பதிவுகளில் தேர்வானவை
3.12.15
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஜாகிரின் படிக்கட்டுகள் -2
நம்மில் பல பேர் சேல்ஸ் லைனில் இருப்பதால் சில Dress Codeவிசயங்கள் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
வெள்ளை முழுக்கை சட்டையும்,டார்க் நிற பேன்ட்டும், சிகப்பு.. அல்லது சிகப்பு நிறம் நிறைந்த கலரில் டை... இப்படி உடை உடுத்துபவர்கள், தான் இருக்கும் இடத்துக்கு கவனத்தை திருப்பும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சியில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தலைவர்கள் இதுபோல் ஒரு கார்ப்பரேட் லுக் இல் உடை அணிய இது காரணம்.
டை தேர்ந்தடுப்பதில் சில விசயம் இருக்கிறது. மிக்கி மவுஸ், மர்லின் மன்ரோ படம் போட்ட டை எல்லாம் போட்டுக்கொண்டு டீலிங் பேசினால்'“காந்தி.. பூந்தி ஆவது உறுதி'. டாய்ஸ் கடைக்கும், பப் வியாபாரத்துக்கு உள்ள விசயங்களை உபயோகப்படுத்தி அதற்கு சம்பந்தமில்லாத பிசினசுடன் மல்லுக்கு நிற்பவர்களை இங்கு நான் பார்த்திருக்கிறேன்.
டையில் குழப்பமான டிசைன் இருப்பதை தவிர்க்கவும் [மார்டன் அர்ட் எல்லாம் மியூசியத்தோடு விட்டு விடுங்கள்], குழப்பமான டிசைனில் சட்டை, டை உங்கள் கஸ்டமரின் கவனம் அதில்தான் இருக்கும். நீங்கள் பேசுவதில் அவ்வளவாக கவனம் இருக்காது. சரி எனக்கு அப்படித்தான் போட பிடிக்கும் என்றால்.. அது casual wear என்ற அடிப்படை விதியாவது தெரிந்திருக்க வேண்டும். கார்ப்பரேட் உலகில் சம்பந்தமில்லாமல் டிரஸ் செய்பவர்களைப் பார்க்கும்போது டிசம்பர் மழையில் ஷூ போட்டு வந்து நம் ஊர்சேற்றில் நடப்பவர்கள்தான் கண்ணுக்கு தெரிவர்.
இன்றைக்கு மிகப்பெரிய வெற்றி மனிதனுக்கு எது தெரியுமா? தன்னை தானே வெல்வது. நம் மிகப்பெரிய எதிரி பல சமயங்களில் நாம் தான். உங்களின் ஒவ்வொரு தோல்வியிலும் உங்கள் எனர்ஜி உங்களை நோக்கி திரும்பாமல் இருக்கும்போது நாம் மற்றவர்களிடம் குறைகான ஆரம்பிக்கிறோம்.. பிறகு அவனை திருத்த நினைக்கிறோம்... தாமதமானால் திட்டுகிறோம்... மனதளவில் புழுங்கி போகிறோம்.
எப்போதும் பயந்த சுபாவத்துடனும்,எதிர்கால பணச் சுமைகளையும் நினைத்து இப்போதைய சூழ்நிலையயை சூன்யமாக்கிக் கொண்டிருக்கிறீர்களா?..
கொஞ்சம் உங்கள் ஜனன நிமிடத்துக்கு திரும்பிப் போவோம்... நீங்கள் ஆணா / பெண்ணா என்று தெரியாத அந்த நிமிடத்திலும் உங்கள் தாய் எத்தனை கனவுகளை உங்களுக்காக சுமந்திருப்பார்கள்.நீங்கள் இந்த உலகில் பிறந்தவுடன் என்ன நினைத்திருப்பார்கள்... நிச்சயம் நீங்கள் எல்லாவற்றிலும் ஜெயிக்க போவதை நிச்சயம் கற்பனையில் பார்த்திருப்பார்கள். நீங்கள் கருவறையில் இருக்கும் நிமிடங்களின் கஷ்டத்தை எப்படி உங்கள் தாய் அனுபவித்து இருப்பார்கள் என்று தெரிய வேண்டுமா?... 2 செங்கற்களை எடுத்துக்கொண்டு ஒரு கயிற்றில் கட்டி உங்கள் கழுத்தில் தொங்கப்போட்டு ஒரு 24 மணிநேரம் மட்டும் வழக்கம்போல் உங்கள் வேலையயை பார்த்துப்பாருங்கள்....ஒரு தாயின் கஷ்டத்தை ஒரு நாள் தாங்க முடியாத நாம் எப்படி அவர்களின் அப்பழுக்கற்ற கனவை மட்டும் நம் எதிர்மறை சிந்தனை கொண்டு சிதைக்க கற்றுக்கொண்டோம்.... வெற்றியாளனாக பிறந்து குப்பைகளை மனதுக்குள் சேகரிக்க எப்படி முடிந்தது.

எந்த சூழ்நிலையிலும் உங்கள் தாயின் Blessing எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
இன்றிலிருந்து உங்கள் மைனஸ் பாயின்ட்டில் கவனம் செலுத்துவதை விட்டு ப்ளஸ் பாயின்ட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். யாருக்கு இந்த உலகில் கஷ்டமில்லை... யார் முழுக்க முழுக்க, நிரந்தர ஆரோக்கியத்தில் இருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லா கஷ்டமும் இருக்கிறது.
உலகம் போற்றப்படும் ஒவ்வொரு விசயத்திலும் பல விதமான சவால்கள் இருக்கத்தான் செய்கிறது.இன்று நாம் எல்லோரும் பயன்படுத்தும் Canon Printersதயாரிக்கும் முதலாளிக்கு ஒரு அச்சரம் ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவர் காலூன்றியது ஆங்கிலம் மட்டும் பேசும் அமெரிக்காவில். இன்றைக்கு Canon Inc. ஒரு leading firm.

இன்று பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹோன்டா காரின் கார்பொரேட்டரை வடிவமைத்த அதன் முதலாளி முதன் முதலில் டோயோட்டா தொழிற்சாலையில் வேலை கேட்டு போகும்போது விரட்டியடிக்கப்பட்டவர். விரட்டியடிக்கப்பட்டதின் விளைவு ஹோண்டா என்ற கார் உருவானது.
நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா ஒரு சமூக சேவகியென்று தெரிந்தும் ஒருவன் அவர் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறான்.
அத்தனை சாதனைகளும் அவமானங்களையும்,எதிர்பார்ப்புகளையும் படிக்கடுகளாக வைத்து நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ஆண் வாழ்க்கையில் முன்னேர பெண்களின் பங்கும் முக்கியம். ஒரு மனிதன் கல்யாணத்துக்கு பிறகு அதிகம் முன்னேர முதல் காரணம்,காதல், அன்பு, பாசம் இப்படி எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை எப்போது நொண்டியடிக்க ஆரம்பிகிறது என்றால் மற்ற ஆண்களின் முன்னேற்றத்துடன் தன் கணவனின் முன்னேற்றத்தை ஒப்பிட்டு கணவனை ஒரு திறமை இல்லாதவன் எனும் தோரணையில் பேச ஆரம்பிக்கும்போது. பிறகு பிள்ளைகளும் சம்பாதிக்கும் தகப்பனை மதிக்காது. இதில் பதிலுக்கு பதிலாக கணவன் எப்போது மனைவியை மற்றொரு பெண்ணுடன் ஒப்பிட ஆரம்பிக்கிறானோ அன்றைக்கே நரகத்தின் ப்ரீவியூ தெரிய ஆரம்பித்துவிடும்.
முன்னேறுபவனுக்கு வாய்ப்புகள் எப்படியாவது வரும், வாய்ப்புகளை தவற விடுபவர்களுக்கு காரணங்கள் மட்டும் எப்படியாவது வரும்.
Successful people always do the work, which failures don’t want to do
எப்போதும் இந்த உலகம் உங்களுக்கான வாய்ப்புகளை தங்கத்தட்டில் வைத்து தரும் என எதிர்பார்ப்பது முடியாத விசயம். வாழ்க்கையில் நமக்கு சாதகமாக மட்டும் விசயங்கள் நடக்கும் என இறைவன் நம்மை கியாரண்டி கார்டு / மேன்வல் புத்தகத்துடன் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கவில்லை. சந்தோசமும், கஷ்டமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனும் எதற்கும் "அசையாத ஒரு நிலை'யை அடைவது மனிதவாழ்க்கையின் முன்னேற்ற பயிற்சிகள். அவை இஸ்லாத்தின் கடமைகளில் மிக கொட்டிக் கிடக்கிறது என்பது என் அசைக்கமுடியாத எண்ணம்.
We will see about Time Management, and Time related plan for your future in next episode.
தொடரும் ...
ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்