குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

14.7.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் அஹாதீஸுல் குத்ஸிய்யா
நூல் அறிமுகம்


அல் அஹாதீஸுல் குத்ஸிய்யா என்பது இந்நூலின் பெயராகும். 'ஹதீஸ் குத்ஸிகள் மட்டும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளது. இந்நூலை பெய்ரூத்தில் உள்ள ''அல்மக்தபதுத் தகாஃபிய்யாகிவினர் வெளியிட்டுள்ளனர்.
அல்முத்தா, புகாரி,முஸ்லிம்,திர்மிதி,அபூதா¥த், நஸயீ, இப்னுமாஜாவில் உள்ள ஹதீஸ் குத்ஸிகள் மட்டுமே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தொகுத்தவர் யார்? என்ற விபரம் மூல நூலில் இல்லை.

இந்நூலில் 400 ஹதீஸ்கள் உள்ளன. ஹதீஸ்களின் துவக்கத்திலேயே இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள நூல் பற்றிய விபரம் இடம் பெறுகிறது. எனினும் நாம் அதை ஹதீஸின் இறுதியிலேயே இடம் பெறச் செய்துள்ளோம்.


நபி(ஸல்)அவர்களின் சொல்,செயல் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்படடவை என நபித்தோழர்களால் அறிவிக்கப்படுவதை அனைத்தும் 'ஹதீஸ்' என்று கூறப்பட்டும்.

ஆனால்,இறைவன் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர் மூலம் அறிவிக்கும் செய்திக்கே 'ஹதீஸ் குத்ª' என்று கூறப்படும்.

மேலும், இறைவன் கூறிய அதே வாசகங்களுடன் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம் வந்ததே 'குர்ஆன்' என்னும் வேதநூலாகும்.

ஆனால், இறைவன் கூறினாலும் நபி(ஸல்) அவர்கள் தன்சொந்த வாசகங்களுடன் கூறும் செய்தியே 'ஹதீஸ் குத்ஸி'எனப்படும். இதில் ஜிப்ரீல்(அலை) அவர்களும் சம்பந்தப்பட மாட்டார்கள்.

எனவே குர்ஆன், ஹதீஸ், ஹதீஸ் குத்ª இவைகள் வௌ;வேறானவை என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவும். இந்நூலில் சில ஹதீஸ்கள் மீண்டும், மீண்டும் இடம் பெற்றுள்ளன. வேறு, வேறு வாசகங்களாக அவை வௌ;வேறு நூலில் உள்ளதால் நாமும் அப்படியே மீண்டும், மீண்டும் மொழியாக்கம் செய்துள்ளோம்.

 தொடர்ந்து ஹதீஸ்களை பார்க்க
, ,