பதிவுகளில் தேர்வானவை
24.3.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஜாகிரின் படிக்கட்டுகள் -18
மனிதனின் செயல்பாடுகளில் மாற்றம் , முன்னேற அல்லது உருப்படாமல் போக எப்படி நிகழ்கிறது என்ற மெக்கானிசம் புரிந்தால் எப்படி ஒரு
மனிதனின் வாழ்வில் முன்னேற்றம் சாத்தியம் என்பது புரியும்.
முதலில் நமது எண்ணங்கள் நமது உணர்வுகளின் வழியாக ஒரு உருவாக உள் வாங்கப்படுகிறது. நாம் அன்றாடம் கேட்கும் விசயம், ருசிக்கும் உணவு , நுகரும் வாசனை , பார்க்கும் விசயங்கள் இவை எல்லாம் ஒரு மனிதனை ஃபார்மேட் செய்கிறது.
நடுக்கும் டோக்யோ குளிரில் கெட்டிச்சட்னியுடன் இட்லி கிடைக்குமா என்று அலைவது ஃபார்மேட் மாற முடியாமல் அடம் பிடிக்கும் கம்ப்யூட்டர் மாதிரி. புதிதாக சொல்லும் / அல்லது இன்ஸ்டால் செய்யப்படும் ப்ரோக்ராமை ஏற்றுக் கொள்ளாத சூழல்தான் மனிதனுக்கும். ஆனால் அதற்கான ஒரு பேட்ச் வொர்க் செய்து விட்டால் எப்படி கம்ப்யூட்டர் நம் இஷ்டப்படி அடுத்த சூழலுக்கு கொண்டு செல்ல முடியுமோ அது போல்தான் மனிதனின் ரிசல்ட்டும். உணர்வுகளின் மூலம் பதியப்படும் விசயங்கள் மேலோட்டமாக பதியப்பட்டு சரியா / தவறா என சரி பார்க்கப்பட்டு ] பிறகு ஆழ்மனதில் பதியப்படுகிறது. ஆழ்மனதில் பதியப்பட்டால் இனிமேல் அது தனது உடம்பின் செயலாக மாற்றம் அடையும் போது சரியான ரிசட்டை தரும்.
ஒரு சின்ன உதாரணம்... முன்பு நாம் பரீட்சைக்கு எப்படி படித்தோம். பரீட்சை தேதி அறிவித்தவுடன் நம் எண்ணம் முழுக்க அந்த தேதியை எத்தனை முறை நினைத்திருக்கும். பிறகு என்ன செய்தோம்... நம்மிடம் உள்ள வேடிக்கை விளையாட்டு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு பாட புத்தகம்தான் எப்பொதும் பக்கத்தில். நம் உடம்பு நம் எண்ணத்துடன் ஒத்துழைத்தது. எவ்வளவு சோம்பல், உடல் நலக்குறைவையும் மனது ஏற்றுக் கொள்ளாததால் நமது ரிசல்ட்டை நோக்கியே நம் வாழ்க்கை அமைந்தது.
அப்போது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்??. நம் வீட்டில் நடந்த முக்கிய தேவைகளை விட நம் முன்னேற்றமே முக்கியமாக இருந்தது. ஏனெனில் நம் சப் கான்சியஸ் மைன்ட் தெளிவாக பதியப்பட்டிருந்தது. எப்போது நமக்கு சந்தேகமும் / பயமும் நம்மை ஆட்கொள்கிறதோ. அப்போதே நாம் ரிசல்ட்டை சொதப்ப போகிறோம் என்பது உறுதி. இது பரீட்சைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அதே விதிதான்.
இந்த விசயங்களை சரியாக புரிந்துகொள்ள இந்த படம் உதவும் என நினைக்கிறேன்.
உங்கள் உணர்வுகள் மூலம் பதியப்படும் விசயங்கள் உங்கள் முதல் மனதில் பதிந்து [ வடிகட்டி] பிறகு ஆழ்மனதில் பதியப்படும் விசயம் நடந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்கள் உடம்பின் உதவி கொண்டு நடந்து. இதுவரை நீங்கள் சாதித்தது அல்லது சாதிக்க தவறவிட்டது என்ற எல்லா விசயங்களும் நடந்து இருக்கிறது. இதில் உங்களின் நம்பிக்கை ரேகைகள்[ Belief Layers] என்பது அவ்வளவு சீக்கிரம் அழிந்து போகாது [ கனவில் கூட நாம் பாம்பு , பல்லி சாப்பிட மாட்டோம் ] இதே நாம் சீனனாக பிறந்து இருந்தால் இது போன்ற எத்தனையோ " ஊர்வன' சமாச்சாரங்கள் ஸ்வாகா ஆகியிருக்கும். இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.
எனவே நம்பிக்கையை மாற்றி அமைக்கும் போது பல நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.
இதுவரை நீங்கள் உங்கள் ஹெல்த் விசயங்களில் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள். ?
பணம் [Money] என்ற சக்தியில் உங்கள் எண்ணம் எவ்வாறு இருக்கிறது?
“உறவுகள்” [ Relationships] என்ற விசயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது.?
சமுதாயம் [society/ community] பற்றி உங்களின் எண்ணம் / நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது?
வாழ்க்கையில் எவ்வளவொ ரூல்டு / அன்ரூல்டு நோட்டு வாங்கி எழுதிவிட்டோம். இதை ஒவ்வொரு தலைப்பிலும் உங்கள் எண்ணத்தை எழுதிப்பாருங்கள். நீங்கள் எழுதிய படியே உங்கள் ரிசல்ட்டும் இருக்கும்.
பொதுவாக நம் பகுதி பெண்கள் சம்பாதிக்க போகாமல் இல்லத்தரசியாகவே இருக்கிறார்கள். சரி நாம் தான் பணம் சம்பாதிக்கும் வேலையெல்லாம் இல்லையே இது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கலாம். சம்பாதிக்காவிட்டாலும் மேலே சொன்ன அனைத்து விசயங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்பு இல்லாதவர்கள் ..குழந்தைகள் , புத்திசுவாதீனமில்லாதவர்கள் [முன்பு ஞானிகளும் இதில் இருந்தார்கள், இப்போது ஞானிகளப்பற்றி சரியாக ஸ்கேன் செய்யாமல் எதுவும் எழுத முடியவில்லை.]
அவநம்பிக்கையுடன் எதையும் அனுகாதீர்கள்.
இதுவரை பணம் சம்பாதிப்பது என்ற விசயத்தில் என்ன உங்கள் எண்ணமோ அவ்வாறாகவே உங்கள் ரிசல்ட்டும் இருந்திருக்கும். நீங்கள் கடனை அடைக்கவும் , மாதாந்திர செலவுக்காகத்தான் இப்படி பாடுபடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. உங்கள் ரிசல்ட் = பாடுபடுவீர்கள், மாதாந்திர செலவு ஏதோ சரிவரும். கடன் அப்பப்ப மேலே கீழே போய்வரும். ஏனெனில் நீங்கள் அட்ராக்ட் செய்வது சுத்தமான அக்மார்க் நெகடிவ் எனர்ஜி. இதையே ஏன் நீங்கள் சுபிட்சமாக சிந்திக்கமுடியாமல் போனது.
சாதித்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்ட சூழலில்தான் “நான் நிமிர்ந்து நிற்பேன் என்ற உத்வேகமே பிறக்கிறது. எந்த சூழலிலும் அவர்கள் தன்மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை... நீங்கள் எப்படி?
யாரையும் பார்த்தவுடன் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒப்பிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா?.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்?.
சிலர் மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்கினாலே அதற்கும் ஹார்ட்பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி பேசுவார்கள். ஹார்ட் ரேட்டை அதிகரிக்கும் எல்லா விசயங்களுக்கும் அதை சமன்செய்ய நுரையீரலின் அதீத செயல்தேவை என்பது இயற்கை.
சிலர் கொஞ்சம் அதிகம் நடந்தால் வரும் மூட்டுவலிக்கு தனக்கு வயதாகிவிட்டது...ஆர்த்ரைட்டிஸ்..என்று ஏதாவது 'மருத்துவ சிறப்பிதழ்" என்று கண்ட ஆஸ்பத்திரிகள் விளம்பரம் செய்யும் வார இதழ்களை படித்து விட்டு தனக்கு அதில் சொன்ன நோயெல்லம் இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு படம் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.
இதில் ஏன் உங்கள் எண்ணம் அவநம்பிக்கையில் சிக்கி கிடக்கிறது. 80 வயதிலும் என்னால் முடியும் என்று எவ்வளவொ பேர் உலகத்தில் சாதிக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் மீது அவர்களுக்கு அவநம்பிக்கை இல்லை. நீங்கள் எப்படி? .
இப்போது ஓரளவு புரிந்து இருக்கும்....உங்கள் எண்னத்தையும் நம்பிக்கையும் மாற்றினால் உங்கள் ரிசல்ட் மாறும். முதலில் ரிசல்ட்டை மாற்ற எப்படி உங்கள் எண்ணம் / நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதிந்தது என்ற விசயம் தெரிந்தால் தேவையில்லாததை தூக்கி எறிவது மிக எளிது.
இதை இன்னும் சரியாக செய்ய இந்த விசயங்களை நீங்கள் படித்து விட்டு போகாமல் உங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் எழுதிப்பார்த்தால் நீங்கள் எந்த விசயங்களில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்று உங்களுக்கே தோன்றும். நான் இதை எனக்காக 18 வருடங்களுக்கு முன் செய்தேன்.
வாழ்க்கையில் முன்னேர நினைக்கும் நீங்கள் என்ன விசயங்களை நினைக்கிறீர்கள், என்ன விசயங்களை பேசுகிறீர்கள், என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். இதற்கெல்லம் இன்னும் எந்த லேபரட்டரியும் இதுவரை இல்லை.
இந்த எபிசோட் கொஞ்சம் ஹெவி என நினைக்கிறேன். அதனால் நிறைய எழுதவில்லை. சரியாக புரிந்து கொண்டால் மனசு லேசாகும் என்பது மட்டும் உறுதி.
ZAKIR HUSSAIN
தொடர் தொடரும் இன்ஷா அல்லாஹ்
நன்றி அதிரை நிருபர்