இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

21/01/2011

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மனித மூளை பற்றி திருமறை
மனித மூளை பற்றி திருமறை


இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவன் தன்னுடைய திருத்தூதராக அங்கீகரித்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள், மக்கா எனும் இறை ஆலயத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனைத் தொழுது (வணங்கிக்) கொண்டிந்த பொழுது, இறைவனைத் தொழுவதிலிருந்து தடுத்த, அன்று மக்காவில் வாழ்ந்த இறைநிராகரிப்பாளர்களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும்போது :


(முஹம்மது தொழுதால் நான் அவர் கழுத்தின் மீது மிதிப்பேன் என அபூஜஹல் கூறியவாறு) அல்ல! (இத் தீய செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக (அவனது) முன் நெற்றி உரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன் நெற்றி உரோமத்தை. (அல்-குர்ஆன் : 96:15-16)

மேற்கண்ட வசனத்தில் இறைவன், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு தீங்கு விளைவிப்போரது முன் நெற்றி உரோமத்தைப் பற்றிப் பிடித்து நாம் இழுப்போம் என்று கூறியுள்ளான். நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், தீங்கு செய்பவர்களை இழுப்பேன் என இறைவன் பொதுவாகக் கூறாமல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, தீங்கு செய்பவர்களின் முன் நெற்றி உரோமத்தைப் பற்றி இழுப்பேன் என ஏன் குறிப்பிட்டுக் கூற வேண்டும்? தீங்கு செய்பவர்களுக்கும் அவர்களது முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம்? இதில் ஏதாவது உண்மை இருக்க வேண்டுமல்லவா? இதற்கு நவீன அறிவியல் என்ன விடையை வைத்திருக்கின்றது என்பதை ஆராய்வோமானால்,


மனிதனின் மண்டை ஓட்டின் முன் பகுதியைக் கவனித்தால், நமக்குத் தெரியக் கூடிய முன் பகுதியில் (Pசநகசழவெயட யசநய) தான் மூளையின் முன்மூளைப் பகுதி அமைந்துள்ளது.இந்த முன்மூளைப் பகுதியைப் பற்றி மருத்துவ நூல்கள் என்ன கூறுகின்றன? எனப் பார்ப்போம். 'உடலியல் மற்றும் உடலியங்கியல் பற்றிய அடிப்படைகள்' எனும் தலைப்பிட்ட நூலில், ஒரு மனிதனின் நோக்கங்களும், முன்னேற்பாட்டுத் திட்டங்களும், செயல்களின் தொடக்கமும் ஆகிய செயல்கள் யாவும் மூளையின் முன் பகுதி இருந்து தான் ஆரம்பமாகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இப் பகுதி மூளையின் கார்ட்டெக்ஸ் பகுதியுடனும் இணைந்துள்ளது.ழூ மேலும், 'மனிதனின் நோக்கங்களை அடைவதற்கான திட்டமிடுதலில், முன் மூளைக்கும் அது சார்ந்த செயலுக்கும் தொடர்பு இருப்பதால், மனிதனின் பல்வேறு நோக்கங்களில் ஒன்றான சண்டையிடுதலுக்கும், பிறரிடம் கோபம் கொள்வதற்கும் இன்னும் அது சார்ந்த திட்டமிடுதலுக்கும் மூளையின் முன் பகுதியான முன்மூளைப் பகுதி தான் காரணமாக இருக்கின்றது' என்று, அந்த நூல் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, மேற்கண்ட அறிவியல் விளக்கங்கள் மூலம், மனிதனின் நோக்கங்களுக்காக திட்டமிடுதல், நல்லவற்றை எடுத்து நடத்தல், தீய காரியங்களைச் செய்தல் போன்ற காரியங்களுக்காக உண்மை பேசுதல் மற்றும் பொய்யுரைத்தல் இன்னும் இது போன்ற செயல்பாடுகளுக்கு மனிதனின் முன்மூளைப் பகுதி தான் காரணமாக அமைந்துள்ளது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதையே தான் தன் திருமறையில் இறைவன், எவனொருவன் தீய செயல்களைப் புரிகின்றானோ அவனது முன் நெற்றியைப் பற்றி இழுப்போம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, ஒரு மனிதனின் தீய செயல்களுக்கு மூளையின் முன் பகுதி தான் காரணமாக அமைந்துள்ளது என அறிவியல் ரீதியாகவும் மனித சமூகத்துக்கு தன்னுடைய வசனங்களைத் தெளிவுபடுத்தி உள்ளான்.

இதைப் பற்றி பேராசிரியர். டாக்டர். கீத் மூர் அவர்கள் குறிப்பிடும் போது, மனிதனின் முன்மூளைப் பகுதியின் செயல்பாடுகளைப் பற்றி சற்றே அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தான் மருத்துவ அறிவியல் அறிஞர்கள் கண்டேபிடித்தார்கள் என்கிறார்;. ழூ (1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவே இல்லாத ஒருவர் இவ்வளவு சரியான அறிவியல் தகவல்களை எவ்வாறு தர முடிந்தது!!!!. சிந்திக்க வேண்டியது நமது கடமையல்லவா?!!)
, ,