குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

13.10.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஸ்மார்ட் போன்


உங்களுடைய ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரிக்க...
உங்களுடைய ஸ்மார்ட் போன்களின் வேகம் குறையாமல் வைத்துக்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

பள்ளிக்கூட பசங்க.. காலேஜ் பசங்க... அவங்களுக்கு சொல்லிக்குடுக்கிற வாத்தியாருங்க கையில... பொன்னுங்க கையில...இப்படி  யாரிடம் பார்த்தாலும் அதி நவீன Smart  Phone தாங்க இருக்கு.
கூலி வேலை செய்றவங்க.... டிரைவருங்க... ஏன் எங்க தாத்தாகூட Smart Phone   பயன்படுத்தறாருங்க...
அவர் கேட்கிற சந்தேகத்தை தீர்க்க முடியாம நானே கூட முழிக்கிறது உண்டு... சரி.. விஷயத்துக்கு வருவோம்...
இப்படி நாளெல்லாம் ஆன்ட்ராய்ட் மொபைலுடனே காலத்தை கழிக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் அதிகமாக பார்க்க முடிகிறது.
எந்த நேரமும் கையில் ஆன்ட்ராய்ட் போனை தொட்டு தொட்டு அதை இயக்கிக் கொண்டிருப்பதிலேயே அலாதி பிரியம் இவர்களுக்கு.
பொழுதை போக்குவதில் இன்றைய கால இளைய தலைமுறைக்கு ஆன்ட்ராய்ட் போன்கள்தான் முதன்மையான சாதனமாக இருக்கிறது என்றால் மிகையில்லை..இல்லையா?
இளைஞர்கள் மட்டுமா? ஏனையோருக்கும் அந்த மனநிலைதான்.. புதிய தொழில்நுட்பம் தற்போது எந்த வயதினரையும் கவரவே செய்கிறது...
உங்களுடைய ஸ்மார்ட் போன்களின் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.
ஸ்மார்ட் போன்களின் வேகம் குறைய காரணங்கள்:
1. மெமரி (Memory)
2. அதிக மெசேஜ்கள் (Messages)
3. அதிக கொள்ளளவு உள்ள படங்கள் (Images)
4. தேவையில்லாத காணொளிகள் (video)
5. தேவையில்லா பயன்பாடுகள் (unwanted applications)
ஆன்ட்ராய் போனின் வேகத்தை அதிகரிக்கச்  செய்வது எப்படி?
இது மிக எளிதான ஒன்றுதான். மேற்கூறியவற்றில் தேவையில்லாதவைகளை நீக்கிவிடுங்கள்... அதாவது  கண்ணுக்கு அகப்பட்டதையெல்லாம் படமாக எடுத்து தள்ளியிருப்போம்.. அவற்றில் முக்கியமானதை தவிர குப்பையான படங்கள் அனைத்தையும் நீக்கிவிடுங்கள்..
அதேபோல வீடியோக்கள்... ஆன்ட்ராய்ட் போன் கையிலிருந்தாலே..ஏதாவது ஒன்றை நாம் வீடியோவாக எடுத்துக்கொண்டே இருக்கும் பழக்கம் தொற்றிக்கொள்ளும். அவற்றில் மிக முக்கியமான, நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க video களை மட்டும் உங்கள் Smart போனில் இடம்பெறச் செய்யுங்கள்.. மற்றவைகளை அழித்துவிடலாம்...
தேவையில்லா குப்பையான அப்ளிகேஷன்கள்.. புதியதாக ஏதேனும் applications களைக் கண்டால் அதை உடனேயே ஆன்ட்ராய்ட் போனில் நிறுவி பயன்படுத்த தோன்றும். அவ்வாறு கவர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பயன்பாடுகளை நிறுவிவிட்டு, ஒரு சில முறை மட்டும் அவற்றை பயன்படுத்தி இருப்போம்.. அவற்றை நீண்ட நாட்களாகவே பயன்படுத்தாமலிருந்திருப்போம்..
அவற்றால் நமக்கு எந்த ஒரு பயனும் இல்லாமலே இருந்திருக்கும். இவ்வாறான தேவையற்ற அப்ளிகேஷன்களை(Delete Unwanted apps) நீக்கிவிடுவது நலம்..
அதேபோல Games... இணையத்தில் ஆன்ட்ராய் போன்களுக்காக ஆயிரக்கணக்கில் Games software கள் கிடைக்கிறது... அவற்றையும் முன்பு சொன்னதைப்போலதான்.. ஆர்வ மிகுதியில் நிறுவிவிட்டிருப்போம்.. ஒன்றுக்கும் மேற்பட்ட அதிக கொள்ளளவு கொண்ட இதுபோன்ற விளையாட்டு மென்பொருள்களாலும் உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களில் வேகம் குறையும். எனவே அடிக்கடி பயன்படுத்தாத விளையாட்டு அப்ளிகேஷன்களையும் ஆன்ட்ராய்ட் போனிலிருந்து நீக்கிவிடுங்கள்.

உங்களுடைய ஆன்ட்ராய்ட் போனின்  மெமரியின் அளவை ஒரு குறிப்பிட்ட அளவு காலியாக வைத்திருப்பது மிக முக்கியம்..
ஆன்ட்ராய்ட் போன் மெமரி தாங்ககூடிய அளவில்தான் ஸ்மார்ட் போனில் மற்ற படங்கள், வீடியோக்கள், விளையாட்டு மென்பொருட்கள் என நிறுவி இருக்க வேண்டும்.
எப்போதும் உங்கள் ஸ்மார்ட் போன் இயங்குமளவிற்கு குறிப்பிட்ட மெமரியை காலியாகவே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய Smart  Phone ஸ்மார்ட்டாக இயங்கும். வேகமும் குறையாமல் இருக்கும்.
இதற்கு நீங்கள் எடுக்கும் வீடியோக்கள், படங்கள் ஆகியவைகளை External Memory Card-ல் பதியுமாறு Settings அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட் போன் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்வது நம்கையில்தான் இருக்கிறது.. என்ன நண்பர்களே.. ஸ்மார்ட்போனை எடுத்து என்ன செய்றீங்க...?
ஓ.. தேவையில்லாத, பயனில்லாத மெசேஜ்களையும், படங்களையும், வீடியோக்களையும் நீக்கிட்டு இருக்கீங்களா?

Thanks thangampalani.coom
, ,