பதிவுகளில் தேர்வானவை
26.11.15
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஜாகிரின் படிக்கட்டுகள்-1
நீங்கள் முன்னேறுபவராய் இருக்கிறீர்கள் அல்லது பின்னடைபவராக இருக்கிறீர்கள். இரண்டுக்கும் இடைப்பட்டதாக
இருப்பதாக சொல்வது நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்வதுதான்.
வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களின் முதல் குணம்.அவர்கள் உண்மையை எதிர் கொள்பவர்கள். You must have the guts to face the truth.
உங்கள் குணம் / தரம் உங்களுக்கு தெரியவில்லையா..? அல்லது நீங்க... ரொம்ப(வே) நல்லவன்னு நினைத்துக் கொண்டிடுக்கிறீர்களா...? நீங்கள் உண்மையிலேயே யார் என்பதற்கு ஒரு சின்ன பயிற்சி இருக்கிறது. இதை Mirroring Technique என்று சொல்வார்கள். இதை ஷாவ்லின்[Shaolin] பயிற்சிகளில் பயன்படுத்துவார்கள். உங்களோடு இருப்பவர்கள் உங்கள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து ' நீ ஒரு சோம்பேரி, நீ சொல்றவன,.செய்றவன் இல்லெ... நீ ஒரு மிகப்பெரிய காலம் தாழ்த்துபவன்...' இப்படி அடுக்கி கொண்டே போவார்கள். அவர்களின் விமர்சனம் உண்மையில்லாத பட்சத்தில் ஒன்றும் இருக்காது. அது உண்மையாய் இருந்தால் அழுகை கியாரன்டியா வரும். உண்மையை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணீர் வரும்.
இதை கார்ப்பரேட் ட்ரைனிங் இல் எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?. உங்களுடன் ட்ரைனிங் வந்தவர்கள் ஒரு 10-பேர் என வைத்துக் கொள்வோம். எல்லோர் கையிலும் ஒரு பேப்பர் கொடுத்து உங்களைப்பற்றி கருத்து எழுத சொல்வார்கள் [உண்மை மட்டும்] அதில் எழுதியவர்கள் பெயர் இருக்காது. அந்த 10 பேரின் கருத்தில் எது ரிப்பீட் ஆக வருகிறதோ அது நிச்சயம் உடனே கவனிக்கபட வேண்டிய விசயம். அது உங்களின் பிரதிபலிப்பு.
மேற்சொன்ன இரண்டு பயிற்சிகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
முதலில் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் நல்ல கல்வி எங்கிருந்து கிடைக்கிறது என்பது முக்கியமல்ல. நாம் எதைக் கற்றுக்கொண்டால் நமக்கு பயன்படும் என்பது முக்கியம். இப்படித்தான் யூதர்களை சிலர் வெறுத்து அவர்கள் கண்டுபிடித்த பல மருத்துவ கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளவே இல்லை. நஷ்டம் முஸ்லீம்களுக்குதான் என்பதை இதுவரை இந்த சிலபிடிவாதக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
அமைதியில்லாத மனம் எதையும் தொடர்ந்து சாதிக்காது. நம்மிடம் உள்ள மிகப்பெரிய பொக்கிஷம் தொழுகை. இதன் மூலம் பல சுபிட்சங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து “CREATION” நீங்கள் இதுவரை உங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளில் சில முடிவுக்கு வந்திருக்கும் சூழ்நிலை. இதில் மாற்றம் ஏற்படும் என தெரிந்திருக்க வேண்டும். இதைPersonal creation என சொல்லப்படுகிறது.
உங்களின் இயக்கத்தில் (செயல்களில்), எண்ணத்தில் இது உங்களுக்கே தெரியாமல் சுற்றி சுற்றி ஒரு பிளாஸ்டர் மாதிரி ஒட்டி இருக்கும். உங்கள் வார்த்தையில் செயலில் நிச்சயம் இது தெரியும். உதாரணத்துக்கு பல விசயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை சொல்லலாம். சின்ன வயதில் வெளியூரில் படம் பார்க்க போனதற்கு ஒப்பாரி வைத்த பெரியவர்கள். நீங்கள் மதித்துநின்று கொண்டிருக்கும்போது நீங்கள் ஒரு உதவாக்கரை என்று லேசாக மனதில் “ட்ரில்”செய்திருப்பார்கள். உங்கள் புது முயற்சி அனைத்திலும் இந்த'உதவாக்கரை' கமர்சியல் ப்ரேக் அடிக்கடி வந்து போகும்.
முதலில் வாழ்க்கையில் சேர்ந்த குப்பைகளை முதலில் மனதிலிருந்து தூக்கி எறிய கற்றுக்கொள்ளுங்கள். குப்பைகளை அகற்றாமல் அதில் அழகான வீடு கட்ட நினைப்பதை எப்படி சொல்வது...
எல்லாம் எனக்கு தெரியும் என்ற மனம் எதையும் கற்றுக்கொள்ள விடாமல் எப்போதும் உங்களுக்கெ தெரியாமல் ஒரு மாதிரி 'ஹேங்'ஆன கம்ப்யூட்டர் மாதிரி இருக்கும். கம்ப்யூட்டர் ஹேங் ஆகி விட்டால் நீங்கள் சரி செய்து விடலாம் நீங்கள் ஹேங் ஆகி விட்டால்.??
If you think your training is finished You are FINISHED.
தொடர்ந்து எதற்கு சக்தி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது பிறகு உண்மையாகிவிடும். எனவே வாழ்க்கையில் எது உங்களுக்கு தேவையில்லையோ அதில் அனாவிசயமாக உங்கள் சக்தியை செலவழிக்காதீர்கள். உதாரணம்;இல்லாத நோய் இருப்பதாக நினைத்து கவலைப்படுவது. / உங்களின் தொழிலில் நீங்கள் செய்த முயற்சிக்கு பலன் இருக்காது என ரிசல்ட் தெரியுமுன் திருவாய் மலர்வது. / தன்னை ஒரு வயதானவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது....இதேபோல் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊரில் பெண்களுக்கு இடையே நடந்த சண்டைக்கு பஞ்சாயத்து பன்ன நினைப்பது. இதில் லாபம் அடைவது செல்போன் கம்பனிதான் என்பது நேற்று நிலோபர் / ராஜேஸ்வரி மகப்பேரு மருத்துவ மனையில் பிறந்த பிள்ளைகலுக்கு கூட தெரியும்.. இது தொடர்ந்து உங்கள் செயல்களை குறைத்து விடும். அடுத்து வீட்டில் மதிக்காத சூழ்நிலையை சொல்லி அழும் எபிசோட் ஆரம்பித்து விடும்
காயப்படுத்திய உறவுகளை எதிரியாக பார்ப்பதும் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும். இன்னும் மனதில் இருக்கும் பாரத்துடன் எவ்வளவு தூரம் உங்களால் நடக்க முடியும்.
சில நடவடிக்கைகளையும் பார்போம். தன்னை சுத்தமாக வைத்துகொள்வது, சரியாக வைத்துக்கொள்வது பொது மக்கள் தொடர்பு உள்ள அனைத்து தொழிலில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். உங்களின் பெல்ட் பக்கிள் தேய்ந்து போய்விட்டதா?. உங்களின் டூத் பிரஸ் சுருளும் அளவுக்கு பயன்படுத்துபவரா?. நிதம் சேவிங் செய்யாமல் மூக்கு முடி வெளீயே தெரிய கஸ்டமர்களை பார்க்க ஆரம்பிக்கும் டைப்பா நீங்கள்.... முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். நேர்த்தி இல்லாத மனிதனை உலகம் அவ்வளவாக பார்ப்பதில்லை. மென்மையான வாசனை உங்களுக்கு நல்லது. பல்லவன் பஸ்சில் ஏறும்போது'நேத்திக்கடனுக்கு' நேந்து விட்ட கிடாய் மாதிரி வியர்வை நாறும் எந்த மனிதனும் தொழிலில் சத்தியமாக முன்னேர முடியாது. தன்னை சரி செய்து கொள்ளாதவன் எப்படி தொழிலை சரியாக செய்ய முடியும். அதற்காக அத்தர் போடுகிறேன் என்று ரொம்ப சீப்பாக உள்ள பாட்டில் [இங்கெல்லாம் 5 வெள்ளிக்கு 2 விற்கிறான்] அதை போட்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்சினையயை கொடுத்து விடாதீர்கள்.
மீண்டும் வெள்ளி கிழமை தொடராக வரும் (இன்ஷா அல்லாஹ்)....
ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்