இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

04/11/2017

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உபரியான ஹஜ், உம்ரா
உபரியான 'ஹஜ்' மற்றும் 'உம்ரா'

almighty-arrahim
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியானது 'ஹஜ்' செய்வதாகும். பொருளாதார சக்தியுள்ளவர்களுக்கு மட்டுமே
நிறைவேற்றவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 'ஹஜ்' மற்ற கடமைகளை போல் தினசரி நிறைவேற்றுதல் இல்லாமல் வாழ்நாளில் ஒரு முறை நிறைவேற்றுதல் இல்லாமல் வாழ்நாளில் ஒரு முறை நிறைவேற்றினாலே போதுமானது.
ஆனால் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வோர் ஒரு முறை சென்றதிலேயே தங்களின் உள்ளத்தை பறிகொடுத்து விடுகிறார்கள். இதனால் கஅபத்துல்லாஹ் அவர்களை கவர்ந்து விடுகிறது உள்ளத்தை அது ஈர்த்து விடுகிறது. இதனால் ஹாஜிகளில் பலர் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்கிறார்கள். அது உபரியான ஹஜ்ஜாக ஆகிவிடுகிறது.''நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது 'அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ஜை கடமையாக்கியுள்ளான்' என்றார்கள். அப்போது அக்ராவு இப்னு ஜாபிஸ்(ரலி) எழுந்து நின்று 'இறைத்தூதர் அவர்களே! இது ஒவ்வொரு வருடமுமா' எனக் கேட்டதற்கு, 'நான் அப்படி கூறினால் அது கடமையாகி விடும், 'ஹஜ்' என்பது ஒரு முறைதான் அதற்கு மேல் செய்வது உபரியாகி விடும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'' என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: அபூதா¥த், நஸயீ, அஹ்மத் மற்றும் இப்னுமாஜா)

உம்ரா

'ஹஜ் கடமையை வாழ்க்கையில் ஒரு முறை நிறைவேற்றினாலே போதுமானது. ஆனால் 'உம்ரா'வுக்கு குறிப்பிட்ட நாட்கள், மாதங்கள் என்ற வரையரை இல்லை. எந்த மாதத்திலும் அதை நிறைவேற்றலாம்; என்றாலும் ரமளானில் நிறைவேற்றுவதை சிறப்பு என நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

''ரமளானில் செய்யும் உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத் மற்றும் நஸயீ)

''நபி(ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம் நீ ஏன் எங்களுடன் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை' என்று வினவியதற்கு, 'எங்களிடம் இருந்த தண்ணீர் கொண்டு வருவதற்கான ஒர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் ஏறிச் சென்றுவிட்டனர். இன்னாரின் ஒட்டகத்தை விட்டுச் சென்று விட்டனர். அதன் மூலம் நாங்கள் தண்،ர் எடுத்து கொண்டிருக்கிறோம்' என்றார் அவர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ரமளான் வந்து விட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்' என்று கூறினார்கள் அல்லது அது போன்ற ஒரு கருத்தை கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

'உம்ரா' நிறைவேற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் உள்ளவர்கள் கூடுமானவரை ரமளானில் நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபடல் வேண்டும்.

'உம்ரா' வை ஏனைய மாதங்களிலும் நிறைவேற்றலாம். நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்துள்ளார்கள்'' என இப்னுஉமர்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம் மற்றும் திர்மிதீ)

''நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதம் உம்ரா செய்தார்கள்'' என பர்ரா(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, திர்மிதீ மற்றும் முஸ்லிம்)

ரமளான் அல்லாத மற்ற மாதங்களிலும் 'உம்ரா' நிறைவேற்றலாம் என்றாலும் மற்ற மாதங்களைவிட ரமளானில் 'உம்ரா' செய்வது கூடுதல் நன்மையை அளிக்கிறது. மேலும் ஹாஜிகள் தங்களின் ஹஜ்ஜுடன் சேர்த்தே உம்ராவும் செய்து கொள்ளலாம். திருக்குர்ஆன் இது பற்றி குறிப்பிடுகையில்...

''அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்.'' (அல்குர்ஆன் 2:196)

மேற்கண்ட வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கம் அளித்தபோது, அல்லாஹ் ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே குறிப்பிடுகிறான்'' என்றார். (நூல்: புகாரி)

ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் அணிவது (இஃப்ராத்) என்றும் (கிரான்) என்றும் முதலில் உம்ராவுக்கு அணிந்து விட்டும் பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிவது (தமத்துவு) என்றும் சொல்லப்படும். மேலும், ஹஜ் கிரியைகளில் நிறைவேற்றவேண்டிய குர்பானி பிராணியை ஒருவர் கொண்டு வராவிட்டால் அவர் அதனை உம்ராவாக மாற்றிக் கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.

'கிரான்'

நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் சென்றிருந்தோம். சிலர் உம்ராவிற்காகவும், சிலர் ஹஜ்ஜுக்கும், உம்ராவிற்கும் சேர்த்தும், சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்திருந்தார்கள். ஹஜ்ஜுக்காகவோ, ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து இஹ்ராம் அணிந்தவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நான் உஸ்மான்(ரலி) உடனும் அலீ(ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டை சேர்த்து செய்யும் (கிரானையும்) உம்ரா முடித்து ஹஜ் (தமத்துவு) செய்வதையும் தடுத்தார். இதைக்கண்ட அலீ(ரலி) செய்வதையும் தடுத்தார். இதைக்கண்ட அலீ(ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து 'லப்லைக் பி உம்ரதின் வஹஜ்ஜதின்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விடமாட்டேன் என்று கூறினார்கள்'' என மர்வான் பின் ஹகம்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, நஸயீ)

''தமத்துவு''

''நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துவு) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன் துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் (அதாவது பிறை ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம் வந்து இப்படித் தமத்துவு செய்தால் உமது ஹஜ் மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும். (குறைந்த நன்மைகள் தான் கிடைக்கும்) என்றனர். நான் அதாவு(ரலி) இடம் சென்று இதுப்பற்றி வினவினேன். அதாவு(ரலி) இதுபற்றி குறிப்பிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி ''நீங்கள் தவாஃபயும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறகு எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து இதற்கு முன்னால் செய்ததை தமத்துவு (உம்ரா) ஆக ஆக்கி கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் நாங்கள் ஹஜ்ஜுன் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தம்த்துவு(உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள் நான் என்னுடைய பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் அவ்வாறு செய்திருப்பேன்; குர்பானி பிராணியைக் கொண்டு வந்தால் அதை (பலிப்பிராணியை) அந்த இடத்தில் சேர்க்கும் வரை இஹ்ராமை களைவது எனக்குக் கூடாது என்றார்கள். உடனே நபித்தோழர்கள் அவ்வாறே தங்கள் கிரியைகளை நிறைவேற்றினார்கள் என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்'' என அபூ »ஹாப்(ரஹ்) (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

''நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துவு செய்தோம். குர்ஆனின் மூலமே இச்சட்டம் இறங்கியது எனினும் சிலர் தமத்துவு கூடாது எனத்தம் சுயஅறிவால் தாம் நாடியதெல்லாம் கூறுகின்றனர்'' என இம்ரான்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரு கடமையையும் ஒரே வருடத்தில் நிறைவேற்றினர். (தமத்துவு செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் இறக்கியருளியதும் நபி(ஸல்) அவர்களின் 'தமத்துவு' கூடும் என்ற நடைமுறையையும் மக்காவாசிகளல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததும் ஆகும். ஏனெனில் அல்லாஹ் 'இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவர்களுக்கு தான் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 2:196) என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, திர்மிதீ)

ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல்

குர்பானி பிராணியை கொண்டு வராதவர்கள் தங்களின் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்களின் அறிவுரையாகும்.

''ஹஜ்ஜத்துல் வதாவில் முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளும் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களும் (ஹஜ்ஜீக்காக) இஹ்ராம் அணிந்தார்கள். மேலும் நாங்களும் அதற்காகவே இஹ்ராம் அணிந்திருந்தோம். இவ்வாறு அணிந்த நிலையில் நாங்கள் மக்காவிற்கு வந்தபோது நபி(ஸல்) குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர்களை தவிர மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுங்கள்! என்றார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம் மற்றும் நஸயீ)

இவ்வாறு கிரான், தமத்துவு, ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல் மூலமாக உம்ரா செய்யலாம் என்பதை நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் மூலமாக தெளிவாகிறது.

'உம்ரா' செய்வதின் சிறப்பு
''ஒர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். ( புகாரி, முஸ்லிம்2624)

''ஹஜ்ஜைத் தொடர்ந்து நீங்கள் உம்ராச் செய்யுங்கள் இரும்பு, தங்கம் வெள்ளி ஆகியவற்றின் அழுக்குகளை துருத்தி அகற்றுவது போல் அவ்விரண்டும் வருமையையும், பாவங்களையும் அகற்றிவிடும். (வல்ல அல்லாஹ்வினால்) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: திர்மிதீ, இப்னு குஸைமா)

நபி(ஸல்) அவர்களின் உம்ராக்கள்
''ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உம்ராச் செய்யலாம் என்று அனுமதியளித்த நபி(ஸல்) அவர்கள் தங்களின் எத்தனை உம்ராக்கள் அவைகள் எந்ததெந்த மாதங்களில் நிறைவேற்றியுள்ளார் என்பதையும் இனி காண்போம். நபி(ஸல்) அவர்கள் நான்கு முறை உம்ராச் செய்துள்ளார்கள்'' என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதீ)

''நபி(ஸல்) அவர்கள் முதலில் இணைவைப்போர் (ஹுதைபிய்யாவில் அவர்களைத்) தடுத்து விட்டபோது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள். பிறகு அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபிய்யாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள். பிறகு துல்க அதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். அடுத்து ஹஜ்ஜுடன் ஒரு உம்ரா செய்தார்கள்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
, ,