குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

24.7.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

என் நண்பன்
இறை மார்க்கம்
என் ரியாஸ்!

எனக்கு
ரியாஸ் என்றொரு
நண்பன் இருக்கிறான்!


எங்க குரூப்பிலேயே
இவன் தான்
ச்செக்கச் செவப்பே



மனசோ

வெள்ளை வெளேர்!

மழலையின் பேச்சில்

மாசு மரு உண்டா?

பொய் புரட்டு?

இவன்...

பேச்சிலும் சிரிப்பிலும்

இப்பவும் மழலை;

முடி உதிர்ந்தும்

இவன் முகம்

இன்றும் எழிலே!

இவன்

எண்ணிச் சேர்த்த

கரன்ஸி நோட்டுகள்

காக்காசு அரைக்காசு மட்டுமே;

எண்ணிச் சேர்த்த

கண்ணியமும் கட்டுப்பாடும்

மலையளவு மழையழகு!

வார இறுதி நாட்களில்

சவுதியின் ரஹிமாவில்

என்

வரவுக்காகக் காத்திருக்கும்

இவனுக்கும் ஆஷிக்குக்கும்

நிறைய ஜாகிர்களைக்

கொண்டு சென்று

விடிய விடிய பேசித் தீர்ப்போம்!

இளம் பெண்கூட

இடுப்பில் தூக்கி

வைத்துக் கொள்ளுமளவிற்கு

சுத்தமானவன்;

செல்லுலாய்டுகளில்

சற்றே

ஜொள்ளுவதாகச்

சொல்லுவதுண்டு...

அது...ஒரு காலம்!

இளநிலை வணிகத்தை

இவன் எட்டுவதற்குள்

இவன் மகன்

எஞ்சினியரிங் முடித்து விட்டான்;

தற்போது என் நட்பு

முதுநிலை வணிகத்திற்கான

முயற்சியில்!

அன்பான அம்மா

மன நிறைவான மனைவி

மகிழ்வளிக்கும் பிள்ளைகள்

இணக்கமான வேலைவெட்டி

இவற்றுடன்

எனக்கு

இறைவன் நல்கிய அருட்கொடை

என் ரியாஸ்!

இப்பவும்

இவனுடன்

பேசி முடிக்கும்போது

லேசாகிப் போகும் மனம்;

மயிலிறகால்

மருந்திட்டதுபோல்

வலி குறைக்கும் ரணம்!

இவன்

வாழ்க்கையில்

சாதித்தது குறைவு

இவன் வாழ்க்கை

போதித்ததோ நிறைய!

எல்லோரும் இன்புற்றிருக்க

வேதனைகளை

இவன் ஏற்பான்;

ஏமாற்றும் மானுடரிடம்

இயல்பாகவே

இவன் தோற்பான்!

இவன்

உலகம் மிகச் சிறியது;

உள்ளம் பெரியது!

சுமை இழுக்கும

புரவி குணம் -இவன்

பிறவி குணம்!

பணம் சம்பாதிப்பதில்

தன்னிறைவு தடுமாறினாலும் - நல்ல

குணம் சம்பாதிக்க விரும்புவோர்

இவனிடம்

உடனடியாக

வேலைக்குச் சேரவும்!

                -சபீர்
, ,