இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

02/12/2011

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பெருமானார் கண்ட போர்க் களங்கள்

எம். எம். அப்துல்காதிர் உமரி, ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட் வெளியீடு

'பத்ரு'ப்போர்

மதீனா தேசத்தில் அரசு ஒன்றை நிறுவி முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். 'பத்ர்' எனும் இடம் மதீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருந்தது. அதை ஆக்ரமிப்பது மதீனாவின் மீது நடத்தப்படும் அத்துமீறலாகும். அப்படிச் செய்வதன் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை வம்புச்சண்டைக்கு இழுக்கலாமென்று குறை»கள் எண்ணினர். பத்ரை மக்காக் குறை»கள் ஆக்கிரமிக்கும் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு வராவிட்டால் அவர்களிடம் போதிய படைபலம் இல்லையென்று கருதி, குறை»கள் மதீனாவுக்குள் அணிவகுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்ததும் இதைத்தான்.குறை»களில் சிலரின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ஒரு திட்டம் தயாரானது. அபூசுஃப்யானின் தலைமையில் ஆயிரம் சுமைதாங்கி ஒட்டகங்களோடு ஒரு வணிகக் கூட்டம் சிரியா தேசம் செல்ல வேண்டும். அது திரும்ப வரும்போது அதன் தலைவர் அபூசுஃப்யான் ஒரு தூதரை மக்கா தேசம் நோக்கி அனுப்ப வேண்டும். அத்தூதர், வணிகக் கூட்டம் பத்ரை வந்தடையும் தேதியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடனே  அந்தத் தூதர் மக்கா தேசத்தின் வணிகக் கூட்டத்தை வழிமறித்துக் கொள்ளையடிக்க, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களோடு காத்துக் கொண்டிருக்கிறார் என்ற வதந்தியைப் பரப்ப வேண்டும்.

ஏனெனில் சிரியா செல்வதற்கான இந்த வழி சர்வதேசச் சாலையாக இருந்தது. அனைத்து அரபு வணிகர்களுக்கும் இது மிகவும் முக்கியமான வழியாகும். இவ்வழியில் வரும் வணிகக் கூட்டத்தை வழிப்பறி செய்வது ஒட்டுமொத்த அரபியாவுக்கு எதிரான குற்றமாகும். இப்படிப்பட்ட செய்தியைப் பரப்புவதன் மூலம் அனைத்து அரபுகளிடமிருந்தும் தங்களுக்கு ஆதரவான அனுதாப அலையை உருவாக்க முடியும். ஏற்கனவே மதீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ள அரபுக் கூட்டத்தார் தம் அனுதாபத்தையும், ஆதரவையும் இதன் மூலம் விலக்கிக் கொள்ளும் நிலையும் உண்டாகுமென்று குறை»கள் திட்டமிட்டார்கள். அவர்களின் அத்திட்டப்படியே மதீனாவுக்கு வடக்கே நஜ்து தேசத்தி லுள்ள 'பன} சுலைம்' மற்றும் 'பன} கத்ஃபான்' படைகள் மக்காவின் படையோடு இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட்டனர்.

மக்காவின் படைகள் 'பத்ரு'க்களம் வந்தது ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததென்றோ, இறைத்தூதர்(ஸல்) அவர்களால் வழிமறிக்கப்படு வோம் என்ற அச்சத்தினால் வந்ததென்றோ ஒருபோதும் கருத முடியாது. உண்மையில் அது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகும்.

'பன}பக்ர்' என்ற கூட்டத்தார் மக்காவின் எதிரியாகத் திகழ்ந்தனர். சர்வதேச வணிகப் பாதையைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்கே தாங்கள் போரிடச் செல்வதாகவும், எனவே தாங்கள் இல்லாத அச்சமயத்தில் மக்காவைத் தாக்கிவிட வேண்டாமென இந்த வதந்தியின் மூலம் குறை»கள் 'பன}பக்கர்' கூட்டத்தினரை மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். குறை»களின் சூழ்ச்சியை அறியாத அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தார்கள்.

ஆயிரம்பேர் கொண்ட மக்காவின் இராணுவம் பத்ர்களம் நோக்கிப் புறப்பட்டது. நஜ்து தேசத்துப் படைகளும் பத்ர் களம் நோக்கி வந்தன. திமஸ்கஸிலிருந்து திரும்பிய வணிகக்கூட்டம் நிறைய ஆயுதங்களைச் சுமந்து வந்தது. அக்கூட்டமும் மக்காவின் படையும் பத்ரில் ஒன்று கூடின. இதைத் திருக்குர்ஆனும் கூறுகிறது.

''பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கு எதிராக பத்ரில்) அல்லாஹ்வுடைய பாதையைவிட்டு மக்களைத் தடுத்தார்கள்.'' (அல்குர்ஆன் 8:47)

ஆனால் சில வரலாறுகளில் இதற்கு மாற்றமான தகவல்களும் உள்ளன. அபூசுஃப்யான் தன் பாதையை மாற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அன்னாரின் தோழர்களும் தாக்காத அளவுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அடைந்து அபூஜஹலுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், 'உம் ஒட்டகங்களையும் உடைமைகளை யும் பாதுகாக்க நீர் வெளிவந்ததும் இறைவன் அவற்றைப் பாதுகாத்து விட்டான்; எனவே திரும்பச் செல்லவும், எனக் கூறியதாகக் கதை கட்டப்பட்டுள்ளது.

மக்காவாசிகளின் படையெடுப்பு மதீனாவாசிகளின் தூண்டுத லாலே ஏற்பட்டது என வாதிடுதல் பெரும் தவறு. மக்காவாசிகளோடு மதீனாவாசிகளின் மோதலுக்குக் காரணம் அவர்களின் படையெடுப்பு தான் என்பதற்கு அபூஜஹலின் கவிதையே போதுமான ஆதாரமாகத் திகழ்கிறது. 'பத்ரு'க்கு வருவதற்கு முன்பு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ குறை»ப் படையின் வருகையை அறியாது இருந்தனர் என்பதும் தவறு.

ஏனெனில் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒட்டகக் கூட்டத்துடன் வந்த வணிகக் குழுவை வழிமறிக்க வந்தார்கள் என இதற்குப் பொருளாகிவிடும். உண்மையில் ஆக்கிரமிப்பதற்காக வந்த மக்கா தேசப் படையை எதிர்கொள்ளவே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் 'பத்ரு'க்கு வந்தார்கள்.

முஸ்லிம்கள் இடம்பெயர்வதைக் குறை»கள் தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் தங்களை மதீனாவில் நிலைப்படுத்திக் கொண்ட காரணத்தால் மதீனாவின் மீது போர்ப் பிரகடனம் செய்தனர். அன்ஸாரித் தோழர்கள் ஒன்றைப் புரிந்து கொண்டனர். மக்காவின் படையெடுப்பு எந்த வினாடியிலும் நிகழலாம். மக்காவின் பல சிறுபடைகள் மதீனா நோக்கி அணி வகுத்தன. அவர்களின் இந்த எண்ணத்தை அவை உறுதிப்படுத்திவிட்டன. அன்ஸாரித் தோழர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை மதீனாவின் எல்லைகளுக்குள்தான் பாதுகாப்பதென்று உறுதி பூண்டிருந்தனர். ஆனாலும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தனர். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மேற்கொண்ட பல பயணங்களின் மூலம் பல்வேறு கூட்டத்தாருடன் உடன்படிக்கைகள் ஏற்பட்டு 'பத்ரு'ம், அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளும் மதீனாவின் எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிட்டன. ஆகவே மதீனா தேசத்தின் இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பும் தங்களுக்கு உண்டு என்பதை அன்ஸார்களும், முஹாஜிர்களும் நன்றாக அறிந்தே இருந்தனர். ஏனெனில் அவர்கள் மதீனா ஒப்பந்தத்தை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டிருந்தனர். சிலர் விளைவுகளைப் பற்றி அஞ்சியிருக்கலாம்; அதுவும் மனித இயல்புதான். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டான்.

மக்காவின் ஒட்டகக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகவே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை விட்டு வெளியில் வந்தார்கள் என்று செய்தி பரப்பப்பட்டது பெரும் ஆச்சரியயத்தைத் தருகிறது.

''அபூசுஃப்யான் சிரியாவிலிருந்து வருவதைக் கேள்விப்பட்டதும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் முஸ்லிம்களை அழைத்து ''இதுவே குறை»களின் உடைமைகள் அடங்கிய ஒட்டகக் கூட்டம். சென்று அதைத் தாக்குங்கள். அல்லாஹ் அதை நமக்கு இரையாக்கக் கூடும் என்று கூறினார்கள்'' என இப்னு இஸ்ஹாக் எழுதியுள்ளார்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட திருமறை வசன ஒளியில் இதை ஆதாரப்பூர்வமாகக் கருத முடியாது. நடுநிலையாகப் பார்த்தால் இது தவறான நோக்கத்தோடு புனையப்பட்டிருப்பது விளங்கும். இது பற்றி இப்னு இஸ்ஹாக், அபூசுஃப்யான் செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒட்டகத்தில் பயணித்தவர் ஒருவர் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களோடு தன் ஒட்டகக் கூட்டத்தை எதிர்கொள்ளத் தயாராவதை அறிந்தார். சுதாரித்துக் கொண்டு 'ளம்ளம் இப்னு அம்ர்அல் கிஃபாரி'யை மக்காவுக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்றடைந்ததும் தன் ஒட்டகத்தின் மூக்கை அறுத்து, அதன் சேணத்தைத் திருப்பி, தன் மேற்சட்டையைக் கிழித்துக் கொண்டவராக, ''குறை»களே! நம் ஒட்டகங்கள்!? நம் ஒட்டகங்கள்!? அபூசுஃப்யானோடு இருக்கும் உங்கள் உடைமைகளைச் சூறையாட முஹம்மதும் அவரின் தோழர்களும் தயாராகிவிட்டனர். நீங்கள் அதை வெல்வீர்கள் என எனக்கு நம்பிக்கை இல்லை. உதவுங்கள்! உதவுங்கள்!!' என்று மக்களிடம் கூறினார்'' என்றும் இப்னு இஸ்ஹாக் குறிப்பிடுகிறார்.

இவர்கள் கூறுவதுபோன்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தை வழிப்பறி செய்ய வந்திருப்பின் அதை அவர்கள் எளிதாகச் செய்திருக்க முடியும். பத்ரின் அருகிலிருந்து 'ளம்ளம்' என்பவர் மக்கா தேசத்தைச் சென்றடைய எப்படியும் ஆறுநாட்கள் ஆகியிருக்கும். மக்காக் குறை»கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள நான்கு நாட்களைச் செலவிட்டனர். அதோடு பத்ரை அடைய அவர்களுக்குப் பத்து நாட்கள் தேவைப்பட்டன. ஆயிரம் சுமைதாங்கி ஒட்டகங்களோடு பயணித்த அபூசுஃப்யானிடம் விரையும் தன்மை இல்லை என்பது நிதர்சனம். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படைக்கு அப்படி எந்தச் சுமையும் இல்லாததால் அவர்களால் விரைந்து இயங்க முடியும். பத்து கிலோமீட்டர் தூரத்தை அடைத்துக் கொண்டு வந்த ஆயிரம் ஒட்டகங்களின் காவலுக்கு 24 நபர்களே இருந்தனர். விரைந்து செல்லும் ஒட்டகங்களைக் கொண்ட 30-40 முஸ்லிம் வீரர்களுக்கு அவற்றை எளிதாகவும் தாக்கியிருக்க முடியும். முஸ்லிம் படைகள், குறை»களின் படை மற்றும் வணிகச் சுமைதாங்கி ஒட்டகங்களுடன் வந்த அனைவரும் 'பத்ர்' களத்திற்கு ஒரே நேரத்தில் வந்தடைந்தார்கள்.

இதை ஊன்றிக் கவனித்தால் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவின் முடிவிலிருந்த 'பத்ர்' போர்க்களத்திற்குச் சென்றுள்ளார்கள். எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் எதிரிகள் நுழைந்தது படையெடுப்பு என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ''உங்களை எதிர்த்துப் போரிடுவோருடன் நீங்களும் போரிடுங்கள்'' (அல்குர்ஆன் 2:190) என்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான்.

முஸ்லிம்கள் தாக்கப்படும்போது  அவர்கள் எவ்வித  எதிர் நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது ஆகுமானதல்ல. எனவே போர்  புரியுமாறு  அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ''போரிடுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது.'' (அல்குர்ஆன் 2:216) என்று இறைவன் கூறுகிறான்.

உண்மையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூசுஃப்யானின் வணிகப்படையைத் தாக்குவதற்காகச் சென்றிருந்தாலும் அதைத் தவறு என்று கூறமுடியாது. ஏனெனில் தம் தேசத்தையும், அதில் வாழும் மக்களையும் அழிப்பதைக் குறியாய்க் கொண்டிருக்கும் எதிரிகள் மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படுவதும் போர்த் தந்திரங்களில் ஒன்றே. தற்போதும் இம்மாதிரியான பொருளாதாரத் தடைகள் அமலில் உள்ளன. இதைக் கவனத்திற்கொள்வது அவசியம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் 'பத்ர்' போர்க்களம் சென்று போரிட்டது அவர்களின் முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறுவோரும் உள்ளனர். நிச்சயமாக இது முன் கூட்டிய நடவடிக்கை அல்ல. ஏனென்றால் மக்காவாசிகள் ஏற்கனவே போர் அறிவிப்பைச் செய்து விட்டனர். மக்கா தேசக் குறை»கள் முன்னரே போர்க் குழுக்களை அனுப்பிக் கொண்டும் இருந்தனர். மேலும் மக்காவின் படைகள் மதீனா நோக்கிப் புறப்பட்டதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிந்த நிலையில் இருந்தார்கள். இரு படைகளும் களத்தில் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் சந்தித்தன. 'பத்ர்' களம் மதீனாவிலிருந்து 120ம்.மீ. தூரத்திலும் மக்காவிலிருந்து 300 ம்.மீ. தூரத்திலும் உள்ளது. மக்கா தேசக் குறை»கள்தான் முதலில் படையுடன் கிளம்பியுள்ளார்கள். அவர்கள் புறப்பட்டதை அறிந்த பின்னரே இறைத்தூதர்(ஸல்) அவர்களும் தங்கள் படையை நடத்திச் சென்று பத்ரில் அவர்களைச் சந்தித்தார்கள். 120 ம்.மீ. தூரத்தில் இருந்து வந்த முஸ்லிம்களும், 300 ம்.மீ. தூரத்தில் இருந்து வந்த மக்கா தேசக் குறை»களும் ஒரே நேரத்தில் 'பத்ர்' களத்தை வந்தடைய வாய்ப்பில்லை. குறை»கள் மிகத் தாமதமாகப் புறப்பட்டு அதிக தூரத்தை அன்றைப் பாலைவனத்தில் மின்னல் வேகத்தில் கடந்து வந்தார்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது.

மதீனா ஒப்பந்தம் பற்றிய மேம்போக்கான விமர்சனம் கொடுக்கப் பட்டுவிட்டது. மதீனா தேசத்தின் உருவாக்கத்தைச் சட்டபூர்வமாக்கிட வும் சம்பந்தப்பட்ட அனைவரும் தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் படியும் தயாரிக்கப்பட்ட ஒரு சட்ட ஆவணமாகும் இது. இன்றைய அரசியற் சட்டக் கலைச் சொல்லாக்கத்தில் சொல்லப்படுவதானால் இது ஓர் 'அரசியல் சாசனச் சட்டம்'  ஆகும். மேலும் இது வருங்கால முஸ்லிம் தலைமுறைகளுக்கான சிறந்ததொரு முன்னுதாரணம் ஆகும். முஸ்லிம் களின் எந்த ஓர் அரசும் தனக்கென ஓர் அடிப்படைச் சட்டமின்றித் தன் தேசத்து அலுவல்களை நடத்தக் கூடாது. இவ்வொப்பந்தமானது பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் தனிக்கவனம் செலுத்தியுள்ளது. அதோடு உள்நாட்டு விவகாரம் மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கும் இச்சாசனம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. வருங்காலத்தில் அரசியல் சாசனம் இயற்றுவோருக்குச் சமூக வாழ்வின் பல அம்சங்களிலும் இது வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

மக்காவின் போர்ப்பிரகடனத்திற்கு மதீனாவின் ஒப்பந்தமே எதிரொலியாக இருந்தது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் போர் என்பது தேசிய அளவிலான ஆயத்தத்துடன் முழுமையாகச் செய்யப்பட வேண்டும். போர்ச் சட்டதிட்டங்களும்  ஆவணரீதியாகப் பதிவு செய்யப்பட்டன. அவற்றிற்குச் செயல்வடிவம் கொடுக்கக்கூடிய முதல் இடம் இதுதான். அவற்றின் சில முக்கிய அம்சங்கள் இதோ...

யு. மக்களையும், நாட்டு  எல்லைகளையும் பாதுகாப்பதற்காகவே போரில் இறங்க வேண்டும்.

டீ. தேசத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்தச் சமுதாய மக்களும் உடலாலும், பொருளாலும் போரில் பங்கெடுக்க வேண்டும்.

ஊ. தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் போர் உள்ளடக்கி யுள்ளது. அவை வருமாறு:-

1. உள்நாட்டு அமைதியும், பாதுகாப்பும்.

2. ராஜதந்திர நடவடிக்கைகள்.

3. முழு மனிதசக்தி.

4. தேசத்தின் பொருளாதாரமும், இதர வளங்களும்.

5. இருப்பிலுள்ள ஆயுதங்கள்.

6. முழுக் கண்காணிப்பு.

åதர்களுக்கு மனித உரிமைகளில் சம அந்தஸ்து வாக்களிக்கப் பட்டது. ஆனால் அதை அடைவதற்கு முஸ்லிம்கள் நிர்வாகம் செய்யும் இறையாட்சியமைப்பின் கீழ் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். இஸ்லாமியத் தேசச் சட்டங்களின் அடிப்படையில் கட்டளையிடும் போது அவர்கள் அதன்படி நடந்தாக வேண்டும்.  இந்த ஒப்பந்தம் உருவாகும் முன்பு åதர்கள் சமூக, அரசியல் அந்தஸ்து இல்லாதவர் களாகவே மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வாழ்வில் இது ஒரு முன்னேற்றமாகத் திகழ்ந்தது. ஆனால் அந்த åதர்கள் ஓராண்டிலேயே ''மதீனாவில் நிறுவப்பட்டுள்ள அந்த அரசையும், தேசத்தையும் அழிப்பதற்கு நாங்கள் சித்தமாயிருக்கிறோம்; இதுதான் எங்கள் வேலை'' என முகத்திரையை விலக்கிக் கொண்டு தங்களின் உண்மைத் தோற்றத்தைக் காண்பிக்கலாயினர். கருத்து வேற்றுமைகள் 'பத்ரு'ப் போருக்கு முன்னரே தலைதூக்கிவிட்டன. இருப்பினும் 'பத்ரு'ப் போருக்குப் பின்னரே åதர்கள் வெளிப்படையாகக் கலகம் செய்தனர். அந்தக் கலகத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் ஆயுதங் களைத் தவிர்த்து அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொண்டு மதீனாவை விட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட åதர்கள் தங்களின் கதவு, சன்னல் களைக் கூட விட்டு வைக்காது அனைத்தையும் எடுத்துச் சென்றனர்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த åதக் கூட்டத்தின் கலகத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் விட்டிருந்தால் மதீனா தேசத்தின் உள்நாட்டு அமைதியும், பாதுகாப்பும் பெரும் கேலிக்குள்ளாம் இருக்கும். கலகம் செய்த 'பன} கைனுக்கா' எனும் கூட்டம் எண்ணிக்கை யில் பெரிய அளவில் இருந்தது. ஓரளவு இராணுவத் திறமையும் கொண்டிருந்தது.

இந்த åதக்கூட்டத்தைப் பற்றி எழுத்தாளர் 'மார்கோலியத்' தன் நூலில் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.

ஹஹஊநசவயiடெல வாந ஞயiரெஙரய அiபாவ டில வாநஅளநடஎநள hயஎந டிநநn ளரககiஉநைவெ வழ னநயட றiவா ஆராயஅஅயன (ளுயுறு) யனெ வாசநந hரனெசநன கழடடழறநசளஇ டிரவ வாநசை டிசழவாநசn உழரடனஇ றiவாழரவ னகைகiஉரடவலஇ hயஎந டிசழரபாவ iவெழ வாந கநைடன ய கழசஉந கழரச வiஅநள வைள ரெஅடிநச றiவா றாiஉh hந றயள யவவயஉமiபெ''

''முஹம்மத்(ஸல்) அவர்களையும் முந்நூறு நபித்தோழர்களையும் சந்திக்க 'பன} கைனுக்கா' கூட்டமே போதுமானதுதான். ஆனால் இக்கூட்டத்தினரின் சகோதரக் கூட்டத்தவரோ இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படைபோன்று நான்கு மடங்குக் கூட்டத்தைத் திரட்டுவதை எளிதாகச் செய்து விட்டனர்.''2

அப்படியிருந்தும் 'பன} கைனுக்கா' கூட்டம் முஸ்லிம்களோடு போராடத் துணியவில்லை. அவர்கள் மதீனா ஒப்பந்தத்தின் ஒரு சட்டப் பிரிவை ஏற்றிருந்தனர். அப்பிரிவு ''நம்பிக்கைக் கொண்டோர் இறைவனை அஞ்சி அவனுக்குக் கீழ்ப்படிவதால் நிலைத்திருக்கும் உறுதி கொண்டுள்ளனர்; இறைவனிடமிருந்து வழிகாட்டுதலும் பெறுவர்'' எனக் கூறுகிறது.

இப்படிப்பட்ட இறைநம்பிக்கையாளர்களை எவ்வாறு அவர்களால் போர்க்களத்தில் எதிர்கொள்ள இயலும்?  குழப்பம், கலகம், நம்பிக்கைத் துரோகம், சதி ஆகியவற்றை மறைவாகச் செய்திட முடியும்;  வாளோடு வாள் மோதி அவற்றைச் செய்ய முடியுமா?

உலக வரலாற்றில் åதர்கள் இதில் முக்கியமானப் பங்கு வம்த்து அதன் மூலமே வளம் பெற்றிருக்கின்றனர்.

போதிய எண்ணிக்கையிலும் இராணுவ பலத்திலும் இருந்த åதர்கள் மதீனா தேச அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்ததற்கு ஒரேயொரு காரணம், முஸ்லிம்களை வன்முறையில் சந்திக்காமல் அவர்களுக்குள்ளிருந்தே குழப்பங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். உலக வரலாற்றில் இவர்கள் இவ்வாறு சாதித்த ளசாதனைகளே ஏராளம். எனவேதான் åதர்கள் மக்கா தேசக் குறை» களோடு தொடர்பு வைத்திருந்தார்கள். åதர்களின் சரணாகதிக்குச் சில நாட்களுக்குப் பின்பு அபூசுஃப்யான் இரவோடு இரவாக மதீனா தேசம் நோக்கிப் படையெடுத்து வந்தார். ஆனால் 'பன} கைனுக்கா'வின் சரணாகதியைக் கேள்விப்பட்டதுமே விரைவாகப் பின்வாங்கிச் சென்றுவிட்டார்.

åதர்களின் கோட்டை முற்றுகையிடப்பட்டு இருந்தபோது, அபூசுஃப்யான் தன் பயணத்தைத் துவக்கியிருக்கக்கூடும்.

åதர்கள் விரைவாகவே சரணடைந்தது அவருக்குப் பெரும் ஏமாற்றமளித்தது. அவர் துரத்தப்பட்டார். ஆனாலும் கொண்டு வந்திருந்த 'பார்லி' மூடைகளைத் தூக்கி எறிந்து விட்டுப் படைகளுடன் தப்பி ஓடிவிட்டார். எனவே இப்படையெடுப்பு 'கஜ்வத்துஸவீக்' எனப்படுகிறது. இங்கும் தன் தலைநகர் தாக்கப்பட்டதும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் போர்க்களம் புகுகிறார்கள் என்பது தெளிவாகிறது  எதிரிகள் போரைத் தொடரவே விரும்பினார்கள். ஆகவே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை அலட்சியம் செய்து தம் தேசப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்துக் கொள்ளும் போக்கை விரும்பவில்லை. 'பன} கைனுக்கா'வை முற்றுகையிட்டதன் மூலம் குழப்பங்கள் செய்யும் உள்நாட்டுச் சதிக்கு எதிராக விழிப்பாய் இருப்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன்னுதாரணம் காட்டி விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.

1.     கஸ்வத்து 'பன} கைனுக்கா' (ரமலான், ஹிஜிரி2. - கி.பி.620)

2.     கஸ்வத்து ஸவீக், (ஷவ்வால் ஹிஜிரி2.)

3.     கஸ்வத்து 'பன} சுலைம்' (ஷவ்வால், ஹிஜிரி 2. )

4.     இரண்டாம் கஸ்வத்து 'பன} சுலைம்' (துல்காயதா ஹிஜிரி 2)

5.     கஸ்வத்து 'பன} கத்ஃபான்' (ரபியுல் அவ்வல், ஹிஜிரி 2)

மேற்கண்ட போர்கள் அனைத்தும் 'பத்ரு'ப் போர் முடிந்ததுமே நடைபெற்றன. அதோடு 'பன} கைன}க்கா'வைத் தவிர அனைவருமே 'பன} கத்ஃபான்'  'பத்ரு'ப் போரில் தோற்கடிக்கப் பட்டவர்கள். இம்மூன்று கூட்டத்தாரும் 'பத்ரு' .0போருக்குப் பின்பு மதீனாவோடு போரிட்டுக் கொண்டே இருந்தனர். குறை»களும் அவர்களின் நேசக்கூட்டத்தாரும் தோல்வி அடைந்ததை அறிந்த 'பன} கைனுக்கா' கூட்டத்தினர் கலகத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர்களின் கலகமும் அதைத் தொடர்ந்த மதீனாவின் மீதான படையெடுப்புகளும் நன்கு திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டன. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இந்தக் கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கூட்டத்தாரையும் தனித் தனியே எதிர்கொண்டு அக்கூட்டணியையே தோற்கடித்து விட்டார்கள். எதிரியைவிட எப்போதுமே விழிப் புணர்வில் ஒருபடி மேலிருப்பது, துல்லியமான தகவல்களைத் திரட்டுவது ஆகியவற்றில் முஸ்லிம் சமுதாயத்துக்கு இறைத்தூதர்(ஸல்)அவர்கள் முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார்கள். 'பன} சுலைமும்'  'பன} கத்ஃபானும்' சக்தி வாய்ந்த கூட்டங்கள். நாம் அலட்சியமாக இருந்து நேரமும் வாய்ப்பும் அளித்துவிட்டால் 'பன} கத்ஃபான்' குழுவினர் ஆறாயிரம் வீரர்களைத் திரட்டி விடுவர் என்று கருதிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படையைத் திரட்டிட கால அவகாசமோ, வாய்ப்போ அவர்களுக்கு அளிக்கவில்லை. அக்கூட்டத்தார் தம் வீரர்களை ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்தவுடனேயே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்று அவர்களைத் திணறடித்து விட்டார்கள். இருந்தாலும் இதனை முன்கூட்டிய நடவடிக்கை என்று கூறுவதும் பொருந்தாது. ஏனென்றால் 'பன} சுலைமும்'  'பன} கத்ஃபானும்' மதீனாவுக்கு எதிராக ஏற்கனவே பத்ரில் போரிட்டவர்கள். போர் இன்னும் முடிந்தபாடில்லை. இச்சிறு போர்களை இரண்டு தரப்பினருமே ஆக்ரமிப்பு என்றோ முன்கூட்டிய நடவடிக்கை என்றோ கூறி விட முடியாது.

இக்காலகட்டத்தில் மற்றுமொரு போர் நடவடிக்கை எடுக்கப் பட்டது. மக்காவுக்கு அருகேயுள்ள கடற்கரை நோக்கி நடத்தப்பட்ட படை அணிவகுப்புதான் அந்தப்போர். அப்போது எந்த எதிரியும் குறுக்கிடவில்லை. மக்காவின் எச்சரிக்கைகூட வெளிப்படவில்லை. அவர்களின் உணர்வைப் பரிசோதிக்கவும் தங்கள் பகுதிக்குள் நுழைந்து விட்ட எதிரிகளிடம் சவால்விடும் பலம் அவர்களிடம் உள்ளதா என்பதைக் கண்டறியவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போர் 'கஸ்வத்து பஹ்ரைன்' என அழைக்கப்படுகிறது. ஆனால் மக்காக் குறை»கள் வெளிவந்து மதீனாவின் படைகளை எதிர் கொள்வதில் விருப்பம் காட்டவில்லை.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இராணுவ உளவுப்படை ஒன்றை எப்போதும் தயாராக வைத்திருந்தார்கள்;  அவர்கள் மக்கா பட்டாளத்தைப் பற்றிய இன்னும் அவர்களின் வணிக ஒட்டகங்கள் பற்றிய முழு விவரங்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். மதீனாவைத் தாக்குவதற்காக 'பன} சுலைம்' கூட்டம் எடுத்த முயற்சிகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. இதேபோன்றுதான் 'பன} கத்ஃபானி'ன் முயற்சிகளும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவ்வப்போது மக்காவுக்கு நேசமாக இருந்த நஜ்து தேசம் வழியாக மெசபட்டோமியா வுக்கு வணிக ஒட்டகங்களின் கூட்டத்தை அனுப்ப மக்காவாசிகள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பது பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது அவர்கள் அந்த வியாபார ஒட்டகங் களைப் பிடித்து வருமாறு ஜைத் இப்னு ஹாரிஸ்(ரலி) அவர்களை அனுப்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் இளமைக் காலத்தில் வணிகம் சென்ற பழக்கம் இருந்ததால் காலத்தையும், தொலைவையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டார்கள். ஜைத்(ரலி) அவர்கள் கராதாவின் சோலைகளை அடைந்தபோது அங்கு வியாபாரக் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் அக்கூட்டத்தை வெற்றி கண்டு அவர்களின்  பொருட்களை மதீனாவுக்கு எடுத்து வந்தார்கள்.

பஹ்ரைனுக்கு மதீனாவின்  படைகள்  பயணித்தன. சிரியாவுக்குச் செல்லும் வணிகப் பாதை மதீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; எனவே தங்களின் வணிக ஒட்டகங்கள் அவ்வழியில்  பயணித்தால் கைப்பற்றப்படும் என்று நினைத்த குறை»கள், ''பயணம் கடினமாக இருந்தாலும் சரி, இலகுவாக இருந்தாலும் சரி நீங்கள் புறப்படுங்கள்!''

''உங்கள் உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போராடுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.'' (அல்குர்ஆன் 9:41)

அதே சமயத்தில் குறை»கள் தங்களின் பொருட்களைத் தம் கிட்டங்கியில் வைத்துக் கொண்டு சோம்பி இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து, சர்வதேசச் சந்தை இருக்கும் சிரியாவுக்குச் செல்ல மாற்றுப்பாதையான மெசபடோமியா வழியைத் தேர்வு செய்தனர். அது முன்பு சென்ற வழியைவிட அதிகத் தூரமுடையதாக இருந்தது;  இருப்பினும் கூட அவர்கள் அதையே தேர்வு செய்தார்கள். ஏனென்றால் இப்போது குறை»களுக்கு மதீனா தேசத்துப் படையை எதிர்க்கத் துணிவில்லாமல் போய்விட்டது. ஆனால் ஜைத்(ரலி) அவர்களின் வெற்றிகரமான முயற்சியால் குறை»கள் தேர்ந்தெடுத்த அந்த வழியும் அடைக்கப்பட்டு, குறை»களின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது.

'உஹது'ப் போர்

இந்தப் போர் கி.பி. 626ழூ ழூ ஹிஜ்ரி 3ம் ஆண்டு ஷஅபான் மாதம் 15ம் நாள் நிகழ்ந்தது.

குறை»களுக்கு அரபகத்தின் வடக்கிலும், தெற்கிலும் வியாபாரத் தொடர்புகள் இருந்தன. அது சர்வதேச வியாபாரத்தின் நிலையை அறிந்து கொள்ள அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. ஆனால் தற்போது ஒருவருடகாலம் முழுவதும் இரண்டு திசைகளிலும் வியாபாரத்திற்காக அவர்களால் எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சந்தைகளுக்கான அனைத்து வணிகப் பாதைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் வேறு வியாபாரிகளோடு தொடர்பு கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் அவர்கள் கொண்டிருந்த வெறுப்பு மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்களின் வியாபாரத்திற்கு நேரடியான அச்சுறுத்தல் இருந்ததால் வெஞ்சினம் கொண்டனர். எனவே அவர்கள் மதீனாவின் மீது தங்களின் தாக்குதலைத் தொடரத் திட்டமிட்டு அதிக அளவு சக்தியான 3000 தரைப்படை வீரர்களையும், 200 குதிரைப்படை வீரர்களையும் திரட்டிக் கொண்டு படையெடுத்தனர்.

இச்செய்தி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு உடனடி யாகக் கிடைத்துவிட்டது. ஆனால் அவர்களின் படை மதீனாவின் சுற்றுப்புறங்களை அடையும்வரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அச்செய்தியை வெளியிடவில்லை. ஏனெனில் இப்போர் மதீனா மாநகரின் அருகிலேயே நடைபெறவேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். மதீனாவில் தங்களுக்கென்று ஓர் அரண் அமைத்து, முற்றுகையை எதிர்கொண்டு தற்காப்புப் போரை நடத்த வேண்டுமென அவர்கள் முடிவெடுத்தார்கள். முஸ்லிம் சமுதாயத்தை மஸ்ஜிதுன்னபவி எனும் இறையில்லத்தில் கூடச் செய்து அவர்களின் முன்பு தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினையை எடுத்து வைத்தார்கள்.

இம்முறை மதீனாவுக்குள் எதிரிகள் நுழையும் வரை காத்திருந்து தாக்குவது என்ற தம் முடிவை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது, மதீனாவுக்குள்ளிருந்து போரிடுவதே நல்ல திட்டமெனவும் அவ்வாறே முந்தையக் காலகட்டங்களில் நடைபெற்ற தாகவும் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவரும் தெரிவித்தார்.

மக்காவின் படைகள் மதீனாவின் சுற்றுப்புறங்கள் வரை வருவதைச் சபை எதிர்க்கவில்லை. ஆனாலும் 'பத்ரு'ப் போரில் பங்குகொண்ட இளைஞர்கள் எதிரியைத் திறந்த வெளியில் சந்திப்பதையே விரும்பினார்கள்.

''இறைத்தூதர் அவர்களே! எங்களை எதிரிகளிடம் வழி நடத்திச் செல்லுங்கள். இல்லையேல் அவர்கள், நம்மைக் கோழைகளென்றும், அவர்களுடன் போரிட நாம் தயாரில்லை என்றும் எண்ணிவிடுவர்'' என அந்த இளைஞர்கள் கூறினார்கள். இப்படிக் கூறியதன் வாயிலாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஆலோசனைக்கு எதிரான மாற்றுக் கருத்துகளைக் கூறி விட்டோமோ என அந்த இளைஞர்கள் எண்ணினார்கள். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களுடன் தயார்நிலையில் வந்ததும், தங்களின் திட்டத்தையே செயல்படுத்தலாம் தானே என்று அந்த இளைஞர்கள் பணிவாகக் கூறினார்கள். ஆனால் அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சம்மதிக்காமல், ''எதிரியோடு போரிடக் கவசமணிந்த பின்பு நமக்கும் எதிரிக்குமிடையே நடப்பதை அல்லாஹ்தான் தீர்மானிப்பான். எனவே முடிவை மாற்றுவது இறைத்தூதருக்கு அழகன்று'' என்று கூறிவிட்டார்கள்.

மதீனாவை நெருங்கிய எதிரிகளின் படைகள் அதற்குச் சற்று வடதிசையில் நகர்ந்து 'உஹத்' மலைக்குக் கிழக்கே முகாமிட்டுக் கொண்டன. சபையின் வேண்டுகோளுக்கிணங்கி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓராயிரம் வீரர்களோடு 'உஹத்' மலையை நோக்கிச் சென்றார்கள். ஷைக்கைகனிபா எனும் இடத்தில் அன்று இரவு முகாமிட்டார்கள். இரவில் எதிரிகளிடமிருந்து முகாமைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் எடுக்கப்பட்டன. ஹம்ஸா(ரலி) அவர்களின் தலைமையிலான ரோந்துப்படை மக்காவாசிகளின் முகாம் இருந்த திசையைக் கவனித்துக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு உபை தனக்கு விசுவாசமான முந்நூறு வீரர்களுடன் மதீனா திரும்பிவிட்டார் என்பது காலையில் எதிரிகளைச் சந்திக்கும்போதுதான் தெரியவந்தது. மதீனாவின் உள்ளிருந்து போரிடுவது என்ற தன் யோசனை மட்டுமே மதீனாவைக் காக்கும் ஒரே வழி என்ற புறக்காரணங்களைக்கூறி அவர் கிளம்பிச் சென்று விட்டார். அவரின் யோசனை ஏற்கப்படாததால் தவறான போர்த் திட்டத்தில் தன் ஆட்களின் உயிர்களைப் பலிகொடுக்கத் தான் தயாரில்லை என்பதே அவர் அளித்த விளக்கமாக இருந்தது. ஆனால் உண்மையில் அவர் ஒரு  நயவஞ்சகர்! நம்பிக்கைத் துரோம்!

நம்பிக்கைத் துரோகத்தால் மூன்றில் ஒரு பகுதி படையினரை இழந்தாலும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சிறிதும் சஞ்சலமடையவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய கட்டளைகள் மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்தார்கள். கடினமாக இருந்தாலும் சரி, இலகுவாக இருந்தாலும் சரி, நீங்கள் புறப்படுங்கள்! உங்கள் உடைமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போராடுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்'' என்றே திருக்குர்ஆன் (9:41) அவர்களுக்குக் கட்டளையிடுகிறது.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் உஹதை நோக்கி ஒரு சுற்றுப் பாதையில் பயணமானார்கள். மற்ற நேரங்களில் நேரடியாக அணுகுவதைவிட மறைமுகமாக அணுகுவதையே அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரும்பி, அதன்படிச் செயல்பட்டார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில்  'உஹது'ப் போர் ஒரு கலங்கரை விளக்கம். 'பத்ரு'ப்போரை விடவும் ஏராளமான பாடங்களை இதிலிருந்து கற்க வேண்டியதாய் இருக்கிறது. தத்துவஞானிகளும், போர்க்கலை வல்லுநர் களும் இதன் ஒவ்வொரு நிலையிலிருந்தும் பாடம் படிக்கலாம்.

இப்போரில் எடுக்கப்பட்ட முடிவுகள் தத்துவவாதிகளுக்கும், போர்க்கலைஞர்களுக்கும் போர்த் திட்டங்களை வகுக்க உதவிடும் வகையில் அமைந்திருந்தன. தன்னைப் போன்று நான்கு மடங்குப் பெரிய படையை எதிர்கொள்ள வழிகாட்டக்கூடியதாக இந்தப்போர் அமைந்திருக்கிறது. சில நேரங்களில் எதிரியின் தாக்குதலுக்குத் தாக்குப் பிடித்துக்கொண்டு தக்கதருணத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலடி கொடுத்தார்கள். எதிரி எல்லாப் புறங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டபோது மெதுவாகத் தம் படைகளைக் கலைத்து விட்டுப் பின்பு புதிய நிலையை அடைந்ததும் அவர்களை ஒன்று திரட்டினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததால் இன்னும் மதீனாவுக்குள்ளிருந்து புதிதாகப் படைகள் வெளிப்படுமோ எனும் அச்ச உணர்வை குறை»களுக்கு அது ஊட்டியது. பல சந்தர்ப்பங்களிலும் தந்திரமாகப் படைகளை நிலைகொள்ளச் செய்த போரே, இந்த 'உஹது'ப் போர். ஒரு தனி மனிதன் தளபதியாக நின்று போரை நடத்தி எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்திய போர்தான் இந்த 'உஹது'ப்போர். கலைந்த வீரர்களை ஒன்று சேர்ப்பது, தாக்குவது, எதிரியால் பெரிய இழப்புகள் ஏற்பட்டபோதிலும் முடியாத ஒன்றையும் வெற்றிகரமாகச் சாதிப்பது போன்றவற்றையெல்லாம் சாத்தியம் என்பதை உணர்த்தும் போரே இந்த 'உஹது'ப் போர். இந்த போரில்தான் மனச்சோர்வுகளுக்கு மத்தியில் போரிடுவது நிர்ப்பந்தமாகியிருந்தது. தளபதியே மரணித்துவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டும் இவற்றுக்கிடையே தைரியத்தோடும், நிலைத்திருக்கும் உறுதியோடும், தன்னலமற்ற அர்ப்பணிப்போடும் தளபதி முஹம்மத்(ஸல்) அவர்களின் மேற்பார்வையில் வெற்றி காண முடிந்தது. 'இறைமறுப்பாளர்களிடம் சரணடைந்து விடாதே' என்ற கட்டளையை நிறைவேற்றும் வரை போராடிய சம்பவங்கள் அடங்கிய அரிய போரே, இந்த 'உஹது'ப் போர். முஸ்லிம் வீரர்களின் இச்சிறிய கூட்டம் அல்லாஹ்வின் உயர் கட்டளைக்குச் செவி சாய்த்தது. ''தந்திரமான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அல்லாமல் எதிரியிடமிருந்து புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 8:16) என்பது முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

இப்போரில் இரண்டு பெரும் தவறுகள் நடந்தன. ஒரு வேடதாரி மூன்றில் ஒரு பகுதி படையைத் தன்பக்கம் ஈர்த்து முஸ்லிம் படையின் ஒற்றுமையைக் குலைக்கும் முகமாகவும், நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாகவும் வெளியேறி விட்டான். கோழைத்தனமாகத் துரோக மிழைத்து வெளியேறியது பாதிப்பை உருவாக்கியிருந்தாலும், அப்படி அவர்கள் கைவிட்டுச் சென்றதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களோ அவரின் தோழர்களோ இப்போரைத் தவிர்க்க விரும்பவில்லை. அவர்கள் சிறிதளவுகூட அஞ்சவுமில்லை. அல்லாஹ்வின்மீது அவர்கள் கொண் டிருந்த நம்பிக்கை அவர்களின் பலத்துக்கு அடிப்படையாக அமைந்தது. அவர்கள் நிலைத்திருந்தார்கள். இறைவனும் அவர்களுக்குத் தைரியமூட்டினான்.

''நீங்கள் மனம் தளர்ந்துவிடாதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாயின், நீங்களே மேலோங்கி இருப்பீர்கள்.'' (அல்குர்ஆன் 3:139)

அன்று நடந்த இரண்டாவது தவறு ஒழுங்கீனம். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் கட்டளைக்கு முரண்பட்டு, பெரும்பாலான வில்வீரர்கள் தாங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர். இதனால் எதிரியின் குதிரைப்படைக்கு முஸ்லிம்களின் இடையே புகுவதற்கு வழி கிடைத்தது. வாதியுல் கன்னத் வழியாக அவர்கள் புகுந்து முஸ்லிம்படையைப் பின்புறமிருந்து தாக்கினர். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இது மாபெரும் சவாலாக இருந்தது.

சிதறி விட்டப் படைகளை ஒன்று திரட்டி முன்பு போன்றே தீவிரமா கப் போரிட வேண்டும். எதிரியின் குதிரைப் படை ஈயக்கோட்டை போன்றிருந்த முஸ்லிம்களின் மீது பலமுறை மோதியும் ஒரு பலனையும் அடையவில்லை. மிகவும் உறுதியாக இருந்த முஸ்லிம்களின் அணியை அல்லாஹ்வே பாராட்டுமளவுக்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

''இறைவழியில் ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக அணிவகுத்து நின்று போரிடுகின்றவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான்.'' (அல்குர்ஆன் 61:4)

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் நிலைத்திருக்கும் தன்மை, இணையற்ற வீரம் ஆகியவை சோதனைக்குள்ளான போதும் நிதானமாகக் கட்டுப்பாட்டோடு இயங்குவது போன்ற செயல்கள் அவர்களின் தோழர்களையும் பாதித்து அவர்களை நிலைப்படுத்தி விட்டது. முந்நூறு பேர் பின்வாங்கிவிட்ட இக்கட்டான நிலையிலும் அவர்கள் மனவலிமை குன்றாமலே இருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டபோதும் எவ்விதப் பீதியுமின்றி வீரத்துடனும், தீரத்துடனும் போரிட்டார்கள். இது அந்த அன்ஸாரித் தோழர்களுக்கும் முஹாஜிர்களுக்கும் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைåட்டியது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உயரிய குணங்களான அன்பு, நம்பிக்கை, உறுதி, நிலைத்திருக்கும் தன்மை என்ற இவை அவரின் ஆளுமையைப் பிரதிபலித்தன. நபித்தோழர்களும் இப்பண்புகளாலேயே பயிற்றுவிக்கப் பட்டிருந்தனர். குறுகிய காலகட்டத்திலேயே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் அவர்களின் பண்புகளைப் பின்பற்றக் கற்றுக் கொண்டனர். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓர் அரசியல் மேதை, நியாயமான ஆட்சியாளர், தொலை நோக்குள்ள ராஜதந்திரி, மனிதாபிமானம் கொண்ட கருணை ஆட்சியாளர் என்பதை நபித்தோழர்கள் கண்டு கொண்டனர்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒரு தலைமை நீதிபதி வெளிநாட்டு மந்திரி, இராணுவத் தளபதி, மதீனா தேசத்து மன்னர் போன்ற கடமைகள் அனைத்தையும் தாமாகவே எடுத்துக் கொண்ட போதிலும் எப்போதும் இறைவனின் தூதராகவே நடந்து கொண்டார்கள். முஸ்லிம் சமுதாயத்துக்கு என்றென்றைக்கும் வழிகாட்டக் கூடிய வழிமுறைகள் அவரின் வாழ்க்கையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டன. 'உஹத்' போரில் கலந்துகொண்ட அனைவரையும் மறுநாள் காலை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒன்று திரட்டி எதிரியைப் பின் தொடரும்படி ஆணையிட்டார்கள்.

சில வரலாறுகளில் முஸ்லிம்கள் 'உஹத்' போரில் தோல்வியுற்ற தாகக் கூறப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட படை வெற்றி பெற்ற எதிரிப்படையைத் துரத்திச் செல்லுமா என்பது சிந்திக்கத்தக்கது. ஆனால் குறை»கள் தங்களின் தோல்வியைக் கருதாமல் முழு இராணுவமும் அழியாமல் தப்பித்ததே என்ற அளவில் மகிழ்ச்சி யடைந்தார்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களால் மக்காவை அவர்கள் சென்றடையும்போது சிதறிய கூட்டமாகவே இருந்தனர். செல்லும் வழியிலேயே பலர் இறந்து போனார்கள்.

''அவர்களை அழிப்பதற்கு முன்பு திரும்பி விட்டோமே. உயிரோடிருப்பவர்களைத் திரும்பச் சென்று அழித்து விடவேண்டும்'' என்றுதான் அவர்கள் கூறினார்கள். மக்காக் குறை»கள் எந்த வெற்றிப் பொருட்களையும், போர்க் கைதிகளையும் தங்களோடு கொண்டு செல்லாத நிலையில்தான் தங்களின் தாயகம் திரும்பினார்கள். அப்படிப்பட்டவர்கள் வெற்றியடைந்தார்கள் என்பது புதிராக உள்ளது. குறை»களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பது ஒரு பொய்யேயன்றி வேறில்லை. எந்த முடிவும் கிடைக்காத ஒரு போரே 'உஹது'ப் போர். இருப்பினும் மதீனாவின் இராணுவம் ஆக்ரமிப்பாளர்களைத் துரத்தியது. படையெடுத்து வந்த மக்கா படை தன் இலட்சியத்தில் தோற்றது. இதுவே நடுநிலையாகச் சொல்லப்படும் தீர்ப்புங்கூட. மக்கா படைத்தளபதி அபூசுஃப்யான் மக்காவை நோக்கி விரைந்தோடினார் என்ற சம்பவம் அதன் தோல்வியை உறுதிப்படுத்துகிறது.

'உஹது'ப் போரில் கலந்துகொண்ட முஸ்லிம்களின் படையில் பெரும்பான்மையோர் காயம்பட்டிருந்தனர். முஹம்மத்(ஸல்) அவர்களும் காயமடைந்திருந்தனர். அவர்களின் பற்களில் ஒன்றும் உடை பட்டிருந்தது. மதீனா படையினர் மூன்று நாட்கள் ஹம்ரா உல் அஸத் எனும் இடத்தில் தங்கிவிட்டுப் பின்னர்தான் மதீனா திரும்பினார்கள்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எதிரிகளைத் துரத்த முடிவு செய்தது இறைவனின் கட்டளைப்படியே என்பதை திருக்குர்ஆனும் தெளிவுபடுத்துகிறது.

''அவர்களைத் துரத்திச் செல்வதில் தளர்ந்து விடாதீர்கள். நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் உங்களைப் போன்று அவர்களும்தான் கஷ்டப் படுகிறார்கள்.'' (அல்குர்ஆன் 4:104)

'உஹத்' போருக்குப் பிந்தைய காலம் முதல் அகழ் போர்க் காலம் வரையிலும் மதீனாவுக்குச் சோதனையான நேரமாக இருந்தது. வெளிப்படையாகக் கலகம் செய்தமைக்காகத் தண்டிக்கப்பட்ட வேடதாரிகளான பன} நதீரின் åதர்கள் 'உஹத்' போரின் இழப்புகளைக் கண்டு ஊக்கமடைந்தனர். மக்காவுக்கு ஆதரவாக இக்கூட்டத்தினர் முனைப்புடன் செயல்பட்டனர். மொத்தத்தில் மதீனாவை விட்டும் ஏழு படைகள் வெளியில் சென்றுள்ளன. இவற்றில் ஒன்றைத் தவிர மற்றெல்லாப் படைகளையும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களே வழி நடத்திச் சென்றார்கள். முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை அவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். முஸ்லிம் சமுதாயங்களின் தலைவர்களும், ஆட்சியாளர்களும் முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பிலும் அதன் பிரதேசங்களைப் பாதுகாப்பதிலும் முழு ஈடுபாடு காட்டவேண்டும். நிலைமை இக்கட்டானதாக ஆகும்போது அவர்களே தம் படைகளுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்று பாதுகாப்பைத் திட்டமிட்டு மேற்பார்வையிட வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள்.

இக்காலத்திலும், இதற்குப் பிந்தைய காலத்திலும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் நடவடிக்கைகளில் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய உலகின் எல்லைகள் நிலைபெற்றவை அல்ல. தேசங்களைத் தாண்டி வாழ்வோர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதால் அதன் எல்லைகள் விரிந்து பரந்து கொண்டே இருக்கும். இச்செயல் இன்று வரையிலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது இராணுவ நடவடிக்கைகளால் நடைபெறுவதில்லை. அரசியல் ரீதியாக இஸ்லாம் நிறைவு பெற்றதுபோன்று தோன்றினாலும் அதன் எல்லைகள் வெளியே விரிந்து கொண்டுதானிருக்கும். இக்கொள்கை மதீனாவிலேயே வெளிப்பட்டாலும் 'உஹத்' போருக்குப் பின்னர்தான் வெளிப்படையாக நிரூபணமானது.

இக்கால கட்டத்தில் சிரியாவுக்குச் செல்லும் முக்கியமான வியாபாரப் பாதையும், மெசபடோமியா வழி சர்வதேசச் சந்தைகளுக்குச் செல்லும் பாதையும் மக்கா தேசக் குறை»களால் பயன்படுத்தப்படுவது அனுமதிக்கப்படவில்லை. இது பொருளாதாரரீதியாக அவர்களைப் பெருமளவு துன்புறுத்தியிருக்கும். இப்போதுதான் மதீனாவுக்கு எதிரான பிரச்சாரத்தை åதர்கள் செய்து கொண்டிருந்தனர். தங்களின் நண்பர்கள் மதீனாவால் தோற்கடிக்கப்பட்டதற்கும், மதீனாவிலிருந்து தாங்கள் விரட்டப்பட்டதற்கும் பழிதீர்க்க தீவிரப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருந்தனர். அதிக அளவில் போர்கள், ஆயத்தப் பயணங்கள் நிகழ்த்தப்பட்டதால் முஸ்லிம் படை நல்ல வலுவான நிலையிலிருந்தும். இறைத்தூதர்(ஸல்)  அவர்கள் இளைய தளபதிகளுக்குத்  தந்திரமான யுக்திகளைக் கையாள்வதிலும், தலைமையேற்பவர்கள் போர்த்திறனைப் பெறுவதிலுமான பயிற்சிகளை அளித்தார்கள். வில்வித்தையும், குதிரைப் பந்தயமும் ஊக்குவிக்கப்பட்டன. நபித்தோழர்களின் வட்டம் படையைக் கட்டுப்படுத்தவும் போர்க்களத்தில் கட்டளையிடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. நபித்தோழர்களின் உள்வட்டம்தான் சமுதாயத்தின் 'ஆட்சிக்குழு'; இறைத்தூதர்(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே அதிகாரப்பூர்வ நபர்கள்.

''பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதைப் பரப்பி விடுகிறார்கள். அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊம்த்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் 4:83)

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களோடு நீண்டகாலத் தொடர்பு கொண்டு நம்பகத்தன்மை, நியாயம், வள்ளல் தன்மை, அஞ்சாமை இவற்றைக் கொண்டிருந்த நம்பத் தகுந்த தோழர்களே தேசத்தின் அலுவல்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு நடத்திடும் தகுதியுடையவர்களாய் இருந்தார்கள்.

மதீனா தேசம் அதன் குடிமக்களின் விருப்பப்படியே உருவாக்கப் பட்டது. எழுதப்பட்ட அரசியல் சாசனச் சட்டம் இந்தத் தேசத்திற்கு வழங்கப்பட்டு அது அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தற்காப்புக்காகவும் ராஜதந்திர நோக்குடனும் பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மதீனாவின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயம் மற்றும் தேசத்துக்கான அனைத்து அம்சங்களையும் அது கொண்டிருந்தது. சமுதாயமும், தேசமும் புதிதாக இருந்தும் அவை அசலாகவே உருவாகியிருந்தன. அத்தேசம் பலம் வாய்ந்த ஒரு தேசத்தோடு போரிட்டுக் கொண்டிருந்தது. தேசத்தின் பலம் முழுமையான போரை ஆதரித்த சமுதாயத்தின் கட்டமைப்பில் இருந்தது. இரத்தந்தோய்ந்த நெடியதொரு போரைத் தாங்கி நின்ற சமுதாயம் நிச்சயமாகப் பலமான அஸ்திவாரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது பெரும் ஆராய்ச்சிக்குரியது. இன்றைய முஸ்லிம் சமுதாயம் அத்தகைய அடித்தளங்களை அறிந்து கொண்டு அவற்றைத் தன்னுள் மீண்டும் அமைத்துக் கொள்ளுமானால் உலகச் சமுதாயங்களின் பரஸ்பர நல்லுறவும்  மரியாதைக்குரிய நிலையும் தாமே வந்தடையும் என்பதில் ஐயமில்லை.

குறை»கள் 'பத்ரு' தோல்விக்கு உஹதில் பழி வாங்கிவிட்டதாகப் பிதற்றித் திரிந்தனர். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவுக்கு நேசமானவர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சந்தித்தார்கள். இதற்குப் பின்பும் ஓராண்டு முழுவதும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படை செயல்பட்ட விதம் அரபுப் பாலை நிலம் பூராவும் பாராட்டப்பட்டது. அவர்களின் படையினைச் சுற்றிலும் இறைவனின் உதவி இருப்பதை எதிரிகள் உணர்ந்தனர். எனவே அது தோற்கடிக்கப்பட முடியாததாகவும் கருதப்பட்டது.

மதீனா தேசம் உருவாக்கப்பட்டதாலும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களால் åதர்களுக்குச் சம அந்தஸ்து வழங்கப்பட்டதாலும் அதைப் பற்றிய செய்தி வர ஆரம்பித்தது. åதர்கள் செய்த கலகம் இன்னும் அவர்களை வெட்ட வெளிச்சமாக்கியது. மதீனாவில் அடைந்த தோல்வியின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய åதர்கள், கைபரின் åதர்கள் மூலம் பழிவாங்கத் துடித்தனர். 'உஹத்' போரின் முடிவும் அவர்களைச் சந்தோஷப்பட  வைத்தது. சிரியாவின் åதர்கள் இவர்களின் உறவினர்கள், அவர்களும் இந்த åதர்களை ஊக்குவித்து, உதவுவதாகவும் வாக்களித்தனர்.

'கைபர்' åதர்கள் மக்காவுக்குச் சென்று மீண்டும் மதீனாவைத் தாக்கத் தூண்டினர். அவர்கள் மக்காவுக்குத் தங்கள் முழு ஆதரவைத் தருவதாகவும் வாக்களித்தனர். அதோடு மதீனாவுக்கு உள்ளேயும் தேச விரோதப் பிரச்சாரத்துக்கு ஏற்பாடுகளைச் செய்தனர். அவ்வாறான பிரச்சாரத்துக்கு கஅப் இப்னு அல் அஷ்ரஃப் தேர்ந்தெடுக்கப் பட்டார். மதீனாவில் குடியிருந்த இவர் அதன் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டோரில் அடங்குவார். 'பத்ரு'ப் போர் நடந்தபோது இவர் முஸ்லிம்களின் விரோதியானார். வெற்றியடைந்த முஸ்லிம்களின் மத்தியில் அவருக்கு வாழப் பிடிக்கவில்லை. எனவே முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட மதீனாவை விட்டு வெளியேறி மக்காவுக்குச்  சென்றார். குறை»களைப் புகழ்ந்து கவிதைகள் புனைந்தார், 'உஹத்' போருக்குப்  பிறகு  இவர் மதீனா திரும்பினார்; அதிர்ஷ்டக் காற்று இஸ்லாத்திற்கு எதிராகத் திரும்பிவிட்டதாகவும் அன்ஸாரிகளின் விசுவாசத்தைக் குலைத்து விடலாம் என்றும் மனப்பால் குடித்தார். அவர் திரும்பியபோதுதான் åதர்கள் மக்காவுக்கு விஜயம் செய்தனர். அவர் மதீனா வந்ததும் பன} நதீரின் åதர்கள் கலகம் செய்யலாயினர். தோல்வியுற்ற அவர்கள் ஆயுதங்களைத் தவிர்த்து மற்ற உடைமைகளுடன் தேசத்தைத் துறந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். கவிஞர் கஅப்பின் அஷ்ரஃப் மரண தண்டனைக்கு ஆளானார். இஸ்லாமிய அரசுக்கு அதைத் தவிர வேறு  வழி இல்லை, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் அவர் மதீனாவின்  குடிமகனாம் விட்டார். மதீனாவை விட்டுச் சென்று எதிரிகளோடு வாழ்ந்து  தன் குடியுரிமையைத் துறந்து, தேசத்திற்கு துரோகம் செய்தார். மீண்டும் மதீனா திரும்பி அதன் எல்லை கட்குள்ளேயே வாழ்ந்து கொண்டு அதே செயல்களில் ஈடுபடலானார். ஏற்கனவே செய்த குற்றங்களோடு எதிரியின் ஒற்றனாகச் செயல்பட்டக் குற்றத்தையும் செய்தார். உளவு பார்ப்போர் சத்தமில்லாமல் தீர்த்துக் கட்டப்படுவர், அதற்கேற்ப அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே, எனவே தான் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு åதர்கள்கூட கண்¡ர் வடிக்கவில்லை.

அகழ் போர்

ஷவ்வால் மாதம் ஹிஜ்ரி 5ல் அகழ் போர் நிகழ்ந்தது. இந்தப் போர் ஒரு மாத காலம் நீடித்தது. குறை»களையும் மற்ற அரபுக்குடி மக்களையும் திரட்டி முழுப்பலத்தோடு மதீனாவைத் தாக்கும் முயற்சியில் åதர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்கள் படைகளைத் திரட்டுவதில் மட்டுமே வெற்றிபெற்றனர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாக அழித்திடும் அளவுக்கு ஒரு பெரும் படை திரட்டப்பட்டது. åதர்களான ஸலாம் இப்னு அபுல் ஹாகைக் அந் - நத்ரி, ஹுயாய் இப்னு அக்தாப் அந் - நத்ரி, கினானா இப்னு அபுல் ஹுகைக் அந் - நத்ரி, பன} அந் - நதிர், பன} அல் - வாயேல் இவர்களில் பலர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு மக்காக் குறை»களிடம் சென்று தங்களோடு சேர்ந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தாக்கி முஸ்லிம்களை அழித்து விடஅழைப்புவிடுத்தனர். அதன் காரணமாகப் பன்னிரண்டாயிரம் வீரர்களோடும், இரண்டாயிரத்து ஐநூறு ஒட்டகங்களோடும் மதீனாவை நோக்கி ஒரு பெரும் படை புறப்பட்டது. அவர்கள் ரூமா ஆற்றுப் படுகைகளில் முகாமிட்டனர். பன} கினானா, மற்றும் திஹாமாவின் மக்களும் உட்பட மொத்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அல் - ஜுருஃப் மற்றும் ஜுகாபாவுக்கு இடையே முகாமிலிருந்தனர். நஜ்திலிருந்து கத்ஃபான் கூட்டத்தாரும் வந்து தானாப் நக்மாவில் உஹதின் திசையை நோக்கி நிலை கொண்டிருந்தனர்.

உண்மையிலேயே படையெடுத்தவர்கள் åதர்கள்தான், அவர்களால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரைத் திரட்ட முடிந்தது. åதர்கள் தம் முழு அணியோடும் வந்திருந்ததால் அக்கூட்டணியின் பலம் 24000 வீரர்களாக உயர்ந்தது. பெரும் அணியைத் திரட்டி மதீனாவுக்கு வெளியே நிறுத்திவிட்டு åதத் தலைவர்கள் மதீனாவின் åதர்களிடம் வந்து தம் கூட்டணியில் இணையும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

''நான் உங்களிடம் அழிவில்லாத படையைக் கொண்டு வந்துள்ளேன். நாம் குறை»களின் தலைவர்களோடு வந்து படைகளை ரூமாவின் படுகைகள் சந்திக்கும் இடத்தில் நிறுத்தியுள்ளோம். முஹம்மத் அவர்களையும் அவர்களின் கூட்டத்தையும் அழித்தொழிக்கும் வரை நம்மை விட்டுப் பிரிய மாட்டோம் என குறை»கள் உறுதியளித்துள்ளார் கள்'' என ஹில்பாஸ் இப்னு அக்தாப் அந் - நத்ரி என்பவன் கஅப் இப்னு அஸதிடம் கூறினான்.

இதே åதன்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் மன்னிக்கப்பட்டு தன் கூட்டத்தோடும் உடைமைகளோடும் வெளியேறியவன்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இவர்கள் நெருங்கும் செய்தி எட்டியதும் 27,000 அடி நீளமுள்ள ஓர் அகழியை மதீனா மாநகரைச் சுற்றிலும் உருவாக்கினார்கள். மாநகரின் எஞ்சிய பகுதிகளில் வீடுகளும், தோட்டங்களும் அரணாக அமைந்தன. அவர்கள் மதீனாவை விட்டும் வெளியேறி அதன் பின்புள்ள 'ஸால்' எனும் குன்றுகளில் முகாமிட்டார்கள். இந்தப் போர் ஒரு முற்றுகையாக உருவெடுக்க அது ஒரு மாத காலம் நீடித்தது. அகழியைத் தாண்டும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. இரண்டு முறை சிலர் அகழியைக் கடக்க முயன்றபோது கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

முற்றுகையின்போது முஸ்லிம்களுக்குக் கஷ்ட காலமாக இருந்தது. வெளியே ஒரு பெரும்படை சூழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நாட்டுக்கு உள்ளிருந்தே åதர்கள் அமைதியைக் குலைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் åதர்களிடம் அனுப்பப்பட்டிருந்த மதீனாக் குழுவினரை நோக்கி, ''யார் அல்லாஹ்வின் தூதர்? முஹம்மதோடு எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை.'' என்று கூறி மதீனா ஒப்பந்தத்தின் விதிகளை மீறிவிட்டார்கள். இவர்களை தம் மூவாயிரம் வீரர்களுடன் அணுகுவது எதிரிகளை அணுகுவதைவிடவும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கடினமான இருந்தது. பாதுகாப்பைக் கண்காணிப்ப தோடு åதர்களின் துரோகத்தால் ஆபத்துக்குள்ளாகும் உள்நாட்டு நிலையையும் கவனிக்க வேண்டும். இராணுவத்திலிருந்து பலவீனர்கள் பொய்ச் சாக்குகள் கூறிப் போருக்குச் செல்வதைத் தவிர்க்க விரும்பினர். இதைத் திருக்குர்ஆனும் தெளிவு படுத்துகிறது. அப்போது அவர்களில் ஒரு பிரிவினர்.

''யஸ்ரிப்வாசிகளே! (மதீனாவாசிகளே!) இனி நீங்கள் தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இங்கு இல்லை. திரும்பிச் சென்றுவிடுங்கள்!'' என்று கூறினார்கள். மேலும், மற்றொரு பிரிவினர் ''எங்கள் வீடுகள் ஆபத்துக்குள்ளாம் இருக்கின்றன'' என்றனர். (அல்குர்ஆன் 33:13) என்று கூறி நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். உண்மையில் அவை ஆபத்துக் குள்ளாகவில்லை. நிலைமை என்னவென்றால் அவர்கள் (போர்க்களத்தைவிட்டு) ஓடிவிடவே விரும்பினார்கள்.

முஸ்லிம்களிடம் மனோதிடம் வலுவாக இருந்ததால் இறுதியாக எதிரிகள் முற்றுகையை விட்டுவிட்டு அவர்களின் பகுதிகளுக்குச் சென்றனர்.

அரபுகள் மற்றும் åதர்கள் ஆகிய இருவரின் கூட்டணியால்  முஸ்லிம்களை அழிக்கும் லட்சியம் நிறைவேறவில்லை. அந்தக் காலத்தில் அரபியாவில் குறை»கள்தான் மாபெரும் அரசியல் சக்தியாக விளங்கினர். 'கைபர்' åதர்கள் குறை»களுக்கு அடுத்ததாகச் செல்வச் செழிப்பில் இருந்தவர்கள். பன} கத்பானில் நிறைய கூட்டம் இருந்தது. அவர்களுக்கு பன} அஸ்ஜா, பன} சுலைம், பன} ஃபஸாரா, பன} ஸஅத் போன்ற வீரர்களைக் குவிக்கும் கூட்டமும்  இருந்தது. முஸ்லிம்கள் உண்மையிலேயே தளர்ந்துபோய் விட்டார்கள் என்று  திருமறை  கூறுகிறது. மேலும்  அவர்கள் அல்லாஹ்வைப் பற்றிப் பலவிதமான நினைப்பிலிருந்த  நேரத்தில் இறைநம்பிக்கையாளர்கள் நன்கு சோதிக்கப் பட்டார்கள். மேலும் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்.

''அவ்விடத்தில் இறைநம்பிக்கையாளர்கள் சோதனைக்குள்ளானதால் கடுமையாக அதிர்ச்சி அடைந்தார்கள். '' (அல்குர்ஆன் 33:11 )

ஆனால் அல்லாஹ்வின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை யால் நிலைத்திருந்தனர். அந்தப் பெருஞ்சோதனையிலும் முன்பைவிடப் பலமாகவும் தன்னம்பிக்கையோடும் அவர்கள் இருந்தார்கள்.

'ஹுதைபியா' அமைதி உடன்படிக்கை

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வெற்றி பெறுவது நோக்கமல்ல. மாறாக மனித குலத்துக்குச் சமாதானத்தையும் இறைச் செய்தியையும் - இஸ்லாத்தையும் போதிப்பதுதான், இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியத்தை அமைதியான சூழலில்தான் அடைய முடியும். போரிலோ, போரின் மூலமோ இக்குறிக்கோளை ஒருபோதும் அடைய முடியாது. எனவே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமைதிக்கான குறிக்கோளில் தீவிரமாக இறங்கினார்கள். இறைவனின் கட்டளைக்கு இணங்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களோடு 'உம்ரா' எனும் சிறியதொரு புனிதப் பயணம் செல்லப் போவதாக அறிவித்தார் கள். இப்புனிதப் பயணத்தை ஆயுதங்கள் ஏதும் இன்றியே மேற்கொண் டார்கள். வழக்கமான உறையிலிருக்கும் வாள் மட்டுமே அவர்களிட மிருந்தது. சதா அதை வைத்திருப்பது அரபுகளின் பழக்கம். எனவே ஆயுதம் தாங்கியவர்களாக வந்தார்கள் என்று இதைக் கூறமுடியாது.

இப்பயணம் பற்றிக் கூறும் அறிஞர் (புடரnn டுநைரவ புநநெசயட) க்ளப்

''Pநசாயிள ர்ரனயலடியை றயள pசநஅயவரசந''3

''ஒருவேளை 'ஹுதைபியா' உடன்படிக்கை முன்கூட்டியே தயாராயிருக்கலாம்''  என்கிறார்.

ஆனால்  இக்கருத்து தவறானது. அகழ்  போருக்கு  முன்பே இந்த 'உம்ரா' மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதை மன்னிப்புக்காகவோ, உடன்பாட்டுக்காகவோ எனக் கருதலாம். 'உம்ரா' பயணத்தை அமைதி தேடிய பயணம் என குறை»களோ, பிற அரபுகளோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் படைகள் இந்தப் போரில் வெற்றிக்களிப்போடு திரும்பின. இந்த வெற்றி, குறை»களுக்கு மட்டுமல்ல, அரபியாவின் பெரும் பகுதிக்கும் எதிரானதாகும். அப்படிப்பட்டச் சூழலில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் எந்தச் செயல்பாடும்அது நடந்தபடியே ஏற்றுக் கொள்ளப் படும். வெற்றிவாகை சூடிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரும்பியிருந் தால் படையெடுத்து வந்த ஒவ்வொரு அணியின் எல்லைகளுக்கு உள்ளும் படை நடத்திச் சென்று சிரமமின்றி அவற்றைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் வெற்றியும் இராஜ்யங்களைப் பிடிப்பதும் அவர்களின் குறிக்கோள் அல்ல. முற்றுகையிட்ட அஹ்ஸாபை வெற்றி கண்டு விட்டு, ஒட்டுமொத்த அரபியாவும் மரியாதைக்குரியதாகக் கருதிய இறையில்லத் திற்கு அமைதி நாடியவர்களாகப் புறப்பட்டுச் சென்றார்கள். ஹிஜாஸின் தூரம் அனைத்தையும் ஆயுதமின்றி 'இஹ்ராம்' அணிந்து கொண்டு செல்ல முழு மனித சமுதாயத்திலும் இறைவனின் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களால் மட்டுமே முடிந்தது. போர் வரலாற்றில் வெற்றி அடைந்த எந்தத் தளபதியும் போரைத் தொடர்வதற்கான பலம் இருக்கும் போது அமைதிச் சின்னத்தைத் தூக்கிப் பிடித்ததாகச் சரித்திரம் இல்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மட்டுமே இவ்வாறு செய்துள்ளார்கள்.

அவர்கள் மேற்கொண்ட இவ்வாறான நடவடிக்கைகள்தான் உண்மையிலேயே அவர் சமாதானத்தின் சின்னம் என்பதை நிரூபிக்கின்றன.

இப்புனிதப் பயணம் மேற்கொள்வதை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமதப்படுத்தி இருந்தால் அமைதியை ஒருபோதும் அடைய முடியாத சூழல் உருவாகியிருக்கும். ஏனெனில் 'ஹுதைபியா' வில் அமைதிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது åதர்களின் நடவடிக்கைகள் பாதகமான முறையில் அமைந்திருந்தன. இந்த உடன்படிக்கைக்குப்பின் சில நாட்களிலேயே åதர்கள் பைஜாந்தியர் களை அரபியாவின் மீது படையெடுக்கத் தூண்டினர். இதேபோன்று அவர்கள் ஈரானின் அரசையும் படை எடுக்கத் தூண்டினர். 'ஹுதைபி'யா அமைதி உடன்படிக்கை மட்டும் செயல்படுத்தப் பட்டிருக்காவிட்டால் நிச்சயமாக குறை»களும் சேர்ந்து ரோமர்களையும் ஈரானியர்களையும் படையெடுக்க அழைத்திருப்பார்கள். அது நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கியிருக்கும். அரபியாவுக்கு உள்ளேயே போர் நீண்டகாலம் நிகழ்ந்திருக்கும். அரபியத் தீபகற்பத்தில் பைஜாந்தியர்கள் நிலை கொண்டு விட்டால் அவர்களை அசைப்பதே கஷ்டமாம் விடும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் அமைதி முயற்சியைத் தள்ளிப் போட்டிருந்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்கும். உம்ராவுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நேரம் மிகவும் பொருத்தமான தாகும். நிலைமையை உணர்ந்து எடுத்த முடிவாகும். 'ஹுதைபியா' பேச்சுவார்த்தையின்போது மக்கா தேசத்துக் குறை»கள் போர் நிறுத்தம் என்ற முடிவுக்கே வருவதாக இல்லை. அப்படி அவர்கள் செய்வதால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கும் அவர்களின் நோக்கத்துக்கு அது முட்டுக்கட்டையாகிவிடும். மக்கத்துக் குறை»கள் தங்களின் பழைய நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாகத்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்கள்.

'ஹுதைபியா' சந்திப்பில் நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றியும் அமைதி உடன்படிக்கையின் தீர்மானங்கள் பற்றியும் கூறுவது அவசியம். இந்தச் சந்திப்பிற்கு ஓரிரு தினங்கள் முன்பு முஸ்லிம்களின் முகாமுக்கு ஒரு செய்தி வந்தது. தாங்கள் போர் நடத்துவதற்காக வரவில்லை; 'உம்ரா' செய்யவே வந்துள்ளோம் எனும் செய்தியை குறை»களுக்குத் தெரிவிப்பதற்காக மக்காவுக்கு அனுப்பப்பட்ட முஸ்லிம் பிரதிநிதி உஸ்மான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் எனும் அதிர்ச்சி தரும் தகவலே அது.

ஒரு நாட்டின் தூதரை இன்னொரு நாடு கொல்வது போர் அறிவுப்புக்குச் சமம் என முஸ்லிம்கள் கருதினார்கள். எனவே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் தோழர்களைத் திரட்டி உஸ்மான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அடுத்து வரும் போரில் மரணிக்கும் வரை ஆயுதமின்றியே போராடுவது என்று உறுதி பூண்டார்கள். ஆனால் உஸ்மான்(ரலி) அவர்கள் திரும்பியதும் அது வதந்தி என்ற உண்மை விளங்கியது, நிலைமையும் சீரானது; பதற்றம் நீங்கியது.

மக்காவின் தூதுக்குழு சுஹைல் என்பவரின் தலைமையில் வந்த போது இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அன்போடு அவர்களை வரவேற்றார்கள். சுஹைல் அப்போது மனம் திறந்து பேசும் நிலையில் இல்லை. 'பத்ரு'ப் போரின்போது போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டு பிணைத்தொகை கட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர். எனவே அவரை அந்த எண்ணம் சூழ்ந்திருந்தது.

பேச்சுவார்த்தையில் மதீனாவுக்கும் மக்காவுக்கும் இடையே பத்து வருட காலத்துக்கான அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் பட்டது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் உடன்படிக்கையின் விவரத்தைக் கூற அலி(ரலி) அவர்கள் எழுதிக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பாணியில் 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...' என்று தொடங்கினார்கள். அப்போது சுஹைல் அதற்கு மறுப்புத் தெரிவித்து, ''அல்லாஹ்வே! உன் பெயரால்...'' என்று எழுதுமாறு கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவர் கூறியவாறே எழுதும்படி அலி(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தொடர்ந்து... ''எழுதுங்கள்! இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் அவர்கள் சுஹைல் இப்னு அமீரோடு ஒப்பந்தம் செய்து கொண்டது'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட சுஹைல், உடனடியாக மறுத்து. ''தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நான் கண்டிருந்தால் உங்களுக்கெதிராகப் போரிட்டிருக்க மாட்டேன். நீங்கள் உங்கள் பெயரையும் உங்கள் தந்தை பெயரையும் எழுதுங்கள்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அதற்கும் சம்மதித்தார்கள். அதற்குப்பின்பு போர் நிறுத்தத்தின் நிபந்தனைகள் கூறப்பட்டன. அப்போது நிகழ்ந்த சம்பவங்களையும் உடன்படிக்கைகளையும் இப்னு ஹிஷாம் உள்பட பல வரலாற்று நூல்கள் தெளிவாகவே பதிவு செய்துள்ளன. அவை வருமாறு,

பிரிவு 1

''பத்தாண்டுகளுக்குப் போர் நிறுத்தி வைக்கப்படுகிறது.''

இந்த நிபந்தனை இரண்டு தரப்பினருக்குமே பெரும் சாதகமாக அமைந்தது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உயரிய நோக்கத்தோடு இது ஒத்துப்போனது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் போரை விரும்பவில்லை. உண்மையில் போர் அவர்களின் இலட்சியத்திற்குக் குறுக்கீடாகவும் இஸ்லாத்திற்கு எதிராகவும் அவர்களின் பண்பிற்கு முரணாகவும் இருந்து வந்தது என்பதை ஒப்பந்தத்தின் இப்பிரிவு தெரிவிக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களின் வணிக நடவடிக்கை களைப் புதுப்பிக்கலாம் என்று மக்காவாசிகள் இப்பிரிவின் மூலம் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் வியாபாரம் செய்யும் மக்கள். உலகின் வணிக மையங்களுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் இன்றுவரை மூடப்பட்டிருந்தன. இதனால் அவர்களுக்குப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. ஒரு தடவை இழந்த சந்தையை மீண்டும் கைப்பற்றுவது எளிதல்ல.

இஸ்லாத்தை வேரோடு அழிக்க வேண்டுமென்பதில் அவர்கள் சிறிதளவும் மாற்றுக் கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம்கள் அமைதியான முறையில் மக்காவுக்கு வந்து 'உம்ரா' செய்வதை எதிர்த்தனர். போர் நிறுத்தத்துக்கு உடன்படுவதில் காலதாமதம் செய்தார்கள். இந்த அமைதி நிரந்தரமானதல்ல. இஸ்லாத்தைக் கூண்டோடு அழிக்க வேண்டுமென்ற அவர்களின் நோக்கம் நிறைவேறாமலே இருந்தது; நிரந்தரமாக இஸ்லாத்தோடு அமைதியாக வாழ அவர்கள் ஒருபோதும் தயாராகவில்லை. தங்களின் வியாபார நடவடிக்கைகள், நல்லபடியாக நடந்துவிட்டால் பலம் பெற்றுவிடலாம்; பின்னர் 'கைபர்' åதர்களையும் தங்களுக்கு நேசமானவர்களையும் சேர்த்துக் கொண்டு இஸ்லாத்தை ஒழித்து விடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள்.

கீழைநாட்டவர்கள் முஸ்லிம்களின் கோணத்திலிருந்து இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வில்லை. உதாரணமாக, வில்லியம் முயீர் கூறுகிறார்.

ஹஹஐn வசரவாஇ ய பசநயவ ளவநி hயன டிநநn பயiநென டில ஆராயஅஅயன (ளுயுறு) ர்ளை pழடவைiஉயட ளவயவரளஇ யள நஙரயட யனெ iனெநிநனெநவெ Pழறநசஇ றயள யஉமழெறடநனபநன டில வாந வசநயவலஹஹ

''உண்மையில் முஹம்மத்(ஸல்)  அவர்களால் ஒரு சாதனையை நிகழ்த்த முடிந்தது. அவரின் அரசியல் அந்தஸ்து மற்றும் தன்னிச்சையான அதிகாரம் இந்த 'ஹுதைபியா' உடன்படிக்கையால் அங்கீகரிக்கப்பட்டது.''4

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் அந்தஸ்தும், அதிகார மும் மக்காவின் அங்கீகாரத்தைச் சார்ந்திருக்கும் விஷயங்கள் அல்ல. அவருக்கு அல்லாஹ்வால் தூதுத்துவம் வழங்கப்பட்டது. அவரை ஏற்றுக் கொண்டோர் குறை»கள் தரும் அங்கீகாரத்துக்குக் காத்திருக்க வில்லை. மதீனாவின் மன்னராகவுள்ள அவருடைய அந்தஸ்தும் அதிகார மும் அவர்களின் அரசியல், இராணுவ வெற்றிகளைச் சார்ந்துதான் அமைந்ததேயன்றி மக்காவைச் சார்ந்து அமையவில்லை. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே மக்காவாசிகள் ஐந்து முறை மதீனாவின் மீது படையெடுத்துச் சென்றிருந்தார்கள். மக்காவாசிகள் மதீனாவின் சுதந்திரத்தை அங்கீகரித்து அதை ஒரு தேசமாக ஏற்றுக்கொண்டிருக்கா விட்டால் அதன் மீது படையெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக் காது. இந்த ஒப்பந்தத்தின் மூலம்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அரசியல் அங்கீகாரம் பெற்றார்கள் என்பது அர்த்தமற்றது. வேறு பல கூட்டங்களோடும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடன்படிக்கைகள் செய்துள்ளார்கள். மதீனாவுக்கு சுதந்திர அந்தஸ்து இல்லையென்றால் இந்தச் சர்வதேச வியாபாரப் பாதையில் வாழும் மக்கள் எல்லாம் உடன்படிக்கையில் பங்கெடுத்திருக்கமாட்டார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்கப் 'பத்ரு'ப் போரில் போர்க் கைதியாகிய மக்காவின் தூதர் சுஹைலுக்கும் மதீனாவின் அதிபர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் இடையே பேச்சு நடந்தது குறிப்பிடத்தக்கது. தோல்வியின் நினைவலைகள் சுஹைலின் மன நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருந்தன. பத்தாண்டுகள் தன் நாட்டு மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அழிக்கப் போரிடாமல் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பது அவருக்கு மனச்சோர்வை அளித்துக் கொண்டிருந்தது. எனவே அவர் இவ்வொப்பந்தத்தின்போது அதிகம் பேசாது மௌனம் காத்தார்.

பிரிவு 2

''முஹம்மத்(ஸல்) அவர்களோடு ஒப்பந்த உறவுகளை வைத்துக் கொள்ள விரும்புவோர் அவ்வாறு செய்து கொள்ளலாம். அதுபோன்றே குறை» களோடு அப்படிப்பட்ட உறவுகளை வைத்துக்கொள்ள விரும்புவோர் அவ்வாறு செய்து கொள்ளலாம். இதற்கு முழுச் சுதந்திரம் உண்டு.''

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரிவு முழு அரபியாவுக்கும் அமைதியைப் பரப்பும் விதமாக இருக்கிறது. உலக விவகாரங்களில் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் அரபிய உபகண்டத்தின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிய பிரிவாகும் இது. அரபியாவில் இரு முகாம்களை இது உருவாக்கியது. அமைதியாகச் சேர்ந்து வாழ விரும்பியவர்களை மதீனா நேசத்தோடு வரவழைக்கும், மக்காவோடு இருக்க விரும்புவோரும் அவ்வாறே செய்து கொள்ளலாம். ஆனால் இரண்டு முகாம்களைச் சார்ந்தவர்களும் இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். 'ஹுதைபியா' அமைதி உடன்படிக்கையில் அணி சேர்வது முந்தைய ஒப்பந்தங்களின் கருத்துக்களைச் செல்லாததாக்கி விட்டது. ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெரும் சக்திகளான மக்காவுடனும், மதீனாவுடனும்  இணைய விரும்புவோர் தம் முடிவை அறிவிக்க வேண்டும். அதனால் அவர்கள் அந்த ஒப்பந்தத்தின் பலனை அடைந்து கொள்ளலாம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அரபியாவில் அமைதி மேலோங்கவே விரும்பினார்கள். இந்தப் பிரிவின் மூலம் வேறு கூட்டத்தாரையும் கவர்ந்து வியாபாரம் மூலம் அவர்கள் பலன் பெற வழி செய்யப்பட்டது. மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே பகைமை உருவானதிலிருந்து மக்காவுக்கும் உலக வர்த்தக மையங்களுக்கும் இடையிலான வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 'பத்ரு'க்குத் தெற்கே வாழ்ந்த மக்காவின் கூட்டாளிகளால் மதீனாவால் விதிக்கப் பட்ட இத்தடையை மீற முடியவில்லை. இப்பிரிவு அமைதிக்கு ஒத்துழைப்போர்களுக்குத் தங்கள் வியாபாரத்தைத் தொடங்க அனுமதியளித்தது. தங்களின் வணிக நடவடிக்கைகள் பாதிப்பிற்குள்ளா காமல் இருந்திருந்தால் மக்கா ஒருபோதும் அமைதி உடன்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்காது. மக்காவின் கிட்டங்கிகளில் பொருட்கள், பல காலமாகத் தேங்கி நாசமாகிப் போவதாக அவர்களுக்கு மத்தியில் ஓர் உணர்வு பரவ ஆரம்பித்தது. எனவே தான் அவர்கள் அமைதி உடன்பாட்டை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

பிரிவு 3

''ஒரு நபர் அவரின் பொறுப்பாளருடைய அனுமதியின்றி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்வாரானால் அவர் தன் பொறுப் பாளரிடமே திருப்பி அனுப்பப்படுவார். ஆனால் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர் எவரேனும் குறை»களிடம் சென்றுவிட்டால் அவர் (மதீனாவிற்குத்) திருப்பி அனுப்பப்படமாட்டார்.''

இப்பிரிவு பெரும் விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. இந்தப் பிரிவு முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாக நபித்தோழர்கள் எண்ணினார்கள். ஆனால் மக்காவின் தூதுக் குழுவோ இப்பிரிவு அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இளைஞர்கள் மொத்தமாக மதீனாவுக்குச் சென்று விடுவார்களோ என மக்காக் குறை»கள் அஞ்சினார்கள். வேகமுள்ள எளிய பகுத்தறிவுத் தத்துவமான இஸ்லாம் இளைஞர்களைக் கவர்ந்தது. இளமைத் துடிப்பும் ஆரோக்கியமும் உள்ள ஒரு சமுதாயம் குறுகிய காலத்திலேயே அதிகமான சாதனைகளைப் புரிந்துவிட்டது. இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவதற்காக அது காத்துக் கொண்டுள்ளது.

உலக அரங்கில் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்குவதை விரும்பாதவர்கள் பாரபட்சமான இந்த அணுகுமுறையை எடுத்து வைத்தார்கள். ஆனாலும் இப்பிரிவு தகுந்த காரணங்களோடே ஏற்றுக் கொள்ளப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் தாமாக முன்வந்தே இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். அவர்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சியவர்களாகவும் இருந்தனர். எந்த முஸ்லிமும் மக்காவுக்குச் செல்வதற்கான வாய்ப்பில்லை. அப்படி எவரேனும் ஓரிருவர் இஸ்லாத்தைத் துறந்து மக்கா சென்றால் அவர்களைத் திரும்ப அழைப்பதில் அர்த்தமில்லை. தன் வாழ்வையும். ஆன்மாவையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுவதே இஸ்லாத்தில் இணைதல் எனப்படும். இறைவனுக்கு மட்டும் கட்டுப்பட்டப் பின்பு அது மறுயோசனைக்கு உரியதே அல்ல. மேலும் ஒரு முஸ்லிம், தான் அல்லாஹ்வின் படைவீரன் என்பதை அறிவான். ''போர் அவன் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.'' உறுதிமொழி எடுத்துக் கொண்ட வீரன் ஒருவன் தன் தோழர்களைப் போர்க் களத்தில் விட்டுவிட்டு ஏமாற்றிச் சென்றால் அவனுக்கு மரணதண்டனையே பொருத்தமானது. மரண தண்டனைக்குரியவன் திரும்பவும் வரவேற்கப்பட வேண்டும் என எண்ணத் தேவையில்லை.

மக்காவின் தூதுவர் சுஹைல் இப்பிரிவைப் புகுத்த வலியுறுத்திய தற்குக் காரணமிருந்தது. அவரின் ஒரு மகன் மக்காவின் படையிலிருந்து சரயா ரஃபீக்கின் போது ஓடிவிட்டார். முஸ்லிம்களிடம் மற்றொரு மகனும் ஓடும் தருணத்திலிருந்தபோதே 'ஹுதைபியா' உடன்படிக்கை நடந்து கொண்டிருந்தது. இங்கு வருவதற்கு முன்புதான் சுஹைல் தன் மகனான அபூஜன்தலைச் சிறையிலிட்டு வந்திருக்கிறார். அவர் அப்படிச் செய்யவில்லையெனில் அவரும் முஸ்லிம்களோடு இணைந்து விடுவார். 'ஹுதைபியா' உடன்படிக்கை நடந்து கொண்டிருக்கும்போது அபூஜன்தல் தன் கையில் கட்டப்பட்டிருந்த விலங்குகளை உடைத்துக் கொண்டு அவ்விடத்திற்கு வந்தார். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர் களிடம் தனக்கும் பாதுகாப்புக் கோரினார். அப்பொழுதுதான் ஒப்பந்தம் கையெழுத்தாம் இருந்தது. எனவே இப்பிரிவின் அடிப்படையில் சுஹைல் தன் மகனைத் திருப்பியனுப்பக் கோரினார். அதை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ''அபூ ஜன்தலே! பொறுமையாயிருங்கள்! அல்லாஹ் உங்களுக்கும் உதவி தேவையானோர்க்கும் விரைவில் நிவாரணம் அளிப்பான்; தப்பிக்க வழி காண்பிப்பான்'' என்று கூறினார்கள்.

இதனடிப்படையில் மக்காவைவிட்டு மதீனாவுக்கு வந்தவர்கள் அவர்களின் பாதுகாவலர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மக்காவில் தங்கள் பாதுகாவலர்களின் அரவணைப் பில் எளிதாக இருந்துவிடவில்லை; அவர்கள் மக்காவை விட்டும் தப்பித்து வெளிவந்தார்கள்; அவர்கள் வணிக ஒட்டகங்கள் செல்லும் பாதையிலுள்ள குன்றுகளில் தங்கி விட்டார்கள்; குறை»கள் வியாபாரத்துக்குச் செல்லும்போது அவர்களுக்குப் பெரும் தொல்லை யாக இருந்தனர். இதைத் தாங்க முடியாத குறை»கள் மதீனா சென்று இப்பிரிவை நீக்கிவிடும்படி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். மக்காவின் வியாபாரக் கூட்டத்திற்குத் தொல்லை தந்து கொண்டிருந்த அந்த இளைஞர் கூட்டம் மதீனாவுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்று அமைதியான சூழலில் வாழ்ந்தனர்.

பிரிவு 4

''இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இவ்வருடம் மக்கா மாநகருக்குள் நுழையமாட்டார்கள். அடுத்த ஆண்டு மக்காவுக்கு வரலாம். அப்போது அவர்களும், அவர்களின் தோழர்களும் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள். அப்போது மக்காவாசிகள் நகரை விட்டும் வெளியேற வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு வரக்கூடிய ஒவ்வொருவரும் உறைவாளைத் தவிர எந்த ஓர் ஆயுதமுமின்றியே மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.''

முஸ்லிம்கள் 'உம்ரா' செய்வதற்காக மக்காவிற்குள் நுழையும்போது மக்காவாசிகள் வெளியேறிட வேண்டும் என்பது அவர்களின் நிபந்தனை. முஸ்லிம்களின் நிபந்தனை அல்ல. ஏனென்றால் தங்களின் இளைஞர்களும், மக்களும் முஸ்லிம்களின் நடவடிக்கைகளைக் கண்டு இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது. அரபு தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு கூட்டத்தினரிடையே தங்களின் உயர்வை நிலை நாட்ட வேண்டும் என்றும் குறை»கள் எண்ணியதால் இப்பிரிவைச் சேர்த்து முஸ்லிம்களை 'உம்ரா' செய்யவிடாது மதீனாவிற்குத் திருப்பி அனுப்பினார்கள். அது மட்டுமல்லாது அவர்கள் இப்பிரிவைச் சேர்த்ததற்கு இரண்டுகாரணங்களும் உள்ளன. ஒன்று முஸ்லிம்கள் இப்போதே  மக்கா நகருக்குள் பிரவேசித்தால் குறை»களின் பலம் அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவர்கள் பல போர்களை நடத்தியதாலும், அவர்களின் வணிகம் பாதிக்கப்பட்டிருந்த தாலும்  ஏற்பட்டுள்ள பலஹீனம் மதீனாவாசிகளுக்குத் தெரிந்து விடும். அதை அவர்கள் கேவலமாக எண்ணினர். எனவே அவர்கள் அதைக் காண்பித்துக் கொள்ள விரும்பவில்லை. அது மட்டுமல்லாது அரபியா விலேயே மக்காதான் உயர்வுக்குரியது என்ற எண்ணமும் அவர்களிடம் குடி கொண்டிருந்தது.

மற்றொரு காரணம் 'ஹுதைபியா' உடன்படிக்கை இப்போதுதான் கையெழுத்தாம்யுள்ளது. எனவே ஒப்பந்தப்படி முஸ்லிம்கள் வணிகப் பாதையில் எவ்விதத் தடையும் ஏற்படுத்தமாட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டப் பின்னரே அவர்களை 'உம்ரா' செய்வதற்கு மக்காவில் அனுமதிக்க  வேண்டும் என முடிவு செய்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் குறை»களின் வணிக ஒட்டகங்களை பத்ரின் சுற்றுப்புறங்களிலிருந்து அரபியாவின் எல்லை வரைக்கும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பகுதிகள் மதீனாவின் எல்லைக்குட் பட்டு இருந்தது என்பது தெரிய வருகிறது.

மதீனாவின் தெற்குப் பகுதியில் வணிகக் கூட்டத்தை நடத்திச் செல்வது குறை»களின் பொறுப்பாகும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. விரக்தியுற்ற மக்காவின் இளைஞர்களால் மக்காவாசிகளுக்கு ஏற்படும் கிளர்ச்சியைக் கண்காணிப்பது மதீனாவின் பொறுப்பாகாது. அது மக்காவின் பொறுப்பாகும்; என்றும் முடிவு செய்யப்பட்டது.

குறை»கள் ஆரம்பத்திலிருந்தே அத்துமீறிக் கொண்டிருந்தார்கள். இருந்தபோதிலும் அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அமைதியை எல்லா நேரங்களிலும் விரும்ப வேண்டும் என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் உலகிற்கு ஓர் உதாரணத்தை வகுத்து அளித்துவிட்டார்கள். இச்சட்டங்கள் தான் உலக அழிவு நாள்வரை பின்பற்றப்பட வேண்டும் என்று இறைவன் தீர்மானித்து விட்டான். அதனை ''அவர்கள் சமாதானத்தின் பால் சாய்ந்து(இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பால் சாய்வீராக! எனும் அல்குர்ஆனின் 8:61 வசனம் தெளிவுபடுத்துகிறது.

மேலும் இந்த இறைக்கட்டளை எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக் கூடியது. எனவே இறைமறுப்பாளர்கள் போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் அமைதி ஏற்படுத்த முன் வருவார்களானால், முஸ்லிம்கள் அதை ஏற்று அமைதி ஏற்படுத்தியே ஆக வேண்டும்.

''அவர்கள் உகிமை ஏமாற்ற நினைத்தால் அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். தன் உதவியினாலும் இறைநம்பிக்கை யாளர் மூலமாகவும் உமக்கு வலு¥ட்டியவனும் அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களுக்கிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும் அல்லாஹ் தான், அவர்களின் உள்ளங்களைப்  பிணைத்தான்.'' (அல்குர்ஆன்8:62,63)

இதற்குச் சிறிதளவும் மாற்றமாக முஸ்லிம்கள் செயல்பட முற்பட்டால் இறைவனின் சட்டத்திலும், இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் தூதுத்துவத்திலும் நம்பிக்கை இழந்தோராம் விடுவார்கள்.

போர் வரலாற்றில்   'ஹுதைபியா'   உடன்படிக்கை முக்கியமான நிகழ்வாகும். வருங்காலத்தில் முஸ்லிம் தேசங்களின் வெளிவிவகாரக் கொள்கைகளை இயற்றுவோருக்கும் வருங்காலத்   தளபதிகளுக்கும் இது ஒரு கலங்கரை விளக்கம். அல்லாஹ் இந்த அமைதி உடன்படிக்கையை மாபெரும் வெற்றி என்றழைத்தான்.

''(நபியே!) உமக்கு நாம் பகிரங்கமான (மகத்தான) வெற்றியை அளித்திருக்கிறோம்.'' (அல்குர்ஆன் 48:1)

இதை இறைவன் வெற்றி என்றழைத்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. உண்மை என்றும் தோல்வியடைவதில்லை. பொய் மேலோங்குவது போன்று ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால் ஒரு நாள் அழிந்தே தீரும். திருமறையின் தீர்ப்பும் அதுதான்.

''சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்து போகக் கூடியதே.'' (அல்குர்ஆன் 17:81)

குறை»களின் அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அமைதியை ஏற்றுக் கொண்ட தனால் தன் இலட்சியத்தை அடைவதில் உலக வரலாற்றில் அனை வரையும் விட ஒருபடி முன்னேறியுள்ளார்கள். இஸ்லாத்தின் சமாதானச் செய்தியைத் தம்மைப் பின்பற்றுவோருக்கு மட்டுமல்லாது எதிரிகளுக்கும், முழு மனித சமுதாயத்திற்கும் சொல்வதில் சாதனை புரிந்து விட்டார்கள்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இந்தப்பிரிவை ஏற்றுக் கொண்டதால் உடன்படிக்கை நிறைவேறியது. அவர்கள் ஏற்க மறுத்திருப்பின் நிறைவேற்றப்படாமலும் போய் இருக்கலாம். ஆனால் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதால் முஸ்லிம்களுக்கு எவ்விதக் கெடுதியுமில்லை. ஏனெனில் மக்காவாசிகள் மதீனாவிற்கும், மதீனா வாசிகள் மக்காவிற்கும் அச்சமின்றி வந்து போவதால் இஸ்லாத்தைப் பற்றி மக்காவாசிகள் கொண்டுள்ள தவறான எண்ணங்கள் மாற்றப் படலாம். இதன்  அடிப்படையிலேயே இஸ்லாத்தில் பலரும் இணைந்தனர்;  வெறுமனே இஸ்லாத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு அதில் இணையாமல் யாருமில்லை. அந்த இரண்டாண்டுகளிலேயே முன்பு இஸ்லாத்திருந்தவர்களைப் போன்று இரு மடங்குக்கும் அதிகமான மக்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். எனவேதான் வரலாற்று ஆசிரியர்களும் ''இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முந்தையப் போர்களில் கிடைத்த வெற்றிகளை எல்லாம்விட இது மாபெரும் வெற்றி'' என்று குறிப்பிடுகிறார்கள்.

இறைநம்பிக்கையாளர்களுக்கு இந்த அமைதி உடன்படிக்கை புதிய வாய்ப்புகளைத் தந்தது. சாந்திக்கு வழியான - இஸ்லாத்தின் - செய்தியை அவர்களால் உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல  முடிந்தது. ஒரு புறம் அமைதி நிலவுவதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் அண்டை தேசங்களின் ஆட்சியாளர்களுக்கு இறைமார்க்கமான இஸ்லாத்தின் சகோதரத்துவத்தில் இணையும்படி அழைப்பு விடுத்துக் கடிதங்கள் எழுத முடிந்தது.

'ஹுதைபியா'விலிருந்து  திரும்பிய  இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)  அவர்கள்  மதீனாவில் சில வாரங்கள் தங்கி ஓய்வெடுத்தார்கள். 'ஹுதைபிய்யா'வில் தம்மோடிருந்தவர்களை அணி வகுத்து வரும்படி அறிவித்தார்கள். ஆனால் தாங்கள் சேருமிடம் எதுவென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கவில்லை. மதீனாவுக்கு வடக்கில் மக்காவாசி களோடு இணைந்து மதீனாவின் மீது போர் தொடர்ந்த பன} சுலைம், பன} கத்ஃபான் மற்றும் 'கைபர்' åதர்கள் ஆகிய சில கூட்டத்தினர் இருந்தனர். இப்போதும் பகைமையைத் தொடர்வதற்கே அவர்கள் விரும்பினார்கள். பன} கத்ஃபான் ஓராயிரம் வீரர்களை 'கைபர்' பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'ஹுதைபியா'வின் அமைதி உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளச் சில வாரங்கள் கால அவகாசம் கொடுத்தார்கள். 'ஹுதைபியா' உடன்படிக்கை பிரிவு 2ன்படி அவர்கள் தங்களை மக்காவின் நேசமானவர்கள் என்று அறிவித்தாலும் மதீனாவின் வேண்டுதலை ஏற்று அமைதிக்கு உட்பட்டதாகவே கருதப்படும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தயாராக இல்லை. மாறாக மதீனாவுடன் போரைத் தொடர்ந்து நடத்தவே விரும்பினார்கள். வலுவானதொரு படையைத் தயாராக வைத்துக் கொண்டு அடுத்த போருக்கான நேரத்தையும், இடத்தையும் அவர்கள் குறித்தார்கள். இதன் காரணமாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வடதிசையில் தங்கள் படையை நடத்திச் சென்றார்கள். மதீனா படை சென்ற அந்த இடம் கைபருக்கும் பன} கத்ஃபானின் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்லும் திசையாகும். மதீனா படை இந்தப் பகுதியில் வந்ததனால் பன} கத்ஃபான் கைபரின் åதர்களைத்  தங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாமற்போனது.

பன} கத்ஃபான் கைபருக்குச் செல்வதை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்களோ என்று பயந்தார்கள். மதீனாப் படைகள் தங்களின் மேய்ச்சல் நிலங்களை ஆக்ரமித்து ஆடுகளையும், ஒட்டகங்களையும் பிடித்து விடுவார்கள் என்று எண்ணித் தங்கள் மேய்ச்சல் நிலங்களுக்கே திரும்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு திட்டமிட்டுச் செயல்படாதிருந்தால் பன} கத்ஃபானின் ஐயாயிரம் வீரர்களை கைபரின் ஆயுத பலங்கொண்ட பத்தாயிரம் வீரர்களுடன் சேர்த்து மிக்க பலம் பெற்றிருப்பார்கள். மிகவும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் அது தவிர்க்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக எதிர்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் போர் இரண்டு மாதங்கள் நீடித்தது. 'கைபர்' பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் பன்னிரண்டுக் கோட்டைகளும் ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் துரோகம் செய்யாமலிருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் முறைப்படி வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.

மதீனாவின் åதர்கள் பலர் கைபருக்கு வந்து அங்கேயே குடியேறினர். சிலர் சிரியாவுக்குச் சென்றனர். இறைத்தூதர்(ஸல்) அவர் களின் தலைமையில் அரபியா ஒன்றுபடுவதை åதர்கள் விரும்பவில்லை.

'முஅத்தா' போர்

ரோமானியப் பேரரசர் ஈரானியர்கள் மீதான தன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஜெருசலம் வந்திருந்தார். மதீனாவிலிருந்து வந்த åதர்கள் தந்த செய்திகள் அவரைச் சஞ்சலப்பட வைத்தன. அதே நேரத்தில் இஸ்லாத்தைத் தழுவதற்கென இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பியிருந்த அழைப்புக் கடிதமும் அந்த அரசரின் கைக்குக் கிடைத்திருந்து. இவை எல்லாம் கண்ட அவருக்குள் பல கேள்விகள் எழுந்தன. அரபியாவில் என்னதான் நிகழ்கிறது என்பதைத் தான் அறிந்து கொள்வதற்காக அரபு வியாபாரி ஒருவரை அழைத்து வர ஆணை பிறப்பித்தார். அப்போது தற்செயலாக சிரியாவுடன் மக்காவாசிகள் வியாபாரம் செய்ய வந்திருந்தனர். அந்த வியாபாரக் கூட்டத்துடன் அபூசுஃயான் பாலஸ்தீனில் இருந்தார்.

பேரரசரால் அனுப்பப்பட்ட காவல் படை தங்களிடம் வந்ததைப் பற்றி அபூசுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் காஸாவில் இருந்தோம். காவலாளர்களின் தலைவர் எங்களிடம் வந்து நீங்கள் ஹிஜாஸில் உள்ள முஹம்மத் எனும் அந்த நபரைச் சார்ந்த மக்களா என்று கேட்டதற்கு, நாங்கள் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைத் தெரிந்தவர்கள் என்று கூறியதும், எங்களை அரசரிடம் வருமாறு அழைத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் குலத்தவரா நீங்கள் என்று நாங்கள்    கேட்கப்பட்டோம் 'அவர் குலத்தைச் சார்ந்தவன்' என்று நான் கூறினேன்.

அரபு மற்றும் åதப் படைகளின் கூட்டணியால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைத் தோற்கடிக்க முடியாமற்போன உண்மையை மன்னர் உணரத் தவறவில்லை. ஒரு சிறந்த தளபதியின் கீழ் ஒன்றுபட்ட அரபியா எவ்வளவு பலமாக இருக்குமென்பதைப் புரிந்து கொண்டார். ஈரானிய சாம்ராஜ்யத்தை வெற்றி கொண்ட தனக்கே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போதித்துக் கொண்டிருக்கும் மார்க்கத்தில் இணைய அவர்கள் அழைப்பு விடுத்ததைப் பற்றி யோசித்தார். உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கருதிய ரோமானியப் பேரரசர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை எதிர்த்து தன் சகோதரர் தலைமையில் இரண்டு இலட்சம் பேர் கொண்ட படையை அரபியாவுக்கு அனுப்பினார்.

எல்லைகளில் வாழ்ந்த கூட்டத்தினர் சற்றுக் கிளர்ச்சி செய்தாலும் அவர்கள் சுலபமாக அடக்கப்பட்டனர். ஆனால் இப்போதோ ரோமானியர்களின் பெரும்படை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி வருகிறது. அப்படை முன் அறிவிப்பு ஏதும் செய்துவிட்டு வரவில்லை. ஆனால் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விழிப்பான தன்மையால் ரோமானியப் பெரும்படையின் வருகை தெரிய வந்துவிட்டது. உடனடியாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூவாயிரம் பேர் கொண்ட பெரும்படை ஒன்றை அனுப்பினார்கள். இதுவரை மதீனாவிலிருந்து புறப்பட்ட படைகளில் மிகப்பெரிய படை இதுதான்.

ரோமானியர்க்கெதிரான இப்படைக்கு ஜைத்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜைத்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டால் ஜாஃபர் இப்னு அபூதாலிப்(ரலி) அவர்கள் தலைமை ஏற்க வேண்டும். அவர்களும் வீரமரணமடைந்துவிட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் தலைமை தாங்க வேண்டும். அவர்களும் வீரமரணம் எய்தினால் இராணுவம் புதிய தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இந்தப் படையை அனுப்பினார்கள்.

இந்தப் போர் கி.பி. 629ம் ஆண்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிகழ்ந்தது. ஏழு நாட்கள் நீடித்த இந்த போரில் மூவாயிரம் பேர் கொண்ட முஸ்லிம்களின் சிறுபடை கிழக்கு ரோமானியப் பேரரசின் மாபெரும் இம்பீரியல் இராணுவத்தைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்துவிட்டது. நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகளும் வீரமரணம் அடைந்து விட்டார்கள். எனவே அவர்களுக்குப்பின் தேர்ந்தெடுக்கப் பட்ட தளபதி காலித் இப்னு வலீத்(ரலி) அவர்கள் தலைமையில் படை மதீனாவுக்குத் திரும்பியது.

அதே வருடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைமையில் மதீனாவை விட்டும் படை ஒன்று புறப்பட்டது. உடன்படிக்கையின் நிபந்தனை கள் செயல்படுவதைப் பார்க்கவே இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பெரும் முயற்சியால் உண்டான அமைதி குலைவதை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் விரும்பவில்லை. மக்காவாசிகளுக்கு அவர் ஒரு செய்தியனுப்பினார். கொல்லப்பட்ட 'குஸாஆ' கூட்டத்து மக்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க ஆணையிட்டார்கள். மக்கா குறை»களோ அதைச் செய்ய மறுத்தனர். அடுத்து அனுப்பிய செய்தியில் 'ஹுதைபியா' ஒப்பந்தம் மீறப்படாது என்ற உறுதியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவாசிகளிடம் கோரினார். பதிலளித்த  மக்காவினர் அவர்களைப் பொறுத்தவரை அமைதி உடன்படிக்கை அமலில் இல்லை என்றார்கள். இதன் பின்னரே தவறிழைத்து விட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். நிலைமையைச் சரிக்கட்டுவதற்காக அதன் பின்னர் அபூசுஃயானை அனுப்பினார்கள். ஆனால் இறைத்தூதர் (ஸல்)அவர்களைப் பார்க்கும் அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது. இவற்றால் மக்கா பெரிய அளவில் இரத்தச் சேதமின்றி வெற்றி கொள்ளப்பட்டது.

மக்கா வெற்றியால் கஅபாவில் சிலைகள் உடைக்கப்பட்டன. சக்தி மிக்க பன}ஹுவைஸான் தலைவர் மாலிக்கை இது அதிர்ச்சியடைய வைத்தது. பலருடைய உதவியோடு 24,000 வீரர்களை அவர் திரட்டினார். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வெளியே ஹுனைனில் அவர்களைச் சந்தித்தார். புத்திசாலித்தனமாகப் போராடிய கூட்டத்தார் தோற்கடிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் ஹுனைனை விட்டு ஓடி தாயிஃப் கோட்டையில் தஞ்சம் புகுந்தனர். கோட்டையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்றுகையிட்டார்கள். பின்னர் அதைக் கைவிட்டு விட்டு, ''அவர்களே மதீனாவுக்கு வருவார்கள்'' என்று கூறினார்கள்.

கடைசியாக இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வெளியே படையுடன் வந்தது ஹிஜிரி 9-ம் ஆண்டு ரஜப் மாதமாகும். மீண்டும் ரோமப் பேரரசர் அரபியாவைக் கைப்பற்ற வருகிறார் என்று கேள்விப்பட்டு படை நடத்தி வந்தார்கள். 30,000 வீரர்களோடு வடதிசையில் நகர்ந்து 'தபூக்' சென்று பார்த்தபோது பைஜாந்தியப் படையெடுப்பு பிசுபிசுத்துப் போனது தெரிய வந்தது.

இந்த அத்தியாயத்தில் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களோ, அவரின் தளபதிகளோ எதிரிகளைச் சந்திக்க மதீனாவை விட்டும் வெளி வந்த தருணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒருமுறைகூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வரம்பு மீறவில்லை. ஒவ்வொரு முறையும் அவர்கள் தம் படையோடு இறைக்கட்டளைக்கு இணங்கியே போரிடப் புறப்பட்டார்கள்.

முஹம்மத்(ஸல்) அவர்களின் தலைமையில் நிகழ்ந்த முதல் போர் 'பத்ரு'ப் பெரும் போர். ஆனால் இதற்கு முன்னரே படையெடுத்துவந்த மக்காவின் சுமார் 300 வீரர்களோடு சுமார் 60 பேர் கொண்ட முஸ்லிம்கள் இரத்தச் சேதமின்றி மோதியிருக்கின்றார்கள்.

முஸ்லிம்கள் தங்களைவிடப் பன் மடங்கு பெரிய படைக்கெதிராகப் போரிட்டு அவர்களைத் தோற்கடித்து ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். எவ்வளவு சிறிய படையாக இருந்தாலும் பெரும்படையோடு வரும் எதிரிக்குப் புறமுதுகு காட்டியவர்களாக அவர்கள் ஒருபோதும் ஓடியதில்லை. அவர்களுக்கு இதில் நிலைத்திருக்கும் உறுதியை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவர்களுக்கு இந்தப் பண்புகள் அமையப்பெற்றன.
, ,