இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/12/2015

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -3
almighty-arrahim.blogspotcom
Time Management தெரியுமுன் Goal Settingதெரிதல் அவசியம். உங்களின் இலக்கு தெரியாமல் மட்டும் time management புரிதல் அவசியம் இல்லை.
இது பெரும்பாலும் சொந்த வியாபாரத்தில் இருப்பவர்கள்,சேல்ஸ் லைனில் இருப்பவர்கள்,மாணவர்கள் இவர்களுக்கே அதிகம் பொருந்தும். நீங்கள் என்ன வேலை செய்தாலும் சேல்ஸ் கமிசன் எல்லாம் கிடையாது சம்பளம் மட்டும்தான் என்றால் எதிர்காலத்தை உங்களுக்கு திட்ட மிட மட்டும் பயன்படும்.

இறைவன் எல்லோருக்கும் 24மணிநேரம்தான் கொடுத்திருக்கிறான், ஆனால் சிலரால் மட்டும் எப்படி முன்னேற முடிகிறது. எப்படி முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் கொடுக்கப்பட்டிடுக்கும் நேரத்தை சரியாக நெறியாள்கிறார்கள் என்பது என் கருத்து. [அவனுக்கு மச்சம் இருக்கிறது, தழும்பு இருக்கிறது என்று ஐடென்டிஃபிகேசன் மார்க் எல்லாம் சொல்ல ஆரம்பித்தால்உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.]

Time managementல் முக்கியமான விசயம் முதலில் உங்கள் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களில் எப்படி நேரம் செலவாகிறது என்பதை பட்டியலிடுவது. எது உங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அதை திரும்பவும் செய்யக்கூடாது. 1997ல் சாட்டிங் பைத்தியம் பிடித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன். எப்போது அது என் வேலைக்கு தடையோ அன்றைக்கே மெஸ்ஸஞ்சர், சாட்டிங் எல்லா ப்ரோக்ராமும் டெலிட் செய்து விட்டேன்..

வேலைக்கு தடையான விசயத்தை எப்போதும் உடனே நிறுத்த தெரிய வேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் வைரஸ் தாக்கிய சிஸ்டத்தை அதை சுத்தப்படுத்தாமல் புதிதுபுதிதாக சாஃப்ட் வேர்களை நிறுவ நினைப்பது மாதிரி. அவர் முகத்துக்காக செய்கிறேன் ,இவரின் நகத்துக்காக செய்கிறேன் கதையெல்லாம் உருப்பட மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களின் டயலாக். இவருக்காக செய்கிறேன் என்று உங்களால் எதுவும் தொடர்ந்து செய்ய முடியாது. அதே சமயம் உங்களின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வந்து 'மாப்லெ ஊருக்கு போகலாம்னு இருக்கேன் வந்து கடையில் செலெக்ட் செய்து கொடேன்' என கேட்பவர்களுக்கு முழுக்க முழுக்க வேலையில்லாமல் இருந்தால் மட்டும் உதவி செய்யுங்கள்...இல்லாவிட்டால் pick up & drop சிறந்தது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ப்ரயோஜனமாக இருக்கவேண்டும் எனும் மனநிலை உள்ளவர்களால்தான் ஒரு சிறந்த மனிதர்களாக வளரமுடியும். இல்லாவிட்டால் எல்லோரின் கட்டளைகள சுமக்கும் பொதிகழுதையாக உங்கள் வாழ்க்கை மாறிப்போய்விடும்.

முதலில் இன்னும் 5 வருடத்தில் உங்கள் வாழ்க்கையின்சூழ்நிலைகள் எப்படி இருக்கவேண்டும். அது போல் 10வருடத்தில்; , 15 வருடத்தில் , 20வருடத்தில். இப்படி ஒரு ரோட் மேப் உங்கள் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அதை அடைய சில விசயங்கள் தேவை. எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து எவ்வளவோ விசயம் நீங்கள் எழுதியிருப்பீர்கள். அதில் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு என எழுதப்பட்ட விசயங்கள் எத்தனை வரிகள்.?

உங்கள் கனவுகள் அனைத்தயும் எழுத்துக்களாகவும், படங்களாகவும் பதிந்தால் வாழ்க்கையை திருப்பி பார்க்கும்போது நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும். என் வாழ்க்கையில் நிறைய விசயங்களை இப்படி நான் சாதித்திருக்கிறேன். இதன் காரணம்'உங்களின் ஞாயமான தேவைகளை நீங்கள் அடைய இறைவனின் உதவி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்" எனும் என் அசைக்க முடியாத நம்பிக்கைதான். உங்கள் கனவுகளை வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை உங்கள் கைப்பட எழுதுங்கள்.

உதாரணம்: உங்கள் பிள்ளைகளை என்னவாக படிக்க வைக்க நினைக்கிறீர்கள்.

என்னவிதமான வீட்டில் நீங்கள் வாழ நினைக்கிறீர்கள். எவ்வளவு உங்கள் சேமிப்பில் இருக்க் வேண்டும் என நினைக்கிறீர்கள்.ஒன்று கவனித்தீர்களா. இது எல்லாம் பாசிட்டிவ் ஆன விசயம் உங்கள் வாழ்க்கையின் எதிர்மறையான சிந்தனைகள் குறைய இதுவும் ஒரு வழி..

Time management ல் முக்கிய பாடங்களில் ஒன்று Productive Time / Un Productive Time எது என்பதின் மீது ஒரு awareness இருக்க வேண்டும் என்பதுதான். இதை தெரிய ஒரு நாளில் நாம் செலவளிக்கும் நேரங்கள் எப்படி செலவாகிறது என தெரிந்திருக்க வேண்டும். நகரங்களில் வாழ்பவர்களின் சூழ்நிலை 8 மணி நேரம் தூக்கம், 4மணி நேரம் தயாராவது,பயணிப்பது என்றும், திரும்ப 3 மணி நேரம் வீடு திரும்புவது என்றும் ,வெட்டிப்பேச்சு / என்டர்டைன்மென்ட் இவைகளுக்கு 1 மணித்தியாளம் என வைத்துக் கொண்டாலும் 8 மணி நேரம்தான் உருப்படியான நேரம்.உங்கள் எதிர்கால கனவுகள் இதில்தான் இருக்கிறது. அதாவது 1/3 நாட்கள் ஒரு வருடத்தில் அதாவது 122 நாட்க்கள் எனவே ஒரு வருடத்தில் வீக்லி ஹாலிடே, காந்தி ஜெயந்தி, கிருஷ்ணர் ஜெயந்தி, [ஜெயந்தி யாருப்பா?], புயல், மழை,அரசியல் தலைவர்கள் இறந்த தினம் , பிறந்த தினம் இவையெல்லாம் கழித்துப்பார்த்தால் , மிஞ்சுவது ஒரு100 நாள் தான் தேறும். இந்தியாவில் வாழ்பவர்களுக்கு ஜாதி சண்டை,பிண ஊர்வளம், தோற்றுப்போன / ஜெயித்த அரசியல்வாதிகளுக்கு கடை அடைப்பு , உண்ணாவிரதம் [யாரும் இளைத்த மாதிரி தெரியவில்லை] இப்படி இன்னும் சில விசயங்கள் உங்கள் கனவுகளை திருடி விடும்.இருப்பினும் மனம் தளரவேண்டாம். இந்தியா அதிகமான உலக பணக்காரர்களை தன் வசம் வைத்துள்ள நாடு என்பதை மறந்து விட வேண்டாம்.

……வேலைகளில் எது முதலிடம் கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் எழுத்தில் இருக்க வேண்டும். Priorities starting from 1-5 or 1-10 இப்போது உள்ள மொபைல் போனில் நோட்ஸ்/ கூகுள், மைக்ரோ சாஃப்ட் அவுட் லுக் காலண்டர்கள் இதற்க்கு உதவியாக இருக்கும்.

உங்களின் கனவுகளை உங்களுக்குத்தெரியாமல் அபகரிக்கும் Face Book, Twitterஇவைகளின் மீது ஒரு சரியான முடிவுகள் நீங்கள் எடுத்தாக வேண்டும். பொழுதுபோக்கு அவசியம்தான் அதற்காக பொழுது உங்களை போக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

உங்களின் Time Killer எதுவென தெரிய சில Time killers...

#. கொஞ்ச நேரம் இந்த சீரியலைப்பார்த்தால் குடி மூழ்கிடாது. [பிறகு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்ததால் சீரியல் தயாரித்தவர்களின் குடி மூழ்கவில்லை என்பது உண்மையானது.... பார்த்தவர்களின் குடி....???]

#. மாப்லெ ..நீ தஞ்சாவூர் போகனும்னு சொன்னியே நான் போரன் நீ வர்ரியா? என உங்களை அழைத்துப்போய் அவன் ஆஸ்பத்திரி டோக்கன் எடுக்கவும்,மெடிக்கல் சாப்பில் நிற்கவும் உங்களின் வெகேசன் "பல்பிஸ்'ஆனது தெரியாமல் வெட்டாட்டுக்கிடாய் மாதிரி ஊர் வந்து சேர... உங்களின் பிள்ளைகள் தூங்கிப்போயிருக்கும்.

#. பரீட்சை சமயத்தில் கல்யாண சாப்பாட்டுக்கு பேயாக அலைவது.

நீங்கள் வெளிநாட்டில் போய் எவ்வளவோ விசயங்களை சாதித்திருந்தாலும் உள்ளூரில் சரியாக செருப்பு போடத்தெரியாதவன் " தாசில்தாரை எனக்கு தெரியும்,கலக்டர் எனக்கு க்ளாஸ் மேட்" ங்கற மாதிரி பேசும் அலப்பரைகளில் நம்பி காசை கொடுத்து விட்டு பிறகு அலைய ஆரம்பிப்பது. [நீங்களே எதிர்கொண்டால் / எடுத்து நடத்தினால் எவ்வளவோ விசயங்கள் முடிந்திருக்கும்]

ஒரு கால்பந்து விளையாட்டைப்பாருங்கள் , அதில் கோல் போஸ்ட் இல்லாமல் விளையாடினால் எப்படி இருக்கும்,கோல்போஸ்ட் இருந்து நேர அளவு இல்லாமல் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்குமா?... வாழ்க்கையும் அப்படித்தான் நேர அளவு முக்கியம்,இலக்கு மிக மிக முக்கியம்.

We will see how often we have to review our goal. How do we align with the ‘Dharma” of work in next episode.
வெள்ளி தோரும்
Zakir Hussain
, ,