குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

16.4.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

போனாபோவுது வாங்க தொடர் ...2
சிறப்பு மிக்க நோன்பு

நம்பிக்கை கொண்டோரே...(அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நோன்பு உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்க பட்டது போல்
உங்களுக்கும் குறிப்பிட்ட காலம் அது கடமையாக்க பட்டுள்ளது. (2:183)

வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழ்வில் ஈடுபடாமல் இருப்பது நோன்பு.

இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் மனித குலத்திற்கு தரப்பட்ட அறிவு சார்ந்த வாழ்க்கை வழி முறையாகும். படைப்பினங்களில் மிக சிறந்த சிந்தனை செய்யும் படைப்பாக மனிதனை படைத்து பகுத்தறியும் அறிவையும் கொடுத்து நேர் வழியும் காட்டியிருக்கிறான். நேர் வழி தெரிந்த பின் அவ்வழி நடப்பவருக்கு வெகுமதியாக சொர்க்கத்தை தருகிறான். அங்கே மரணம் என்பதேயில்லை மண சந்தோசத்திற்கு அளவேயில்லை அதை விட்டு வேறு எங்கும் செல்ல மணம் நாடுவதுமில்லை.

ரசூல் (ஸல்) கூறினார்கள் : எவர் ரமழானில் ஈமானுடனும் உண்மையான உள்ளச்சத்துடனும் நன்மையை நாடியவர்களாக நோன்பு நோற்று இறைவனிடம் தொளபாச் செய்து பாவ மன்னிப்புத் தேடுகிறாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

மேலும் கூறினார்கள் "ஆதமுடைய மகனின் எல்லாச் செயல்களும் அவனுக்குறியதே அவற்றில் ஒவ்வொன்றிற்கும் நன்மை பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை உள்ளன. நோன்பைத்தவிர, ஏனெனில் நிச்சயமாக அந் நோன்பு எனக்குறியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் அவன் தனது மனோ இச்சை, உணவு, ஆகியவற்றை எனக்காகவே விட்டு விட்டான் என அல்லாஹ் கூறுகிறான்."(தொழுகை ஜகாத் ஹஜ் போன்ற செயல்கள் பிறர் பார்க்கும் படி செய்ய வேண்டியிருக்கிறது நோன்பு அவ்வாறல்ல நோன்பாளியை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்) நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன. ஒரு சந்தோசம் அவன் நோன்பு திறக்கும் நேரம். மற்றொன்று அவன் தன் நாயனைச் சந்திக்கும் நேரம். அல்லாஹ்விடம் நோன்பாளியின் வாயின் வாடை கஸ்தூரி வாடையை விட நறுமணம் மிக்கதாகும்

நன்மைகளை அள்ளி தர கூடி சிறப்பு மிக்க ரமலான் மாததிலும் அனிச்சை செயல் போல் சிலவற்றை செய்கிறோம் அது நண்பர்கள் ஒன்று கூடி இருக்கும் போது அல்லது பலர் ஒன்று கூடி இருக்கும் போது தமாசாக கேலி கிண்டல் என தொடங்கி தேவையற்ற பேச்சுகளில் மூழ்கி ஒருவரை ஒருவர் கீழ் தரமாக பேச கைகலப்பு தொடங்கும் இதில் முக்கியமாக புறம் பேசுதல் இருக்கும் இல்லெனா இரவு தூக்கமே வராது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் 'எவர் (நோன்பு நோற்றிருந்தும் ) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை.' (புகாரி)

சரி இனி நம்முடைய நிலையை பார்ப்போமா?

1. ரமலான் நோன்பை முழுமையாக நோற்றோமா? அல்லது சிலவற்றை விட்டு விட்டோமா?

2. ரமலான் மாதத்தில் நன்மைகளை அதிகம் பெற்றோமா?

3. நோன்பாளியாக இருந்து நோன்பின் பலனை இழந்தோமா?

நம்மிடம் தவறுகள் இருப்பின் திருத்தி கொள்ள முயற்சி செய்வோமே...

, ,