- கறுப்பு திங்கள்: இந்திய பங்குச் சந்தையில் ரூ 19 லட்சம் கோடி இழப்பு – இனி என்ன நடக்கும்? - BBC
- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! - Hindu Tamil Thisai
- தில்லிக்குப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! அமித் ஷாவுடன் சந்திப்பு? - Dinamani
- அமைச்சர் கே.என்.நேரு, உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை 10 மணி நேரம் சோதனை - பின்னணி என்ன? - Hindu Tamil Thisai
- 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் பணி நிறுத்தம்: ஹஜ் நெரிசல் தவிர்க்க சவுதி நடவடிக்கை - Dinamalar
பதிவுகளில் தேர்வானவை
8.10.20
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அல்கவ்ஸர்-அல்காஃபிரூன்
கிடைக்கின்ற யோகம்;
அளிக்கின்ற ஒருவன்
அவனே உம் நாயன்!
அவனையே தொழுது
அபயம்கேட் டழுது;
அவனுக்காகவே அறுத்து
அவன் பெயரில் கொடுப்பீர் !
உமக்கெதிரி எவரோ
அவர்க்கில்லை உறவு
தமக்குப்பின் தொடர்பு
தடுக்கப்பட்டச் சந்ததி
அவர்க்கில்லை உறவு
தமக்குப்பின் தொடர்பு
தடுக்கப்பட்டச் சந்ததி
உத்தமர் உம் வழியை
உண்மையென் றறிந்து
உமக்குப் பின்னாலே
உலகமே திரளும் !
எத்துணை எடுத் தியம்பியும்
இசையாத இனத்தோர்க்கு – ஏக
இறைவன் ஒருவனே யென்று
ஏற்காத குலத்தோர்க்கு,
இனியும் எத்தி வைப்பீர்
இறைச் செய்தி என்னவென்று – அந்த
நம்பிக்கை அற்றோர்க்கு
நல்வழி விட்டோர்க்கு,
“வரைந்தவை வார்த்தவையென
வணங்குவீர், அவற்றையெலாம் -புனித
மார்க்கமும் மறையும் பெற்ற
நான் வணங்க மாட்டேன்!
நான் உரைக்கும் மீட்சியை
நீங்கள் ஏற்க மாட்டீர் – நித்தம்
நான் வணங்கும் இறையை
நீவிர் வணங்க மாட்டீர்!
விழி யற்றோர் நிலையிலேயே
வழி கெட்டோர் விரைய – நேர்
வழி பெற்ற எம்மை
இழி நிலையோர் ஏற்கார்!
அன்றியும்…
கலைஞரும் சிற்பியும்
கலந்து படைத்ததைக் – கடவுளெனக்
கையெடுத்து நீங்கள் வணங்க,
நான் வணங்க மாட்டேன்!
அதுபோல்…
உலகங்களைப் படைத்த
இணையற்ற இறைவனை
ஒருவன் என் றேற்பேன்;
நீங்கள் ஏற்க மாட்டீர்!
உலக வாழ்க்கையில் இலயித்த
உங்கள் வழி உங்களுக்கு
ஏக இறைவனை ஏற்ற
எம் வழி எமக்கு!”
உண்மையென் றறிந்து
உமக்குப் பின்னாலே
உலகமே திரளும் !
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.
மறுதலித்தோர் !
அல் குர்ஆன் அத்தியாயம் :109 அல் காஃபிரூன்
அல் குர்ஆன் அத்தியாயம் :109 அல் காஃபிரூன்
எத்துணை எடுத் தியம்பியும்
இசையாத இனத்தோர்க்கு – ஏக
இறைவன் ஒருவனே யென்று
ஏற்காத குலத்தோர்க்கு,
இனியும் எத்தி வைப்பீர்
இறைச் செய்தி என்னவென்று – அந்த
நம்பிக்கை அற்றோர்க்கு
நல்வழி விட்டோர்க்கு,
“வரைந்தவை வார்த்தவையென
வணங்குவீர், அவற்றையெலாம் -புனித
மார்க்கமும் மறையும் பெற்ற
நான் வணங்க மாட்டேன்!
நான் உரைக்கும் மீட்சியை
நீங்கள் ஏற்க மாட்டீர் – நித்தம்
நான் வணங்கும் இறையை
நீவிர் வணங்க மாட்டீர்!
விழி யற்றோர் நிலையிலேயே
வழி கெட்டோர் விரைய – நேர்
வழி பெற்ற எம்மை
இழி நிலையோர் ஏற்கார்!
அன்றியும்…
கலைஞரும் சிற்பியும்
கலந்து படைத்ததைக் – கடவுளெனக்
கையெடுத்து நீங்கள் வணங்க,
நான் வணங்க மாட்டேன்!
அதுபோல்…
உலகங்களைப் படைத்த
இணையற்ற இறைவனை
ஒருவன் என் றேற்பேன்;
நீங்கள் ஏற்க மாட்டீர்!
உலக வாழ்க்கையில் இலயித்த
உங்கள் வழி உங்களுக்கு
ஏக இறைவனை ஏற்ற
எம் வழி எமக்கு!”
- சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.
நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்
நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்