குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

24.8.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஹலாசனம்
ஹலா, ஆசனம் என்ற இரு வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும் ஹலாசனம் என்பது. "ஹலா" என்றால் கலப்பை
என்று பொருள், ஆசனம் என்றால் யோக நிலை. இந்த யோகாசன நிலை மரபான இந்திய விவசாயத்தின் கலப்பை போன்று அமையும் என்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது.

செய்முறை :
ஹலாசனத்தை சிறந்த முறையில் பயிற்சி செய்ய முதலில் அர்த்த ஹலாஸன நிலையை எடுத்துக் கொள்வது சிறந்தது.ஆனால் கைகளில் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.கைகள் தரையில் அழுந்தி இருந்தாலும் மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.இரண்டு கால்களை ஒன்று சேர்த்து 90 டிகிரிக்கு உயர்த்தவும்.உள்ளங்கைகளை பூமியின் மீது அழுத்தி இடுப்பை உயர்த்தி கால்களை பின்புறமாக கொண்டு வரவும்.

சிறிது சிறிதாக முயற்சித்து கால்கட்டை விரல்களை தரையின்மீது வைக்கவும். கால்களை மடிக்காது நீட்டி வைக்கவும்.உடல் எடை முழுவதையும் தோள்பட்டைகளில் வைத்து கைகளை எடுத்து தலைக்குமேல் கொண்டு வரவும். கை விரல்களைக் கோர்த்துக் கொண்டு உச்சந்த தலையை பிடித்து கை முட்டிகளை தரை மீது வைக்கவும்.சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருக்கவும்.கை விரல்களை பிரித்து கையை முதுகுபுறம் கொண்டு வரவும். உள்ளங்கையால் பூமியை அழுத்தி கால் விரல்களை பூமியிலிருந்து பிரித்து கால்களை உயர்த்தவும். மெதுவாக விரிப்பின்மீது படுத்து கால்களை தரையை நோக்கி கொண்டு வந்து வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும்.


பலன்கள்:

இந்த ஆசனம் செய்வதால் முதுகெலும்பு நன்கு பலப்படும். நரம்புகள் வலிவடையும். இந்த யோகா செய்யும் போது அடி வயிறு அழுத்தப்படுவதால், ஜீரண சக்தி அதிகரிக்கும். தைராய்டு சுரப்பு ஊக்குவிக்கப்படும்.

பாலியல் கோளாறுகளை தீர்க்கும் ஆசனங்களில், ஹலாசனம் சிறந்த ஆசனம். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.
, ,