குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.8.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உடல் எடையை அதிகரிக்க
இன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைக்க பாடுபடும் மக்கள் மத்தியில், உடல் எடையை அதிகரிக்கவும் அலைந்து திரிகின்றனர்.


உடல் எடையை இயற்கையான முறையிலும், ஆரோக்கியமான முறையிலும் வேகமாக அதிகரிக்க பல வழிகள் உள்ளது.

ஆரோக்கியமற்ற முறைகளை தேர்ந்தெடுத்தால் உங்கள் எடை, அளவுக்கு அதிகமாக உயர்ந்து நீண்ட கால உடல்நல கோளாறுகள் பலவற்றை சந்திக்க நேரிடும்.

எண்ணெய் பலகாரங்கள், வெண்ணெய் கலந்துள்ள உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.ஆனால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தி விடும்.

ஆரோக்கியமான முறையில் வேகமாக உயர்த்திட முட்டை, பால், வெண்ணெய் பழம், உருளைக்கிழங்கு, கிட்னி பீன்ஸ், இளைத்த சிகப்பிறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற உணவுகளை உண்ணலாம்.

ஊட்டச்சத்துடன் கலோரிகள்

உடல் எடையை அதிகரிக்க இது தான் முதல் படி.அதிக கலோரி அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளான வெண்ணெய் பழம், முழு தானிய ரொட்டி, உருளைக்கிழங்கு, கோழி மற்றும் மீனை உண்ணுங்கள்.

இவைகள் அமைப்பிற்குரிய எடையை உங்கள் உடலுக்கு சேர்க்கும், அதனால் தசைகள் வளர்ச்சி மேம்பட்டு எலும்புகள் திடமாகும்.

அளவை அதிகரிக்கவும்

அதிக கலோரிகளுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவோடு அதிகமாக உண்ணுங்கள்.

தினமும் 3-4 வேளை மட்டும் உண்ணாமல் 5-6 வேளை வரை உண்ணலாம். உங்களுக்கு பிடித்த உணவை அதிகமாக உண்ணுங்கள்.

ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்ணுங்கள்.தினமும் உண்ணும் உணவை அதிகமாக உண்ணவேண்டும் என்றாலும் அது ஒரு அளவே தானே.

அதனால் முழு தானிய பிஸ்கட் எள்ளது ரொட்டிகள், பழங்கள், பால் கலந்த தேநீர், வெப்பத்தில் வாட்டப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்ணுங்கள்.

பால் பொருட்கள்

பால் மற்றும் தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும்.

பாலில் புரதம் மற்றும் கால்ஷியம் வளமையாக உள்ளதால் அது ஆரோக்கியமானதாகும். அதனால் தசை வளர்ச்சி மற்றும் திடமான எலும்புகள் மூலமாக உங்கள் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும்.

வெறும் பாலை குடித்து அலுத்துப் போய் விட்டால் மில்க் ஷேக் போன்ற பாலினால் செய்யப்படும் பானங்களை பருகுங்கள்.

எனர்ஜி பானம்

தினசரி உடற்பயிற்சி செய்து முடித்த பின்பு எனர்ஜி பானத்தை பருகுங்கள். அப்படி செய்வதால் உடற்பயிற்சி செய்யும் போது உங்களின் சகிப்புத் தன்மை அதிகரிக்கும்.

கார்போஹைட்ரேட்ஸ் உங்கள் உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து புரதம் மற்றும் கலோரியுடன் சேர்ந்து புத்துணர்வும் அளிக்கும்.

சரியான பழங்களும் காய்கறிகளும்

உடல் எடையை அதிகரிக்கவும் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கவும் பல வகையான காய்கறிகளும் பழங்களும் இருக்கிறது.

சோளம், காரட், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். இவை உடல் எடையை அதிகரிக்க உதவும்.

ஓய்வு

போதுமான அளவுக்கு ஓய்வும் தூக்கமும் ஒரு மனிதனுக்கு அவசியமானது.

தினமும் 7-8 மணி நேரம் தூங்கினால், தூக்கத்தின் போது உங்கள் உடலின் தசைகள் வளர்ச்சி அடையும். அதனால் சரியான அளவில் ஓய்வு எடுத்தால் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும்
, ,