குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

14.6.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆண்மை குறைவுக்கு தீர்வு
இலுப்பை, இதற்கு வேறு பெயர்கள் இருப்பை,குலிகம்,மதூகம், வெண்ணை மரம், ஒமை முதலியன.
தமிழ் நாட்டில் தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில்அதிகமாகக் காணப்படுகின்றன.

இலுப்பை பூ மனிதனுக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை வழங்குகிறது.

மருத்துவ பலன்கள்

1. உடல் இளைத்து எலும்பு தோலுமாக உள்ளவர்கள், இலுப்பைப் பூக்களை பசும்பாலில் விட்டு அரைத்து காய்ச்சிய பசும்பாலுடன் இதைக்கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் 48 நாட்களில் உடல் நன்கு தேறும்.

2. காலில் ஏற்படும் அரிப்பு, புண்களைப் போக்க இலுப்பைப் பூவில் கஷாயம் தயாரித்து அந்த அரிப்பின் மீது தடவி வந்தால் அரிப்பும், புண்ணும் மிக விரைவில் குணமடையும்.

3. இலுப்பை பூ, வெட்டிவேர், நெல்லிக்காய் அதிமதுரம், ஏலம், லவங்கம், திப்பிலி, வேப்பிலை இவைகளை சம அளவில் எடுத்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து நாள்தோறும் ஒரு சிறிய ஸ்பூன் அருந்தி வந்தால் ஆரோக்கியமான உடல் கிடைக்கும்.

4. ஆண்மை குறைவு(IMPOTENCY) உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பை பூ கஷாயத்தைச் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

5. இலுப்பை பூக்கள் மனிதருக்கும், கால்நடைகளுக்கும் இரத்த விருத்தி மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பைப் பூக்களை குடிநீரில் போட்டு காய்ச்சி குடிக்க இருமல், காய்ச்சல் குணமாகும்.

6.இலுப்பைப்பூ நல்ல சுவையுடையது இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.

, ,