பதிவுகளில் தேர்வானவை
20.3.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
இணைய இணைப்பின்றி கூகுல் மேப்ஸ்
நீங்கள் இருக்கக்கூடிய இடத்தையும் கூட மிகத் துல்லியமாக பார்க்க உதவும் இந்த வசதியை அன்றாடம் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
கூகுள் மேப்ஸ் மூலமே போக்குவரத்து நெரிசல் தொடர்பிலும் நேரடியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன் உலகில் நாம் இருக்கும் இடத்தையும் ஜி.பி.எஸ் தொழினுட்பத்தை கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
எனினும் இவற்றுக்கு எல்லாம் இணைய இணைப்பு அவசியம். இருந்தாலும் இணைய இணைப்பு கிடைக்காத சந்தர்பங்களிலும் கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்வதற்கான வசதி ஸ்மார்ட் போன்களுக்கான செயலியில் தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
நாம் தூர இடங்களுக்கு செல்லும் போது அங்கு இணைய இணைப்பு கிடைக்காவிட்டாலும் கூட கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்தலாம்.
இணைய இணைப்பு அற்ற நிலையில் கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்தும் போது ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் சக்தி சேமிக்கப்படும்.
இணைய இணைப்பு இன்றி கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?
1. உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் கூகுள் மேப்ஸ் செயலியை திறந்து கொள்க.
2. பின்னர் அதன் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட பட்டனை சுட்டுக.
3. இனி தோன்றும் சாளரத்தில் Offline
areas என்பதை சுட்டுக.
4. பின்னர் திறக்கும் இடைமுகத்தில் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள "+" குறியீட்டை சுட்டுக. இதன் போது இணைய இணைப்பு இல்லாத நிலையில் நீங்கள் பார்க்க வேண்டிய இடத்தை தெரிவு செய்வதற்கான வசதி தோன்றும்.

5. இனி குறிப்பிட்ட சாளரத்தின் மூலம்
உங்களுக்கு தேவையான இடத்தை தேடிவு செய்து Download பட்டனை அலுத்துக.
6. அவ்வளவு தான் குறிப்பிட்ட தரவுகள் தரவிறக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் தெரிவு செய்த பகுதியை இணைய இணைப்பின்றி பார்க்கலாம்.
கவனிக்க வேண்டியவை:
இணைய இணைப்பின்றி கூகுள் வரைபட சேவையை பயன்படுத்தும் போது நேரடி போக்குவரத்து நெரிசல்கள்தொடர்பான தகவல்களை பெற முடியாது.
நீங்கள் தெரிவு செய்து தரவிறக்கிய இடத்தை தரவிறக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்கள் வரை பார்க்க வேண்டும் அதன் பின்னர் அதனை புதுப்பிக்க (Update) வேண்டும்.
தரவிறக்கும் போது நீங்கள் தெரிவு செய்யும் இடத்தின் அளவை பொருத்து இணையத்துக்கான தரவுகள் பயன்படுத்தப்படும்.