பதிவுகளில் தேர்வானவை
8.2.11
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அற்புதங்களும் விண்ணேற்றமும்
அற்புதங்களும் விண்ணேற்றமும் (முஃஜிஸாக்களும் மிஃராஜும்)
ஓர் இறைத்தூதரின் நபித்துவ வாதத்தை நிரூபிப்பதற்காக உலகமக்கள் முன்னால் இறைவன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி தீனின் சொல் விழக்கில 'முஃஜிஸா' எனப்படுகின்றது. அந்நிகழ்ச்சி பொதுவான வழக்கத்திற்கு மாற்றமானதாக இருக்க வேண்டும் என்பதும் இதற்கான ஒரு நிபந்தனையாகும்.
எடுத்துக்காட்டாக
நெருப்பின் பணி எரிப்பது, ஆனால் அது எரிக்காமலிப்பது, கடல் ஓடிக் கொண்டிருக்கும், ஆனால் அது அப்படியே நின்று விடுவது, மரம் ஓரிடத்தில் நின்று கொணடிருக்கும், ஆனால் அது நடக்க ஆரம்பிப்பது. பிணம் உயிராகி எழுவது அல்லது மரக்கட்டை பாம்பாகி விடுவது..! ஆகியன.
உலகில் ஒவ்வொரு செயலுக்கும் உரிய அசல் காரணம் அல்லாஹ்வின் வலிமையும் அவனது நாட்டமுமே ஆகும். சில நிகழ்ச்சிகள் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட சில விதிமுறைகளின்படி தொடர்ந்து நடைபெற்று வருவதைப் போன்றே இறைசக்தியின் கீழ், சில நிகழ்ச்சிகள் அந்த வழக்கமான விதிகளை விட்டு சற்று விலகி, வழக்கத்திற்கு மாறான வேறு சில விதிமுறைகளின் படியும் நடைபெற முடியும்.
பெரும்பாலான இறைத்தூதர்களுக்கு அவர்களுடைய தூதுத்துவத்திற்கு ஆதாரமாக முஃஜிஸாக்கள் (அற்புதங்கள்) வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த அற்புதங்கள் இறைமறுப்பாளர்கள் இறை நம்பிக்கை கொள்வதற்கு, குறைவாகவே காரணமாகியுள்ளன. அற்புதங்களை வெளிப்படுத்துவது ஒரு வகையில் அவற்றைக் கொண்டு வருபவர் ஓர் இறைத்தூதர்தாம் என்பதற்கான ஆதாரத்தை நிறைவாக எடுத்து வைப்பதாகும். எனவேதான, அற்புதங்களைப் பார்த்த பின்னரும் நபிமார்களை நிராகரித்த மக்கள்மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கியுள்ளது. அவர்கள் உலகிலிருந்து அழித்தொழிக்கப்படிருக்கிறார்கள்.
குறைஷிகளிலிருந்த இறைமறுப்பாளர்கள் அண்ணலாரிடமிருந்து அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்படிகோரி வந்தார்கள். அவர்களின் இந்தக் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்தது. ஏனெனில் தொன்றுதொட்டு இறைவனின் நடைமுறை இதுவாகவே இருந்துவந்தது. மக்களின் முன்னால் அவர்களின் கோரிக்கைக்கு பதிலாக தெளிவான அற்புதம் ஏதும் காட்டப்பட்டு விட்டால் அவர்கள் முன் இரண்டே வழிகள்தாம் எஞ்சி நிற்கும். ஒன்று, இறைநம்பிக்கை கொள்வது, இல்லையெனில் அழிந்துபோவது. குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை அழித்துவிடுவது என்று இன்னும் அல்லாஹ்வின் நாட்டம் முடிவு செய்யவில்லை. எனவே அவர்களுடைய இந்தக் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஏறத்தாழ பத்துப் பிதினோராண்டு காலம் தொடர்ந்து இஸ்லாமிய அழைப்பு விடுத்த வண்ணம் கடந்துவிட்ட இந்நிலையில், முடிந்தவரை அச்சமுதாயத்திற்கு இச்செய்தியை விளக்கிவிட்ட பின்னர் பல நேரங்களில், அண்ணலார் (ஸல்) மற்றும் இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில், 'அந்தோ! அல்லாஹ்வின் தரப்பிலிருந்து ஏதேனும்மோர் அடையாளச் சான்று வெளிப்படக்கூடாதா, அதனைப் பார்த்தாயினும் இவர்கள் இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாத்தின் சத்தியத்தன்மையை ஏற்றுக்கொள்ளக் கூடுமே!' என்னும் ஆவல் உண்டாயிற்று.
ஆனால் அண்ணலாரின் இந்த விருப்பத்திற்கு பதில் தரும் வகையில், 'பாருங்கள். பொறுமையை இழந்துவிடாதீர்கள். எந்த வரிசைக் கிரமப்படி எந்த முறையில் நாம் இந்த அழைப்புப் பணியை நடைபெறச் செய்து கொண்டிருக்கின்றோமோ, அதனை அந்த முறையிப்படியே பொறுமையுடன் ஆற்றிய வண்ணமிருங்கள். அற்புதங்களைப் பயன்படுத்தி இஸ்லாமியப் பிரசாரம் செய்வதாயிருந்தால் அதனைப் எப்போதோ நாம் செய்துமுடித்திருப்போம். நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு இறைமறுப்பாளனின் உள்ளத்தையும் மெழுகாக்கிவிட்டிருப்போம். அவனை நேர்வழியின் பாதையில் செலுத்தி விட்டிருப்போம். ஆனால் இது நம்முடைய வழி முறையன்று. இவ்விதம் நாம் செய்வோமாயின், மனிதனின் சுயவிருப்பம், தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றுக்கு தேர்வு வைத்திடவும் முடியாது. ஒரு வெற்றிகரமான சமுதாய அழைப்பு எவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றதோ அந்தச் சிந்தனை மற்றும் ஒழுக்கப்புரட்சியும் ஒருவாகிட முடியாது' எனும் பொருள்படக் கூடிய வசனங்கள் இறங்கின.
மேலும் கூறப்பட்டது: 'மக்களின் அலட்சியம் மற்றும் நிராகரிப்பின் காரணத்தால் நீங்கள் நிலைமைகளை எதிர்த்துப் பொறுமையுடன் போராடிட முடியாது என்றால் உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள். பூமிக்குள் புகுந்தோ வானத்தில் ஏறியோ அற்புதம் எதனையாவது கொண்டு வாருங்கள்!' (அல்குர்ஆன் 6 : 35)
அனால் இதன் பொருள் அண்ணலாருக்கு அற்புதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதன்று. திருக்குர்ஆனே அண்ணலாரின் மாபெரும் அற்புதம் ஆகும். இதனைப் பற்றிய விவரம் இனிவரும் பக்கங்களில் இடம் பெறும். இது தவிர பொருத்தமான இடங்களில் அண்ணலாரிடமிருந்து எண்ணற்ற அற்புதங்கள் வெளிப்படிருக்கின்றன. அவற்றில் சந்திரன் இரண்டாக பிளந்தது (ஷக்குல் கமர்), அண்ணலார் (ஸல்) விண்பயணம் சென்றது (மிஃராஜ்) ஆகியன மிக முக்கியமானவை. இவைதவிர ஏராளமான முன்னறிவிப்புகள், அண்ணலாரின் பிரார்த்தனையால் மழைபொழிந்தது, மக்கள் நேர்வழி பெற்றது, தேவைப்பட்ட நேரத்தில் குறைந்த அளவிலிருந்து பொருள் அதிக அளவுடையதாகி விட்டது, நோயாளிகள் குணம் அடைந்தது, நீர் பொங்கி வெளிப்படுவது ஆகிய எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
சந்திரன் இரு கூறாகப் பிளத்தல்
மக்கா நகரத்து இறைமறுப்பாளர்கள் முன்னே இஸ்லாம் உண்மையானது என நிரூபிக்கும் சான்றுகளை முன்வைக்கும் செயலை நிறைவுபடுத்திட அண்ணலார் (ஸல்) நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களில் மிக முக்கியமான அற்புதம் சந்திரன் இரு கூறூகப் பிளந்து விட்டதாகும். சஹீஹ்புகாரீ, சஹீஹ்முஸ்லிம் ஆகிய நபி மொழி நூல்களில் தரப்பபட்டுள்ள இந்த நிகழிச்சியை அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும்போது உயிர் வாழ்ந்தார்கள். அவர்கள் சந்திரன் இரு துண்டுகளாகப் பிளப்பதையும் அதன் ஒரு துண்டு, மலையின் பக்கம் சென்றுவிட்டதையும் தமது கண்களால் கண்டார்கள். அண்ணலார் அப்போது அவர்களை நோக்கி, 'சாட்சியாயிருங்கள்' என்று கூறினார்கள். ஆனால் நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் அற்புதங்களைக் கண்ட பின்னர் இறைமறுப்பாளர்கள் இறைநம்பிக்கை கொள்ளவே செய்வார்கள் என்பது நிச்சயமல்ல. ஆனால் பொதுவாக நடப்பது என்னவெனில், எவருடைய உள்ளங்களில் இறைமறுப்பும் பிடிவாத குணமும் நிரம்பிக்கிடக்கின்றனவோ அவர்கள்தாம், அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும்படி கோருகின்றார்கள். இவ்விதம் அவர்கள் தமது இறைமறுப்புக்கு தந்திரங்களையும், உபாயங்களையும் சாக்கு போக்குகளையும் தேடித் திரிகின்றார்கள்.
எவருடைய உள்ளங்கள் இறைநம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பொற்றுள்ளனவோ, சுயநல வேட்கைகள், உலக ஆதாயங்களின் வலைகளில் சிக்கியிருக்கவில்லையோ அவர்களுக்கு இறைத்தூதர், இறைத்தூதரின் அறிவுரைகளாகத் தென்படுகின்றன. அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதில் எப்போதும் முந்திக் கொள்கிறார்கள்.
எனவே, சந்திரன் பிளந்துபோன பின்னரும் நிராகரிப்பாளர்கள், 'இது மந்திரமாயம்தான்! மந்திரத்தின் வலிமையால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தே வந்துள்ளன' என்றுதான் கூறினார்கள். இவ்விதம் அற்புதங்களைப் பார்த்த பின்னும் அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை. மாறாக, இவ்வுளவு வெளிப்படையான சான்றினைக் கண்டபின்னரும் அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப் பொய்யர் என்று கருதிய பெருங்குற்றம் ஒன்றும் அவர்களுடைய குற்றப்பட்டியலில் சேர்ந்து கொண்டது.
மிஃராஜ் - விண்பயணம் (இஸ்ரா)
மிஃராஜ் என்னும் சொல்லின் பொருள் 'உயரே ஏறிச் செல்லுதல்' என்பதாகும். அண்ணலார் (ஸல்) தமது விண்பயணம் ஒன்றைக் குறித்து இந்தச் சொல்லைக் கையாண்ட காரணத்தால், அண்ணலாரின் இந்தப் பயணத்தை 'மிஃராஜ்' என்றழைக்கிறார்கள். இதன் மற்றொரு பெயர் 'இஸ்ரா' என்பதாகும். இஸ்ரா எனும் வார்த்தை இரவோடிரவாகப் பயணம் செய்வதைக் குறிக்கும்.
இந்தப் பயணம் இரவோடிரவாக நடைபெற்ற காரணத்தால் இதனை 'இஸ்ரா' என்றும் கூறுகின்றனர். திருக்குர்ஆனிலும் இந்தச் சொல்லே கையாளப்பட்டுள்ளது.
இறைத்தூதர்கள் ஆற்ற வேண்டியிருக்கும் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் தீனை நிலைநாட்டும் பணிகளுக்குத் தேவைப்படுகின்ற மிக உறுதியான இறைநம்பிக்கையை அவர்கள் அடைந்திட, அவர்கள் எந்தக் கண்காணாத உண்மைகளின் மீது நம்பிக்கை கொள்ளும்படி அழைப்பு விடுகின்றார்களோ அந்த உண்மைகளை அவர்களே தங்கள் கண்களால் கண்டு கொள்வதும் அவசியமாகத் திகழ்கின்றது. ஏனெனில் அவர்கள் உலகின் முன் முழுபலத்துடனும் வலிமையுடனும் பினவரும் செய்தியைக் கூற வேண்டியுள்ளது: 'நீங்கள் வெறும் ஊகத்தின் அடிப்படையிலும் கணிப்பின் அடிப்படையிலும் ஒரு விஷயத்தை மறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் கண்களால் கண்ட ஒர் உண்மையை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் எங்களிடம் உறுதியான அறிவு உள்ளது' என்று கூற வேண்டியுள்ளது.
இதனால்தான் எல்லா இறைத்தூதர்களின் முன்பும் வானவர்கள் வெளிப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு வானங்கள், பூமியின் ஆட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. சொர்கமும், நரகமும் கண்முன்னே காட்டப்பட்டுள்ளன. இறந்த பின்னர் மனிதன் அடைந்த நிலைகள் அவர்களுக்கு இந்த உலக வாழிவிலேயே காட்டப்பட்டுள்ளன. விண்பயணமான மிஃராஜ் - இஸ்ரா, அண்ணலாருக்கு மறைவான உண்மைகள் காட்டப்பட்ட பல நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சியோயாகும். அப்பயணத்தில் அண்ணலாருக்கு யதார்த்த உண்மைகள் பல காண்பிக்கப்பட்டன. ஒரு இறைநம்பிக்கையாளன் அந்த உண்மைகளைப் பார்க்காமலேயே இறைத்தூதரின் அறிவிப்பின் அடிப்படையில் அவற்றின் மீது நம்பிக்கை கொள்கின்றான்.
மிஃராஜுடைய நிகழ்ச்சி எந்தக் தேதியில் நடை பெற்றது என்பது குறித்து பல அறிவிப்புகள் உள்ளன. எனினும் எல்லா அறிவிப்புகளையும் முன்னால் வைத்த பின் வரலாற்றாசிரியர்கள் முதலிடம் தரும் கருத்து, இந்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்திற்கு ஏறத்தாழ ஓர் ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு முன்னர் நடைபெற்றது என்பதேயாகும்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றிய இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளை ஆராய்ந்த பின் நமக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்தமான விவரம் இதுதான்.
அண்ணலார் ஒருநாள் காலை பின்வருமாறு கூறினார்கள்: 'கடந்த இரவு என் இறைவன் எனக்குப் பெரும் கண்ணியத்தை அளித்தான். நான் உறங்கிக் கொண்டிருந்தேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து என்னை எழுப்பினார்கள், என்னை கஅபாவின் முற்றத்தில் கொண்டு வந்தார்கள். அங்கு கொணர்ந்த பின் அவர்கள் என் இதயத்தை பிளந்தார்கள். அதனை 'ஜம்ஜம்' நீரால் கழுவினார்கள். (ஜம்ஜம், என்பது கஅபாவின் அருகிலுள்ள ஓர் பாக்கியமிக்க கிணறாகும்.) பின்னர், அதில் இறைநம்பிக்கையாலும், விவேகத்தாலும், மதிநுட்பம் இட்டு நிரப்பி மூடி விட்டார்கள். பின்னர் அவர்கள் நான் அமர்ந்து பயணம் செய்வதற்காக ஒரு பிராணியை அளித்தார்கள். அப்பிராணி கோவேறுக் கழுதையைவிட சற்று சிறியதாகவும், வெள்ளைநிறமுடையதாகவும் இருந்தது. அதன் பெயர் 'புராக்' என்பதாகும். அது அதிவேகமாக ஓடக்கூடியதாயிருந்தது.
நான் அதில் ஏறி அமர்ந்த கண நேரத்திற்குள் நாங்கள் பைத்துல் முகத்தஸை அடைந்துவிட்டோம். அங்கு புராக் வாகனம், பள்ளிவாசலின் வாயிலில் கட்டப்பட்டுவிட்டது. நான் மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் நுழைந்தேன். இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். இப்போது ஜிப்ரீல் (அலை) என் முன் இரு கிண்ணங்களை வைத்தார்கள். ஒன்றில் மது நிரம்பியிருந்தது. மற்றொன்றில் பால் நிரம்பியிருந்தது. நான் பால் கிண்ணத்தை ஏற்றுக் கொண்டேன். மதுக் கிண்ணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஜிப்ரீல் (அலை) இதனைக் கண்டு 'நீர் பால் கிண்ணத்தை ஏற்று, இயற்கை நெறியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்' என்று கூறினார்கள்.
அதன்பின் விண்பயணம் தொடங்கியது. நாங்கள் முதல் வானத்தை (உலக வானத்தை) அடைந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், அங்கு காவல்காத்து நின்ற வானவரிடம் கதவைத் திறக்கும்படி கூறினார்கள். அவர்கள் 'உம்முடன் யார் இருக்கின்றார்கள்?' என்று கேட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், 'முஹம்மத் (ஸல்) அவர்கள்' என்று பதிலளித்தார்கள். அந்த வானவர் மீண்டும், 'இவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' என்று கேட்க ஜிப்ரீல் (அலை), 'ஆம்! அழைக்கப்பட்டிருக்கிறார்' என்று கூறினார்கள். இதனைச் செவியுற்ற அந்த வானவர். 'அப்படிப்பட்ட பெருமகனாரின் வருகை நல்வரவாககட்டும்!' என்று கூறியவண்ணம் கதவைத் திறந்தார்.
நாங்கள் உள்ளே நுழைந்தபோது ஆதம் (அலை) அவர்களைச் சந்தித்தோம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம், 'இவர் உங்கள் தந்தை (மனித மனித இனத்தின் தந்தை) ஆதம் (அலை) ஆவார்கள். நீங்கள் அவருக்கு சலாம் கூறுங்கள்' என்று கூறினார்கள். நான் சலாம் கூறினேன். அவர்கள் என் சலாத்திற்கு பதிலுரைத்த வண்ணம், 'வருக! நல்ல மகனே! என் நல்ல நபியே!' என்று கூறினார்கள்.
இதன்பின் நாங்கள் இரண்டாம் வானத்தை அடைந்தோம். முதல் வானத்தைப் போன்றே விசாரணையும் பதிலும் நடந்து முடிந்தபின் கதவு திறந்தது. நாங்கள் உள்ளே சென்றோம். அங்கு யஹ்யா (அலை), ஈஸா (அலை) ஆகியோருடன் சந்திப்பு நடைபெற்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அவ்விருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள. பின்னர் 'சலாமுரையுங்கள்' என்று கூறினார்கள். நான் சலாம் சலாமுரைத்தேன். இருவரும் அதற்கு பதிலளித்த வண்ணம் 'வருக! வருக! என் நல்ல சகோதரரே! நல்ல நபியே!' என்று கூறினார்கள். பின்னர் மூன்றாம் வானம்வரை இவ்வாறே சென்று சேர்ந்தோம். அங்கு யூசுப் (அலை) அவர்களைச் சந்தித்தோம். முன்புபோலவே சலாமும் பதிலும் நடைபெற்றன. நான்காம் வானத்தில் இதிரிஸ் (அலை) அவர்களைச் சந்தித்தோம் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களைச் சந்தித்தோம். ஆறாம் வானத்தில் மூஸா (அலை) அவர்களைச் சந்தித்தோம். ஏழாம் வானத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களைச் சந்தித்தோம். அவர்களும் சலாமுக்கு பதில் தருகையில், 'வருக! என் நல்ல மகனே! நல்ல நபியே!' என்று கூறினார்கள். பின்னர் என்னை ஸித்ரத்துல் முன்தஹா என்னுமிடம் வரை சென்று சேர்ந்தார். ஜிப்ரீல் (அலை). அது ஓர் இலந்தை மரம், அதில் ஏராளமான மலக்குகள் வானவர்கள் மின்மினியைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்'.
இங்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் பல உண்மைகளைக் கண்களால் கண்டார்கள். அல்லாஹ்வுடன் பேசவும் செய்தார்கள். அல்லாஹுதஆலா, இரவும் பகலும் ஐம்பது வேளைத் தொழுகைகளை அண்ணலாரின் உம்மத்தினர் (பின்பற்றும் குழுவினர்) மீது கடமையாக்கினான். அண்ணலார் இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டு முடித்து திரும்பிச் செல்லும்போது மீண்டும் மூஸா (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். மூஸா (அலை) அவர்கள், 'அல்லாஹ்விடமிருந்து என்ன அன்பளிப்பைக் கொண்டு வந்தீர்கள், சொல்லுங்கள்!' என்று கேட்டார்கள். அண்ணலார் (ஸல்) 'இரவும் பகலும் ஐம்பது வேளைத் தொழுகைகளைக் கொண்டு வந்தேன்' என்று கூற மூஸா (அலை) அவர்கள் 'உங்கள் சமுதாயம் இந்தச் சுமையைத் தாங்காது. எனவே திரும்பிச் சென்று அவற்றைக் குறைத்து வாங்கி வாருங்கள்' என கூறினார்கள்.
எனவே அண்ணலார் திரும்பச் சென்று அவற்றைக் குறைத்துத் தரும்படி இறைவனிடம் கோரினார்கள். அதிலிருந்து ஒரு அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் குறைக்கப்பட்டது. ஆனால் மூஸா (அலை) அவர்கள், அண்ணலாரைத் திரும்ப அனுப்பி மீண்டும் மீண்டும் குறைத்து வாங்கச் செய்தார்கள். இறுதியில் இந்த எண்ணிக்கை சிறிது சிறிதாகக் குறைந்து ஐந்தாகி விட்டது. ஆனால் இதிலும் மூஸா (அலை) அவர்கள் திருப்தியடையாமல் இன்னும் குறைத்து வாங்கும்படி கூறினார்கள். ஆனால் அண்ணலார், 'இன்னும் குறைத்துத் தரும்படி கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்று கூறினார்கள். இதனைச் சொன்னவுடன் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து 'நாம் தொழுகையின் எண்ணிக்கையை ஐம்பதிலிருந்து ஐந்தாகக் குறைத்துவிட்டோமென்றாலும், உமது சமுதாயத்தினரில் பேணுதலுடன் ஐவேளைத் தொழுகையை தினமும் நிறைவேற்றி வருபவருக்கு ஐம்பது வேளைத் தொழுகைகளின் நற்கூலியே அளிக்கப்படும்' என்று அசரீரி வாக்கு ஓலித்தது.
தொழுகை மட்டுமின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இறைவனிடத்திலிருந்து இன்னுமிரு அன்பளிப்புகள் அருளப்பட்டன. அவற்றில் ஒன்று, முஸ்லிம்கள் அனுபவித்துவந்த சோதனைக்காலம் முடிவடையவிருப்பது குறித்தும், இஸ்லாத்தின் கொள்கைகளும் ஈமான் முழுமையடைவது குறித்தும் கூறப்பட்டுள்ள 'அல்பகரா' அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்கள். மற்றொன்று முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் இணைவைக்கும் பாவத்திலிருந்து விலகியிருப்பவர் மன்னிப்பு அளிக்கப்படுவார் எனும் நற்செய்தி. இந்தப் பயணத்தில் அண்ணலார் (ஸல்) சொர்கத்தையும் நரகத்தையும் தம் கண்களால் கண்டார்கள். இறந்தபின் தத்தம் செயல்களுக்கேற்ப மக்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும் பல்வேறு வகைப்பட்ட நிலைமைகளின் சில காட்சிகளும் அண்ணலாரின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டன.
வானங்களிலிருந்து திரும்பிய பின்னர் அண்ணலார் (ஸல்) மீண்டும் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். இங்கு இறைத்தூதர்கள் கூட்டமாகக் குழுமியிருப்பதைக் கண்டார்கள். பின்னர் அண்ணலார் தொழுகை நடத்தினாhகள். இறைத்தூதர்கள் அனைவரும் அண்ணலாருக்குப் பின்னால் தொழுகையை நிறைவேற்றினார்கள். அதன் பின் அண்ணலார் தமது இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். காலையில் அதே இடத்திலிருந்து விழித்தெழுந்தார்கள்.
மிஃராஜின் முக்கியத்துவம் வருங்காலத்திற்கான சமிக்ஞைகள்
காலையில் அண்ணலார் (ஸல்) இந்த நிகழ்ச்சியை மக்களுக்குத் தெரிவித்தவுடன் குறைஷி இறைமறுப்பாளர்களில் அண்ணலாரை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள் அண்ணலாரை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் அண்ணலாரைப் பொய்யர் (நஊதுபில்லாஹ்) என்று கூறினார்கள். எவருடைய உள்ளங்கள் உண்மையையும் வாய்மையையும் உறுதியாக நம்பினவே அவர்கள் இந்தச் செய்தியைச் சொல்லுக்குச் சொல் உண்மையென ஏற்றார்கள். 'அண்ணலார் கூறுகிறார்கள் என்றால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையானவையே' என்று கூறினார்கள். இவ்விதம் மிஃராஜின் இந்த நிகழ்ச்சி, ஒருபுறம் மக்களின் இறைநம்பிக்கை மற்றும் இறைத்தூதுத்துவம் ஆகியவற்றை உண்மையென ஏற்கிறார்களா? இல்லையா என்று பார்க்கும் ஒரு சோதனையாகவும், மற்றொருபுறம் அண்ணாருக்கு மறைபொருளான எண்ணற்ற உண்மைகளைக் கண்களால் கண்பதற்கான ஒரு சாதனமாகவும் விளங்கிற்று.
இத்துடன் அண்மையில் வரவிருந்த இஸ்லாமிய இயக்கம், விரைவில் சந்திக்கவிருந்த புரட்சியைச் சுட்டிக் காட்டுவதாகவும் இது நிகழ்ந்தது. இந்தச் சுட்டிக்காட்டலின் விவரங்கள் திருக்குர்ஆனில் மிஃராஜ் குறித்துக் கூறப்பட்டுள்ள 'பனீ இஸ்ராயீல்' அத்தியாயத்தில் காணக்கிடைக்கின்றன. இந்த அத்தியாயத்தின் கருத்துக்களில் வெளிப்படையாகக் கிடைக்கும் சமிக்ஞைகளாவன:
யூதர்கள் உலகின் தலைமைக் பதவியிலிருந்து நீக்கப்படுதல்