இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

31/01/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பீட்ரூட் கீரைகள்
கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்
அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பீட்ரூட்டும் ஓன்று. அந்த பீட்ரூட்டில் இருக்கும் இலைகள்  ஊட்டசத்து நிறைந்ததாகும்.இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது .
பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன் படுத்துவதில்லை.ஆனால்  ஆய்ரூபியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவில் சேர்த்து கொள்கின்றனர். இது அய்ரோப கண்டத்தை பிறபிடமாக கொண்ட போதிலும் சமீபத்தில் தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.
இக்கீரையை போரியலகவோ, துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம்.பாசிபயறு,தட்டைபயறு முதலியவற்றுடன் சேர்த்து கூட்டுகரிகள் ஆக்கலாம்.இப்பயிகளுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும்.சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.
பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. அந்த நரம்புகளில்  கரோட்டின் என்ற உயிர்  சத்து அதிகம் உள்ளது.இந்த கரோடின் வைட்டமின் ஏ சத்தை  அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏ யின் சேமிப்பு பட்டறை என்று கூறலாம்.பச்சையாக உண்பதால்  வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது.இதனை கத்தியை கொண்டு பறிக்க கூடாது.கையால் திருகி பறிக்க வேண்டும்.
பீட்ரூட் கீரை ஒரு சிறந்த  உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர் சத்துகள் நிறைந்த கீரையாகும்.தையமின்,ரிபோப்லோவின்,நிக்கோடின் அமிலம் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.பீட்ரூட் கீரை சிறுநீரை  பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இலக்கி வெளியிற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலை தவிர்க்கும் இக்கீரை கலீரளுக்கு  வலிவு கொடுக்கிறது.
வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது.கண்ணுக்கு தெளிவையும் பார்வை கூர்மையையும் ஏற்படுத்துகிறது.உடல் சூட்டால் ஏற்படும் கண் வீக்கம்  அழற்சி  முதலியவற்றுக்கு இக் கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும் கீரையை உணவாக சாப்பிட்டால் கண் நோய்கள் குணமடையும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர்
, ,