குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

28.2.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கோழிகறி பிரியரா?
அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்ததில் முக்கிய முதலிடம் பிடிப்பது கோழி கறி.
அதே சமயம் சிக்கனை சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இயற்கையான மற்றும் ஆரோக்கியமான முறையில் சிக்கனை பக்குவப்படுத்தினால் உடல் நலத்திற்கு கூடுதல் பலன் அளிக்கும்.
* 1 டேபிள் ஸ்பூன் வினிகர், 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த மூலிகைகள், 1/4 கப் கூடுதல் ஆலிவ் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் பூண்டு அல்லது வெங்காய பொடி, 1-2 டேபிள் ஸ்பூன் கடுகுடன் கலந்து கொள்ளுங்கள்.
இதனுடன் கோழியின் நெஞ்சை கலந்து ஒரு பையில் போட்டு கொள்ளுங்கள். பின் அதனை அவித்தோ அல்லது கிரில் செய்தோ உண்ணலாம்.
* 1/4 டீஸ்பூன் நறுக்கப்பட்ட சேஜ், 1 1/2 இன்ச் இஞ்சி, 1/க கப் எலுமிச்சை ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், 1/2 கப் ஆரஞ்சு ஜூஸ், 2 கிராம்பு கலந்த இஞ்சி மற்றும் 1/4 டீஸ்பூன் சூடான சாஸ் ஆகியவற்றை கலந்திடவும்.
பின்னர் இதில் சிக்கனை போட்டு இரவு படுக்கும் போது கலந்து வைக்க வேண்டும், மறுநாள் சமைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* 2 கப் மைதா மாவு, டேபிள் ஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள், 1/4 கப் பால் ஆகியவற்றுடன் 2 முட்டையை சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் இதில் சிக்கனை பிரட்டி எடுத்து சமைத்தால் சுவையாக இருக்கும்.* எலும்பில்லாத சிக்கனில் தயிர், நறுக்கிய துளசி மற்றும் சிறிதளவு கார்ன் ஸ்டார்ச்சுடன் சேர்த்து கலந்து, 4-5 மணிநேரத்திற்கு ஊற வைத்து அதன் மேல் பிரட் தூள் தூவி விடுங்கள்.
பின்னர் கொஞ்சம் சீஸ் தூவி விட்டு, 30 நிமிடங்கள் வேக வைத்து சாப்பிடவும்.
* 6 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள், சீரகப் பொடி, உப்பு மற்றும் 1 டேபிள் டீஸ்பூன் மிளகுத் தூள், இஞ்சி, சர்க்கரை, குங்குமப்பூ, லவங்கப்பட்டையை கலந்து கொண்டு, இதனுடன் கோழியை பக்குவப்படுத்தியும் சாப்பிடலாம்.
* பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், எள், எலுமிச்சை தோலின் பொடி ஆகியவைகளை கலந்து ஊற வைத்து, க்ரில் செய்தும் சாப்பிடலாம்.

, ,