குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

23.7.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நியாய இறுதி தீர்ப்பு நாள்
judgementday
அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள். அன்று நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்.
பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும். மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (அல்குர்ஆன்: 2:281)
  எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில்1* அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (3:25)
1* மறுமை நாள் மறுமை நாள் என்பது குறிப்பிட்ட இரண்டு நாட்களின் பொதுவான பெயராகும். ஒன்று உலகம் அழிக்கப்படும் நாள். மற்றொன்று மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள். மறுமை நாள் என்பது உலகம் அழிக்கப்படும் நாளுக்கும் அழிக்கப்பட்ட பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து விசாரிக்கப்படும் நாளுக்கும் பொதுவான சொல்லாகும்.அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும்.

  மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(3:161)

தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(4:49)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (4:124)

நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(6:160)

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார். அவர்களின் தூதர் வந்ததும், அவர்களிடையே நீதியாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(10:47)

அநீதி இழைத்த ஒவ்வொருவருக்கும் பூமியில் உள்ளவை யாவும் சொந்தமாக இருந்தால் அதை ஈட்டுத் தொகையாக வழங்குவர். வேதனையைக் கண்டதும் உள்ளூரக் கவலைப்படுவார்கள். அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(10:54)

ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி வாதிட வரும் நாளில் ஒவ்வொரு வருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(16:111)

ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவரின் தலைவருடன் நாம் அழைக்கும் நாளில் தமது பதிவேடு வலது கையில் கொடுக்கப்படுவோர் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அணுவளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(17:71)

கியாமத் நாளுக்காக. நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.(21:47)

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.68*நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு157* உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(23:62)
68* திருக்குர்ஆனின் 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்களில் சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்தச் சொற்றொடர் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடியதாகும்.
நாம் வாழ்கின்ற காலம், நாடு, பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இஸ்லாத்தின் சில கட்டளைகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். உண்மையிலேயே இயலாத போது அதைச் செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி ஏதும் கேட்க மாட்டான். 

157*"பதிவுப் புத்தகம்" "பாதுகாக்கப்பட்ட ஏடு" "மறைக்கப்பட்ட ஏடு" "தெளிவான ஏடு" என்றெல்லாம் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் ஒன்று விடாமல் இறைவன் தன்னிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறான். அதில் உள்ளபடியே அனைத்துக் காரியங்களும் நடக்கின்றன.

(திருக்குர்ஆன் 6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 33:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 43:4, 50:4, 56:78, 57:22, 85:22)

திருக்குர்ஆன் கூட அவனது பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 85:21-22, 56:77-78)

இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.(36:54)

பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(39:69)

வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடனே அல்லாஹ் படைத்தான். ஒவ்வொருவரும், தாம் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படுவார்கள். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(45:22)

, ,