பதிவுகளில் தேர்வானவை
27.2.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஸ்மார்ட்போன் கேலரியை விட சிறந்த செயலி
நாம் எமது ஸ்மார்ட் போன் மூலம் பிடிக்கக்கூடிய புகைப்படங்கள், வாட்சஸ்அப், வைபர் போன்றவற்றின் மூலம் வரக்கூடிய புகைப்படங்கள், மற்றும் நாம் இணையத்தில் இருந்து
தரவிறக்கும் புகைப்படங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு எமது ஸ்மார்ட் போனில் கேலரி எனும் வசதி தரப்பட்டுள்ளது.
இதனை வேறு வகையில் கூறினால் எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் கேலரி மூலம் பார்த்துக்கொள்ள முடிகிறது என்றும் கூறலாம்.
இருந்தாலும் எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் தரப்பட்டுள்ள கேலரிக்கு பதிலாக மூன்றாம் நபர் செயலிகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் பல மேலதிக வசதிகளையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கென ஏராளமான செயலிகள் இருந்தாலும்கூட Piktures எனும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலியானது அழகிய இடைமுகத்தை கொண்டுள்ள அதேவேளை பல கவர்சிகரமான வசதிகளையும் தருகிறது.
இதன் பிரதான இடைமுகத்தின் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஒரே பார்வையில் பார்க்க முடிவதுடன் அதன் தோற்றத்தை மூன்று வரிகளாகவும் நான்கு வரிகளாகவும் அல்லது ஐந்து வரிகளாகவும் உங்கள் வசதிக்கு ஏற்றார்போல் அமைத்துக்கொள்ள முடியும்.
மேலும் இதன் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட குறியீட்டை சுட்டும் போது உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் புகைப்படங்களை ஆல்பங்கள் வடிவில் பெற முடிவதுடன் அந்த ஒவ்வொரு ஆல்பங்களுக்கும் பொருத்தமான கவர் போட்டோ ஒன்றை வழங்கவும் முடியும்.
அத்துடன் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஒவ்வொரு புகைப்படமும் எப்பொழுது சேமிக்கப்பட்டது என்பதை இதில் தரப்பட்டுள்ள நாட்காட்டியின் உதவியுடன் மிக இலகுவாகவும் ஒரே பார்வையிலும் பார்த்துக்கொள்ள முடியும்.
மேலும் குறிப்பிட்ட செயலியில் இருந்தவாறே தேவையான புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ஏனைய செய்வகள் மூலம் பகிர்ந்து கொள்ளவும் அவற்றை ஒரு ஆல்பத்தில் இருந்து இன்னுமொரு ஆல்பத்திற்கு மிக இலகுவாக நகர்திக் கொள்ளவும் முடியும்.
இவைகள் தவிர மேலும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.
Download Piktures From Play
Store