குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

25.10.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

முழங்காலுக்கு வலிமை தரும் பயிற்சி
சிலருக்கு கால் பாதம் மற்றும் முழங்காலில் வலி இருக்கும். அதுவும் தூங்கி எழும் போது காலை தரையில் ஊன்ற முடியாத அளவிற்கு இந்த வலி அதிகமாக இருக்கும்.
இது தவிர கால் வலி உள்ளவர்கள், கால்களில் அதிகளவு சதை உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்து வரலாம். 

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும். தலை முதல் முதுகு வரை தரையில் ஒட்டியபடி இருக்க வேண்டும். கனமான துணியை (அந்த துணியில் உருட்டினால் 10 cm அளவில் இருக்க வேண்டும்) நன்றாக உருட்டி வலது கால் முட்டிக்கு அடியில் வைக்கவும்.

இடது காலை முட்டி வரை மடக்கி வைக்கவும். இப்போது முதல் படத்தில் உள்ளது போல் கால் இருக்க வேண்டும். பின்னர் 2ம் படத்தில் உள்ளபடி உருட்டி வைத்த துணியின் அளவுக்கு காலை நேராக நீட்டி பாதத்தை மெதுவாக முன்னும், பின்னுமாக மடக்க வேண்டும். 

பின்னர் மெதுவாக பாதத்தை சுழற்ற வேண்டும். 2 விநாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும். இவ்வாறு இரு கால்களிலும் மாறிமாறி 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 20 முறையும், பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 

எண்ணிக்கையின் அளவை அதிகரிக்கும் போது காலுக்கு கீழே வைக்கும் துணியின் சுற்று அளவையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். பின்னர் அதே போல் காலில் கடினான ஷூவை போட்டு கொண்டு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி கடினமாக இருந்தாலும் விரைவில் நல்ல பலனைத் தரக்கூடியது.


Maalaimalar
, ,