இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

06/04/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஈமான் இல்லை என்றால் எண்ணிக்கை பயன்தராது
ஈமான் இல்லை என்றால் எண்ணிக்கை பயன்தராது

--------------------------------------------------------------------------------

;நபிமொழி
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மிக விரைவில் ஒரு காலம் வரும், உண்பவன் தனது சகாவை பந்திக்கு அழைப்பதைப் போல உங்களின் மீது தீய சக்திகளின் ஆதிக்கமிருக்கும். (நீங்கள், ஈமானின் பலம் குன்றியிருப்பீர்கள்).
தோழரொருவர் கேட்டார் :
நாயகமே! நாமன்று எண்ணிக்கை குறைந்து இருப்பதால் அவ்வாறு நிகழுமோ?
பதிலிறுத்தார் பெருமானார் (ஸல்) அவர்கள்,
நீங்கள் அப்போது மிகுதியாக இருப்பீர்கள். எனினும் (ஈமான் விஷயத்தில்) நீங்கள் நுரையைப் போன்றும், நீர்க்குமிழிகளைப் போன்றும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் பகைவர்களின் மனதிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை இறைவன் போக்கி விடுவான். மேலும் உங்களுடைய மனங்களில் வஹ்ன் னை ஏற்படுத்தி விடுவான்!
வஹ்ன், என்றால் என்ன? என்று வினவப்பட்டது.
அதற்கு வஹ்ன் என்றால் உலக ஆசையும், இறப்பை வெறுத்தலும் ஆகும்! என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூது அறிவிப்பாளர் : சௌபான் (ரலி)
, ,