குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.12.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பேய்கள்?
பேய்கள் என்றொரு படைப்பினம்இல்லை. இறந்தவர்களின் ஆவிஉயிருள்ளவர் மேல் வந்து ஆதிக்கம்செலுத்துவதும் இல்லை. ஒருமனிதனிடம் இருந்த ஷைத்தான் அவனதுமரணத்திற்குப் பின் இன்னொருவரிடம்வந்து குடியேறுவதுமில்லை என்பதைதிருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின்அடிப்படையில் நாம் நிரூபித்தாலும்அதை நம்பாத உள்ளங்களும்இருக்கின்றன. இதற்கு நியாயமானகாரணங்களும் அவர்களிடம் உள்ளன.எனவே அந்தத் தரப்பினரின் நியாயமானஐயங்களை அகற்றினால் மட்டுமேபேய்களை மனித உள்ளங்களிலிருந்துமுழுமையாக நீக்க முடியும்.

நேற்று வரை சாதாரணமாக இருந்த மனிதன் திடீரென்று அசாதாரணமானவனாக மாறி விடுகிறான். அவனது பழக்கவழக்கங்கள் விசித்திரமாக மாறிப் போய் விடுகின்றன; முன்பிருந்ததை விட அவனது பலம் அதிகமாகி விடுகின்றது; இத்தகைய நிலைக்கு ஆளான சிலர் மறைவான சில விஷயங்களைக் கூட அறிவிக்கின்றனர். இதற்கு முன் அறிந்திராத மொழிகளைக் கூட சில பேர் பேசி விடுகின்றனர்; பயந்த சுபாவம் கொண்ட இத்தகையோர் அடியோடு அச்ச உணர்வு நீங்கியவர்களாகி விடுகின்றனர். இன்னும் பல வியப்பூட்டும் மாறுதல்கள் அவர்களிடம் ஏற்பட்டு விடுகின்றன. இவையெல்லாம் மனித சக்தியை மிஞ்சக் கூடிய ஒரு சக்தியால் மட்டுமே சாத்தியம். அதனையே பேய்கள் என்கிறோம் என்பது இவர்களது நியாயமான சந்தேகம்.

மற்றொரு சந்தேகமும் கூட உண்டு. பேய்பிடித்ததாக நம்பப்படுவோருக்குஎவ்வளவோ உயர்வான மருத்துவசிகிச்சையளித்தும் நிவாரணம்கிடைக்காமல் ஒரு சாமியாரிடம், ஒருமந்திரவாதியிடம், ஒரு பூசாரியிடம், ஒருமௌலவியிடம் மந்திர சிகிச்சைப்பெற்றதும் உடனடி நிவாரணம்கிடைக்கின்றது. மேலும் அந்தப் பேய்களேதாங்கள் ஓடி விடுவதாகக் கூறி விட்டுஓடிப் போகின்றன.

மருத்துவத்தால் ஆகாதது மந்திரத்தால்ஆகிறது என்பது பேய்கள் இருப்பதைஉறுதிப்படுத்துகின்றது. தர்காக்கள்மற்றும் கோயில்களில் அதிசயமானமுறையில் அவர்கள்குணப்படுத்தப்படுகின்றார்கள். “ஆபரேஷன் உட்பட பலவிதமுறைகளால் தர்காக்களில்குணப்படுத்தப்படுகின்றனர். இதுவும்பேய்கள் இருப்பதை மேலும் உறுதிசெய்கின்றது என்று இத்தகையோர்கூறுகின்றனர்.

இந்த அதிசயங்களின் புதிரைவிடுவிக்காமல் எடுத்து வைக்கப்படும்சான்றுகள் முழுமையானபலனையளிக்காது. எனவே இந்தஅதிசயங்கள் பற்றிய புதிரை நாம்முதலில் விடுவிக்க வேண்டும். இதுபற்றிக் கடுகளவு கூட சந்தேகம் இராதஅளவுக்கு இது பற்றி நாம் ஆராய்வோம்.

சமூக விரோதிகளும் குற்றங்களில்ஈடுபடுவோரும் தங்களைக் காத்துக்கொள்வதற்குப் பேய்களைப் பற்றி மக்கள்நம்புவது வசதியாக இருக்கிறது.இத்தகையோர் பேய்களைப் பற்றிகதைகளைக் கட்டிவிட்டு தாங்கள்நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றனர்.உதாரணமாக ஒரு இடத்தில்கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ அல்லதுகடத்தலில் ஈடுபட்டாலோ அது பிறரால்கண்டு கொள்ளப்படக் கூடாதுஎன்பதற்காக அந்த இடங்களில் பேய்கள்நடமாடுவதாக கதை கட்டும் அவசியம்இவர்களுக்கு ஏற்படுகின்றது. வேறு எந்தவகையான பாதுகாப்புநடவடிக்கைகளையும் விட இது செலவுகுறைந்ததாகவும் முழுப் பயனளிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

ஒரு இடத்தில் பேய்கள் நடமாடுவதாக செய்திகள் பரவும் போது அந்த இடத்திற்கு காவல் துறையினர் கூட செல்வதற்கு அச்சப்படுவர். எவராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு வளையத்தை பேய்கள் ஏற்படுத்துகின்றன. தங்களின் ஏஜன்டுகள் மூலம் இப்படி வதந்திகளைப் பரப்புவதுடன் கூட இவர்கள் நின்று விடுவதில்லை. வதந்திகளை உண்மைப்படுத்தும் விதமாக சில ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இரவு நேரங்களில் சலங்கையொலியை ஏற்படுத்துதல், நள்ளிரவில் கற்களையும் மற்ற பொருட்களையும் வீடுகளின் மேல் வீசுதல், தீப்பந்தங்களைக கொளுத்தி பயமுறுத்துதல் இன்னும் பலவாறான ஏற்பாடுகளைச் செய்து அரைகுறை தைரியசாலிகளையும் அதைரியப்படுத்தி வீடுகளில் முடங்கச் செய்வர்.

இத்தகைய ஏற்பாடுகளால்உண்மையிலேயே பேய்கள் இருப்பதுபோன்ற தோற்றத்தை இந்தச் சமூகவிரோதிகள் ஏற்படுத்தி விடுகின்றனர்.எங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம்பற்றிப் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம்துணிவுடன் சென்று ஆராய்ந்தால் அங்கேசமூக விரோதக் காரியங்கள் நடப்பதைக்கண்டு கொள்ளலாம்.

அற்பமான நோக்கங்களுக்காகக் கூடபேய்கள் பற்றிய வதந்திகள்கிளப்பப்படுவதுண்டு. ஒருவருக்குச்சொந்தமான இடத்தைக் குறைவானவிலைக்கு வாங்க வேண்டும் என்றுவிரும்பினால் அல்லது வாடகைக்குகுடியிருப்பவரைக் காலி செய்யவிரும்பினால் பேய்களை விட எளிய வழிஎதுவும் இல்லை. அந்த இடத்தில்பேய்கள் நடமாடுவதாக வதந்திகளைப்பரப்பி விட்டு, அதை உறுதிப்படுத்தும்விதமாக சில காரியங்களைச் செய்தால்விரும்பிய விலைக்கு அந்த இடத்தைவாங்கலாம். வாடகைக்கு இருப்பவரைஉடனேயே காலி செய்து விடலாம். இதுபோன்ற அற்பமான நோக்கங்களைக்கருத்தில் கொண்டும் பேய்கள் நடமாடவிடப்படுகின்றன.

இவையெல்லாம் சில உதாரணங்களே.இது போன்ற இன்னும் அநேககாரணங்கள் பேய்களுக்குப் பின்னணியாகஇருக்கின்றன.
இனி.. பேய் பிடித்ததாகச்சொல்லப்படுபவரிடம் அதிசயங்கள்நிகழ்வது எப்படி? என்ற புதிரைவிடுவிப்போம்.

நேற்று வரை சாதாரமானவனாக இருந்தஒருவன் பேய் பிடித்ததாக நம்பப்படும்போது அசாதாரணமானவனாக எப்படிமாறி விடுகின்றான்?

இந்தப் புதிரை நாம் விடுவித்தாக வேண்டும்.

நாய் வேஷம் போட்டால் குறைத்துத்தான் தீர வேண்டும்.

இந்த ஒரு வரியில் விளங்கமுடியாதவர்கள் மட்டும் இனிவரும்விளக்கத்தை படிக்கலாம்.

மற்றவர்களைப்பயமுறுத்துவதற்காகவும் அதன் மூலம்சில காரியங்களைச் சாதித்துக்கொள்வதற்காகவும் பேய்க் கதைகள்கட்டி விடப்படுவது போலவே வேறு சிலகாரியங்களைச் சாதித்துக்கொள்வதற்காக தங்களுக்கே பேய்பிடித்து விட்டதாக நடிப்பவர்களும்உண்டு. அவ்வாறு நடிப்பதால் சிலகாரியங்களை அவர்கள் சாதித்துக்கொள்வதும் உண்டு.

இப்படி பேய் பிடித்து விட்டதாகநடிப்பவர்கள் அசாதாரணமானவராகவும்நடித்து தீர வேண்டியுள்ளது.இல்லாவிட்டால் பேய் வேஷத்தினால்அவர்கள் முழுப்பயனை அடையமுடியாது.

இதைச் சில உதாரணங்கள் மூலம் உணரமுடியும். ஒரு பெண் நீண்ட நாட்களாகத்திருமணம் ஆகாமல் இருப்பதாக (நீண்டநாட்கள் கணவனைப் பிரிந்தவளாகஇருப்பதாக) வைத்துக் கொள்வோம்.இவள் இறைவனை அஞ்சி தன்உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவள் என்றால் பிரச்சனையில்லை.அவ்வாறின்றி, அன்னிய ஆடவனைவிரும்பி விட்டால் என்றால் – அவனைஅவள் அடைவதற்கு குடும்பத்தினர்களின்கட்டுப்பாடு தடையாக இருந்தால் அதைஎவ்வாறேனும் உடைக்கவேமுயற்சிப்பாள்.

அத்தகைய பெண் சாதாரண நிலையில்நள்ளிரவில் வீட்டை விட்டுப் போய்விரும்பிய ஆடவனைச் சந்தித்துவீட்டிற்கு திரும்பினால் சமூகம்அவளைச் சும்மா விடாது. இந்தத்தடையை உடைப்பதற்கு அவள் பேயாகமாற வேண்டும். பானை சட்டிகளைஉடைக்க வேண்டும். வாயில் வந்ததைஉளற வேண்டும். நமக்குத் தெரியாதவிஷயங்களைக் கற்பனை செய்துமறைவான செய்திகளைக் கூறுவதாகஅவிழ்த்து விட வேண்டும். வேறு மொழிபேசுகிறாளோ என்று மற்றவர்கள் கருதும்அளவுக்கு வாயில் வந்தவாறு உளறவேண்டும். இதையெல்லாம்செய்துவிட்டு அவள் நள்ளிரவில் எழுந்துவெளியே சென்று விரும்பிய ஆடவனைச்சந்தித்து விட்டுத் திரும்பினால் சமூகம்அவளது நிலைக்காகப் பரிதாபப்படும்.இதனால் தான் அசாதாரணமானவளாகஅவள் ஆகி விடுகின்றாள்.

இது ஒரு உதாரணமே, வேறு பலநோக்கங்களுக்காகவும் இது போல்வேஷம் கட்ட வேண்டிய நிலையில் பலர்இருக்கின்றனர். பெருமளவுகடன்பட்டவன் கடன்கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்கவும்,விரைவிலேயே தனக்குத் திருமணம்செய்யும் முடிவுக்குப் பெற்றோர்களைக்கொண்டு வரவும், இன்ன பிறநோக்கங்களுக்காகவும் இப்படிநாடகமாடுவதுண்டு.

அவர்கள் அசாதாரணமானவர்களாகக்காட்சி தருவது நடிப்புத் தான் என்பதில்ஐயம் தேவையில்லை. இதற்குச் சிலசான்றுகளையும் அறிந்து கொள்வோம்.

இலங்கையில் ஒருவர் – மலையாளமொழி அறியாத ஒருவர் – பேய்பிடித்தவுடன் மலையாளம் பேசுவதாகமக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.அவரைச் சோதிப்பதற்காக டாக்டர்கோவூர் என்பவர் செல்கிறார். இவரதுதாய்மொழி மலையாளம். இவர் சென்றுஅவர் பேசும் மலையாள மொழியைக்கேட்ட போது அதில் ஒரு வார்த்தையும்மலையாளச் சொல்லாகஇருக்கவில்லை. வெறும் உளறலைத்தவிர வேறு இல்லை. (பார்க்க: டாக்டர்கோவூரின் மனக்கோலம்)

பேய் பிடித்ததாக நம்பப்படுபவன் மலையாளம் பேசுகிறான். அரபியில் பேசுகிறான் என்றெல்லாம் முடிவு செய்கின்ற மக்களுக்கு அந்த மொழிகள் தெரியாது. தாங்கள் மொழி அல்லாத வேறு எந்த மொழியிலும் சேராத உளறல்களைக் கேட்டு அதற்கு ஒரு பெயரைச் சூட்டி விடுகிறார்கள் இது தான் உண்மை.

‘மாயம்மா என்றொரு பெண். இளம்விதவையான அவளுக்குப் பேய்பிடித்துள்ளது என்று ஊரே அனுதாபம்காட்டுகின்றது. சில இளைஞர்கள்நள்ளிரவில் அவள் பேயாக (?) வெளியேவரும் போது பின்தொடர்ந்து சென்றால்ஊருக்கு ஒதுக்குப் புறமாக மற்றொருஆடவனுடன் அவள்! (ஜுனியர்விகடனில் கி. ராஜ் நாராயணனின் கரிசல்காட்டுக் கடுதாசி)

ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிக்கஅவளுக்கு மொட்டை அடிக்க முற்பட்டபோது பேய் இருந்த இடம் தெரியாமல்போய்விட்டது. (சில மாதங்களுக்குமுந்தைய மறுமலர்ச்சி)

எந்த நோக்கத்திற்காக பேய் வேஷம்போடுகிறாளோ அதற்கு அழகிய கூந்தல்வேண்டும். மொட்டை அடித்தால் எவரும்சீண்ட மாட்டார்கள். அதனால் தான் பேய்ஓடிவிடுகின்றது.

இது நடிப்புத் தான் என்பதற்கும் – பேய்கள்கிடையாது என்பதற்கும் மேலும் சிலஅறிவுப்பூர்வமான சான்றுகளையும்அறிந்து கொள்வோம்.

இறந்தவர்களின் ஆவிகள் தான் பேய்கள்என்பது உண்மையானால் பேய்கள்உலகளாவிய ஒரு பிரச்சனையாக இருக்கவேண்டும். எங்கெல்லாம் மனிதர்கள்மரணிக்கின்றார்களோ – எங்கெல்லாம்அடக்கம் செய்யப்படுகின்றார்களோ –எங்கெல்லாம் எரிக்கப்படுகின்றார்களோஅங்கெல்லாம் பேய்கள் நடமாட்டம்இருந்தாக வேண்டும். ஆனால்மூடநம்பிக்கை மலிந்துள்ள இந்தியாபோன்ற நாடுகளைத் தவிர உலகின் பலபகுதிகளில் பேய்களுக்கு அறவேஇடமில்லை.

கம்யூனிஸத்தின் பிடி இருக்கமாக உள்ளநாடுகளில் பட்டிதொட்டிகள் முதல்பெருநகரம் வரை எவருக்கும் பேய்பிடிப்பது கிடையாது. சவூதி அரேபியாபோன்ற பகுதிகளிலும் பேய்களைக் காணமுடிவதில்லை. இந்தியாவில் கூடமிகப்பெரும் நகரங்களில் பேய்களின்அதிகாரம் செல்லுபடியாவதில்லை.

அங்கெல்லாம் மனிதர்கள் மரணிக்கத்தான் செய்கின்றனர். பேய்களின்உற்பத்தித் தலங்களாகக் கருதப்படும்சுடுகாடுகளும், கல்லறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பேய்களுக்குரியஎல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தும்அங்கெல்லாம் பேய்கள்இல்லாமலிருப்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

அங்குள்ள மக்களுக்கு பேய்கள் பற்றியநம்பிக்கை இல்லாததால் பேய் வேஷம்அங்கே எடுபடுவதில்லை. பேய் வேஷம்போட்டு எதையும் அங்கே சாதிக்கமுடிவதில்லை என்பதைத் தவிர இதற்குவேறு காரணம் எதுவுமில்லை.

சட்டதிட்டங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லாத ஐரோப்பிய நாடுகளிலும் பேய்களுக்கு அவ்வளவு இடமில்லை. காரணம் அங்குள்ளவர்கள் எத்தகைய தகாத உறவிலும் பேய் வேஷம் போடாமலேயே ஈடுபட முடியும். ஒரு பெண் விரும்பிய ஆடவனும் விரும்பிய நேரத்திலும் சுற்ற முடியும். அதை அந்தச் சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. பேய் வேஷம் போடாமலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள வழியிருப்பதால் அங்குள்ளவர்கள் பேய்களின் துணையை நாடுவதில்லை; அதற்கு அவசியமும் இல்லை.

இறந்தவர்களின் ஆவிகளைப் பேய்கள்எனும் அடிப்படையில் பார்க்கும் போதுபேய்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்க வேண்டும். நூறுஆண்டுகளுக்கு முன்னால்இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம்500 கோடி என்றால் இன்று மேலும் 100கோடி அதிகமாகியிருக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் பலநூறு பேய்கள்அதிகமாகும் போது அவற்றின்அட்டகாசங்களும் அதிகமாகி இருக்கவேண்டும்.

அவ்வாறு பேய்களின் அட்டகாசங்கள்அதிகமாகியுள்ளனவா? என்றால்நிச்சயமாக இல்லை. ஐம்பதுஆண்டுகளுக்கு முன் பேய்பிடித்தவர்களின் எண்ணிக்கையை விடஇன்று பேய் பிடித்தவர்களின்எண்ணிக்கை எவ்வளவோகுறைந்துள்ளது. இதுவும் பேய்கள்இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

பேய்கள் மனிதனை விட அதிக வல்லமைகொண்டவை. ஒரே அடியில் அவைமனிதனை வீழ்த்தி விடக்கூடிய ஆற்றல்கொண்டவை என்றெல்லாம் பேய்நம்பிக்கையாளர்கள் எண்ணுகிறார்கள்.

இவ்வளவு வல்லமை மிக்க பேய்கள் ஒருமனிதன் தனியாகச் செல்லும் போதுபிடித்துக் கொண்டதாகத் தான்பேசப்படுகின்றதே அன்றி கூட்டமாகஇருப்பவர்களைப் பிடித்ததாக எங்கேயும்பேசப்படுவதில்லை. ஐந்தாறு பேர் ஒருசுடுகாட்டை அல்லது கல்லறையைக்கடந்து சென்றாலும் அங்குள்ளபல்லாயிரக்கணக்கான பேய்கள்இவர்களை அண்டுவதில்லைஎன்பதையும் நாம் கேள்விப்படுகிறோம்.பேய்கள் உண்மையிலே இருக்குமானால்இவர்களை ஏன் தாக்குவதில்லை?

இருட்டில் மாத்திரம் ஆதிக்கம் செலுத்தும்பேய்கள் வெளிச்சத்தில்வருவதில்லையே அது ஏன்? இந்தக்கேள்விக்கெல்லாம் பதில் ஏதும்கிடையாது. இருட்டாக இருக்கும் போதுஎதையாவது பார்த்து விட்டு பேய் என்றுமனிதன் நினைத்துக் கொள்கின்றான்.நல்ல வெளிச்சத்தில் ஒவ்வொருபொருளும் அதன் உண்மையானவடிவத்தில் காட்சி அளிப்பதால்வெளிச்சத்தில் பேய்களை யாரும் பார்க்கமுடியவில்லை.

இது போலவே தனியாக ஒரு பெண்செல்லும் போது தைரியம் குறைந்தநிலையில் இருக்கிறாள். அப்போது அவள்கண்களுக்குக் கற்பனைத் தோற்றம்தெரிகிறது. ஐந்தாறு பேருடன் செல்லும்போது ஒருவளுக்கு மட்டும் கற்பனையாகஏதும் தோன்றினாலும் மற்றவர்கள்அப்படி எதுவும் தோன்றவில்லையேஎன்று கூறி விடுகிறார்கள். உண்மையாகஇருந்தால் ஐந்து பேருக்கும் தென்படவேண்டும். பொய்யாக இருப்பதால் தான்ஒருத்திக்கு மட்டும் அப்படித்தோன்றுகிறது என்பதை இதிலிருந்துதெளிவாக அறிந்து கொள்ள இயலும்.

பேய்கள் என்று ஆட்டம் போடுபவர்களில்90 சதவிகிதம் பேர் நடிப்பவர்களே, அதன்மூலம் எதையோ சாதித்துக் கொள்ளவிரும்புபவர்களே என்பதை இதன் மூலம்அறியலாம்.



ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்

, ,