குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

19.10.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குர்பானி
almighty-arrahim.blogspotcom
குர்பானியின் நோக்கம்

அத்தியாயம் ஹஜ்:37. (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை;
ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

குர்பானியின் சிறப்பு

969. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல" என்று நபி(ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
Volume :1 Book :13

5546. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் '(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தம(து சொந்த செலவு)ககாகவே அறுத்தவராவார். தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்' என்று கூறினார்கள்.
Volume :6 Book :73

யார் மீது கடமை?

955. பராஃ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்." என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்" என்றார். அப்போது நபி(ஸல்) 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்" என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது" என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
Volume :1 Book :13
குர்பானி கொடுப்பது அவசியம் என்பதால் தான் ஆறுமாதக் குட்டியை மீண்டும் அறுக்குமாறு அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டைளயிடுகிறார்கள். அவசியமில்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு வலியுறுத்தி இருக்க மாட்டார்கள். வேறுசில அறிவிப்புகளில் திரும்பவும் அறுக்கட்டும் என்று கூறியதாக வந்துள்ளது.

குர்பானிப் பிராணிகள்

அத்தியாயம் ஹஜ்:28. தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எழும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி) நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

5547. உக்பா இப்னு ஆமிர் அல்ஜுஹைனீ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (என்னுடைய பங்காக) ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஒரு வயதுடைய வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'அதையே நீங்கள் குர்பானி கொடுங்கள்' என்று கூறினார்கள்.5
Volume :6 Book :73

எப்பொழுது அறுக்க வேண்டும் ?
951. பராஃ(ரலி) அறிவித்தார்.
"நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்" என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :13
 955. பராஃ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்." என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்" என்றார். அப்போது நபி(ஸல்) 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்" என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது" என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
Volume :1 Book :13

5500. ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார்
ஒரு (ஹஜ்ஜுப் பெரு) நாளின்போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணிகளை அறுத்துக் குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களின் தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்துவிட்டனர். (தொழுகையிலிருந்து) திரும்பிய நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் 'குர்பானி' கொடுத்துவிட்டிருப்பதைக் கண்டபோது, 'தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். தொழும் வரை அறுத்திருக்காதவர் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்' என்று கூறினார்கள்.23
Volume :6 Book :72

5546. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் '(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தம(து சொந்த செலவு)ககாகவே அறுத்தவராவார். தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்' என்று கூறினார்கள்.
Volume :6 Book :73

ஒரு குடும்பத்திற்கு எத்தனை ?
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டைடேய குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். அறிவிப்பவர் : அதா இப்னு யஸார் நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)

கூட்டுக் குர்பானி
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேர போதுதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல் : அபூதாவூத் (2425)

பங்கு
(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி) நூல் : முஸ்லிம் (3643)

தோல்
1717. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Volume :2 Book :25

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : முஸ்லிம் (4000), நஸயீ 

Mohamed Yakub
, ,