குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

11.4.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குவண்டனாமோ சிறைச் சித்ரவதைகள்


விடுதலையான எகிப்தியர் பேட்டி


கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறைச் சித்ரவதைச் சாவடியிலிருந்து எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஸாமி அல் லெய்தி என்பவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 9 ம் தேதியன்று எகிப்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில்,
சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளைச் சித்ரவதை செய்வதில் அமெரிக்க இராணுவத்தினர் மிகவும் சந்தோஷமடைகின்றனர். அதனை குதூகலத்துடன் செய்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறைக் கொட்டடியில் அடைபடுவதற்கு முன்பு என்னால் நன்றாக கால்பந்து விளையாட முடியுமாக இருந்தது என்று கூறிய அவர், இப்பொழுது தன்னால் தள்ளு வண்டியை விட்டும் எழுந்திருக்க இயலாத அளவுக்கு எனது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்.

இவர் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆவார், இவர் மீது எந்தவித குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படாமல், குவண்டனாமோ கொடுமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு, தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு எகிப்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தினர் எங்களை விசாரணை செய்யும் பொழுது கண்களைக் கூச வைக்கக் கூடிய அளவுக்கு உள்ள விளக்கொளியைப் பாய்ச்சுவார்கள், கண்கள் கூசுவதன் காரணமாக யாராவது கண்களை மூடினால் அவர்களை உதைத்து துவைக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும்.., அங்கு நடைபெற்று வரும் சித்ரவதைகளைக் கூறுகிறார்.

இன்னும் அமெரிக்க அரசின் கொள்கைகள் பற்றிய கேள்விகளுக்கு சாதகமாகப் பதில் சொன்னால் விட்டு விடுவார்கள், அமெரிக்க அரசுக்கு எதிராகப் பதில் கூறினால் அவர்களை தலைகுப்புற விழச் செய்து பூட்ஸ் காலால் உதைக்க ஆரம்பித்து விடுவார்கள், என்று லெய்தி அவர்கள் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

வகைவகையான அறைகள்

அங்குள்ள சிறைக் கூடங்களை 'யு' வழ 'னு' என வகைப்படுத்தி வைத்துள்ளனர், அவர்களுடன் நல்ல முறையில் ஒத்துழைப்பவர்களுக்கு நல்ல முறையில் கவனிப்பு இருக்கும். அவர்களை 'எ' செல்லில் அடைத்து வைத்து மூன்று வேளை உணவுடன், இரண்டு படுக்கை விரிப்புகள், பல் துலக்கும் பிரஷ், பேஸ்ட் மற்றும் சோப்பு ஆகியவற்றைக் கொடுப்பார்கள்.

'எ' யிலிருந்து ஆரம்பிக்கின்ற இந்த கவனிப்பு, 'பி' யிலிருந்து 'டி' வரை வரிசைக் கிரமமாக குறைய ஆரம்பிக்கும்.

தன்னுடைய 19 ம் வயதில் கல்வி கற்பதற்காக வேண்டி எகிப்தினை விட்டு பாகிஸ்தானுக்குச் சென்று, அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்து பின்னர் பாகிஸ்தான் சென்று அங்கேயே பணியாற்றி வந்த தன்னுடைய மைத்துனருடன் இவர் இணைந்து, அங்கேயே அவரிடமே கல்வி கற்க ஆரம்பித்திருக்கின்றார்.

இஸ்லாமாபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து 1986 ம் ஆண்டு பட்டம் பெற்ற பின், அங்கேயே 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கின்றேன் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தன்னுடைய பாஸ்போட்டை பாகிஸ்தானில் உள்ள எகிப்து தூதரகத்தில் புதுப்பிக்க இயலாமல் போன காரணத்தினால், அதனைப் புதுப்பிப்பதற்காக நான் காபூல் செல்ல வேண்டியதாகி விட்டது. அந்த சமயத்தில், அதாவது 2001 ல் காபூல் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிய ஆரம்பித்தன. எல்லைப் புற நகரான கோஸ்ட் ல் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்ததையும், பின்னர் அந்த நகரமும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு இரையானதையும், பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறைக்கு வந்து விட்டதையும் அவர் அந்த பேட்டியில் நினைவு கூர்ந்தார்.

கடந்த 2004 ம் ஆண்டு அமெரிக்க இராணுவ நீதி மன்றத்தின் முன்பு விசாரணைக்கு தன்னை அழைத்து வந்த பொழுது, கை கால்களில் விலங்குடன் தான் அழைத்து வரப்பட்டதாகவும், விசாரணையின் பொழுது அவற்றை அவர்கள் அகற்றவில்லை தன்னை 15 அரபுக்களுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக விசாரணையின் பொழுது என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் தன்னை அவர்கள் குற்றமற்றவன் என்று அறிவித்த பேதிலும், அக்டோபர் வரைக்கும் என்னை சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.

உலக மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் குவாண்டானாமோ மற்றும் அபூகிரைப் சிறைச் சித்ரவதைகள் குறித்து கண்டனங்கள் தெரிவித்த போதிலும், புஷ்ஷின் தலைமையின் கீழ் இயங்கும் அமெரிக்க நிர்வாகம் எதனையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

உள்நாட்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜிம்மி கார்ட்டர் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரும் புஷ்ஷின் நிர்வாகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றார்கள். ''குவாண்டனாமோ சிறையை மூடி விட்டு, உலக மனித குலத்தின் உரிமைக்காக போராடக் கூடிய நாடாக அமெரிக்கா மாற வேண்டும்'' என்றும் அவர்கள் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
, ,