்க்கின்றோம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் ஃபித்hவை உம்மத்தார் மீது கடமை (வாஜிபு)ஆக்கியுள்ளார்கள். ஏனென்றால், அது ஒரு நோன்பாளியிடமிருந்து வெளியாகும் வீணான - மானக்கேடான செயல் போன்ற குறைகளை களைவதற்கான பரிகாரம் (கஃப்பாரா) ஆகும். (அபூதாவூத்)

விளக்கம் :

ஷரீஅத் சட்டத்தில் வாஜிபு (கடமை) ஆக்கப்பட்;ட ஃபித்ரு ஸதகாவினுள் பொருத்தமான இரு நோக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று: நோன்பிருக்கும் வேளையில், ஒரு நோன்பாளி தன்னுள் உள்ள சில குறைபாடுகளையும் பலவீனங்களையும் நீக்கிக் கொள்ள எவ்வளவுதான் முயன்றாலும் அவற்றில் சில அவனிடம் எஞ்சி விடுகின்றன. மற்றொன்று: எல்லா முஸ்லிம்களும் ஈத் பெருநாள் அந்று மகிழிச்கியில் திளைத்திருக்கும்போது சமுதாயத்திலுள்ள ஏழை, எளியவர்கள் பட்டினி கிடக்கக் கூடாது. மாறாக, அவர்களும் மகிழ்வதற்கான ஏற்பாட்டினையும் செய்யவேண்டும். இதனால்தான் வீட்டிலுள்ள அனைவரின் மீதும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டுள்ளது. ஈத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு அதை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் பகன்றுள்ளார்கள்: 'மழை நீராலும் நீருற்றுக்களாலும் நீர் பாய்ச்சப்படும் பூமியின் விளைபொருட்களில் பத்திலொரு பங்கு (உஷ்ர்) ஜகாத் நிறைவேற்றப்பட வேண்டும். உழைத்துத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட பூமிகளில் இருபதில் ஒரு பங்க ஜகாத் நிறைவேற்றப்பட வேண்டும்.' (புகாரி)

நோன்பு

அறிவிப்பாளர் : ஸல்மான் பார்ஸீ (ரலி)

ஷஅபான் மாதத்தின் கடைசித் தேதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அதில் அவர்கள் கூறியதாவது: 'மக்களே! மகத்துவமும், அருள்வளமும் மிக்க மாதம் ஒன்று நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு, ஆயிரம் மாதங்களை விடச் சிஙந்ததாகும். அல்லாஹ் அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை கடமையாக்கியுள்ளான். இந்த மாதத்தின் இரவுகளில் தராவீஹ் தொழுவதை நஃபிலாக்கியுள்ளான். (அதாவது இந்தத் தொழுகை கடமையானதல்ல. மாறாக சுன்னத்தாகும். இதனை அல்லாஹ் விரும்புகின்றான்.) யார் இந்த மாதத்தில் தானாக மனமுவந்து ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் ரமளானல்லாத பிற மாதங்களில் ஒரு கடமையை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இந்த மாதத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுபவர் ரமளானல்லாத பிற மாதங்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். ஆமலும், இது பொறுமையின் மாதமாகும், பொறுமையின் கூலி சுவனமாகும். மேலும், இந்த மாதம் சமுதாயத்திலுள்ள ஏழைகள் - தேவையுள்ளோர் மீது அனுதாபமும் பரிவும் செலுத்த வேண்டிய மாதமாகும்.' (மிஷ்காத்)

விளக்கம் :

பொறுமையின் மாதம் என்பதன் கருத்து : ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு அவன் இறைவழியில் உறுதியுடன் நிலைத்திருக்கவும், மன இச்சைகளைக் கட்டுப்படுத்திடவும் நோன்புகளின் வாயிலாக இம்மாதத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.

மனிதன் குறிப்பிட்ட ஒரு நேரத்திலிருந்து குறிப்பிட்ட மற்றொரு நேரம் வரை அல்லாஹ்வின் கட்டளைப்படி, உண்ணுவதில்லை - பருகுவதில்லை, மனைவியிடம் செல்லுவதில்லை. இதன் காரணத்தால் இறைவனுக்குக் கீழிப்படிந்திட வேண்டும் எனும் உணர்வு அவனுள் தோன்றுகிறது. இதன் வாயிலாக மனிதன் தன் உணர்வுகளையும், இச்சைகளையும், பசி, தாகத்தையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது தன் வசத்திற்குள் வைத்திருப்பதற்கான பயிற்சி கிட்டுகின்றது. உலகில் ஓர் இறைநம்பிக்கையாளனுக்குரிய உவமை போர்க்களத்திலிருக்கும் படை வீரனைப் போன்றதாகும். அவன் சாத்தானிய விருப்பங்களையும் தீமையின் சக்திகளையும் எதிர்த்துப் போரிட வேண்டியுள்ளது. அவனுக்குள் பொறுமையெனும் பண்பு இல்லாவிட்டால், அவன் தன் மீது தாக்குதல் தொடங்கிய உடனேயே தன்னைப் பகைவனிடம் ஒப்படைத்து விடுவான்.

அனுதாபம், பரிவு ஆகியவற்றின் மாதம் என்பதன் கருத்து: உண்ணவும் பருகவும் வசதி பெற்றிருக்கும் நோன்பாளி, இறைவனால் வழங்கப்பட்ட வெகுமதியில் ஊரிலுள்ள ஏழை எளியவர்களுக்கும் பங்களித்து அவர்களுக்கு நோன்பு வைத்திடவும், நோன்பு துறக்கவும் வசதி செய்து தரவேண்டும்.

இந்த நபிமொழியில் முவாஸாத் - பரிவு காட்டுதல் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. அதற்கு பொருளாதார ரீதியில் பரிவு காட்டுவது என்பது பொருளாகும். அதில் வாய்மொழிப்பரிவும் அடங்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'ஒருவன் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப் பெறுகின்ற எண்ணத்துடனும் ரமளான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன்னர் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஒருவன் ரமளானின் இரவுகளில் இறைநம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் (தராவீஹ்) தொழுகை தொழுவாராயின் அவர் முன்னர் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்.' (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : நோன்பும் குர்ஆனும் இறைநம்பிக்கையாளர்களுக்காகப் பரிந்துரை செய்யும். நோன்பு கூறும் : 'என் இறiவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் தடுத்தேன், அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே என் இறைவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!' திருக்குர்ஆன் கூறும்: 'நான் இவனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன் (தன் இனிய உறக்கத்தைத் துறந்துவிட்டு இவன் தொழுகையில் திருக்குர்ஆனை ஓதிய வண்ணமிருந்தான்). எனவே இறiவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!' அல்லாஹ் இவ்விரண்டின் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்வான். (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் 'எவர் (நோன்பு நோற்றிருந்தும் ) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை.' (புகாரி)

விளக்கம்:

அதாவது, நோன்பு நோற்பதை கடமையாக்கியதில் அல்லாஹ்வின் நோக்கம் மனிதனை நல்லவனாக விளங்கச் செய்வதேயாகும். அவ்வாறிருந்தும் ஒரு மனிதன் நல்லவனாக மாறவில்லையென்றால், சத்தியத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கைக் கட்டடத்தை எழுப்பவில்லையென்றால், ரமளான் மாதத்திலும் அசத்தியமான - உண்மையற்ற பேச்சுகளைப் பேசியும், அசத்தியமான செயல்களைச் செய்தும் வந்தான் என்றால், ரமளானுக்குப் பிறகும்கூட அவனது வாழ்வில் உண்மை காணப்படவில்லையென்றால்.. இத்தகைய மனிதன் நாம் ஏன் காலை முதல் மாலைவரை உண்ணாமல் பருகாமல் இருந்தோம் என்று சிந்தித்திட வேண்டும்!

இந்த நபிமொழியின் நோக்கம் இதுதான்: நோன்பாளி நோன்பு நோற்பதன் குறிக்கோளையும், அதன் அசல் உயிரோட்டத்தையும் அறிந்திருக்க வேண்டும். மேலும் அவன் எல்லா நேரங்களிலும் நாம் ஏன் உண்பதையும், அருந்துவதையும் துறந்திருக்கின்றோம் என்பதை உள்ளத்தில் பசுமையாக நினைவு வைத்திருக்க வேண்டும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'எத்தனையோ நோன்பாளிகள் (நற்பேறற்றவர்களாய்) உள்ளனர். அவர்களுக்கு, அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. மேலும் (நோன்புக்கால இரவுகளில்) தராவீஹ் தொழுபவர் பலர் உள்ளனர், (தராவீஹ் தொழுகையின் மூலம்) கண் விழித்திருந்ததைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.'(தாரமி)

விளக்கம் :

இந்த நபிமொழியும் முந்திய நபிழமொழியைப் போன்று - மனிதன் நோன்பு நோற்றிருக்கும் போது நோன்பின் நோக்கத்தை கவனத்தில் வைத்திருக்க வேண்டும் எனும் படிப்பினையைத்தான் தருகின்றது.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் 'தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் அண்டைவீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு தொழுகை, தர்மம் ஆகியன பரிகாரம் ஆகின்றன.' (புகாரி)

விளக்கம்:

இதன் கருத்து : மனிதன் தன் மனைவி மக்களுக்காகப் பாவத்தில் வீழிந்து விடுகின்றான். இவ்வாறே வாணிபத்திலும் அண்டை வீட்டார் விஷயத்திலும் பரவலாகத் தவறு நேர்ந்துவிடுகின்றது. இந்தத் தவறுகளை மேலே குறிப்பிடப்பட்ட வணக்கங்களின் விளைவாக அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஆனால் ஒரு நிபந்தனை, (பாவம்தான் எனத் தெரிந்தும் வேண்டும்மென்றே செய்திருக்கக்கூடாது) பாவம் தவறுதலாக நிகழ்ந்துவிட்டதாய் இருக்கவேண்டும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

'ஒருவர் நோன்பு நோற்கிறாரெனில் அவர் மீது நோன்பின் சோர்வோ, அடையாளமோ தெரியாமலிருப்பதற்காக அவர் எண்ணெய் பூசிக் கொள்ளட்டும்!' (அல் அதபுல் முஃப்ரத்)

விளக்கம் :

அபூஹுரைரா (ரலி) அவர்களின் கருத்து இதுதான்: நோன்பாளிதான் நோன்பு நோற்றிருப்பதை வெளிக்காட்டிக் கொள்வதைத் தவிர்த்திட வேண்டும். அவன் குளித்துத் தூய்மையாகி எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். நோன்பின் காரணத்தால் ஏற்படக்கூடிய சோர்வு நீங்கிவிடும். மேலும் பிறர் மெச்சுவதற்காக வெளிக்காட்டுதல் எனம் முகத்துதி பிறப்பதற்கான வழியும் அடைபட்டுப் போகின்றது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கிக் கூறினார்கள் 'ஸஹ்ரின் (அதிகாலை உதயமாவகற்கு முன்னுள்ள நேரத்தின்) உணவை உண்ணுங்கள், ஏனெனில் ஸஹ்ரின் உணவை உண்பதில் பரக்கத் (அருள் வளம்) உள்ளது.' (புகாரி)

விளக்கம் :

இதன் கருத்து : ஸஹ்ர் நேரத்தில் உணவு உண்டு நோன்பு நோற்பீர்களாயின் பகல் எளிதாகக் கழியும். இறைவழிபாட்டிலும் பிற செயல்களிலும் பலவீனமும் சோர்வும் ஏற்படமாட்டா. ஸஹ்ர் நேரத்தில் உணவு உண்ணாவிட்டால், பசியின் காரணத்தால் சோர்வு, பலவீனம் ஏற்பட்டுவிடும். இறைவழிபாட்டில் மனம் இலயிக்காது. இது மிகவும் அருள் வளமற்ற ஒன்றாகிவிடும்.

மற்றெரு நபிமொழியிலும் இதே கருத்து இவ்வாறு வந்துள்ளது:

'பகலில் நோன்பு நோற்பதற்கு ஸஹர் நேரத்து உணவின் வாயிலாக உதவிபெறுங்கள், இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுவதற்கு பிற்பகல் உறக்கத்தை உதவியாகக் கொள்ளுங்கள்!'

அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : 'நோன்பு துறப்பதில் அவசரம் காட்டும் பழக்கம் இருக்கும் வரை மக்கள் (முஸ்லிம்கள்) நல்ல நிலையில் இருப்பார்கள்.' (புகாரி)

விளக்கம் :

இதன் கருத்து: யூதர்களுக்கு நீங்கள் மாற்றம் செய்யுங்கள்! அவர்கள் இருள்படர்ந்துவிட்ட பின்னால் நோன்பு துறக்கிறார்கள். நீங்கள் சூரியன் மறைந்த உடனே நோன்பு துறங்கள்! மேலும், யூதர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாயின் நீங்கள் மார்க்க ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்பதற்கு அதுவே ஆதாரமாகும்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நாங்கள் ரமளான் மாதத்தில் அண்ணலாருடன் பயணம் செல்வோம். அப்போது சிலர் நோன்பு நோற்பார்கள், சிலர் நோற்கமாட்டார்கள். நோன்பாளிகள் நோன்பு நோற்காதவர்களைக் குறை சொல்பதில்லை, நோன்பு நோற்காதவர்களும் நோற்பவர்களைக் குறை சொல்வதில்லை. (புகாரி)

விளக்கம் :

பயணி நோன்பு நோற்காமலிருக்க திருக்குர்ஆனில் அனுமதி வழங்கப்பட்டுள்து. பயணத்தின்போது சுலபமாக நோன்பு நோற்க முடிந்தவன் நோன்பு நோற்பதே நல்லதாகும். அதனால் துன்பமடையக் கூடியவர் நோன்பு நோற்காமலிருப்பதே நல்லதாகும். எவரும் எவரையும் குறை சொல்லக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் 'நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்பதாகவும், இரவு முழுவதும் நஃபில் தொழுகை தொழுவதாகவும் என்னிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதே, இது உண்மைதானா?' என்று வினவினார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே! உண்மைதான்!' என்று கூறினார்கள்.

அண்ணலார் அவர்கள் கூறினார்கள் :' அவ்வாறு செய்யாதீர், சில நாட்களில் நோன்பு நோற்பீராக, சில நாட்களில் உண்ணவும் பருகவும் செய்வீராக! உறங்குவிராக, மேலும் தஹஜ்ஜுத் தொழுகையையும் தொழுவீராக! ஏனெனில் உமது உடலுக்க உம்மீத உரிமை உண்டு, உமது கண்ணுக்கு உம்மீது உரிமை உண்டு, உமது மனைவிக்கு உம்மீது உரிமை உண்டு, உம்மைச் சந்திப்போருக்கும் உம் விருந்தினர்களுக்கும், உம் மீது உரிமை உண்டு, (அவர்களுக்கு நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உண்டு) நீங்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பீராக..! இது உமக்குப் போதுமானதாகும்!'(புகாரி)

விளக்கம்:

தொடர்ச்சியாக நோன்பு நோற்பதாலும் இரவு முழுக்க தொழுவதாலும் ஆரோக்கியம் கெட்டுவிடும்! குறிப்பாக அதிகமாக நோன்பு நோற்பதால் கண் பாதிக்கப்படுகின்றது. எனவே அண்ணலார் அதனைத் தடுத்தார்கள். ஒவ்வொரு செயலிலும் சமநிலை - நடுநிலையான போக்கை கடைப்பிடிக்கும்படி இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனா நகரம் வந்த பின்னர்) அபுத்தர்தா, ஸல்மான் ஃபார்ஸி (ரலி) இருவரையும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக்கியிருந்தார்கள். எனவே ஸல்மான் (ரலி) அவர்கள், அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். அப்போது உம்முத்தர்தா (ரலி) அவர்கள் (அபுத்தர்தாவின் துணைவியார்) சாதாரண உடையில் (அலங்காரம் எதுவும் இல்லாமல்) இருப்பதைக் கண்டார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் 'ஏன் இப்படி இருக்கிறீர்கள்? (ஏன் விதவைப் பெண்களைப் போல் உங்களை ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று வினவினார்கள்.

அம்மையார் கூறினார்கள்: 'உங்கள் சகோதரர் அபுத்தர்தாவுக்கு உலகைப்பற்றிய ஆர்வமே இல்லையே! (பின் யாருக்காக நான் என்னை அலங்கரித்துக் கொள்வது?)'

அதன்பின் அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள், விருந்தினராக வந்த தமமுடைய சகோதரருக்காக உணவு தயாரிக்கச் செய்தார்கள். பின்னர் 'நீங்கள் உண்ணுங்கள் நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்' என்று கூறினார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் 'நீங்கள் உண்ணாதவரை நான் உண்ண முடியாது' என்று கூறினார்கள். பின்னர் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நோன்பை முறித்துக் கொண்டு ஸல்மான் (ரலி) அவர்களுடன் உணவு உண்டார்கள். பின்னர் இரவு வந்தவுடன் நஃபில் தொழுகைகள் தொழுதிட எழுந்தார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் 'உறங்குங்கள்!' என்று கூறினார்கள். பின்னர் மீண்டும் நஃபில் தொழுகைகள் தொழுதிட எழுந்தார்கள். ஸல்மான் (ரலி) அவர்கள் மீண்டும் 'உறங்குங்கள்!' என்று கூறினார்கள். இரவின் இறுதிப் பகுதியில் ஸல்மான் (ரலி) அவர்கள் 'எழுந்திருங்கள்!' என்று அபுத்தர்தாவை எழுப்பினார்கள்.

பின்னர் ஸல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம் கூறினார்கள்:

'பாருங்கள்! உங்கள் மீது உங்கள் இறைவனுக்கு உரிமை உண்டு, உங்கள் ஆன்மாவுக்கு உரிமை உண்டு, உங்கள் மனைவிக்கும் உரிமையுண்டு. அனைவரின் உரிமையையும் நிறைவேற்றுங்கள்!'பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஸல்மான் (ரலி) அவர்கள் வந்தார்கள். நடந்தவையனைத்தையும் கூறினார்கள். அணைத்தையும் செவியேற்ற அண்ணலார் 'ஸல்மான் உண்மையே கூறினார்'என நவின்றாhகள். (புகாரி)

பாஹிலா குலத்தைச் சேர்ந்த பெண் முஜீபா (ரலி) அவர்கள் தமமுடைய குழந்தையைப் பற்றி அல்லது தந்தையின் சகோதரரைப் பற்றி கூறினார்கள்:

'அவர்கள் ஒருபோது மார்க்கத்தைக் கற்றுக்கொள்ள அண்ணலாரிடம் சென்றார்கள். கற்ற பின்னர் (வீட்டிற்துத்) திரும்பினார்கள். பின்னர் ஓர் ஆண்டிற்குப் பிறகு அண்ணலாரின் சமூகத்திற்கு வரகை தந்நதார்கள். அந்த நேரத்தில் அவர்களுடைய நிலை முற்றிலும் மாறியிருந்தது. அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை யாரென்று அறிந்து கொள்ளவில்லையா?' என்று கேட்டார்கள். அண்ணலார் 'இல்லை. நீர் யாரென்று உம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும்!' என்று கூறினார்கள். அவர் 'அண்ணல் அவர்களே! நான் பாஹிலா குலத்தைச் சேர்ந்தவன். கடந்த ஆண்டு வந்திருந்தேன்'என்று கூறினார். இதனைச் செவியுற்ற அண்ணலார் 'என்ன நேர்ந்தது உமக்கு? கடந்த ஆண்டு நீர் வந்திருந்தபோது நல்ல தோற்றத்துடன் இருந்தீரே!' என்று கேட்டார்கள்.

'நான் தங்களிடமிருந்து சென்ற நேரத்திலிருந்து இதுவரை தொடர்ந்து நோன்பு நோற்று வருகிறேன். இரவில் மட்டும் உணவு உண்கிறேன்' என்றார். இதைக் கேட்ட அண்ணலார் கூறினார்கள்:

'உம்மை நீரே வேதனையில் ஆழ்த்திக் கொண்டீர். (அதாவது, தொடர்ச்சியாக நோன்புகள் நோற்று உடலைக் கரைத்து விட்டீர்!)'

பின்னர் அண்ணலார், அவருக்குப் பின்வருமாறு கட்டளைஙிட்டார்கள்:

'நீர் (ரமளானுடைய நோன்புகளைத் தவிர) ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பு நோற்றுக் கொள்ளும்!'

பாஹிலீ : 'இதனைவிட சற்று அதிகப்படுத்துங்கள்! ஒரு நோன்பைவிட அதிகமாக

நோற்பதற்கு எனக்கு வல்லமையிருக்கின்றது.'

அண்ணலார் : 'சரி, ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு நோற்றுக் கொள்ளும்!'

பாஹிலீ : 'இன்னும் சற்று அதிகப்படுத்துங்கள்!'

அண்ணலார் : 'சரி, ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்றுக் கொள்ளும்!'

பாஹிலீ : 'இன்னும் சற்று அதிகப்படுத்துங்கள்!'

அண்ணலார் : 'சரி, ஒவ்வோர் ஆண்டும் அஷ்ஹுருல் ஹுர்மு எனும் கண்ணியமிக்க நான்கு மாதங்களில் நோன்புவையும்! பின்னர் விட்டுவிடும். இவ்வாறே ஒவ்வோர் ஆண்டும் செய்யும்!' இதனைக் கூறிய வண்ணம் அண்ணலார் தம்முடைய மூன்று விரல்களையும் ஒன்று சேர்த்து பின்னர் விட்டுவிட்டார்கள். (இதன் கருத்து இதுதான்: கண்ணியத்திற்குரிய மாதங்களான ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மாதங்களில் நோன்பு வையும், சில ஆண்டுகள் அம்மாதங்களில் நோன்பு நோற்காமலும் இரும்!)

இஃதிகாப்

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்துநாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். (புகாரிஈ முஸ்லிம்)

விளக்கம் :

எப்போதுமே இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அபர்களின் வழக்கம் என்றாலும் ரமளான் மாதத்தில் அவர்களுடைய இந்த ஆர்வம் இன்னும் அதிகமாகிவிடும். அதிலும் ரமளானின் கடைசிப் பத்து நாட்தளை முழுக்க முழுக்க இறைவணக்கத்திலேயே கழிப்பார்கள், பள்ளிவாசலில் சென்று அமர்வார்கள். நஃபில் தொழுகையிலும், திருக்குர்ஆன் ஓதுவதிலும், துஆவிலும் ஈடுபட்டிருப்பார்கள்.

இறைநம்பிக்கையாளன், வரக்கூடிய பதினோரு மாதங்களில் ஷைத்தானுடனும், ஷைத்தானிய சக்திகளுடனும் போராடுவதற்கு போதிய ஆன்மிக வலிமை பெறும் மாதமாகும் ரமளான். எனவே அண்ணலார் அத்தகைய வலிமைறைப் பெற முழுக்க முழுக்க இறைவணக்கத்தில் ஈடுபட்டிருப்பார்கள். ரமளானின் இறுதிப் பத்தில் இஃதிகாப்ழூ இருப்பார்கள்.

ழூஇஃதிகாப்: இறைவனை வழிபடும் எண்ணத்துடன் இறையில்லத்தில் சிறிது காலம் தங்கியிருப்பதாகும். அச்சமயத்தில் பாலுறவு சம்பந்தமான நடவடிக்கைகளில் அறவே ஈடுபடக்கூடாது. மிக அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தவிர, இறையில்லத்தை விட்டு வெளியில் செல்லவும் கூடாது.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் பிந்திய பத்து நாட்கள் வந்துவிட்டால் இரவு நேரங்களில் தாமும் அதிகம் விழித்திருந்து வணங்குவார்கள். தம் மனைவி(களும் அதிக நேரம் விழித்திருந்து நஃபில்கள், தஹஜ்ஜுத் தொழுகை தொழுது வணங்க வேண்டும் என்பதற்காக அவர்) களையும் எடுப்புவார்கள். நபியவர்கள் இறைவழிபாட்டிற்காக வரிந்து கட்டிக் கொள்வார்கள்! (இது ஒரு மரபுச் சொல்லாட்சியாகும். கருத்து இதுதான்: முழு ஆர்வத்தடனும் முனைப்புடனும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருப்பார்கள்.)

ஹஜ்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றிய போது கூறினார்கள்: 'மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்!' (அல் முன்தகா)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் :

ஒருவர் இந்த (கஅபா) ஆலயத்தை தரிசிக்க வருகை தந்து, மனஇச்சை சம்பந்தமான சொல் எதனையும் பேசாமலும், இறைவனுக்கு மாறு செய்யும் செயல் எதனையும் செய்யாமலும் இருந்தால் - அவனுடைய அன்னை அவனைப் பெற்றெடுத்த அதே நிலையில் அவன் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வான்.(அதாவது, அல்லாஹ் அவனுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். தூய நிலையில் அம்மனிதன் வீடு திரும்புவான்.)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் எந்தச் செயல் சிறந்தது? என வினவப்பட்டபோது, 'அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்வது' என பதிலளித்தார்கள். அதன் பின்னர் எந்தச் செயல் சிறந்தது? என வினவப்பட்டபோது, 'இறை நெறிக்காக ஜிஹாத் செய்வது'என பதிலளித்தார்கள். அதன் பின்னர் எந்தச் செயல் சிறந்தது? என வினவப்பட்டபோது, 'எந்த ஹஜ்ஜில் மனிதன் இறைவனுக்கு மாறு செய்யவில்லையோ அந்த ஹஜ்' என அண்ணலார் பதிலளித்தார்கள். (அல் முன்தகா)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : 'ஹஜ் செய்ய நாடுபவன் சீக்கிரம் சீக்கிரமாகப் செய்திட வேண்டும். ஏனெனில் அவன் நோயுற்று விடவும் கூடும், ஒட்டகம் தொலைந்துவிடவும் கூடும். (அதாவது, பயணத்திற்கான வழிவகைகள் அடைபட்டுப் போய்விடக்கூடும், பாதை அபாயகரமானதாகி விடக்கூடும்.)

மேலும் ஹஜ் பயணத்திற்கான செலவுத்தொகை தீர்ந்துவிடக்கூடும், அல்லது ஹஜ் பயணம் சாத்தியமாகாத அளவுக்கு வேறு ஏதாவது தேவை ஏற்பட்டுவிடக்கூடும். (எனவே விரைந்து ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்! ஹஜ்ஜை நிறைவேற்றாமல், இறை ஆலயத்தை தரிசிக்க முடியாது போகும் கடினமான சூழ்நிலை ஏற்படலாமே!)' (இப்னுமாஜா)

அறிவிப்பாளர் : ஹஸன் (ரலி)

'உமர் பின் கத்தாப் (ரலி) கூறினார்கள் : 'இஸ்லாம் கைப்பற்றியுள்ள இந்நகரங்களில் சில ஆட்களை அனுப்பி, ஹஜ் செய்யும் சக்தியிருந்தும் ஹஜ் செய்யாமலிருப்பவர்கள் யார், யார்? என்று ஆய்வு செய்து அவர்கள் மீது ஜிஸ்யா(முஸ்லிமல்லாத குடிமக்களிடம் வசூலிக்கப்படும்) வரி விதித்திட நான் நாடியுள்ளேன். இவர்கள் முஸ்லிம்கள் அல்லர்! இவர்கள் முஸ்லிம்கள் அல்லர்!

(இவர்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால், எப்போதோ ஹஜ் செய்திருப்பார்களே! முஸ்லிம் என்பதன் பொருள், தன்னைத்தானே அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுபவன்.

ஒருவர் உண்மையிலேயே தம்மை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டிருந்தால், எவ்விதக் காரணமுமின்றி ஹஜ் போன்ற மகத்தான வணக்கத்தைக் குறித்து அவர் அலட்சியமாக இருந்திருக்க முடியுமா?)'

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ஒருவர் ஹஜ்ஜோ, உம்ராவோ, ஜிஹாதோ செய்யும் எண்ணத்துடன் தன் வீட்டுலிருந்து புறப்பட்டு வழியிலேயே மரணித்துவிட்டால், அல்லாஹ் அவருக்கு ஹஜ் செய்தவர், அறப்போர் வீரர், உம்ரா செய்தவர் ஆகியோருக்குரிய நற்கூலியை வழங்குவான்.' (மிஷ்காத்)
, ,