இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

15/12/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இனிமையானவளே!இனிமையானவளே!

நீ
வாங்கித்தந்த
விடிகாலையும்...
உனக்காக
விற்றுத்தீர்த்த
அந்திமாலையு
மட்டுமல்லாது...
நடுநிசியும்நன்பகலும்
முன்னிரவும்முதிர்காலையும்
என-
எக்காலமும்
உன்நினைவுகள்!

உன்
கனிந்த
கன்னங்கள்
கவிதைபாடின,
அதில்
குவிந்த
எண்ணங்கள்
எதையோநாடின!

நீயோ...
கிடைத்தும்கிடைக்காமல்
உண்டும்செரிக்காமல்
இரத்ததோடு
கலக்காதகுளுக்கோஸாய்
என்சர்வமும்
வியாபிக்கிறாய்!

நானோ...
இனிப்பின்மேலான
இச்சையோடு
நீரிழிவுக்காரனைப்போல...!

-Sabeer
, ,