குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.2.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சிறுநீரக பாதிப்பு
இறை மார்க்கம்
தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரக பாதிப்புகளை சந்திக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது
.சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான்.

சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. அதில் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரைப் பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆகவே சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருக்கு சில பழக்கவழக்கங்களை மேற்கொள்வது நல்லது.

சோடாக்கள்

சோடா அதிகம் குடித்து வந்தால சிறுநீரகங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படும். இதற்கு காரணம், புரோட்டீன் சிறுநீரகத்தில் அதிகம் தேங்கப்பட்டு, அது சிறுநீரகத்தில் பெரும் தீங்கை விளைவிக்கும்

வைட்டமின் பி6 குறைபாடு

சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு வைட்டமின் பி6 குறைபாடும் ஒன்று.
வைட்டமின் பி6 குறைபாட்டினால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே தினமும் குறைந்தது 1.3 மி.கி வைட்டமின் பி6 எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வைட்டமின் பி6 மீன், கொண்டைக்கடலை போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும்.
உடல் எடையை சீராக பராமரித்து வந்தாலும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஆகவே அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்

மக்னீசியம் குறைபாடு

மக்னீசியம் குறைபாடு இருந்தாலும் சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பமாகும். உடலுக்கு போதிய மக்னீசியம் கிடைக்காவிட்டால், கால்சியம் சரியான உடலால் உறிஞ்சப்படாமல் மற்றும் உட்கிரகித்துக் கொள்ளாமல் போகும்.

இப்படி இருந்தால் சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கி சிறுநீரக கற்கள் ஏற்படும். ஆகவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.

போதிய தூக்கம் இல்லாதது

தினமும் சரியாக தூங்கி எழாவிட்டாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். எனவே அன்றாடம் போதிய அளவில் தூங்கி எழ வேண்டும்.
இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். அப்போது சரியான தூக்கத்தை மேற்கொள்ளதால் இருந்தால் சிறுநீரகமானது நேரடியாக தாக்கப்படும்.

போதிய அளவில் தண்ணீர் குடிக்காதது

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும்.
நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம்.

சிறுநீரை அடக்குவது

சிறுநீரை அடக்கி வந்தால் சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும்.
ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது

உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும்.
எனவே தினமும் 5.8 கிராம் உப்பை மட்டும் சேர்த்துக் கொண்டு வந்தால், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

காப்ஃபைன்
காபி, டீ போன்றவற்றை அளவுக்கு அதிகமாக குடித்து வருபவர்களுக்கு சிறுநீரகம் சீக்கிரம் பாதிக்கப்படும். ஆகவே அவற்றை அதிகம் குடிக்கும் பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.

வலி நிவாரணிகள்
சிலர் எந்த ஒரு வலி வந்தாலும், உடனே மாத்திரை போடுவார்கள். இப்படி மருத்துவர் பரிந்துரைக்காத மாத்திரையை உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வலி நிவாரணிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் அதிகம் குடிப்பது

ஆல்கஹாலில் உள்ள டாக்ஸின் கல்லீரலை மட்டுமின்றி, சிறுநீரகங்களையும் தான் பாதிக்கும்.
ஆல்கஹால் பருகுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அதிக அளவில் அழுத்தத்திறகு உள்ளாகி பாதிப்படையும். ஆகவே ஆல்கஹால் பருகுவதை தவிர்ப்பது நல்லது

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்கள் கடினமாகி அதனை அளவு குறைந்து சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டு அது மெதுவாக பாதிக்கப்படும்.

மேலும் ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டிற்கு மேல் புகைத்தால், அது சிறுநீரகத்தை மட்டுமின்றி நுரையீரலையும் பாதித்து இறப்பிற்கு வழிவகுக்கும்.
, ,