- வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்சர் - Dinamani
- அமெரிக்க வரி விதிப்பு எதிர்வினையாற்றும்முன் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை - காங்கிரஸ் வலியுறுத்தல் - Viduthalai.in
- பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது: அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கி கவுரவித்தார் - Hindu Tamil Thisai
- அதிமுக கூட்டணி குறித்து திமுக தலைவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை?- அதிமுக கண்டனம் - Maalaimalar
- சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நா - Dinakaran
பதிவுகளில் தேர்வானவை
3.8.17
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
யதார்த்த மயக்கம்
படுப் பதுவோ...
போர்த் துவதுவோ...
கண் ணடைப்பதுவோ
அல்ல தூக்கம்.
நடந் ததுவும்...
நடப் பதுவும்...
நடக்க இருப்பதுவும் என
நர்த்தனமாடும்
மனச்
சலனங்கள் ஓய்வதே
உறக்கம்.
திறந்த கண்களும்...
பரந்த பார்வையும்...
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு.
பிறர் வலி உணர்த்தலும்
உணர்ந்து நீக்குதலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு.
காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்
மூச்சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை.
நினைப்பதும்...
செய்வதும் ...
செய்ததை உலகம்
நினைத்திருக்க செய்வதுமே
வாழ்க்கை.
உயிர் கழிதலும்...
உணர் வழிதலும்
மெய் வீழ்தலும்
அல்ல மரணம்
உயிர்களுக்கும் உதவாமல்
இல்லாம விருத்தம்போல்
இருப்பதே...
மரணம்.
தெரியாதவை தெரிதலும்
புரியாதவை புரிதலும்
விளங்காதவை விளங்கலும்
அல்ல ஞானம்.
தெரிந்ததை தெரிவித்தலும்
புரிந்ததை புரியவைத்தலும்
விளங்கியதை விளக்குவதுமே
ஞானம்.
மயக்கம் தெளி
யதார்த்தம் அறி.
- இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
போர்த் துவதுவோ...
கண் ணடைப்பதுவோ
அல்ல தூக்கம்.
நடந் ததுவும்...
நடப் பதுவும்...
நடக்க இருப்பதுவும் என
நர்த்தனமாடும்
மனச்
சலனங்கள் ஓய்வதே
உறக்கம்.
திறந்த கண்களும்...
பரந்த பார்வையும்...
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு.
பிறர் வலி உணர்த்தலும்
உணர்ந்து நீக்குதலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு.
காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்
மூச்சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை.
நினைப்பதும்...
செய்வதும் ...
செய்ததை உலகம்
நினைத்திருக்க செய்வதுமே
வாழ்க்கை.
உயிர் கழிதலும்...
உணர் வழிதலும்
மெய் வீழ்தலும்
அல்ல மரணம்
உயிர்களுக்கும் உதவாமல்
இல்லாம விருத்தம்போல்
இருப்பதே...
மரணம்.
தெரியாதவை தெரிதலும்
புரியாதவை புரிதலும்
விளங்காதவை விளங்கலும்
அல்ல ஞானம்.
தெரிந்ததை தெரிவித்தலும்
புரிந்ததை புரியவைத்தலும்
விளங்கியதை விளக்குவதுமே
ஞானம்.
மயக்கம் தெளி
யதார்த்தம் அறி.
- இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
யதார்த்த மயக்கம் நூலின்
முத்துக்கள் கோர்வையில் முதல் முத்திதுவே*
முத்துக்கள் கோர்வையில் முதல் முத்திதுவே*