பதிவுகளில் தேர்வானவை
8.12.11
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
அமைதியான தருணங்கள்
அமைதியான தருணங்கள்
மரணத்திற்கு முன்பும், பின்பும்
மரணம்
ஒரு முறை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் மக்கள் கேட்கின்றார்கள். அபூ ஸயீத் அவர்களே! நம் நெஞ்சங்களில் அளவுக்கு அதிகமாக பயத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்கக் கூடிய அல்லது கொண்டு வரக் கூடிய மக்களுடன் அல்லவா நாம் உட்கார்ந்திருக்கின்றோம்.1 அந்தப் பயத்தின் நடுக்கத்தால், சில வேளைகளில் நம் நெஞ்சங்கள் நம்மை விட்டே அல்லவா சென்று விடுகின்றன.
இறைவன் மீது சத்தியமாக! உங்களை மகிழ்விப்பவர்களுடன் உட்கார்ந்து இருப்பதைவிட, உங்களிடம் பயத்தை ஏற்படுத்துகின்றார்களே அவர்களுடன் உட்கார்ந்திருப்பது மிக மேலானது, அவர்கள் மூலம் நீங்கள் பாதுகாப்பைப்2 பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த உலக வாழ்க்கையில் உங்களை பாதுகாப்பானவர்களாக3 இருக்கச் செய்பவர்களுடன் இருப்பதை விட, உங்களது நெஞ்சங்களில் நடுக்கத்தையும், பயத்தையும் உண்டாக்குகின்றார்களே அவர்களுடன் இருப்பது மிக்க மேலானது. மேலும், இந்தப் பயத்தைப் பெற்றுக் கொள்வது, உங்களுக்கு மிகவும் அவசியமாகவும் இருக்கின்றது.4
1. இங்கு பயம் என்பது அல்லாஹ்வைப் பற்றியும், மறுமையைப் பற்றியும், மரணத்தையும், அந்த மரணத்திற்குப் பின் நாம் சிந்திக்க இருக்கின்றவள்ளையும் குறிக்கின்றது.
2. இறைவனுடைய தண்டனையையும், மண்ணறை வாழ்க்கை ஏற்படுத்துகின்ற தாக்கங்கள், இறந்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பவர்கள், அதன் மூலம் மனிதனின் மனதில் பயத்தை உண்டாக்கி மறுமையின் நல்வாழ்வுக்காக, நற்n'யல்கள் மூலம் நம்மைத் தயார்படுத்தத் தூண்டுகோளாக இருப்பவர்கள்.
3. இந்த உலக வாழ்க்கையை சுகமாகக் கழிப்பவர்கள் இறைவனைப் பற்றியோ அல்லது அவனது தண்டனையைப் பற்றியோ அல்லது நிராகரிப்பாளர்களுக்கு எதிராக அவன் தரவிருக்கும் மறுமையின் தண்டனைகள் பற்றியோ இவர்களும் நினைத்து பாடம் படிப்பதில்லை. பிறரையும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்கச் செய்யாமல், சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். இவர்களுடன் இருப்பவர்கள் இறைவனைப் பற்றி எந்த பயமும் இன்றி தங்களது வாழ்க்கையை சுகமாகக் கழிப்பவர்கள்.
4. இந்த உலக வாழ்க்கையில் இறைவனைப் பற்றிய பயமில்லாமல் வாழ்ந்தவர்கள், மறுமையில் இறைவனை'; சந்திக்கும் பொழுது, தங்களது கரங்களிலே பாவத்தால் நிரப்பப்பட்ட ஏட்டைத் தான் சுமந்து கொண்டிருப்பார்கள். எனவே இது குறித்து ஒவ்வொருவரும் மிகவும் கவனமாகவும், இது சம்பந்தமாக மறுமைப் பயத்தைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகின்றது.
மரணம் என்பது ஒவ்வொரு உயிரியினுடைய உயிர் முடிச்சையும் தட்டக் கூடியதாக இருக்கின்றது. மரணமானது தான் சந்திக்கக் கூடிய ஒவ்வொரு உயிரியிடத்தும் பயத்தையும், நடுநடுக்கத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது. அதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது. ஏன் மரண தருவாயில் இருந்து கொண்டிருக்கின்றவனைச் சூழ்ந்து உட்கார்ந்திருப்பவர்களால் கூட, வருகின்ற மரணத்தைத் தடுத்த நிறுத்த முடியாது. மரணமானது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்நாளிலும் அவனைப் பல முறை சந்தித்து விட்டு, தன்னைப் பற்றிய ஞாபகத்தையும் அவனுக்குள் ஏற்படுத்தி விட்டுச் செல்கின்றது. மரணமானது ஒருவனை அணுகும் பொழுது, அவன் ஏழை, பணக்காரன் என்றோ அல்லது உடல் உறுதியானவன், நோஞ்சான் என்றோ அல்லது ஆரோக்கியமானவன், நோயாயளி என்றோ பார்ப்பதில்லை. இறைவன் தன் திருமறையிலே இது பற்றிக் கூறும் போது :
(நபியே ! அவர்களிடம்) நீர் கூறுவீராக : நிச்சயமாக நீங்கள் எதனைவிட்டும் வெருண்டோடுகின்றீர்களோ அத்தகைய மரணம் - நிச்சயமாக அது - உங்களைச் சந்திக்கும் : பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அpறிகிறவன் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள் : அப்போது, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான். (அல் குர்ஆன் : 62:8)
அனைத்து உயிரிகளுடைய முடிவுகள் யாவும் ஒரே மாதிரியாவையாக, மரணத்தைக் கொண்டே முடியக் கூடியதாக இருக்கின்றது : அதாவது,
ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும். (அல் குர்ஆன் : 3-185)
ஒவ்வொரு ஆத்மாவும் மரணம் என்ற ஒன்றைத் தன்னுடைய இறுதி முடிவாகக் கொண்டாலும், அவை யாவும் ஒரே இடத்திற்குச் சென்று சேர்வதில்லை. அவை மரணத்திற்குப் பின் செல்லக் கூடிய இடங்கள் வௌ;வேறானவைகளாக இருக்கின்றன.
(அந்நாளில்) ஒரு கூட்டத்தார்; (அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்ந்தவர்கள்) சுவனத்திலும், ஒரு கூட்டத்தார் (அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நிராகரித்து வாழ்ந்தவர்கள்) நரகத்திலும் (இருப்பார்கள்). (அல் குர்ஆன் : 3-185).
இறைவன் மரணத்தையும் வாழ்வையும் உயர்ந்ததொரு நோக்கத்திற்காகப் படைத்திருக்கின்றான். அது அந்த ஏக இறைவனான அல்லாஹ்வினுடைய ஏகபோக ஞானத்தில் உள்ளதுவாகும். மரணம் எந்த நேரத்தில் யாரைத் தழுவும் அல்லது தழுவ வேண்டும் என்பது அவனது தீர்ப்பில் தான் உள்ளது. இறைவன் இது பற்றிக் கூறியது போல :
அவன் எத்தகையவனென்றால், உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் படைத்திருக் கின்றான், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன்: மிக்க மன்னிக்கிறவன். (அல் குர்ஆன் : 67-02)
மரணம் உங்களை அணுகுகின்ற வேளையில் உங்களின் நிலமைகள் எவ்வாறு இருக்கும் என்பதை இறைவன் தன் திருமறையில் நான்கு இடங்களில் தெளிவாகச் சுட்டிக் காட்டி இருக்கின்றான்.
முதல் வசனம் :
மரணமயக்கம் உண்மையாகவே வந்து விட்டது. (அல் குர்ஆன் : 50-19)
இரண்டாவது வசனம் :
இன்னும் இவ்வநியாயக்காரர்கள் மரண வேதனையிலிருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீர்களாயின், (அல் குர்ஆன் : 06:93)
மூன்றாவது வசனம் :
(உங்களின் மரணிக்கும் ஒருவரின் உயிர்-) அது தொண்டைக் குழியை அடைந்து விடுமானால் - (அல் குர்ஆன் : 56-83)
நான்காவது வசனம் :
(மறுமை நாள் வெகுதூரமென நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றீர்களே) அவ்வாறல்ல! (இதோ அதன் தொடக்கமாக மரண வேளையில் அவனது உயிர்) தொண்டைக் குழியை அடைந்து விட்டால்,
ஆக, மேலே நாம் கண்ட வசனங்கள் யாவும் மரணத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறி நம்மை எச்சரிக்கின்றன. இறுதியாக இந்த மரணத்தைப் பற்றி ஒருவன் சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால், இது பற்றி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுவதை சற்றுக் கவனியுங்கள் ...
(மரணத்தைப் பற்றி) நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்களானால், குறைவாகச் சிரிப்பீர்கள், நிறைய அழுவீர்கள், என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நிச்சயமாக, மரணத்தின் மூலம் உங்களுக்கு படிப்பினையும், ஞானமும் இருக்கின்றது. அதற்கும் மேலாக, இந்த மனிதர்களுக்கு (தன்னைப் பற்றி) எச்சரிக்கை செய்யக் கூடியதாகவும், (பிறரது மரணத்தைக் காணும் மனிதன், இனி மேலாவது அவன் தன்னுடைய செயல்களைத் திருத்திக் கொள்வதற்கு) அறிவுறுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. நிச்சயமாக அது ஒரு எச்சரிக்கையே அன்றி வேறில்லை. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :
மரணம் என்பது நினைவுறுத்தலாக இருக்கின்றது.
யுவ-வுயடியசயni உழடடநஉவநன வாளை ர்யனiவாஇ யனெ யடளழ ஐடிn 'யுளயமசை inஇ வுய'ணலையவர ஆரளடiஅ. வுhந உhயin ழக வாளை ர்யனiவா யெசசயவழைn ளை எநசல றநயம் யனெ சநகநச வழஇ ளுடைளடையவாரட-யுhயனiவா யள-னுய'கையாஇ டில யுட-யுடடியniஇ ர்யனiவா ழெ.502.
இது மட்டுமல்லாது ஏகப்பட்ட குர்ஆனினுடைய வசனங்களும், ஹதீஸ்களும் மரணத்தைப் பற்றி மனிதனுக்கு எச்சரிக்கை செய்துள்ளன. அவற்றை எச்சரிக்கை என்பதை விட மரணம் என்பது திகிலூட்டக் கூடிய சம்பவமாகவும், மனதால் தாங்கிக் கொள்ளவியலாத கடுமையானதொரு நிகழ்ச்சியாகவும், விசத்தை விடக் கொடிய, கடுமையான கசப்பைக் கொண்ட சுவையில்லாத பானமாகவும் அது இருக்கின்றது. மரணம் என்பது ஒருவனுக்கு வந்து விட்டால் அவனது சுகங்கள், ஆடம்பரங்கள் அனைத்தும் அவனை விட்டு அகன்று விடுவது மட்டுமல்லாமல், அவன் இது வரை கண்டறியாத அனைத்து சோதனைகளையும், வேதனைகளையும் கொண்டு வரக் கூடியதாக இருக்கின்றது. மரணம் வந்தடைந்து விட்டால் உங்களுக்கும் உங்கள் முதுகுத் தண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைத் துண்டித்து விடுகின்றது, உங்களது அனைத்து உறுப்புக்களையும் செயலிழக்கச் செய்து விடுகின்றது. எனவே தான் அது மிகப்பெரியதொரு நிகழ்ச்சியாகவும், கடுமையான நேரமாகவும் இருப்பதோடு, மேலும், அது அனைவரும் சந்திக்கவிருக்கக் கூடிய கடுமையானதொரு நாளாகவும் இருக்கின்றது. யுவ-வுயனாமசையா கi யுhறயடi யுட-ஆயரவய றய ருஅசடை-யுமாசையாஇ p.28.
இருப்பினும், நாம் அந்த மரணத்தைப் பற்றி மறந்து அல்லது அதை மறந்திருப்பவர்கள் போல நடித்துக் கொண்டிருக்கின்றோம். அதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட நாம் விரும்புவதில்லை, அதைச் சந்திக்க நமக்கு விருப்பமுமில்லை, எப்படி இருப்பினும் அது நம்மை அடையவிருக்கின்றது. அப்படி அடைந்து விட்டால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது விடுவித்துக் கொள்ளவோ நம்மால் இயலாது. நம்மிடையே இருந்து விட்டுச் சென்றுள்ள எத்தனையோ அறிஞர்களும், நல்லவர்களும் மரணத்தைப் பற்றி தன்னுடைய சந்ததிக்கும், தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கும் எடுத்துச் சொல்லி, அவற்றைப் பற்றி எச்சரித்துச் சென்றிருக்கும் போது, நம்மில் எத்தனை பேர் அதனைச் சிந்திக்க முடியாமல், அல்லது அந்தக் கருத்துக்களை உதாசினம் செய்த நிலையில், படாடோபமான, ஆடம்பரமான வாழ்க்கையிலும், கேளிக்கைகள், பொழுதுபோக்குகள், இன்னும் இறைவனது நினைவை மறக்கடிக்கக் கூடியவற்றில் நமது பொன்னான நேரங்களைக் கழித்தும், நாம் நமது வயோதிகத்தையும் எட்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றி நம்மில் எத்தனை பேர் சிந்திக்கின்றோம். உங்களை ஒரு பாம்பு தீண்ட வந்து கொண்டிருக்கும் போது, அது பற்றி எந்தவித பயமும் இல்லாமல் அச்சமற்றிருக்கின்றீர்களே!!? என்ன இது கொடுமை?!! மரணமானது தன்னுடைய வயோதிகம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வந்து அடைந்து கொண்டிப்பதைப் பற்றி நீங்கள் உணர்வதில்லையா? மேலும், அவன் தன்னுடைய பலத்தைச் சிறிது சிறிதாக இழந்து கொண்டும், அவனை இயலாiமாயனது நெருக்கிக் கொண்டிருப்பதைப் பற்றியும் எந்தவித சிந்தனையும் செய்யாமல் அது பற்றிப் பாராமுகமாக இருக்கின்றீர்களே? உங்களது கறுத்த முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக நரைத்த முடிகளாக மாறி வருவதைக் கூட நீங்கள் கவனிக்க மறுக்கின்றீர்ளே? இதன் மூலம் மரணமானது உங்களுக்கு மிக அருகாமையில் நெருங்கி வந்து கொண்டிருப்பதை உணர்த்துவது பற்றி எந்தவித சிந்தனையும் இன்றி வாழ்கின்றீர்களே? ளுயனைரட-முhயவசைஇ டில டீin யட_தயரணiஇ p.533.
ஒவ்வொரு நொடியையும் ஒருவன் கடக்கும் பொழுதும், அவன் தன்னுடைய மரணப் பாதையை நோக்கிய பயணத்தில், தான் சென்றடையக் கூடிய இறுதி நிமிடத்திற்கான தூரத்தை வெகு அருகாமையிலும், அவனுக்கும் அந்த இறுதி இலக்கிற்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டும் இருக்கின்றது. மேலும், அவன் கண்டிப்பாக அதை (மரணத்தை) அடைந்து கொள்ளக் கூடியவனாகவும், மறுமை நாளைக் கடக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் ஒரு முறை கூறினார்கள் :
இறை நம்பிக்கை கொண்டவர்கள் தன்னுடைய இறைவனைச் சந்திக்கும் நாள் வரை அமைதியுற மாட்டார்கள். ளூயசாரள-ளுரனரச டிi-ளூயசாi 'ர்யடடை-ஆயரவய றயட ஞரடிரசஇ டில யுள-ளுரலரவiஇ p.4.
மரணத்தின் வேதனைகளும், அதன் சோதனைகளும், அது ஏற்படுத்துகின்ற நம்மால் மறக்கவியலாத கடுமையான சித்தரவதைகளையும் நாம் சந்திக்காமல், அந்த ஏக இறைவனைச் சந்திக்க இயலாது. நிச்சயமாக, இந்த உலக வாழ்க்கையை கேளிக்கையிலும், ஆடம்பரத்திலும், சுக போகத்திலும் உல்லாசமாக வாழ்ந்தவர்களும், மரணத்தைப் பற்றிய சிந்தனையை தங்களிடையே வளர்த்துக் கொள்ளாதவர்களும், நாளை நாம் அந்த ஏக இறைவனைச் சந்திக்க இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளாமல் வாழ்ந்தவர்களும், மரணம் தங்களை வந்தணுகும் போது அதை விட்டும் வெருண்டோடக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். அதனை வெறுக்கவும் செய்கின்றார்கள். ஆனால் உண்மையான முஃமின்கள் நிலையோ வேறாக இருக்கின்றது. இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களின் ஹதீஸின்படி அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள் வரை எந்த நிம்மதியையும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், இந்த நிராகரிப்பாளர்களின் நிலையோ, முஃமின்களின் நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. இது பற்றி இறைவன் தன்னுடைய திருமறையில் கூறும் போது :
(நபியே ! அவர்களிடம்) நீர் கூறுவீராக : நிச்சயமாக நீங்கள் எதனைவிட்டும் வெருண்டோடுகின்றீர்களோ அத்தகைய மரணம் - நிச்சயமாக அது - உங்களைச் சந்திக்கும் : பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிகிறவன் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள் : அப்போது, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான். (அல் குர்ஆன் : 62:8)
நீங்கள் எங்கிருந்த போதிலும் சரி, இல்லை! நீங்கள் அதனை எவ்வளவு வெறுத்தாலும் சரி. இல்லை மிகப் பாதுகாப்பான உறுதியான கோட்டைகளில் இருந்தாலும் சரியே, அது உங்களை மிக அருகில் வந்து அழைக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஓ ஆத்மாக்களே!! மரணத்தின் வழிகளையும், அதற்குப் பின் நீங்கள் பயணப்பட இருக்கின்ற இடத்தையும் மிக எளிதாக ஆக்கிக் கொள்வதற்கு, நல்லடியார்கள் என்பவர்கள் எப்படித் தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்களோ அது போல நீங்களும் அதன் வழிகளை எளிதாக்கிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
நிச்சயமாக, என்றுமே மரணத்தைச் சந்திக்காத ஆத்மாவும் இல்லை. அதனைத் தடுத்துக் கொண்ட ஆத்மாவும் இல்லை, என்பதை நாம் உறுதிபடக் கூறலாம்.
எனதருமைச் சகோதர! சகோதரிகளே!!
உங்களுக்காக மரணமானது உங்களுக்கு மிக அருகில் காத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் போது, அது பற்றிய சிந்தனையே இல்லாமல், உங்களை வழிகேட்டிலும், மனம் போன போக்கில் பல்வேறு கேளிக்கைகளில் உங்களை நீங்களே வழிதவறச் செய்து கொண்டும் எவ்வாறு நீங்கள் இருக்கின்றீர்கள் என்பது மிகவும் ஆச்சரியமானதாக இருக்கின்றது. உங்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் மரணத்தைப் பற்றி நீங்கள் சிந்திப்பதில்லை. நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் நம்மை மரணம் அணுகாது என்ற தவறான எண்ணத்திற்கு அடிமையாகி விடுகின்றீர்கள். ஆனால் நீங்கள் ஆரோக்கியமாகவும், அதன் மூலம் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் பொழுது, அது சத்தமின்றி தங்களுக்கு மிக அருகில் வந்து உங்கள் மீது வேதனையை இறக்குமதி செய்ய ஆரம்பித்து விடுகின்றது. நிச்சயமாக பிறரது மரணம், நீங்களும் மரணிக்க இருக்கின்றீர்கள் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். பிறரது மண்ணறைகள் நாளை நீங்களும் இந்த மண்ணறைக்குள் விரும்பியோ, விரும்பாமலோ தஞ்சமடைய இருக்கின்றீர்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துவதாக உள்ளது. இருப்பினும் உங்களது இச்சைகளைப் பூர்த்தி செய்வதற்கே நீங்கள் உங்களது நேரங்களைச் செலவழித்தவர்களாக இருக்கின்றீர்களே ஒழிய, மரணத்தைப் பற்றியும் அதற்குப் பின் உள்ள நிலையான வாழ்வு பற்றியும், அதற்கான தயாரிப்புகள் பற்றியும் மறந்து விடுகின்றீர்களே!? இது என்ன கொடுமை!!?
உங்களுக்கு முன் இருந்தவர்கள் எந்த நிலைகளுக்கு ஆளானார்கள், அவர்கள் இருந்த இடங்கள் எங்கே? அவர்கள் வாழ்ந்த அந்த ஆடம்பரங்கள், மாடமாளிகைகள் அனைத்தும் துடைத்தெறியப்பட்டு, அவர்களும் மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்ட, செய்திகளை நீங்கள் அறிந்து கொள்வதில்லையா!? நேற்று வரை இதே இடத்தில் இதே நேரத்தில் நம்முடன் இருந்தவர்கள் இன்று இல்லையே!? என்பதும் பற்றியும் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
மரணத்தைப் பற்றி நாம் கேள்விப்படுகின்றோம். ஆனால் அது நமக்கும் வரவிருக்கின்றது என்பது பற்றி மறந்து விடுகின்றோம். அது பற்றிக் கேள்விப்பட்டவுடன் நமது மனது துக்கத்தால் நிரம்பியவைகளாக, நமது கண்கள் கண்ணீரைச் சொறிகின்றன. ஆனால், இறைவனின் நல்லாசி பெற்ற நல்லடியார்களைத் தவிர்த்து, நம்மில் யாரும் அதன் பின்பாவது அது பற்றி எந்த வித பயமும் கொள்வதில்லை.
ஆனால் நம்மில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த உலக வாழ்க்கையின் மோகத்தில் தங்களைத் தொலைத்து விடுவதில்லை. அதிலேயே சதா சர்வ காலமும் தங்களது சிந்தனையை அலை பாய விடுவதில்லை. அதிகமான அளவில் இந்த உலகியல் சார்ந்த நம்பிக்கைகளை தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதுமில்லை. ஆனால் அவர்கள் மரணத்தைச் சந்திப்பதற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதற்காக பாவங்களிலிருந்து விலகியும், நன்மைகளின் பால் தங்களை நெருக்கமாக்கிக் கொண்டவர்களாகவும், அந்த இறுதி நேரத்திற்காகக் காத்திருப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அல் கஃகா பின் ஹக்கீம் என்பவர் கூறுகின்றார்:
கடந்த 30 வருடங்;களாக நான் என்னுடைய மரணத்திற்காக என்னைத் தயார்படுத்தி வந்திருக்கின்றென். எனவே அது என்னை அஞ்சும் நேரத்தில் நான் அதை வெறுக்கவொ அல்லது வெறதனையம் செய்து கொண்டு தாமதிக்கவொ விரும்பவில்லை யுட-'ஐhலய'இ எழட.4p.484.
மேலும் யாரவது மரணத்தைப் பற்றிப் பேசினால், நம்மில் அத்தனை பேரும் மரணத்தைப் பற்றி ஞாபகப்படுத்தியதற்காக மிகவும் கோபப்படக் கூடியவர்களாக இருக்கின்றோம். பலர் கூடி இருக்கும் சபையில், மரணத்தைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின், பேசக் கூடிய அந்த நபர் முதலில் சபையோரிடம் தான் பேசப் போவது குறித்து மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டவராகத் தன்னுடைய பேச்சை ஆரம்பிப்பதையும், மரணத்தைப் பற்றி மக்களுக்கு ஞாபகத்தை ஊட்டி, அந்த சந்தோசமான நேரத்தை சங்கடமானதாக ஆக்க விரும்பாததையும் இவர்களது இந்த செயல் காட்டுகின்றது. குறிப்பாக மரணத்தை இவர்கள் எந்தளவு வெறுப்புடன் நோக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் காட்டுகின்றது. இதற்கு நேர்மாறாக நல்லோர்கள் இந்த மரணத்தை எந்தளவு விரும்பிக் கொண்டிருந்தார்கள் என்பதையும், நிதர்சனமான ஒன்றை எந்தளவு வாய்மையுடன் ஒப்புக் கொண்டு, அதனை எதிர்பார்த்தவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. இதற்கு கீழ் உள்ள சம்பவமே நமக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக இருக்கின்றது.
ஒரு முறை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் மக்கள் கேட்கின்றார்கள். அபூ ஸயீத் அவர்களே! நம் நெஞ்சங்களில் அளவுக்கு அதிகமாக பயத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்கக் கூடிய அல்லது கொண்டு வரக் கூடிய மக்களுடன் அல்லவா நாம் உட்கார்ந்திருக்கின்றோம். அந்தப் பயத்தின் நடுக்கத்தால், சில வேளைகளில் நம் நெஞ்சங்கள் நம்மை விட்டே அல்லவா சென்று விடுகின்றன.
இறைவன் மீது சத்தியமாக! உங்களை மகிழ்விப்பவர்களுடன் உட்கார்ந்து இருப்பதைவிட, உங்களிடம் பயத்தை ஏற்படுத்துகின்றார்களே அவர்களுடன் உட்கார்ந்திருப்பது மிக மேலானது, அவர்கள் மூலம் நீங்கள் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த உலக வாழ்க்கையில் உங்களை பாதுகாப்பானவர்களாக இருக்கச் செய்பவர்களுடன் இருப்பதை விட, (மரணத்தைப் பற்றி) உங்களது நெஞ்சங்களில் நடுக்கத்தையும், பயத்தையும் உண்டாக்குகின்றார்களே அவர்களுடன் இருப்பது மிக்க மேலானது. மேலும், இந்தப் பயத்தைப் பெற்றுக் கொள்வது, உங்களுக்கு மிகவும் அவசியமாகவும் இருக்கின்றது.
இன்று நீங்கள் மரணத்தைப் பற்றிச் சிந்திக்காதவர்களாக இருந்தால், அதற்காக உங்களைத் தயார் செய்து கொள்ளாமல் இருந்தால், நாளைக்கு நீங்கள் எதிர்பாருங்கள், நீங்கள் உங்களது அலுவல்களில் கவனமாக இருந்து கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராதவிதமாக உங்களது உயிர் முடிச்சின் அருகில் வந்து நின்று கொண்டிருக்கக் கூடியதாக இருக்கும். எனவே, யார்யாரெல்லாம் மரணத்தின் சிந்தனையை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டவர்களாக அதற்காகத் தங்களைத் தயார்படுத்தி வைத்திருந்து விட்டு, அது தன்னை அணுகும் நேரத்தில் எந்தவித வெறுப்பும் இன்றி ஏற்றுக் கொண்டார்களோ, அததகைய நல்லடியார்களின் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.
ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
உங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்கள் தங்கள் நெஞ்சங்களில் அடிக்கடி மரணத்தைப் பற்றிய நினைப்பை வளர்த்துக் கொண்டவர்களாக, சதா அவற்றைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவர்களாகவும், அது தன்னருகில் வந்து விட்டதாக உணர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தன்னைச் சுத்தம் செய்து கொள்வதற்கு நீரைப் பெற்றுக் கொண்டவராகவும், தன்னுடைய இயற்கை உந்துதல்களை முடித்துக் கொண்டவுடன், அதிலிருந்து தூய்மை பெற்றவராகவும், உடனே ஒலுச் செய்து கொண்டு, இறைவனுடைய கட்டளை (மரணம்) எந்த நேரத்திலும் தன்னை வந்தடையலாம் என்ற பயத்தில், தன்னுடைய இறைவனைச் சந்திக்கும் அந்த நேரத்தில், தூய்மையின்றி இருப்பதை விட, ஒலுவுடன் தூய நிலையில் சந்திப்பதையே அவர்கள் விரும்பியவர்களாகவும் இருந்தார்கள். யுண-ணுராரனஇ டில இ 'யுடினரடடயா டிin யுட-ஆரடியசயமஇ p.99.
மேலும் அர்-ராபிஃ பின் பிஸ்ஸா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
இவர்கள் எது உண்மையிலேயே வந்து விடக் கூடியதாக இருக்கின்றதோ, எதை உண்மையிலேயே தங்கள் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களோ அதைப் பற்றி இவர்களது இதயங்கள் சந்தேகத்தில் இருக்கின்றது என்பது, எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கின்றது, இருப்பினும் அவர்கள் அதைப் பற்றிய நினைவே இல்லாமல் இந்த உலக வாழ்க்கையிலேயே தங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடியவர்களாகவும், அதைப் பற்றிய ஞாபக மறதியிலும், கவனமற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் அவர் கூறும் பொழுது, இறைவன் மீது சத்தியமாக! ஞாபக மறதி என்பது இறைவன் இந்த மனிதன் மீது செலுத்தி இருக்கும் அருட்கொடையாகும். இல்லா விட்டால், நம்பிக்கை கொண்டவர்கள் எப்பொழுதும் மரணத்தைப் பற்றிய சிந்தனையில், தங்களது நிம்மதியை இழந்து விடுவார்கள், அவர்களது இதயங்கள் அவர்களிடம் இருக்காது, அவை பயத்தால் எப்பொழுதும் நடுநடுங்கிக் கொண்டும் இருப்பதால், இந்த உலகத்தில் உள்ள ஏனைய சுகங்களையும் அவர்கள் தவிர்க்க வேண்டியதாகி அனுபவிக்க இயலாததாகி விடும் (சந்நியாச வாழ்க்கையை நாட வேண்டியதாகி விடும்). ளுகையவ ரள-ளுயகறயாஇ டில ஐடிn யுட-துயரணiஇ எழட.3இ p.353.
இறைவன் மீது சத்தியமாக, எந்த உயிர்களைக் கைப்பற்றுவதற்காக இறைவன் மலக்குகளை நியமித்திருக்கின்றானோ, அந்தப் பொறுப்பைச் சுமந்து, அவற்றை செவ்வனே செய்யக் கூடிய அந்த மலக்குமார்களும் ஒரு நாள் அழிந்து விடக் கூடியவர்களே. அல்லாஹ்! அவன் தான் நிரந்தரமானவன். அத்தகையவனான இறைவன் கூறுகின்றான் :
(பூமியாகிய) அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக் கூடியதாகும். கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும். (அல் குர்ஆன் 55-26,27).
இருப்பினும், நல்லடியார்கள் என்பவர்கள் பிறர் மரணத்தின் மூலம் தாங்களும் ஒரு நாள் மரணிக்கவிருக்கின்றோம் என்ற படிப்பினையை எடுத்துக் கொண்டு, தங்களது சேருமிடம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, மரணத்தின் மூலம் நல்லதொரு பாடத்தைப் பெற்றுக் கொள்பவர்களாக இருந்தார்கள். அன்றைய தினம் அவர்கள் பெற்றுக் கொண்டதைப் போன்றதொரு பாடத்தை நாம் பெற்றுக் கொள்கின்றோமா?
ஹக்கீம் பின் நூஹ் (ரஹ்) அவர்கள் தன்னுடைய சகோதரர்களிடம் இவ்வாறு கூறினார்கள் :
மாலிக் பின் தினார் (ரஹ்) அவர்கள், ஒரு இரவின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு ரக்அத் தொழாமலோ ஒரு ஸஜ்தா செய்யாமலோ ஓய்வெடுத்ததில்லை. ஒரு நாள் நாங்கள் அனைவரும் கடலில் பயணமாகிக் கொண்டிருந்த பொழுது, நான் கூறினேன். ஓ! மாலிக் அவர்களே!! இரவு மிக நீண்டதாக இருந்தது. ஆனால் நீங்கள் தொழுகவும் இல்லை அல்லது இறைவனைத் துதித்து தஸ்பீஹ் செய்யவுமில்லை, என்று கூறியவுடன் அவர்கள் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள். பின்பு, இந்த படைப்பினங்கள் நாளை தங்களுக்கு என்ன நேரும் என்பதை அறிந்திருந்தால், அவர்கள் மிகவும் சொகுசாக உல்லாசமாக வாழ மாட்டார்கள். இந்த இரவின் இருட்டைப் பற்றி நான் ஆழ்ந்து சிந்தித்ததன் காரணத்தால், வரக் கூடிய அந்த நாளின் பயங்கரத்தை நினைத்து நான் நின்றவனாக நின்ற நிலையிலேயே இறைவனை நினைத்துக் கொண்டிருந்தேன். வரக் கூடிய அந்த நாளில், ஒவ்வொருவரும் அவரவர் செய்கைகளுக்கு பொறுப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கின்றார், தந்தை மகனுக்காக பொறுப்பேற்க முடியாது, குழந்தைகள் தன்னுடைய தந்தைக்காக வாரிசுகள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. அதன் பின் அவர்கள் மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டதுடன், அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து கொண்டிருந்தார்கள். எங்களுடன் அந்தக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஏனையோர்கள் எனக்கு அறிவுரை கூறுமுகமாக, அவருக்குத் தான் இதைப் பற்றிய நினைவூட்டுவதற்கு அவசியப்படாத பொழுது நீங்கள் ஏன் அவருக்கு அதைப் பற்றி ஞாபமூட்டினீர்கள்? என்று கூறினார்கள். சில சயமங்களைத் தவிர்த்து, அது முதல் நான் அவரிடம் இது பற்றி ஞாபகமூட்டுவதில்லை.
துயnயெவரச-சுனைய கi ரவ-வுயளடiஅi டுiஅய ஞயனனயசய டடயார றய ஞயனயஇ டில ஆராயஅஅயன டிin 'யுளiஅ யுட-புhயசயெவiஇ எழட.1இ p.98.
இன்றைய தினத்தைப் பற்றி பயப்படாத ஈமான் கொண்டவர்கள் கிடையாது. ஆனால் அவர்கள் வரக் கூடிய அடுத்த நாளில் தங்களது நல்லமல்கள் மூலம், நேர்மையான செயல்கள் மூலம் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த வாழ்க்கையானது, இரவும், பகலும் என இறைவன் தன் அருள்மாரியை நம் மீது பொழிந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையாகும். அந்த அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நம்மை எதற்காக அவன் படைத்தானோ, எதற்காக இந்த அருட்கொடைகளை நம் மீது சொரிந்தானோ அவற்றை எல்லாம் மறந்து விட்டு, மற்ற மற்ற வீணானவற்றில் நம்மையும் ஈடுபடுத்தி, நமது நேரங்களையும் பாழடித்துக் கொண்டிருக்கின்றோம். இறைவனை மறந்து இந்த உலக வாழ்க்கையின் இன்பத்தில் தங்களை மெய்மறக்கச் செய்து கொண்டிருப்பவர்களிடம், திடீரென மரணமானது அவர்களின் அருகில் வந்து நிற்கும் பொழுது, சிலர் இறைவனிடம் உயிர் பிச்சை கேட்டு மன்றாடுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
என் இரட்சகனே! என்னை (உலகத்திற்கு)த் திருப்பி அனுப்பி விடுவாயாக! என்று கூறுவான். (அல் குர்ஆன் 23:99)
ஏன் இவர்கள் மீண்டும் இந்த உலகிற்குத் திரும்பி வர நினைக்கின்றார்கள்?
உலகில் நான் விட்டு வந்ததில், (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக (என்றும் கூறுவான்). (அல் குர்ஆன் 23:100).
மீண்டும் இந்த உலகிற்கு திரும்பி வருவது என்பது இயலுமா? இயலாது. எனவே, நீங்கள் மிகவும் திடகாத்திரமாக, ஆரோக்கியமுடன், எதையும் செய்ய இயலுகின்ற நிலையில் இருக்கும் பொழுது, இன்னும் உங்களை மரணம் அணுகாமல் இருந்து கொண்டிருக்கும் நிலையிலேயே, நீங்கள் இறைவனுக்குப் பயந்து நல்லனவற்றைச் செய்ய உங்களை தயார்படுத்தினால் என்ன?
அனைத்து உயிர்களும் மற்றும் அவனது அடிமைகளாகிய இந்த மனித இனமும் சந்திக்க வேண்டிய தளமாக மரணமானது இருந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பெருமைமிக்க வாழ்க்கையானது ஒரு முடிவைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த முடிவை நோக்கி எல்லா உயிர்களும் சென்று கொண்டிருக்கின்றது. இறைவன் தன்னுடைய அடியார்களை இரண்டு விதமாகப் பிரித்து வைத்துள்ளான். ஒரு வகையினர் தன்னுடைய ஏக இறைவனுக்கு மட்டும் சிரம்பணிந்து, அவனுடைய கட்டளைகளை சிரமேற் கொண்டு நடப்பவர்கள். இன்னொரு பிரிவினர் தன்னைப் படைத்த இறைவனது கட்டளைகைளப் புறக்கணித்து, அவனுக்கு மாறு செய்து, பாவங்களைச் செய்து கொண்டிருப்பவர்கள். இவர்களின் இரண்டு தன்மையின் காரணமாக அவர்கள் சென்றடையக் கூடிய இடங்களும் இரண்டு வௌ;வேறு இடங்களாக வேறுபட்டு அமைக்கப்பட்டுள்ளன. நல்லவர்களுக்கு இதமழிக்கக் கூடிய சொர்க்கச் சோலைகளையும், பாவங்களைச் செய்தவர்களுக்கு முடிவுறாத வேதனையையும், என்று இறைவன் அவரவர்களுடைய தகுதியின் அடிப்படையில் சென்றடையக் கூடிய இடத்தையும், அங்கு அவர்கள் அனுபவிக்க இருக்கின்றவற்றையும் வித்தியாசப்படுத்தியே அமைத்துள்ளான். எனவே, ஒவ்வொருவரும் தான் இந்த உலகில் செய்து கொண்டிருந்தவைகளுக்கு ஏற்ப தங்களின் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டி இருக்கின்றது. அதிலிருந்து அவர்கள் தப்பிக்கவும் முடியாது அல்லது அது தன்னை அடைந்து விடுவதிலிருந்து எந்தத் தடுப்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாது.
(பூமியாகிய) அதன் மேலுள்ள அனைத்தும் அழிந்து போகக் கூடியதாகும். (55:26)
இறைவன் தன்னுடைய கட்டளையை நிறைவேற்ற நாடிவிட்டான் என்றால், அவர் வாலிபர் என்றோ அல்லது வயோதிகர் என்றோ: ஏழை என்றோ அல்லது பணக்காரன் என்றோ பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. இவை அனைத்தும் முற்றும் அறிந்தவனாகிய, அளவற்ற அருளாளனாகிய அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வினுடைய அளவுகோளில் உள்ளது.
வயதானவரின் வயது அதிகப்படுத்தப்படுவதும், அவரின் வயதிலிருந்து குறைக்கப்படுவதும் (லவ்ஹூல் மஹ்ஃபூள் எனும் பதிவுப் புத்தகத்தில் இல்லாமலில்லை: நிச்சயமாக இ(வை யாவற்றையும் செய்வ)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே ! (35:11).
எனவே தான் நல்லோர்களும், சான்றோர்களும் நெருக்கத்தில் வர இருக்கக் கூடிய மரணத்தைக் குறித்த சிந்தனையில், தங்களைத் தாங்களே வேதனை செய்து கொண்டவர்களாக (அதாவது வணக்கம் உள்ளிட்டவைகளில் சிரமம்பாராது நிறைவேற்றக் கூடியவர்களாக), நிந்தித்துக் கொண்டவர்களாக, கிடைக்க கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடாது, அந்தந்த நேரங்களில் என்னென்ன நல்லனவற்றைச் செய்து கொள்ள முடியுமோ அதற்கு தங்களை விரைவுபடுத்திக் கொள்ளவும், தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பங்கள் தங்களிடமிருந்து விடை பெற்றுச் செல்வதற்குள் அவற்றைச் செய்து, அதன் மூலம் தங்களது மறுமைக் கணக்குகளை நன்மைகளால் நிரப்பிக் கொள்கின்றார்கள். நிச்சயமாக முஸ்லிம்களாக இருக்கக் கூடிய நாம் நம் முன் எடுத்துக் காட்டப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட இடத்தையும், அந்தக் குறிப்பிட்ட வாழ்க்கையையும் அடைந்து கொள்வதற்கு தங்களை அற்பணிக்கக் கூடியவர்களாகவும், அதே போல அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு இடையூறாக வரக் கூடியவைகளையும், துன்பங்களைத் தரக்கூடியவைகளையும், நல்வழியில் செயல்பட விடாது நிலைகுலையச் செய்து விடுகின்றவைகளையும் எதிர்த்து நின்று, அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு மறுமை வாழ்வை முன்னோக்கி, அதில் கிடைக்கக் கூடிய நன்மைகளை எதிர்நோக்கி பொறுமையைக் கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள்.
மரணம் என்ற ஒன்று நிச்சயமாக இருக்கின்றது என்ற உண்மையை அறிந்து கொண்ட மனிதனால், எப்படித் தான் சிரிக்க முடிகின்றது என்பது ஆச்சரியமானதாக இருக்கின்றது. மேலும், நரக நெருப்பு ஒன்று இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்திருந்தும் எப்படி இவர்களால் சிரிக்க முடிகின்றது. மரணம் என்ற ஒன்று இவர்களது வாழ்க்கையில் குறிக்கிட்டு, அவர்களது வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து விட இருக்கும் பொழுது, இவர்களால் எப்படி தாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று கூறிக் கொள்ள முடிகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது என்பதை முழுதும் அறிந்து கொண்ட பின்பும், இந்த உலக வாழ்க்கைக்கான தயாரிப்பிலேயே அதன் சுகங்களைத் தேடுவதிலேயே இவன் தன்னுடைய காலத்தைக் கழித்துக் கொண்டிருக்க எவ்வாறு இயலுகின்றது என்பது மிக ஆச்சரியமானதொன்றாக இருக்கின்றது. ஆரமயளாயகயவரட-ஞரடரடிஇ p.157.
மரணத்தின் கதவுகள் மிகவும் அகன்றதாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் மண்ணறைக்குச் செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அது போலவே மண்ணறைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது தான் மரணம்!! அது ஒவ்வொரு நாளும் எந்த விதத்திலேயேனும், ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றது. நமது மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி யாரேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அறிந்து கொள்ளுங்கள் :
நம் அனைவரின் பயணமும் மரணத்தின் கதவுகள் வழியே!
பயணத்தின் முடிவு என்னவாக இருக்கும்?
இறுதி இருப்பிடம் எதுவாக இருக்கும்?
அல்லாஹ்வினுடைய அருள் பெற்றவர்களுக்கு சுவனங்கள் காத்திருக்கும்!!
உலகத்தின் அற்பங்களைத் தேடியவர்களுக்கு நரகமே காத்திருக்கும்!!
னுறையரெ யுடிடை-'யுவயாலையாஇ p.868.
ஒன்றை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எது ஒன்றைச் செய்தாலும், செய்த செயலைப் பற்றி அது சரியா? அல்லது தவறா? என்று சிந்தித்து, இறைவன் மீதுள்ள அச்சம் காரணமாக தங்களது இதயம் பயத்தால் நடுங்குமானால், நினைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர் வழியின் மீது இருக்கின்றீர்கள். அத்தஹாக் என்பவர் கூறியது போல :
மரணச் சிந்தனையை வளர்த்துக் கொண்ட மனிதர்கள் கீழ்க்கண்ட மூன்று அடையாளங்களைப் பெற்றிருப்பார்கள் : தான் ஏதாவது தவறான செயலைச் செய்து விட்டால் அதற்கு உடனே மன்னிப்புக் கோரிவிடுவார்கள், அவர்களது இதயங்கள் இந்த உலக வாழ்க்கையின் மோகத்தில் திளைக்காமல், தங்களிடம் இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வார்கள், வணக்க வழிபாடுகளில் எப்பொழுதுமே தங்களை முன்னிறுத்திக் கொள்வார்கள்.
நம்மை மரணம் வந்து அணுகும் போதும், மரணத்தின் பிடியில் நமது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போதும் தான் நாம் அதன் வேதனைகள் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். இறந்து விட்ட ஒருவரது மரணத்தைப் பற்றி நீங்கள் கவலை கொள்கின்றவர்களாக இருந்தால், உங்களது மரணத்தைப் பற்றியும், அதில் நீங்கள் தனியாகப் பயணப்பட இருக்கின்றீர்கள் என்பது பற்றியும் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும். அந்த யாருமற்ற துணைக்கு ஆள் இல்லாத அந்தப் பயணத்தில் சென்று விட்டவரைப் பற்றிச் சிந்திக்கின்ற, நம்மை விட்டுச் சென்று விட்டவருக்காக துக்கம் கொள்கின்ற நாம், நாளை நாமும் இது போல தனியானதொரு பயணத்தில் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோமே என நினைத்து ஏன் கவலைப்படுவதில்லை. அந்தப் பயணத்திற்குண்டான ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில்லை.
இந்த உலக வாழ்க்கையின் மோகத்தில் திளைத்திருப்பவர்கள் அது பற்றிக் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் நாம் செல்ல இருக்கின்ற பயணம் மிக நீண்டது, பற்பல சோதனைகளைக் கொண்டது என்று உறுதியாக நம்புபவர்கள் அது பற்றிய விழிப்புணர்வுடனும், அதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அன்புள்ள சகோதர, சகோதரிகளே !!
யார் தன்னுடைய இறுதி முடிவு மரணத்தைக் கொண்டு இருக்கும் என்றும், இறுதியாக தன்னுடைய இருப்பிடத்தை மண்ணறையிலே தான் ஆக்கிக் கொள்ளப் போகின்றோம் என்றும், அந்த மண்ணறையிலே புழுக்களைத் தன் தோழர்களாகவும், முன்கர் மற்றும் நக்கீர் ஆகிய இரு மலக்குமார்களைத் தன்னுடைய உதவியாளர்களாகவும், மண்ணறையைத் தன்னுடைய வீடாகவும், இந்தப் பூமியின் வயிற்றைத் தான் தஞ்சம் புகுகின்ற இடமாகவும், இறுதித் தீர்ப்பு நாள் என்ற ஒன்று இருக்கின்றது அதில் நமக்கென ஒரு நேரங் குறிக்கப்பட்டிருக்கின்றது, அந்த நேரத்தில் சொர்க்கம் அல்லது நரகம் ஆகியவற்றில் ஒன்றை நமக்காக தீர்மானிக்கப்பட இருக்கின்றது என்பதை நம்பக் கூடிய ஒவ்வொருவரும், அடிக்கடி மரணத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
மரணம் என்ற ஒன்று நம் அனைவரையும் தழுவ இருக்கின்றது. அதற்காக நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள், அந்த மரணம் உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த இருக்கின்றது. அது மிக நீண்டதொரு பயணமாக இருக்கின்றது. அதனுடைய வழிகளை நீங்கள் எளிமையாக்கிக் கொள்ள முயற்சிகளைச் செய்யுங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைகளை எண்ணிப்பாருங்கள். மரணத்திற்கு முன்னால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்ன? மரணத்திற்குப் பின்னால் அவர்களுடைய நிலை எவ்வாறு ஆனது? நமக்கும் இது போன்றதொரு நிலை வெகு விரைவில் வர இருக்கின்றது. நாமும் அவர்களைப் போலவே இந்த மண்ணறையில் தஞ்சம் புக வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதைப் பற்றி நீங்கள் ஏன் சிந்திக்கக் கூடாது!? அந்த மண்ணறையும் மறுமையும் தரக் கூடிய வேதனையிலிருந்து, உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் என்றால், இந்த மரணத்தைப் பற்றி உங்களது மனங்களில் அசை போடுங்கள், அது ஏற்படுத்த இருக்கும் தாக்கத்தில் இருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கு அதற்கான வழிவகைகளை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், எவை எல்லாம் மரணத்தைப் பற்றி உங்களை எச்சரிக்கை செய்பவைகளாக உள்ளனவோ அவற்றின் பக்கம் உங்களது கவனத்தைச் செலுத்துங்கள்.
யஹ்யா பின் முஆத் அவர்கள் இவ்வாறு நமக்கு அறிவுரை பகர்கின்றார்கள் :
மரணித்தவன் சேகரித்து வைத்தவை (தீமை) கள் அன்று வெளிப்படாமல் அல்லது அறிவிக்கப்படாமல் இருக்கப் போவதில்லை: மற்றும் ஒன்று கூட்டப்படும் நாளில் நம் உடலிலிருந்து உதிர்ந்து விட்ட தோளின் செதில்களின் அளவு கூட அன்று வெளிப்படுத்தப்படாமல் இருக்கப் போவதில்லை. யுவ-வுயனாமசையா. டில யுட-ஞரசவரடிந. p.102.
இந்த மரணம் ஏற்படுத்துகின்ற அச்சம் காரணமாக பெரியார்களின் நிலை எவ்வாறு இருந்ததெனில், முஹம்மது பின் அந்நத்ர் என்ற பெரியாரிடம் மரணம் பற்றி ஞாபகப்படுத்தப்பட்டு விட்டால், அச்சத்தின் காரணமாக அவரது உடம்பு நடுநடுங்க ஆரம்பித்து விடும். சிறிது நேரங்கழித்தே அவர்கள் அமைதியடைவார்கள். ளுயனைரட முhயவசைஇ p.203.
ஓ! ஆதமின் மகனே!! உன் தாய் வயிற்றிலிருந்து நீ வெளி வந்தவுடன், நீ அழ ஆரம்பிக்கின்றாய். ஆனால், உன்னைச் சுற்றியிருப்பவர்களோ சந்தோசத்தில் மிதக்கின்றார்கள்.
இந்த உலகத்திலே பிறந்து விட்ட நீ, அந்த நாளுக்காகப் பாடுபட ஆரம்பித்து விடு, நீ மரணமாகப் போகின்ற அந்த நாளுக்காக!! அவ்வாறு நீ செய்தாயானால், (உன்னை அடைந்து விட்ட) அந்த நாளில் நீ சந்தோசமாக இருக்க, ஏனையோர் அழக் காண்பாய்!!
நீ எதற்காக அழப்பட இருக்கின்றாயோ, அதற்காக நீ இன்றே அழுது விடு! மக்களின் தோள்களில் நீ ஏறி அமர்வதற்குள், இறைவனுக்கு அடி பணிந்து வாழ வேண்டிய வாழ்க்கைக்கு, உன்னை நீ இன்றே கட்டாயப்படுத்தி விடு! உன்னைக் கணக்கெடுப்பவர் அணுகு முன்னே, உன்னை நீ கணக்கெடுப்பிற்கு உட்படுத்தி விடு!! உன்னை நீ கணக்கெடுப்பிற்கு உட்படுத்திக் கொள்வதற்கு சில நிமிடங்களே போதுமானது, ஆனால் அதுவே நீ இது வரை இழந்து விட்ட நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், இனி வரும் நாட்களில் அவற்றை ஈடு செய்து கொள்வதற்கு போதுமானதாக இருக்கும்.
அப்துல்லா பின் ஷாமித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
என்னுடைய தகப்பனார் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன். நாம் மிகவும் நல்ல ஆரோக்யத்துடன் இருப்பதாக எண்ணி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களே, எந்தவித நோய்நொடி எதுவுமின்றி, நல்ல நிலமையில் இருந்து கொண்டிருந்த போதே இறந்துவிட்டவர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?! நாம் வெகு காலம் உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களே, திடீரென்று தங்களை விட்டும் பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் எண்ணிப் பார்க்க மாட்டீர்களா?! நீங்கள் மிகவும் ஆரோக்யமாக இருக்கின்றீர்கள் என்று நினைத்து, நம்மை மரணம் இப்போதைக்கு நெருங்காது என்று நினைத்துக் கொண்டீர்களா? மிக நீண்ட காலம் நாம் மிகவும் பாதுகாப்பாக இருந்து விடுவோம் என்று எண்ணிக் கொண்டீர்களா? உங்களது வாழ்வை மரணத்தின் மூலம் முடித்து வைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் மலக்குகளிடம் நீங்கள் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கின்றீர்களா?
நிச்சயமாக, உங்களது வாழ்வை மரணத்தின் மூலம் முடித்து விடக் கூடிய அந்த மலக்குகள் உங்களை நெருங்கி விட்டார்களானால், உங்களது உடல்நலமும், உங்களது படை பலமும், உங்களது செல்வங்களும், உங்களை நெருங்கிக் காவல் காத்துக் கொண்டிருப்பவர்களும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. மரணம் என்பது மிகக் கடுமையான வேதனையைக் கொண்டு வருவதாக இருக்கின்றது, துக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது, அந்த முடிவில்லாத வேதனைக்கு நாம் நம்மை சரணடையச் செய்து விடுவதற்கு, மிகவும் அருகில் இருந்து கொண்டிருக்கின்றோம் இல்லையா? ஓ அல்லாஹ்! மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கைக்கு யார் யாரெல்லாம் தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு நீ உன்னுடைய கருணையைக் காட்டுவாயாக!!
அந்த இறைவன் விதித்து விட்ட அந்தத் தருணம் ஒருவனுக்கு வந்து விட்டால், அவன் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவனாக மாறி, கடந்த நாட்களில் தான் செய்தவற்றை எண்ணிப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றான். கடந்து விட்ட அந்த நாட்களில் தான் செய்தவற்றை எண்ணிப் பார்த்து, அந்த நாட்களுக்கு தான் எவ்வாறு பரிகாரம் தேடிக் கொள்வது என்ற ஆராய்ச்சியில் கவலைப்படத் துவங்கி விடுகின்றான். அந்த இறுதிக் கட்டத்தில், அது தரும் வேதனையிலிருந்து நாம் தப்பித்து விட மாட்டோமா? கடந்த நாட்களில் தான் செய்து விட்ட பாவங்களுக்கு அதன் மூலம் பிராயச்சித்தம் தேடிக் கொள்ள மாட்டோமா? என்ற அந்த இறுதி வேளையில் உணர்ச்சியின் உந்துதலில், தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவனது கவலையானது உச்சத்திற்குச் சென்று விடுகின்றது.
நாம் அன்றாடம் சந்திக்கக் கூடிய மண்ணறைகள் நமக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும், மறுமையைப் பற்றி ஞாபகமூட்டக் கூடியதாகவும், நல்லதொரு பாடத்தை வழங்கக் கூடியதாகவும் இருக்கின்றது. யார் ஒருவனை மண்ணறையை நோக்கி புதைப்பதற்காக எடுததுச் செல்கின்றானோ, அவனும் ஒரு நாள் மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கின்றான். யார் யாரெல்லாம் தான் கொண்டு சென்ற பிணத்தைப் புதைத்து விட்டு, வீடு திரும்பி விட்டார்களோ, அவர்கள் எல்லாம் அவர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை விட்டு, நாளை ஒரு நாள் அதே மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கின்றார்கள். அந்த இடத்திற்கு அவன் தனியொரு மனிதனாகத் தான் செல்ல வேண்டி இருக்கும். அப்பொழுது அவன் வாழ்ந்த காலத்தில் அவன் செய்து விட்ட நற்செயல்களும், தீய செயல்களும் தான் அவனுடன் இணைந்து வர இருக்கின்றன. இருப்பினும் மேற்கண்டவற்றில் இருந்து எத்தனை பேர் பாடம் படித்துக் கொள்கின்றோம். நாம் மிகவும் ஆரோக்யமாக வாழ்ந்த காலங்களில் நம்மில் எத்தனை பேர் நன்மைகளைச் செய்து கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுகின்றோம்.
தாபித் அல்-புனானி (ரஹ்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள் :
சொர்க்கத்தில் தூபா என்ற ஒரு மரம் மரணத்தைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்பவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. இறைவனின் அடியான் மரணத்தைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்வானெனில், அந்த மரணத்தைப் பற்றிய சிந்தனையில் அவனது செயல்கள் யாவும் சீராக அமைந்து விடும். அது அவனது செயல்களிலும் பரிணமிக்கக் கூடியதாக இருக்கும். ர்டைலயவரட-யுரடலைய' றய வுயடியஙயவரட-யுளகலைய'இ டில யுட-ர்யகணை யுடிர ரே'யiஅஇ ஏழட.2. p.326.
நாளை நாம் மரணத்தை நிச்சயமாகச் சந்திக்க இருக்கின்றோம் என்று உறுதியாக நம்பிக்கை கொள்பவர்கள், அவர்கள் தங்களது நாட்களை இறைவனைத் துதிப்பதிலேயும், அவனை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நினைவு கூர்வதிலும், தன்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் அவனபை; பயந்து நடப்பதிலும், தன்னுடைய நாட்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளட்டும். மரணமானது தன்னை அணுகும் வரையிலும், அவர்கள் ஒவ்வொரு நாளும் தன்னுடைய அமல்களை மிகவும் பயபக்திமிக்க முறையில், மிகவும் நேர்மையாளராகத் தன்னை உருவாக்கிக் கொள்வதில் முனைந்து ஈடுபட்டுக் கொள்ளட்டும். இதையே இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
உமக்கு (யகீன் என்னும்) மரணம் வரும் வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் - அல்-ஹிஜ்ர் : 99)
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : முஹம்மது (ஸல்) அவர்கள் பல கோடுகளை வரைந்து விட்டு எங்களிடம் அவற்றைக் காட்டி இவ்வாறு கூறினார்கள் :
இது மனிதன். இது அவனுடைய வாழ் நாட்கள். அவன் (வாழ்நாட்களை) இதனை விரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்தக் கோடு (மரணம்) அவனைத் தாக்கி விடுகின்றது (மரணம் வந்து விடுகின்றது). (புகாரி).
எனவே, இந்த மரணமானது உங்களது கனவுகளைக் கலைத்து விடு முன்னே, உங்களிடம் துக்கத்தைக் கொண்டு வருவதற்கு முன்னே, மறுக்கவியலாத அந்த உண்மையதனை நீங்கள் நினைவு கூற மறந்து விடாதீர்கள்.
மரணத்தின் உண்மைதனை நீங்கள் அறிந்தோர்களாக இருப்பின், உங்களது கண்கள் அவற்றைக் காணுவதற்கு முன்னே, அந்த மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையை அலங்கரித்துக் கொள்வதற்கான பணிகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதற்காக உங்களிடம் உள்ள ஒவ்வொரு மணித்துளியையும் நீங்கள் பயனுள்ளதாகவும், இறைவனுக்குப் பயந்த வாழ்க்கையை வாழக் கூடியவர்களாகவும், நல்லனவற்றை எடுத்துக் கொண்டு, அவற்றின்படி நல்லமல்களைச் செய்து கொள்பவர்களாகவும், இறைவனுடைய நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும் உங்களை நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்து கொண்ட இந்த நல் அமல்களுக்குப் பகரமாக, சொர்க்கச் சோலைகளை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். அங்கு நீங்கள் சந்தோசத்தைத் தவிர வேறு எதனையும் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
காலித் பின் மஃதன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
இந்தப் பூமியில் உள்ளவைகளிலும், இந்த கடலில் வாழக் கூடியவைகளிலும் என்னுடைய மரண சிந்தனையை என்னை விட்டும் திசை திருப்பக் கூடிய எதனையும் நான் தேர்ந்தெடுத்துக் கொள்ள மாட்டேன். மேலும், மரணமே என்னுடைய இறுதி இலக்கு, (நல்லமல்கள் செய்து) அதனை நான் அடைந்து கொள்வதினின்றும் எந்த சக்தியும் அதனது உடல் பலத்தைக் கொண்டு என்னைத் தடுத்து விட முடியாது. 'ர்டைலயவரட-யுரடலைய'இ எழட.5 p.210.
இந்த அளவு நல்லதொரு தன்மையை பெற்றிருப்பவர்கள் எவ்வாறிருப்பார்கள் என்றால், அவர்கள் சொர்க்கத்தை விரும்பக் கூடியவர்கள், அதனது பரப்பளவு இந்த வானம் பூமியைக் காட்டிலும் அதிகமானது என்று அதன் மிது தங்களுடைய ஆசைகளை வளர்த்துக் கொண்டவர்கள். ஏக இறைவனாகிய, அனைத்து ஞானங்களும் நிரம்பப் பெற்றவனாகிய அந்த அல்லாஹ்வைச் சந்திக்க விருப்பமுடையவர்கள்: தாங்கள் செய்து கொண்ட நல்லமல்களுக்கு நற்கூலியைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அந்த ஏக இறைவனுடைய சங்கையான முகத்தைப் பார்த்து, அவனது ஆசியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தங்களை முடிவுறாத சந்தோசத்தில் உட்படுத்திக் கொள்வதற்கு, இந்த உலகிலேயே அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஓர் இறைக் கொள்கைகளை ஏற்று, அதன்படி தங்களது நல்லமல்களைச் செய்து கொண்டவர்கள், நாம் மறுமையில் இறைவனது சங்கையான முகத்தை நோக்கி தங்களது நல்லமல்களுக்காக கூலிகளைப் பெற்று, அதன் மூலம் சொர்க்கச் சோலைகளில் முடிவுறாத சந்தோசத்தில் தங்களை நிலைபெற்றிருக்கச் செய்து கொள்வதற்கும், இந்த உலக வாழ்க்கையிலேயே நல்லமல்களைச் செய்து கொள்வதற்கு, தங்களை விரைவுபடுத்திக் கொள்பவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள் என்பதைக் குறிப்பிட்டு விட்டு, ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
ஆதமுடைய மகனது உயிர் இந்த உலகத்தை விட்டுப் பிரியும் போது, அவனது உயிரானது மூன்று கவலைகளுடன் இந்த உலகத்தை விட்டுச் செல்கின்றது : எதையும் முழுமையைச் சாதிக்காமல் திருப்தியற்ற நிலையிலும், தன்னுடைய குறிக்கோள்களை முழுமையாக அடைந்து கொள்ள முடியாமலும், தான் மரணத்திற்குப் பின் சந்திக்கவிருக்கின்ற வாழ்க்கைக்கு வேண்டியதைத் தயார் செய்து கொள்ளாமலும் செல்கின்ற கவலைகளுடன் இந்த உலகத்தை விட்டுப் பிரிகின்றது. ஆரமயளாயகயவரட-ஞரடரடிஇ p.158.
இந்த உலகத்தை அடுத்து இந்த மனிதன் நிரந்தரமாகத் தங்கப் போகும் இடம் அந்த மண்ணறை தான். அந்த மண்ணறை வாழ்க்கையை நமக்கு முன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களைப் பற்றியும், அவர்கள் இந்த உலகத்தை விட்டும், இந்த உலக வாழ்க்கையிலே நெருங்கிப் பழகியவர்களை விட்டும் தன்னந்தனியாகச் சென்று விட்ட அந்த மனிதர்களைப் பற்றியும், அந்த மண்ணறையின் அமைப்பைப் பற்றியும், அதன் தூண்கள் பற்றியும் ஏன் இந்த மனிதன் சிந்திப்பதேயில்லை?
நம்முடன் கலந்து பழகிய நாம் உயிருக்குயிராக நேசித்த எத்தனை உறவினர்களை, நண்பர்களை அந்த மண்ணறை வாழ்க்கைக்கு நாம் அனுப்பி இருக்கின்றோம். அவர்களில் எத்தனை பேரை நம் தோள்களில் சுமந்து சென்றிருக்கின்றோம். இருப்பினும் நாம் ஏன் அது பற்றிச் சிந்திப்பதில்லை? மரணமானது அவர்களது வீட்டுக் கதவைத் தானே தட்டிச் சென்றுள்ளது, அது நம் வீட்டை என்றுமே தட்டாது என்ற இருமாப்பா? மனிதர்களே! சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
மற்ற எந்த விசயங்களைக் காட்டிலும் மரணத்தைப் பற்றி சந்தேகித்த மனிதனை நான் பார்த்ததில்லை. அவர்கள் நிச்சயமாக மரணம் என்பது வரவிருக்கின்றது என்பதைப் பற்றியும், அது நிச்சயமானது என்பது பற்றியும் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இருப்பினும், அதன் தாக்கத்தைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் நாங்கள் சொர்க்கத்தை விரும்புகின்றோம் என்று கூறுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றவற்றில் இருக்கின்ற உண்மையில், உண்மையைத் தவிர அவர்கள் தவறானவற்றின் அருகில் தான் அவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றவற்றில் இது வரை நான் உண்மையைக் கண்டதில்லை. நாங்கள் சொர்க்த்தை விரும்புகின்றோம் என்று கூறுகின்றார்கள், ஆனால் அதற்கான பாதைகளை அவர்கள் தேடுவதில்லை. யுட-'யுஙiடியா கi னாமைசடை-ஆயரவ றயட-'யுமாசையாஇ டில ஐஅயஅ யுடினரட-ர்யஙங யட-ஐளாடிடைiஇ p.95.
மரணம் என்னும் கடினமான பாதை பற்றியும், அதன் சிரமமான வழிகள் பற்றியும், வலுவில்லாத பாலத்தைக் கடப்பதில் இருக்கக் கூடிய அதன் சிரமத்தைப் பற்றியும், நம்மால் முயற்சி செய்தும் கடக்கவியலாத தடைக் கற்களை அது பெற்றிருப்பது குறித்தும், அதன் மீது நம்மால் வலுவாக ஊண்றி நிற்க முடியாத அதன் தன்மை பற்றியும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். யார் யாரெல்லாம் இந்த உலக வாழ்க்கையிலே இறைவனது திருக்கலிமாவான லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ் - வை முன் மொழிந்து, அதில் உறுதியாக நிலைத்திருந்து, அதன் மீது தங்கள் பாதங்களை உறுதியாக்கி வைத்திருந்தார்களோ அத்தகையவர்களுக்கு அந்த மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையில், இறைவன் அவர்களுடைய பாதங்களை சொர்க்கச் சோலைகளிலே நிரந்தரமாக நிலை பெற்றிருக்கச் செய்வான். அந்த திருக்கலிமாவின் மீது நம்பிக்கை கொள்ளாமல், அல்லது அதன் மீது தங்களது செயல்களைக் கொண்டு உறுதியாக இல்லாதவர்களின் பாதங்கள், மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையில் மிகக் கடினமான பாதையில் செல்லப்பணிக்கப்படும். இறைவன் அத்தகையோர்களது பாதங்களை சறுகச் செய்து, அவர்களை நரகப்படுகுழியில் தள்ளி விடுவான். இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! வுயளடலையவர யுhடடை-ஆயளய'டிஇ டில ஐஅயஅ யுடிர யுடினரடடயாஇ ஆராயஅஅயன டிin ஆராயஅஅயன யுn-யேடியதiஇ p.233.
அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
மரணம் என்பது ஒரு மனிதனுக்கு நல்லதொரு எச்சரிக்கையாக இருக்கின்றது. இது ஒரு அருட்கொடையாகவும், நல்லமல்களைச் செய்து கொள்வதற்குண்டான வேலையை நமக்குத் தரப் போதுமாகதாகவும் இருக்கின்றது. துயஅi'ரட-ருடiiஅ றயட-ர்மையஅஇ டில ஐடிn சுயதயடி யுட-'ர்யnடியடiஇ p.353 யனெ யுண-ணுரானஇ p.257.
எனவே தான் உண்மையான இறையச்சம் கொண்டவர்கள் மரணத்தைப் பற்றி நினைத்து விட்டால், அது கொண்டு வரக் கூடிய வேதனையைக் குறித்துக் கவலை கொள்ளக் கூடியவர்களாகவும், அந்த வேதனiயானது எப்பொழுது வந்து தாக்கும் என்ற நிச்சயம் இல்லாத நிலையையும், அது தன்னுடைய விதிப்பை அரசன் என்றோ ஆண்டி என்றோ, இளமைத் துடிப்புடன் கூடிய வாலிபன் என்றோ அல்லது வயதான முதியவர் என்றோ அது பார்க்காது என்ற நிதர்சனத்தை உணர்ந்த அந்தப் பெருந்தகைகள், தங்களது வாழ்நாளில் ஒரு சில நிமிடத்துளிகளையும் பொன்னாக மதித்து, அந்தத் துளிகள் தன்னை விட்டுப் பிரியும் ஒவ்வொரு நிலையிலும் இறைநினைவையும், ஏக இறைவனைத் துதித்துக் கழிப்பதிலும் செலவிட்டுள்ளனர். (அதாவது, தங்களது ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு உகந்ததாக ஆக்கிக் கொண்டனர். தவிர இறைவனைத் தியானிப்பதற்கு துறவறத்தை மேற்கொள்ளவில்லை. மாறாக, மக்களுடன் மக்களாகக் கலந்து வாழ்கின்ற வாழ்க்கையில் மிகத் தூய்மையான வாழ்க்கையை மேற்கொண்டார்கள்). மேலும், ஒருவருக்கு மரணம் வந்து விட்டால், அவர் அந்தக் கணம் முதல் அவர் மலக்குகளின் தோழராக மாறி விடுகின்றார். யாருக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதோ அவருக்கு இந்த உலக வாழ்க்கை முடிவடைந்து மறுமை வாழ்க்கைக்கு அவர் தயாராகி விடுகின்றார்.
இவற்றை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்திருந்தும் நம்முடைய ஒவ்வொரு இரவுகளும் தூக்கத்திலும், ஒவ்வொரு பகலும் வேடிக்கை விநோதங்களிலும், வீணாக அரட்டை அடிப்பதிலும் தான் கழித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை உங்களில் எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றீர்கள்? இப்றாகிம் பின் ஆதம் (ரஹ்) என்பவர் இது பற்றிக் கூறும் போது :
நமது இதயங்கள் மூன்று வித திரைகளால் மூடப்பட்டுள்ளது. இறைவனுடைய உண்மையான அடியானாக ஆக விரும்புகின்றவன் அந்த மூன்று திரைகளையும் முதலில் அகற்றி விடும் போது தான், உண்மையான ஈமான் அங்கே குடியிருக்க ஆரம்பிக்கின்றது. அந்த மூன்று திரைகளாவன : 1) தான் பெற்றிருப்பதைக் கொண்டு சந்தோசத்தில் இருப்பது, 2) தன்னை விட்டுப் பிரிந்தவற்றை நினைத்து வருந்துவது 3) தனக்குக் கிடைக்கின்ற பரிசுகள் அல்லது புகழ்கள் அல்லது சுகங்களைக் கண்டு அக மகிழ்ந்திருப்பது.
இதில் முதலாவது உடையவன் தன்னுடைய தான் பெற்றிருக்கின்றவற்றை நினைத்து அதன் பூரிப்பிலேயே இருப்பதால், அவன் அது தன்னுடையது என்ற இருமாப்பில் அந்தப் பொருட்களை பிறருக்கும் கொடுத்து உதவ வேண்டுமே என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாது, மிகவும் கஞ்சனாக மாறி விடுகின்றான். இரண்டாவது, தன்னை விட்டுச் சென்ற பொருட்கள் அல்லது தன்னை விட்டும் பிரிந்து விட்டவர்களின் துயரத்தால் ஒன்று கவலையால் தன்னை அழித்துக் கொள்பவனாகவும் அல்லது தொலைந்து விட்ட அந்தப் பொருளைப் பற்றிய துக்கத்தால், இவன் மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்ளக் கூடியவனாகவும் மாறி விடுகின்றான். மூன்றாவதாக, தனக்குக் கிடைக்கின்ற பரிசுகள் அல்லது புகழ்கள் அல்லது சுகங்களைக் கண்டு விட்ட ஒருவன் அது தன்னுடைய திறமைக்குக் கிடைத்த பரிசு, நம்மால் தான் அதைச் செய்ய முடிந்தது, பிறரால் சாதிக்க முடியாததை தான் சாதித்து விட்டோம் என்ற இருமாப்பில், அத்தகைய சந்தர்ப்பத்தை தனக்கு வழங்கிய இறைவனை மறந்தவனாக தற்பெருமை கொள்ள ஆரம்பித்து விடுகின்றான். இந்தத் தற்பெருமையானது ஒருவனது நல்லறங்களைப் பாழடித்து விடக் கூடியதாகவும் ஆகி விடுகின்றது. யுட-'ஐhலய'இ ஏழட.4p.236.
இதற்கும் மேலாக ஒருவன் தன்னிடம் மரணத்தைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொண்டானானால், அவன் தன்னிடம் கடமை தவறாத நல்லொழுக்கங்களை தன்னுள் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றான். இத்தைகய நல்லொழுக்கங்கள் அவனிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவனை மறுமையின் வெற்றியாளனாகவும் ஆக்கி விடுகின்றது. நமது நாட்களும் மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இன்றோ அல்லது நாளையோ ஒரு முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நிச்சயமாக, நாம் எடுத்து வைத்திருக்கின்ற இந்த உண்மையை யார் புரிந்து கொண்டார்களோ, அவர்கள் இப்பொழுதே இந்தக் கணமே தங்களது நல்லமல்கள் மூலம் தங்களது மறுமைப் பயணத்திற்குண்டான வழிகளை எளிதாக்கிக் கொள்வதற்கும், இந்த வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவைக் காட்டிலும் அதிகப் பரப்பளவு கொண்ட அந்த சொர்க்கச் சோலைகளை தனதாக்கிக் கொள்வதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு தங்களை விரைவுபடுத்திக் கொள்ளவும் வேண்டும்.
சிலாஹ் பின் அஷியாம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
மரணம் என்பது உங்களது வாய்ப்பாடாக இருக்கட்டும். நீங்கள் எதை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கின்றீர்களோ அந்தப் பயணத்தில், மிகவும் வளமான வாழ்க்கையை நாம் காலைப் பொழுதில் அடைந்து விடுவோம் என்றோ அல்லது மிகவும் கடினமான வாழ்க்கையை அடைந்து கொள்வோம் என்றோ நீங்கள் உங்கள் கவனத்தைச் செலுத்தாதீர்கள்.
மேலும், மரணத்தைப் பற்றி அதிகம் நினைத்து அது பற்றிய சிந்தனையை தன்னுள் வளர்த்துக் கொண்டவர், இந்த உலக வாழ்க்கையில் நாம் எவ்வளவு வசதிவாய்ப்புக்களைப் பெற்றிருக்கின்றோம் என்றோ அல்லது இந்த உலக வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய இன்பங்களை நினைத்தோ அல்லது தன்னிடம் பெருகி இருக்கின்ற தங்கம் மற்றும் இன்ன பிற ஆபரணங்களைக் குறித்தோ அல்லது தன்னிடம் இருக்கின்ற மாட மாளிகைகள் அதில் நிரம்பியிருக்கின்ற அழகுமிகு இருக்கைகள், மிகவும் நேர்த்தியாகக் கட்டியமைக்கப்பட்ட படுக்கையறைகள், அந்த மாளிகையைச் சுற்றியமைக்கப்பட்ட கண்ணைக் குளிரைச் செய்யும் தோட்டங்கள் யாவும் அவனது மரண சிந்தனையைத் தடுத்து விடாது, அவரது நாட்களை அதில் உல்லாசமாக இறைவனை மறந்த நிலையில் கழிப்பதற்கும் அவரது மனநிலை இடந்தராது. அவரது மனதானது எப்பொழுதும் மறுமைக்கான தயாரிப்பில் நல்லமல்களைச் செய்வதற்கும், நற்செயல்கள்; புரிவதற்கும் விரைந்து கொண்டிருக்குமே ஒழிய, அத்தகையவர்கள் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் தன்னைத் தொலைத்து விட மாட்டார்கள். அல்லாஹ் ஒருவனே நமக்குப் போதுமானவன், அவனது சந்திப்பே நமது இறுதி இலக்காக இருக்கின்றது என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டவருடைய இந்த அறிவானது, இந்த உலக வாழ்க்கையில் நல்லவற்றை ஏற்று நடப்பதற்கு அவருக்கு மிகப் பெரும் மன ஆற்றலைத் தந்து விடுகின்றது.
நல்லனவற்றை ஏற்று அதன்படி நடப்பதற்கு நமக்கு என்ன மன ஆற்றல் வேண்டிக் கிடக்கின்றது என்று நம் மனம் கேட்கலாம். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே குறிப்பிடும் போது :
நீங்கள் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (இரட்சகனிடத்தில்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அதுவோ உள்ளச்சம் கொண்டவர்களுக்கன்றி, (ஏனையோருக்கு) மிகப் பாரமானதா(க இருக்)கும். (அல் குர்ஆன் - சூரா அல் பகறா : 45).
மறுமை வாழ்விற்காக இந்த உலக வாழ்க்கையில் தங்களை வருத்திக் கொள்ளக் கூடியவர்களை இந்த உலக இன்பங்கள் எந்தவித மாற்றத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தி விடாது. தவிர அவர்கள் தங்களுடைய நேரங்களை நல்லமல்கள் புரிவதிலும், அந்த நல்லமல்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்து, பிறருடைய முன்னிலையில் அவற்றை பகட்டுக்காக செய்வதினின்றும், பிறரிடம் அதன் மூலம் புகழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ரீதியிலும் அவர்கள் நடக்காமல், அத்தகைய வழிகேடுகளிலிருந்து தங்களைத் தவிர்த்துக் கொண்டவர்களாகவும் வாழ்வார்கள்.
இத்தகைய நல்லவர்கள் இந்த உலக வாழ்க்கையில் நம் முன்னே தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதும், நமக்கு முன் சென்றவர்கள் அத்தகைய வழிகளை ஏற்று நடந்த வரலாறுகளை நமக்கு விட்டுச் சென்றிருந்த போதிலும், ஒவ்வொரு நிமிடமும் மரணமானது நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே, முஸ்லிம்களாகிய நாம் புகழுக்காக எதையும் செய்யக் கூடியவர்களாகவும், பிறர் முன்னிலையில் பகட்டாக வாழ்ந்து காட்டுவதிலும் நம்முடைய நேரங்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றோமே? இது பற்றி நாம் சிந்திப்பதில்லையே ஏன்?
ஹாரிஸ் பின் இத்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
நான் தாவூத் அத்-தாஈ என்பவரிடம் எனக்கு அறிவுரை வழங்குங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், ஷமரணத்தின் காவலர்கள் உனக்காகக் காத்திருக்கின்றார்கள்ஷ என்று கூறினார்கள். ளுகையவரள-ளுயகறயாஇ எழட.3 p.141.
ஒருவர் எப்பொழுது தன்னுடைய தாயின் கருப்பையை விட்டு வெளியேறினாரோ, அந்த நிமிடத்திலிருந்து மரணத்தின் போது உயிரைக் கைப்பற்றக் கூடிய மலக்குகள் அவருக்காகக் குறிக்கப்பட்ட அந்த நிமிடத்திற்காகக் காத்துக் கொண்டிருக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அவரது இறுதி நொடி முடிவுக்கு வந்து விட்டால், சிறிதும் தாமதியாது அவனது உயிரைக் கைப்பற்றி விடுகின்றார்கள். இதையே, அவுன் பின் அப்துல்லாஹ் என்பவர் இவ்வாறு கூறினார் :
நாளை நாம் இருப்போம் என்று யார் கூறுகின்றாரோ, அவர் மரணத்தைப் பற்றி சிந்திக்கவில்லை, அதை ஒரு பொருட்டாகவே அவர் கருதவில்லை என்று தோன்றுகின்றது. நிச்சயமாக, உங்களில் எத்தனை பேர் காலையில் தங்களது வாழ்க்கையைத் துவங்கி, அதனை முழுமை படுத்தியிருக்கின்றீர்கள். எத்தனை பேர் நாளை நான் இன்னதைச் செய்வேன் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றை அடைந்து கொள்ளாமலேயே சென்றுள்ளார்கள்? நமது வாழ்க்கை பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள் என்றால், அது எவராலும் நிச்சயித்துச் சொல்ல முடியாத, உங்களது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கக் கூடியதாகவும், நீண்ட நம்பிக்கையை வளர்த்து அதன் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்வதை வெறுப்பவராகவும், அந்த எதிர்பார்ப்பிலேயே தன்னை இழந்து விடக் கூடிய தன்மையை வெறுப்பவர்களாகவும் நீங்கள் மாறி விடுவீர்கள். துயஅi'ரட-ருடழழஅ றயட-ர்மையஅஇ p.465இ ளுகைறவரள-ளுயகறயாஇ எழட.3 p.103 யனெ ளூயசாரள-ளுரனசைஇ p.21.
ஒருவர் தன்னுள் ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றார் எனில், அவரது எண்ணத்திற்குப் பின்புலமாக சோம்பேறித்தனம் மறைந்து கொண்டிருக்கின்றது, அவரிடம் விரைந்து முடிவெடுக்க இயலாத தன்மையும் இருக்கின்றது. எனவே தான் அவர்கள் நாளை தான் நாம் இருப்போமே, இன்றைக்கு எதையும் செய்து கொண்டு, நாளைக்கு அதற்காக மன்னிப்பைக் கோரிக் கொள்ளலாம் என்று இறைவன் பக்கம் திரும்புவதிலிருந்தும் தங்களைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் பலர், இதற்குப் பின்பும் நான் இதைச் செய்து கொண்டிருக்க மாட்டேன், நாளைக்கே இதற்கான பிராயச்சித்தம் தேடிக் கொள்கின்றேன் என்று கூறுகின்றார்கள். இருப்பினும் அவர்கள் தங்களுடைய பிராயச்சித்தைத் தேடிக் கொள்வதற்கு முன்பே, மரணம் அவர்களை வந்தடைந்து விடுகின்றது.
அபூ தர்தா அவர்கள் கூறினார்கள் :
யார் மரணத்தைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்கின்றார்களோ, அவர்களிடம் சந்தோசம் குறைவாகவும், பிறரைப் பார்த்து பொறாமைப்படுவதும் குறைவாகவும் இருக்கும். ளுலையசர யு'டயஅi யn-ரேடியடயயஇ எழட.2இ 0.353.
மரணத்தைப் பற்றிய நினைவை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தங்களது இறுதி இருப்பிடம் எவ்வாறு அமையப் போகின்றது என்ற கவலையில் உள்ளவர்கள், அவற்றைத் தங்களது மனக் கண்ணால் பார்த்து அந்த வேதனையின் தாக்கத்தை தங்களது மனங்களிலே இறுத்திக் கொண்டவர்கள், இந்த உலக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் நாம் தனிமைப்படுத்தப்பட இருக்கின்றோம் என்பதை உணர்ந்தவர்கள், இத்தகைய தன்மையைப் பெற்றவர்கள், இந்த அற்ப உலக வாழ்க்கையின் சந்தோசத்தில் தங்களை முற்றிலும் இழந்து விட மாட்டார்கள். தங்களுடைய மனங்களில் i'த்தானின் பொறாமைக் குணத்தை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய மனிதர்கள் தான், மரணமானது தங்களுடைய கழுத்துக்கு மேலாக இருந்து கொண்டு, எந்த நேரமும் தங்களது கழுத்தைத் துண்டிக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றது, என்ற உணர்வைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்தக் கொடுவாள் தான் ஒவ்வொரு நாளும் நமக்கு முன் சாட்சியாளனாக வந்து நின்று, நாம் யாரை உயிருக்குயிராக நேசித்தோமோ, நமது உடன்பிறப்புக்களை, நமது நண்பர்களை, நமக்கு மிகவும் நெருக்கமானவர்களை, அது தன்னுடைய கூர்மையான பகுதியைக் கொண்டு, இந்த உலக வாழ்க்கையினின்றும், நம்முடைய அன்பை விட்டும், நம்முடைய தோழமையை விட்டும், நம்முடைய நெருக்கத்தை விட்டும் துண்டித்து, நம்மிடமிருந்து அவர்களைப் பிரித்து விடுவதையும் நாம் அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் காணக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். அந்த ஏகனாகிய அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையில் உயிருடன் இருக்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்நாளை ஒரு ஓய்வெடுக்கும் தினமாகவும், அவருக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற தவணையை அடைந்து கொள்ளும் வரையிலும், தனது இறுதிப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற பயணியைப் போல இறைவன் விட்டு வைத்திருக்கின்றான். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை வந்து விடுமானால், அவர் ஒரு நொடி தாமதிக்க வைக்கப்படவோ அல்லது ஒரு நொடி முற்படுத்தியிருக்கவோ வைக்கப்பட மாட்டார். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட நிமிடத்தை அப்பொழுதே அடைந்தே தீருவார். இதில் கணப்பொழுதும் தாமதப்படுத்தப்பட மாட்டார்.
எனவே என்னருமை சகோதர சகோதரிகளே!!
நீங்கள் பயணமாகிக் கொண்டிருக்கின்ற இந்த உலக வாழ்க்கையில், எந்த நிமிடத்தில் உங்களது பயணம் தடைபடுத்தப்பட்டு, எந்த நொடிப் பொழுதில் அந்த முடிவு உங்களை வந்தடையும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
உங்களது இந்த வாழ்க்கைப் பயணத்தில், எந்த நாட்டில், எந்த மண்ணில், எந்த நிமிடத்தில் உங்களது பயணம் முடியும் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களே!!
உங்களது இறுதி இலக்கிற்கான அந்த இறுதிப் பயணத்திற்கு உங்களைத் தயார்படுத்தி விட்டீர்களா? மரணம் என்பது நம்மை முன்னெச்சரிக்கை செய்யாமல் திடீரென வந்து தாக்கக் கூடியதாக இருக்கின்றது, அது ஒரு அச்சத்தை உண்டாக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
இதைப் பற்றி உமர் பின் அப்துல் அஜிஸ் அவர்கள் கூறும் போது :
எவரொருவர் தன்னுடைய இதயத்திலே மரணம் என்ற ஒன்று நமக்கு மிக அருகாமையில் இருக்கின்றது என்று கருதிக் கொண்டிருக்கின்றாரோ, அவர் தன்னிடம் எதைப் பெற்றிருக்கின்றார் என்பதையும், தன்னிடம் எவற்றை அதிகமாக சேர்த்து வைத்திருக்கின்றார் என்பதையும் பார்த்துக் கொள்ளட்டும். ளூயச'hர யள-ளுரனரசஇ டில யுள-ளுரலரவiஇ p.21.
எனவே, என்னருமை சகோதரர்களே!! உங்களது பணமும், உங்களது மதிப்பு மரியாதைகளும், அந்தஸ்த்துக்களும், உங்கள் மீது மிகவும் பிரியமாக இருப்பவர்களும் ஆகியவற்றை எல்லாம் விட்டு விட்டு, அந்த மண்ணறைக்கு நீங்கள் தன்னந்தனியாகத் தான் செல்ல இருக்கின்றீர்கள். அங்கே இந்த உலக வாழ்க்கையில் உங்களிடம் அன்பு பாராட்டியவர்களும், உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும் அந்தத் தனிமைப் பயணத்தின் பொழுது உங்களுக்கு எந்த விதத்திலும் துணையாக வர மாட்டார்கள். நீங்கள் இந்த உலக வாழ்க்கையில் உயிருடன் இருந்த காலத்தில் செய்திருக்கின்ற நல்லமல்களும், நற்செயல்களும் தான் உங்களுடன் வர இருக்கின்றன என்பதை தங்களது மனங்களிலே மனனமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
பிலால் பின் சஅத் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கும் பொழுது இவ்வாறு கூறுபவர்களாக இருந்தார்கள். ஓ!! எப்பொழுதும் நிலைபெற்று முடிவில்லாத வாழ்க்கையை வாழப் போகின்றவர்களே, எப்பொழுதும் நிலைபெற்றிருக்கக் கூடியவர்களே!! உங்களை முற்றிலும் அழித்து விடப்படுவதற்காகப் படைக்கப்படவில்லை. உங்களை நிலைபெற்றிருக்க வைப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றீர்கள். என்ன!!! இது வரை நீங்கள் வாழ்ந்த இடம் (இந்த உலக வாழ்க்கை) என்பது மாறி, வேறொரு வாழ்க்கை (மறுமை வாழ்க்கை)க்கு மாற்றப்பட இருக்கின்றீர்கள். ளூயச'hர யள-ளுரனரசஇ டில யுள-ளுரலரவiஇ p.12.
இது தான் வித்தியாசமே ஒழிய நீங்கள் படைக்கப்பட்ட பின் அந்த உங்களின் படைப்பின் நோக்கம் நிறைவேற்றப்படாமல், நீங்கள் வெறுமனே விட்டு விடப்பட மாட்டீர்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முற்றிலும் வித்தியாசமான அந்த வாழ்க்கை மாற்றமானது, அதிக வேதனையையும், கடினமானவற்றையும் நமக்கு கொண்டு வரக் கூடியதாக இருக்கின்றது. இது பற்றி இறைவனே மிக அறிந்தவனாக இருக்கின்றான். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் இந்த மனிதனை எப்பொழுது படைத்தானோ, ஆதத்தின் மகனான இவன் மரணத்தைக் காட்டிலும் மிகவும் வேதனை தரக் கூடிய ஒன்றை அவன் எப்பொழுதும் சுவைத்திருக்கவே மாட்டான். ளூயச'hர யள-ளுரனரசஇ டில யுள-ளுரலரவiஇ p.34.
அந்த வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக நாம் இருக்கின்ற அத்தனை திசைகளையும் தேர்ந்தெடுத்து, அந்தத் திசைகளின் வழிகளை நோக்கி ஓட ஆரம்பிக்கின்றோம். இருப்பினும் நம்மை வந்தடைந்தது மரணமாயிற்றே!! நீங்கள் அதனினின்றும் தப்பிப்பதற்காக எந்தப் பள்ளத்தாக்கை நோக்கி ஓடினாலும், எவ்வளவு வலுவான கோட்டைக்குள் உங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டாலும், அது உங்களை இம்மியளவும் பிசகாது பின் தொடரும். நீங்கள் எங்கிருப்பினும் உங்களை அது வந்தடையும் நேரம் வந்து விட்டால், சிறிதும் தாமதியாது அது உங்களை வந்தடைந்து விடும்.
எனவே என்னருமை சகோதர! சகோதரிகளே!!
உங்களது ஆரோக்கியமும், உங்களது பலமும், உங்களது செல்வங்களும், உங்களது இளமையும், உங்களது மனங்களை மயக்கும் உங்களது தோழர்களின் வார்த்தைகளும் மரணம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறிந்து, அதற்காக உங்களைத் தயார் செய்து கொள்வதிலிருந்து உங்களைப் பாராமுகமாக ஆக்கி விட வேண்டாம். நாம் நலமுடனும், பலத்துடனும், செல்வத்துடன் இருக்கும் பொழுது மரணம் எப்படி நம்மை அணுக முடியும் என்ற எண்ணங்கள் யாவும் உங்களை வழிகெடுத்தும் விட வேண்டாம். அந்த மறைந்திருந்து தாக்கக் கூடியதாக இருக்கின்ற மரணமானது, தனது அம்பை உங்கள் மீது தொடுத்து விட்டது என்றால், அதன் வேதனைகள் தான் உங்களை ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கும். நீங்கள் அந்த நிலையில் எத்தனை பலமுள்ளவர்களாக, ஆரோக்கியமுள்ளவர்களாக, செல்வாக்கு, செல்வம் பெற்றவர்களாக இருப்பினும் சரியே.
அபுதர்தா (ரலி) அவர்கள் கீழ்க்கண்ட வாசகத்தைக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் :
நான் ஏழ்மையை விரும்புகின்றேன், என்னுடைய இறைவன் முன் பணிவுள்ளவனாக, தன்னடக்கமுள்ளவனாக இருப்பதற்கு; நான் மரணத்தை விரும்புகின்றேன், என்னுடைய இறைவனின் சந்திப்பை நாடுகின்ற ஆவலில்; நோய்வாய்ப்படுவதை விரும்புகின்றேன், என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக. ளூயச'hர யள-ளுரனரசஇ டில யுள-ளுரலரவiஇ p.15.
இந்த உலக வாழ்க்கையில் நம் பெற்றுக் கொண்டுள்ள சொத்துக்களும் சுகங்களும் தான் நம்மை சந்தோசமாக வைத்துக் கொள்ளக் கூடியவைகள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மை விட்டுச் சென்று விட்டார்களே அந்த நல்லடியார்கள் எதிலே தங்களது சந்தோசத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்று சிந்திப்போமேயானால், அதற்கு உதாரணமாக கப்ரிலே இருக்கக் கூடிய அந்த நல்லடியார்களைப் பார்த்து பொறாமை கொண்டது போல, நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை. அவர்கள் இந்த உலக வாழ்க்கையின் துன்பங்களை அனுபவித்து, மறுமைக்கான வாழ்வில் இறைவனிடம் அதற்கான நற்கூலியைப் பெற்றுக் கொண்டு, சுகமான மறுமை வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். ளூயச'hர யள-ளுரனரசஇ டில யுள-ளுரலரவiஇ p.17.
நிச்சயமாக, இந்த உலக வாழ்க்கையானது ஒரு சோதனைக் களமாகவும், மறுமைக்கான பயிற்சிக் களமாகவும் இருக்கின்றது. இந்த உலக வாழ்க்கையில், அந்த மறுமைக்கான பயணத்திற்கு இடையே தொங்கிக் கொண்டிருக்கின்ற நாம், அனைத்து விதமான சோதனைகளிலிருந்தும், அவற்றில் வெளிப்படையான அல்லது மறைவான சோதனைகளிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்வதற்கும், அதில் நிலை தடுமாறிவிடாமல் நம்மை நம்முடைய ஈமானில் உறுதியான தன்மையிலேயே என்றும் நிலைத்திருக்க வைப்பதற்கும், அவனுடைய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கும், அந்த ஏக இறைவனுடைய உதவியைக் கோரி நாம் என்றென்றும் துஆச் செய்தவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக இந்த உலக வாழ்க்கையானது அற்பமானது, குறைவான நாட்களைக் கொண்டது. யார் யாரெல்லாம் தங்களுடைய இளமையையும், வாலிபத்தையும் அதிக அளவில் கழித்து விட்டார்களோ அவர்களுக்கு, இறுதியில் மரணமானது, நரைமுடிகள் மூலம் தன்னுடைய எச்சரிக்கைகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது :
தீனுல் இஸ்லாத்தில் யார் நரைமுடியை (முதுமையை)ப் பெற்றிருக்கின்றார்களோ, மறுமை நாளில் அவை அவர்களுக்கு ஒளியாகப் பிரகாசிக்கும். (திர்மிதி, நஸயீ)
எனவே யார் தங்களது தலைமுடிகளும், மீசையும், தாடியும் நரைக்கும் அளவுக்கு இந்த உலக வாழ்க்கையைப் பெற்றுக் கொண்டார்களோ, அத்தகையவர்கள், இறைவன் தன்னுடைய வாழ்நாளை அதிகப்படுத்தித் தந்தமைக்கு நன்றியுடையவர்களாகவும், அவனிடம் சென்றடையக் கூடிய நாளில் மிகவும் பேணுதலாக நடந்து கொண்ட நல்லடியானாகச் சென்று, அவனைச் சந்திப்பதற்குண்டான அமல்களை இந்த உலகத்திலேயே பூர்த்தி செய்து கொண்டு செல்பவர்களாக இருக்க வேண்டும். உன்னுடன் பிறந்த உன்னுடைய உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உனக்கு மிக நீண்ட நாட்களுக்கு முன்பே அந்த மண்ணறையைச் சென்று அடைந்து கொண்டார்கள். ஆனால், இறைவன் தந்திருக்கும் வெகுமதி காரணமாக தாடி, மீசை, முடிகள் அனைத்தும் நரை விழுந்து போன பின்பும் இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றாய். இது உன்னுடைய கடந்த காலப் பாவங்களை நினைத்து வருந்துவதற்கும், அதற்காக இறைவனிடம் பாவ மன்னிப்பைத் தேடிக் கொள்வதற்கும், இறைவன் உனக்கு அளித்த மிகப் பெரும் வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை நம்மில் பயன்படுத்திக் கொண்டவர்கள் எத்தனை பேர். கடந்த காலங்களில் நாம் எவ்வளவு நன்மையான காரியங்களைச் செய்திருக்கின்றோம் என்பதையும், தான் செய்த பாவங்கள், அநியாயங்கள், அக்கிரமங்கள், பிறருக்கு இழைத்து விட்ட தீமைகள் குறித்தும் நம்மில் எத்தனை பேர் சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம்? அதனை நினைத்து வருந்தக் கூடியவர்களாகவும், அதற்காகப் பாவமன்னிப்புத் தேடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டாமா? அத்தகைய நல் வாய்ப்பைப் பெற்றவர்களே!! இன்றே இப்பொழுதே உங்களது பொழுதுகளை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முற்பட மாட்டீர்களா?
மேலே நாம் சுட்டிக் காட்டியிருக்கும் வழியில் இனிமேல் வரக் கூடிய நாட்களையாவது இறை உவப்பிற்கு நெருக்கமாக்கி வைக்கக் கூடிய வகையில் கழிப்பீர்களானால், அது உங்களது மறுமை வாழ்க்கைக்குத் தேவையான நன்மைகளை மிகுதியாகப் பெற்றுக் கொள்ள வழிவகைகளைச் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மரணித்த பின்பு நல்லமல்கள் செய்து கொள்வதற்கும் இயலாது. செய்து விட்ட பாவங்களுக்கு ஈடு செய்து விட முடியாத அந்த நாளில், இன்று நீங்கள் செய்யக் கூடிய உபரி வணக்கங்களும், அதிகப்படியான நல்லமல்களும், நன்மையான காரியங்களும், மறுமையில் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நமக்கு உதவுவதற்கு வாய்ப்பாக இருக்கும். அதற்கு இந்த முதுமை வாழ்வை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள இன்றே முயற்சிகளை நாம் மேற் கொள்ள வேண்டும்.
இதைப் பற்றி சு.ப்யான் அத்தௌரி அவர்கள் இவ்வாறு அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் :
ஈமான் கொண்டவர்கள் தங்களது காலைப் பொழுதை அடைந்து கொண்டார்கள் என்றார்கள், இறைவனுக்கு அதற்காக நன்றி சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். மரணத்திற்குப் பின்பு, அவர்களுடைய அந்த தக்வாவிற்காக (இறையச்சத்திற்காக) நன்றி செய்யப்படுபவர்களாக இருப்பார்கள். யுட-'ஐhலய'. எழட.4. P.435.
இந்த உலக வாழக்கை என்பது கனவு காண்பதைப் போன்றதாகும். மேகங்கள் எவ்வளவு விரைவாக வந்து சென்று மறைந்து விடுகின்றதோ, அதைப் போல இந்த உலக வாழ்க்கையானது, புல்லில் ஒட்டியிருக்கும் பனித்துளியானது சூரினின் ஒளி பட்டவுடன் எவ்வளவு விரைவாக ஆவியாகி மறைந்து விடுகின்றதோ அந்தளவு விரைவாக மறைந்து விடக் கூடியதாக இருக்கின்றது.
மறுமை நாளிலே இந்த உலக வாழ்க்கையை அவர்கள் எவ்வாறு கழித்தார்கள் என்பதையும், எவ்வளவு ஆண்டுகள் இங்கே வாழ்ந்தார்கள் என்பது பற்றியும் வினவப்படும் போது, ஒரு நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர தங்கியிருக்காதது போன்று (அவர்களுக்குத் தோன்றும்). (சூரா அபஸ :46)
நம்முடைய மறுமையை நோக்கிய பயணமானது, நாம் நம்முடைய தாயின் தொப்புள் கொடியை அறுத்துக் கொண்டு பிறந்த போதே ஆரம்பித்து விட்டது. நாம் ஒரு முடிவில்லாத ஒரு முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குலைத் அல்-அஸ்ரி என்ற அறிஞர் கூறுகின்றார் :
நமக்கு மரணம் வரும் என்பதை நாம் அனைவரும் தெளிவாகவே உணர்ந்திருக்கின்றோம். இருப்பினும் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுபவர்களை நம்மால் காண இயலவில்லை. நம் அனைவருக்கும் சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அதற்காகப் பாடுபடுபவர்களை நம்மால் காண இயலவில்லை. நரக நெருப்பு என்ற ஒன்று இருக்கின்றது என்று நாம் அனைவரும் நம்புகின்றோம். ஆனால் அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அதற்காகப் பயப்படுபவர்களையும் நம்மால் காண இயலவில்லை. எனவே மரணம் உங்களை நோக்கி வருவதைக் குறித்து நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக அது உங்களை வந்தடைந்தே தீரும். நிச்சயமாக அது இறைவன் புறத்திலிருந்து, உங்களுக்குச் சாதகமாக உங்களை மகிழ்விக்கக் கூடிய அல்லது உங்களுக்கு எதிரான செய்தியைக் கொண்டு வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. எனவே, எனதருமைச் சகோதர, சகோதரிகளே!! இறைவன் பக்கம் திரும்பவிருக்கின்ற இந்தப் பயணத்தில், இறைவனை நல்ல முறையில் சந்திப்பதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ளுகையவர யள-ளுயகறயாஇ எழட.3. p.231.
நமக்கு முன் சென்று விட்டவர்களைப் பற்றி சிந்திப்பதன் மூலம், மரணத்திற்குப் பின்னால் நமக்கு ஏற்படப் போகும் நிலை குறித்தும், அதற்கு நம்மை எவ்வாறு தயார் செய்து கொள்வது என்பதையும் நாம் முன்னேற்பாடாக திட்டமிட்டுக் கொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்காக வண்டிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பயணியின் நிலையைப் போன்றதாகும். நமக்கு முன்னே நம்முடைய முன்னோர்களும், நம் தந்தையர்களும், நம் தாய்மார்களும், நம்முடன் பிறந்தவர்களும், நண்பர்களும் நம்மை விட்டுச் சென்றுள்ளார்கள். யாரும் இந்த உலகில் நிலையாக வாழப் போவதில்லை. இந்த பூமியின் மேற்பரப்பில் நடந்து திரியக் கூடிய அத்தனையும் என்றாவது ஒரு நாள், இந்தப் பூமியின் மடியில் தஞ்சமடையப் போகின்றது. இந்த உலக வாழ்வின் பயண நாட்கள் சிறிதளவே. ஆனால் மறுமை நாளின் பயண அளவோ முடிவற்றது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த பூமியில் நம் கண் முன்னே எத்தனையோ சந்ததிகள் நம்மை விட்டுச் சென்றுள்ளன. புதியவைகளும் தோன்றிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த உலகை வெகு சீக்கிரத்தில் விட்டுச் செல்ல இருக்கின்ற நாம், அந்தப் பயணத்திற்காக எதனைச் சேர்த்து வைத்திருக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
தங்களுடைய குழந்தைப் பருவத்தில் மரணமடையாதவர்கள், இறைவனின் அருளால் தங்களுடைய வாலிபப் பருவத்தைப் பெற்றுக் கொண்டார்கள். வாலிபப் பருவத்தில் மரணமடையாதவர்கள், இறைவனின் அருளால் தங்களது முதுமையைப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறாக, நாட்கள் கடக்கக் கடக்க, பனை மரத்தின் குறுத்தோலை தன்னுடைய வனப்பை இழந்து வருவது போல, இளமை கடந்து வாலிபம், வாலிபம் கடந்து முதுமை என்று நாம் அந்த இறுதிப் பயணத்திற்கு நம்மை அறியாத விதத்திலேயே நம்மை நகர்த்திக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றோம். நேற்றைக்கு திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த இந்த உடல், இன்று முதுமையையும், தள்ளாமையையும், நோய்களையும், அதன் நோவினைகளையும் பெற்றதாக ஆகி விடுகின்றது. நேற்று வரை இந்த பூமியில் உறுதியாகக் கால் பதித்து நடந்த நம்முடைய பாதங்கள் இன்று தள்ளாட்டத்தைக் கொடுக்கின்றன. இருப்பினும், நாம் இன்னும் அந்த மரணத்தைச் சந்திப்பதற்குண்டான தயாரிப்பில் ஈடுபடவில்லை. மரணம்!!! அது தீடீரென உங்களைத் தாக்கக் கூடியதாக இருக்கின்றது. மரணம்!!! அது நீங்கள் அழையாமலேயே உங்களது கதவுகளைத் தட்டக் கூடியதாக இருக்கின்றது. நீங்கள் நல்ல சுய நினைவிலும், திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்ற பொழுதே அதற்கான தயாரிப்புகளைச் செய்து கொள்ளுங்கள். அந்த ஏக இறைவனான அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த வாழ்க்கைக்கு உங்களை இப்பொழுதே உட்படுத்தி விடுங்கள். நீங்கள் தாமதம் செய்யக் கூடிய ஒவ்வொரு நொடியும், மரணம் உங்களை முந்திவிடக் கூடிய சந்தர்ப்பத்தை நீங்களே அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு சமயம் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்று அவரிடம் நலம் விசாரித்த பொழுது, ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : இரவானதும் மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பவனைப் போலவும், பகல் நேரங்களில், வரவிருக்கின்ற இரவில் உயிருடன் இருப்போமா? அல்லது எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த நிலையில் மரணத்தைச் சந்திப்போம் என்ற சிந்தனையில் உள்ளவனைப் போல இருக்கின்றேன் என்றார்கள்.
இது தான் நல்லடியார்கள், தங்களுடைய வாழ்க்கையின் முன்பாக மரணத்தை முன்னிருத்தி வாழ்ந்து, அந்த மரண பயத்தின் காரணமாக தங்களது வாழ்க்கையைப் பரிசுத்தமாகப் பேணிக் கொள்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுமிருந்தார்கள். என்றைக்கு இந்த உலகத்திற்கு நாம் வந்தோமோ அன்றிலிருந்து, நமது ஒவ்வொரு அங்குலத்திலும் மரணமானது, நமக்காகக் காத்துக் கொண்டிருப்பதை நாம் மறந்து விடுகின்றோம்.. நமது இந்த உலக வாழ்க்கையானது ஒரு நாளைப் போன்றது தான். நமது இந்த வாழ்நாட்களை ஒரு நாளைப் போலக் கணக்கிட்டுக் கொண்டோமென்றால், அந்த நாளின் எந்த நிமிடத்திலும் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற மரணம் என்கின்ற அந்த எதிரி, நம்மைத் தாக்கி அழித்து விடக் காத்துக் கொண்டிருக்கின்றான். அவன் நாம் செல்லுமிடமெல்லாம் நம்மைத் துரத்தி வந்து கொண்டிருக்கின்றான். எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடைந்தேற உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, அந்த மரணத்தை எதிர் கொண்டு, அந்த மரணத்திற்குப் பின்னால் வாழ்க்கைக்கு என்ன தயார் செய்து வைத்துள்ளீர்கள்? என்பதை இப்பொழுதாவது உங்களது மனக் கண்ணில் அசை போட ஆரம்பித்து, அதற்கான தயாரிப்புகளில் இறங்கி விடுங்கள்.
முத்தரிஃப் பின் அப்துல்லா பின் அஷ்-ஷிக்கிர் என்பவர் கூறுகின்றார் :
மரணத்தின் காரணமாக முடிந்து விடாத மகிழ்ச்சியைக் குறித்தும், அவற்றை எவ்வாறு அடைந்து கொள்வது என்பது குறித்தும், நீங்கள் ஆவல் கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கை குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்ற நிலையிலேயே, அவர்களது மகிழ்ச்சியைக் குலைத்து விடுவதற்கும், அதன் பின்னணியைக் குறித்தும், அந்த மரணத்திற்குப் பின்பு என்ன நடக்கவிருக்கின்றது என்பதைக் குறித்தும் நீங்கள் சிந்திப்பீர்களானால், வரவிருக்கின்ற அந்த (கொடுமையான நாளில்) மன்னிப்புக் கோருவதும், அதற்காகப் பிரார்த்திப்பதும் ஒருவரிடம் இருந்து எடுத்துவிடப்படும், அவர்களது மனங்கள் அச்சத்தால் நிரப்பப்பட்டிருக்கும். நிச்சயமாக, அந்த நாளில் (இந்த உலகத்தில் பொடுபோக்காக இருந்தவர்கள்) படும் வேதனையையும், (இறையச்சத்துடன் வாழ்ந்த நல்லடியார்கள்) படும் சந்தோசத்தையும், எழுதுவதற்கு எழுதுகோல்களும் போதாது, அவற்றை எழுதி நிரப்புவதற்கு புத்தகங்களும் காணாது. யுட-'யுஙiடியாஇ p.26.
எமது இந்த அறிவுரைகளை எந்த நல்லுல்லங்கள் செவிமடுக்கின்றனவோ, அவை நிச்சயமாக, நாம் அந்த ஏக இறைவனிடம் திரும்ப இருக்கின்றோம் என்பது குறித்தும் சிந்திக்க ஆரம்பிக்கும். நிச்சயமாக, பாவங்களைச் செய்து விட்டவர்கள், தான் செய்து விட்ட அந்தப் பாவங்கள் குறித்து வருந்தி இறைவனிடம் மன்றாடும் பொழுது, இறைவன் மிகவும் சந்தோசமடைகின்றான். இதைத் தன்னுடைய திருமறையில் இவ்வாறு இறைவன் விவரித்தும் உள்ளான் : அதாவது,
தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகி விட வேண்டாம்: நிச்சயமாக அல்லாஹ் - (உங்களுடைய) பாவங்கள் யாவையும் - (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்,) அவன் மன்னித்து விடுவான்: (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தான் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன் என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: சூரா அல் சுமர் : 53)
எனவே என்னருமைச் சகோதர சகோதரிகளே !!
இதுவரை நீங்கள் கண்டறியாத வேதனையைக் கொண்டு வரக் கூடிய அந்த மரணத்தைப் பற்றியும், அதன் ஆபத்துக்களைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருப்பின், அதைப் பற்றி மறந்தவர்களாகவோ, மிகக் குறைந்த அளவில் எப்பொழுதாவது அதைப் பற்றி, நினைவு கூறக் கூடியவர்களாக நீங்கள் இருக்க மாட்டீர்கள். சிலர் இந்த மரணத்தைப் பற்றி நினைவு கூர்ந்தாலும், அதன் பின்னணியில் இருக்கின்றவை குறித்து சிந்திக்காமலேயே, வெறுமனே அவற்றை நினைவு கூறக் கூடியவர்களாகவும், அதிலிருந்து எந்த வித படிப்பினையையும் பெற்றுக் கொள்ளாதவர்களாகவும் தான் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டிலும், இந்த உலக ஆசைகளிலும், அதன் மினுமினுப்புக்களிலும் தங்களை இழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இத்தகையவர்களிடம் மரணத்தைப் பற்றி நினைவு கூர்ந்தால், அவர்களது மனங்களிலே பயத்திற்குப் பதிலாக வெறுப்புத் தான் உண்டாகின்றது.
உண்மையிலேயே நீங்கள் சிந்திப்பவர்களாக இருப்பின் உங்களது மனங்கள், இந்த அற்ப உலகத்தைப் பற்றியும், அதன் சுகங்களைப் பற்றியும் சிந்திக்காது, எப்பொழுதும் மரணத்தைப் பற்றியும், அதற்கான தயாரிப்புக்கள் பற்றியும் தான் உங்களது மனங்கள் அசை போட்டுக் கொண்டு, அதன் தாக்கத்தை நினைத்து, இதயங்கள் பயத்தால் எப்பொழுதும் அதிர்ந்து கொண்டே இருக்கக் கூடியதாக இருக்கும். ஒரு ஆள் அரவமற்ற பாலைவனத்திலோ அல்லது கொடுமையான கடலின் நடுவே தன்னந்தனியாகப் பயணம் செய்து கொண்டிருக்கக் கூடியவனின் நிலை எவ்வாறு இருக்குமோ, அதாவது தன்னுடைய பயணம் எந்தளவு ஆபத்தின்றி இருக்கும் என்பதையும், தான் சென்றடையக் கூடிய இடம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியும் அவனது மனம் எந்தளவு நடுக்கத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்குமோ அது போல, மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி நம்முடைய இதயங்கள் எப்பொழுதும் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஹமீத் என்பவர் கூறுகின்றார் :
ஒரு முறை ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் மிக ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு, இந்த இதயம் நல்ல முறையில் அமையப் பெற்றிருக்கும் என்றால் அல்லது அதனில் நேரான எண்ணங்கள் நிரம்பப் பெற்றிருக்கின்றதென்றால், ஒவ்வொரு படைப்பினமும் தன்னந்தனியாகவும், உடம்பில் எந்த மறைப்பும் இல்லாமல் இருக்கக் கூடிய மற்றும் இந்த உலக வாழ்க்கையில் ஒருவன் அழுதிருப்பதை விட அதிகமான அளவில் கண்ணீர் சிந்தக் கூடிய அந்த நாளில், அதாவது, அந்த மறுமை நாளில் ஏற்படப் போகும் அமளிகள் குறித்து அவனது இதயம் இரவும் பகலும் கண்ணீர் சிந்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
இந்த மனிதன் இந்த உலக வாழ்க்கையின் அலுவல்களிலிருந்து தடுக்கப்பட்டு (மரணமடைந்து) விட்டானென்றால், அவனது மண்ணறையைப் பற்றியும், அதில் என்னென்ன நடைபெற உள்ளது என்பது பற்றியும், அவன் உயிருடன் இருக்கும் காலத்திலேயே சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். அவ்வாறு அவன் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டானென்றால், இந்த உலக வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்களாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் காணப்படும், வசந்த மாளிகையை அமைக்க வேண்டும், அதில் தோட்டங்களை நிறுவ வேண்டும், பெரிய பெரிய கட்டிடங்களை நிறுவ வேண்டும், மிகப் பெரிய மார்க்கெட்டுகளை உருவாக்க வேண்டும், எப்பொழுதும் அதன் சந்தோசத்தில், அதன் அழகில், அதன் வருமானத்தில் தன்னை எப்பொழுதும் ஈடுபடுத்திக் கொண்டு, அந்த சந்தோசம் மட்டும் போதும் என்று இருந்து விட மாட்டான். தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான், அவனையும் சற்று நமது அலுவல்களுடன் நினைவு கூர்வதற்கும், அந்தத் தொழில்களை இறை உவப்பிற்கு உரிய வழியில் நடத்துவதற்கும் முயற்சித்துக் கொண்டே இருப்பான். இறைவன் மறதி என்பதை நம்முடைய இதயத்தில் பதித்து வைத்திருக்கின்றான். அது இறைவனுடைய மிகப் பெரும் கருணையாகும். ஆனால், அந்த மறதி போய் ஞபாகம் வந்தவுடன், அந்தந்த வேளைகளில் நாம் மரணிக்க இருக்கின்றோம் என்பதை நினைவு கூர்ந்து, நம்முடைய செயல்களை சீர்திருத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்ய வேண்டும். நம்முடைய பாவங்களுக்கு உடனே பிராயச்சித்தம் தேடிக் கொள்ளல் வேண்டும்.
எனவே எனதருமை இஸ்லாமியச் சகோதரர்களே!!
முடிவில்லாத அந்தப் பயணத்திற்குரிய வேலைகளை இன்றே செய்து கொள்ளுங்கள். அந்த ஏக இறைவனான அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்குண்டான அமல்களை இன்றே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.
எவ்வாறு புதுமணத் தம்பதிகள் தங்களுடைய முதல் சந்திப்பின் பொழுது, ஒருவருக்கொருவர் அன்பைப் பொழிந்து, அந்த சந்தோசத்தின் செழிப்பில் அவர்களது இதயங்களும் கண்களும் அவர்களுக்குள் கலந்து, ஒருவர் மற்றவருக்காகத் தங்களை அற்பணம் செய்து கொள்ளக் கூடிய அந்த வாழ்க்கையை எவ்வாறு விரும்பிக் கொள்கின்றார்களோ, அது போல இந்த உலக வாழ்க்கையின் அழகை இந்த மக்கள் சதா விரும்பியவர்களாகவே, அதன் நினைவிலேயே தங்களது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய அழகிலேயே தங்களை லயிக்கவிட்டுக் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு ஆனது என்பது பற்றி நீங்கள் சிந்தித்தீர்களா? எத்தனை பேர் இந்த சந்தோசத்தின் உச்சத்தில் இருந்து கொண்டிருந்த பொழுது, அந்த சந்தோசத்தை அவர்களிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? எனவே, உண்மையை உங்களது கண்களைக் கொண்டு, தீர ஆய்வு செய்து பாருங்கள். அதில் புதைந்து கிடக்கின்ற உண்மைகளை அறிந்து கொள்ள முற்படுங்கள். அந்த மறுமையைப் பற்றியும், அதன் கொடுமைகள் பற்றியும் இறைவன் தன்னுடைய திருமறையிலே குறைவாகவே சொல்லியுள்ளான். அவன் எடுத்துக்காட்டியிருக்கும் உண்மைகள் எல்லாம், இந்த உலக வாழ்க்கையின் வேதனையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானவையாகும். புதிய மணப்பெண்ணைப் போன்றிருக்கக் கூடிய இந்த உலக வாழ்க்கையானது விரைவில் தன்னுடைய வசீகரத்தை இழந்து விடக் கூடியதாக இருக்கின்றது. எவற்றை எல்லாம் நீங்கள் உயிருக்குயிராக நேசித்துக் கொண்டிருக்கின்றீர்களோ அவை எல்லாம் உங்களை விட்டும் வெருண்டோட இருக்கின்றது. உங்களை மிகுந்த அளவில் மகிழ்வித்துக் கொண்டிருக்கக் கூடியவைகள் உங்களுக்கு வேதனையை கொண்டு வர இருக்கின்றன. எவை எல்லாம் உங்களிடம் அதிகமாக உள்ளதாகக் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றீர்களோ அவை எல்லாம் அற்பமானவைகளாகப் போக இருக்கின்றன. எவை எல்லாம் உங்கள் மனதிற்குப் பிரியமாகவைகள் எனக் கருதிக் கொண்டிருந்தீர்களோ, அவை எல்லாம் உங்களுடைய வெறுப்பைப் பெற்றுக் கொள்ள இருக்கின்றன. எவை எல்லாம் உங்களுடைய கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தனவோ, அவை எல்லாம் உங்களுக்கு எரிச்லை உண்டு பண்ண இருக்கின்றன.
எனவே, என்னுடைய சகோதரனே!! தூக்கத்திலிருந்து எழுந்து வா!! இறைவனின் மன்னிப்பின் பக்கம் வந்து விடு!! உன்னுடைய தள்ளாட்டத்திலிருந்து விடுபட்டு உறுதியைக் கடைபிடிக்கப் புறப்பட்டு விடு!! மரணமானது தன்னுடைய அறிவிப்பை உன் மீது வெளியிடப்படுத்துவதற்கு முன், நீ இயலாதவனாகவும், உன்னுடைய அங்க அசைவுகள் உனக்கு மிகப் பாரமானதாகவும் தோன்றுவதற்கு முன், சத்தியத்தை ஏற்றுக் கொண்டவனாக உன்னை நீ மாற்றிவிடு. மரணமானது உன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டால், அதை விட்டும் உன்னைப் பாதுகாத்து விடுவதற்கும், அதிலிருந்து உன்னைத் தேற்றி விடுவதற்கும் யாராவது இருக்கின்றார்களா? மருத்துவர்கள் உன்னிடம் வாக்குறுதி அளித்திருக்கலாம். ஆனால், அவர்களது வாக்குறுதியின் படி உன்னை மீட்டுக் கொண்டு வர இயலவில்லை என்பதைப் பார்க்கவில்லையா? அதன் பின் அவர்கள் தங்கள் கைகளை விரித்து விட்டு, இவரிடம் உயில் அல்லது கொடுக்கல் வாங்கல் இருந்தால் எழுதி வாங்கிக் கொள்ளுவது நல்லது என்று கூறி, உங்களை நோக்கி மரணம் வந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி முன்னறிவிப்புக் கொடுப்பதை நீங்கள் பார்த்ததில்லையா? உலக வாழ்க்கையில் மிகப் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் என்று பெயர் வாங்கிய எத்தனை பேருடைய நாவுகள் தங்களது இறுதிக் கட்டத்தின் பொழுது, அவற்றின் சிறு அசைவுகள் கூட மிகப் பாரமானதாக ஆகி விடுவதையும், தன்னுடைய சகோதரர்களிடம், நண்பர்களிடம் கூட அவர்களை கண்களால் பார்த்து தனக்கு அருகில் இருப்பவர் இன்னார் தான் என்று அறிந்து கொண்ட நிலையிலேயே, அவரை நோக்கி தன் மனதின் எண்ணங்களை வெளியிட முடியாத நிலையில் இருப்பதையும், நாம் அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்வுகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த நாவசைவுகள் துண்டிக்கப்பட்ட பின் நெற்றியின் தளங்களில் வியர்வைத் துளிகள் துளிர்விட ஆரம்பிக்க, வேதனையின் வரிகளை அதில் நீங்கள் படித்துப் பார்த்ததில்லையா!!? இதன் இறுதியாக மரணம் என்பது உங்களுக்கு மிகச் சமீபத்தில் இருக்கின்றது என்பது தெளிவானவுடன், உங்களது கண் இமைகள் கூட மூடித்திறப்பது எவ்வளவு கடினமான வேலையாகி விடுகின்றது!! இது வரை எந்த சந்தேகத்தில் நீங்கள் இருந்தீர்களோ, அந்தச் சந்தேகம் இப்பொழுது உண்மையாகவிருக்கின்றது. உங்களுடைய நாவுகள் எதையோ தெளிவின்றி முணு முணுக்க ஆரம்பிக்கின்றன. உங்களைச் சுற்றியிருக்கக் கூடிய உங்களது இரத்த சொந்தங்கள் உங்களது வேதனையை நினைத்து கண்ணீர் சிந்த ஆரம்பிக்கின்றார்கள். இதோ உங்களுக்கருகில் உங்களுடைய குழந்தைகள் என்றும், இதோ உங்களுடைய சகோதரர்கள் என்றும் உங்களுக்கு சுட்டிக் காட்டப்படும், ஆனால், இறுதி வேளையாயிற்றே!! உங்களால் பேசவும் இயலாது, ஏன்?! உங்களது நாவுகளைக் கூட உங்களால் அசைக்க முடியாது.
பின் உங்களுக்கென்று குறிக்கப்பட்ட நேரம் நெருங்கி விட்டால், உங்கள் முதுகுத் தண்டுடன் பிணைக்கப்பட்டிருந்த உங்களது உயிர்கள், வானத்தை நோக்கி சிறிது சிறிதாக உயர ஆரம்பிக்கின்றன. உங்களுக்குப் பிரியமான நெருக்கமானவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். கபன் துணிகள் தயாராகின்றன. நீங்கள் குளிப்பாட்டப்படுகின்றீர்கள். கபன் துணி சுற்றப்படுகின்றது. நீங்கள் மரணமானதும் யார் யார் உங்களைக் காண வந்தார்களோ, அவர்கள் அனைவரும் உங்களைச் சுமந்து சென்று, உங்களைத் தன்னந்தனியான அந்தப் பயணத்திற்கு வழியனுப்பி விட்டு விட்டுத் திரும்பி விடுவார்கள். இது வரை உங்களது உலக வாழ்க்கையைப் பார்த்து யார் யாரெல்லாம் பொறாமை கொண்டார்களோ, அவர்கள் இனி அத்தகைய பொறாமை கொள்வதிலிருந்து ஓய்வெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். உங்களின் மீது மிகப் பிரியமாக இருந்த உங்களது குடும்பத்தவர்கள், உங்களது நினைவை மறந்தவர்களாக, நீங்கள் உங்களது செயல்களுடன் பிணைக்கப்பட்டு, உங்களது மறுமைக்கணக்குகள் கணக்கிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், உங்களது சொத்துக்களின் மீது அவர்கள் தங்களது கணக்குகளைத் தீவிரப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது தான் இந்த உலக வாழ்க்கையில் அலங்கோலங்கள்.
எனதருமைச் சகோதர சகோதரிகளே!! அந்த முடிவை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்!!
அந்த நாளுக்காக நாம் எதைத் தயார் செய்து வைத்திருக்கின்றோம்? அந்தப் பயணத்திற்கு நீங்கள் தயார் தானா?
என்ன கைசேதம்!! ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும், இது தான் நீங்கள் விடை பெற்றுச் செல்லக் கூடிய நேரம் என்று நமக்கு முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் அது பற்றி நாம் பாராமுகமாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே யார் யாரெல்லாம் இறைவனைப் பயந்து, அவனுக்கு அடிபணிந்து தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களோ, மேலும், இந்த உலக வாழ்க்கையை நாம் நிரந்தரமாக விட்டு விட்டு, நிரந்தரமானதொரு உலகத்திற்குச் செல்லப் போகின்றோம் என்று எண்ணிச் செயல்பட்டார்களோ அத்தகைய நல்லடியார்கள் கூட்டத்தில் நாமும் சேர்ந்து கொள்ள இறைவன் தன்னுடைய கருணையை நம் மீது பொழிவானாக! ஆமீன்!!
நமக்கு முன் வழிகாட்டி விட்டுச் சென்று விட்ட, அந்த நல்லடியார்களைப் பின்பற்றி, அத்தகைய நல்லடியார்கள் கூட்டத்தில் நம்மைச் சேர்த்துக் கொள்ளாமல், நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றி, என்னருமைச் சகோதர சகோதரிகளே சற்றுச் சிந்திக்க வேண்டாமா?
சுஃப்யான் அத் தவ்ரி அவர்கள் கூறுவது போல, நம்முடைய வாழ்க்கையை நாம் என்றைக்கு சீர்படுத்த முயற்சிக்கப் போகின்றோம். கீழே உள்ள சம்பவத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள நபரைப் போல நாம் எப்பொழுது நம்மை ஒப்புவமைப்படுத்திக் கொள்ளப் போகின்றோம்?
சுஃப்யான் அத் தவ்ரி அவர்கள் கூறுகின்றார்கள், ஒரு முறை நான் கூஃபா (ஈராக்) வில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு முதியவரைச் சந்தித்த பொழுது அவர் கூறினார், நான் இந்தப் பள்ளியில் கடந்த 30 வருடங்களாகத் தொழுது வருகின்றேன். மேலும், மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுமிருக்கின்றேன். அந்த மரணமானது எனக்கு இந்த நிமிடமே வந்து விடுமானால், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நான் எதையும் தேடிக் கொள்ள மாட்டேன். நிச்சயமாக நான் அதை அடைந்து கொள்வதிலிருந்து யாரும் எதுவும் செய்து விட முடியாது, நானும் அதிலிருந்து என்னைத் தடுத்துக் கொள்ள எதுவும் செய்து கொள்ள மாட்டேன்.
இறைவனுடைய அருளைப் பெற்றுக் கொண்டவர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டார்கள். அவனது அருளைப் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற நாம், நாமும் அத்தகைய அருளைப் பெற்றுக் கொள்வதற்காக தாமதப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாம் அந்த இறுதி நிலையைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் அளவு தாமதப்படுத்தப்படலாம். இதற்கிடையில், இறைவன் எத்தகைய முறையில் அவனைப் பயந்து வாழ வேண்டிய வாழ்க்கையைப் பற்றி நமக்கு அறிவுறுத்தித் தந்துள்ளானோ, அத்தகைய வழியில் நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்து, அவனது அருளைப் பெற்றுக் கொள்வதற்காக நம்மை அதற்கான தயாரிப்பில் ஈடுபடுத்திக் கொண்டவர்களாகவும், நாம் செய்து விட்ட பாவங்கள் மன்னிக்கப்படும் அளவுக்கு நல்லமல்கள் செய்து விடுவதற்காகவும் இந்த இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் இறைவன் நம்மை ஆக்கி அருளட்டும்!!
இந்த மரணத்தைப் பற்றி முத்தரிஃப் பின் அப்துல்லா என்ற அறிஞர் குறிப்பிடும் பொழுது :
என்னுடைய முடிவு எப்பொழுது இருக்கும் என்று நான் சிந்தித்து விட்டேனென்றால், நான் என்னுடைய நினைவையே இழந்து விடுவேன். இறைவன் மறதி என்பதை இந்த மனிதனுக்குத் தந்திருப்பதனால், மரணத்தைப் பற்றி அவன் சிறிது மறந்து நிம்மதியாக இருக்கின்றான். அந்த மறதி மட்டும் இல்லை எனில், அவன் இந்த உலக வாழ்க்கையில் சந்தோசத்தை அனுபவிப்பதையும், பெரும் பெரும் கடைத் தெருக்களை அமைப்பதில் உள்ள ஆசையையும் அவன் விட்டு நீங்கியிருப்பான்.
இந்த உலக வாழ்க்கையில் நாம் நன்மைகளைச் செய்து கொள்வதற்கே பணிக்கப்பட்டிருக்கின்றோம். இருப்பினும் நாம் அவற்றை மறந்து பொடுபோக்குத் தனமாகத் திரிகின்றோம். இந்த உலகத்திலேயே நாம் இறைவன் ஏவியுள்ள நன்மையானவற்றை ஏற்று நடக்காமல், மரணத்திற்குப் பின்பு, மண்ணறையில் சென்றா இந்த நல்லமல்களை நம்மால் செய்ய இயலும்? இன்னும் நமக்கு காலங்கள் சென்று விடவில்லை. இன்றே இப்பொழுதே இறைவனின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கும், அவனை வணங்குவதில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்களாகவும் நம்மை ஆக்கிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டாமா?
யஸீத் அர்-ரக்காஷி என்ற அறிஞர் தன்னைத் தானே இப்படிக் கேட்டுக் கொள்ளக் கூடியவராக இருந்தார் :
ஓ! யஸீத்!!! நீ அழ வைக்கப்படுவதற்கு முன்னால், நீ அழுது விடு!!
ஓ! யஸீத்!!! உன் மரணத்திற்குப் பின்னால், உனக்காக யார் (நீ தொழுகாமல் விட்டவற்றைத்) தொழ முடியும்?
ஓ! யஸீத்!!! உன் மரணத்திற்குப் பின்னால் (நீ நோற்காமல் விட்ட) நோன்புகளை யார் தான் நோற்க முடியும்?
ஓ! யஸீத்!!! உன் மரணத்திற்குப் பின்னால் யார் தான் உனக்காகப் பிரார்த்திக்க முடியும், மேலும் உனக்காகப் பாவ மன்னிப்புக் கோர முடியும்?
இந்த உலக வாழ்க்கையின் சந்தோசத்தில் தங்களை இழந்து விட்டவர்களுக்குத் தான் மரணமானது, அவர்களது மறுமை வாழ்க்கையைப் பாழடித்து விடக் கூடியதாக இருக்கின்றது. எனவே, நீங்கள் அந்த சந்தோச (சொர்க்க) த்தின் மீது ஆசை கொள்ளுங்கள், அது தான் முடிவற்ற சந்தோசத்தை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த சொர்க்கத்தை அடைந்து கொள்வதற்காக, இறைவனுக்கு உங்களை நீங்களே அற்பணித்து விடுங்கள். அவனிடமே நம்முடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது என்று நினைத்து, அவனை அவன் கூறியுள்ளவாறு துதியுங்கள், பிரார்த்தியுங்கள், உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட அழுது அவனிடமே மன்றாடுங்கள். அல் ஆலா பின் ஸியாது என்ற அறிஞர் கூறும் பொழுது :
ஒருவருக்கு மரணம் நெருங்கி விட்டது என்று நினைப்பாராகில், அவர் இறைவனிடம் அந்த மரணத்தைத் தாமதப்படுத்தும்படி பிரார்த்திக்கட்டும். அவர் பிரார்த்தித்தபடி இறைவன் அவர்களுக்கு மரணத்தைத் தாமதப்படுத்தி விட்டானென்றால், அவர் அந்த சந்தர்ப்பத்தை நல்லமல்கள் செய்து கொள்வதற்காக அதிகமதிகம் பயன்படுத்திக் கொள்ளட்டும், அவனுக்குக் கீழ்ப்படிந்த வாழ்வை மேற்கொண்டிருக்கட்டும்
நமக்கு மரணம் நிகழவிருக்கின்றது என்று ஒருவன் அனுதினமும் எண்ணிக் கொண்டிருப்பானாகில், அத்தகைய எண்ணங்கள் அவனுடைய நிலையையும், அவருடைய பணியையும், கொள்கைகளையும் மாற்றி, அவரது எண்ணங்களையும், நோக்கங்களையும் தூய்மையாக்க வல்லவையாக அமைந்து விடும். எந்த நிமிடத்திலும் மரணமானது நம்மை அணுகி விடலாம் என்று ஒருவன் எண்ணிவிடுவானேயானால், நல்லமல்களைச் செய்து நல்லடியாராக ஆவதினின்றும் எதுவும் அவனைத் தடுத்து விடாது, அத்தகைய சந்தர்ப்பங்களில் அதில் ஏற்படும் கடினமான சூழ்நிலைகளைக் கண்டு மனந்தளர்ந்து விடவோ அல்லது களைப்படைந்து விடவோ அல்லது ஓய்வு கொண்டோ இருக்க மாட்டார். இத்தகைய நிலையில் நாம் இருப்போம் என்றால், சுஃப்யான் அத் தவ்ர்p அவர்கள் கூறியது போல, ஷமரணமானது நல்லடியார்களுக்கு சுபச் செய்தியைக் கொண்டு வரக் கூடியதுஷ அல்லது ஷமரணமானது வணக்கசாலிகளுக்கு சுகத்தைக் கொண்டு வரக் கூடியதுஷ, என்பதாக அமைந்து விடும்.
நாளை நடக்கவிருப்பதைப் பற்றி, நீங்கள் மரணத்தின் மிக அருகில் இருப்பது பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அதில் நீங்கள் செய்து வைத்திருக்கும் குறைந்த அளவே உள்ள நன்மைகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள். நீங்கள் மரணத்தைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் மரணமடைவதற்கு முன்னாள், அதாவது உயிருடன் இருக்கும் காலத்தில், மரணத்தின் மூலம் நம்முடைய வாழ்வு முடிந்து விடுவது போல, மரணத்திற்குப் பின் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எண்ணிக் கொண்டீர்களா? அவ்வாறல்ல!!
நிச்சயமாக அந்த வாழ்க்கையான (நரகத்) தில், நீங்கள் மரணமான நிலையிலும் கூட அனைத்து வேதனைகளும், அனைத்து சித்திரவதைகளும், நீங்கள் கண்டிராத, நீங்கள் உங்கள் கண்களால் பார்த்திராத அளவில் இருக்கும் என்பதை இறைவன் தன்னுடைய திருமறை வாயிலாக இவ்வாறு விவரிக்கின்றான்.
(நரகத்தின் பொறுப்பாளரிடம்) 'மாலிக்கே! உமதிரட்சகன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்' என்று சப்தமிடுவார்கள்: அதற்கு அவர் 'நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில், மரணிக்காது) தங்கியிருக்க வேண்டியவர்களே' என்று கூறுவார். (அல் ஜுக்ரூப் 77)
மரணத்திற்குப் பின்பு வரக் கூடிய அந்த வாழ்க்கையில், இந்த உலக வாழ்க்கையில் பொறுமையை மேற்கொண்டு நல்லமல்கள் செய்தவர்களுக்கு முடிவில்லாத இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும், அல்லது இந்த உலக வாழ்க்கையை வீணானவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்கு முடிவில்லாத வேதனைகளைக் கொண்ட நரகமும், மேற்கண்ட இரண்டில் ஒன்றை இந்த மனிதர்களுக்கு பரிசுகளாக வழங்குவதற்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.
(அந் நாளில்) ஒரு கூட்டத்தார் சுவனத்திலும், ஒரு கூட்டத்தார் நரகத்திலும் (இருப்பார்கள்)'. (அஷ்ஷுரா : 07)
முஆத் பின் யஹ்யா என்பவர் இவ்வாறு விவரிக்கின்றார் :
இரண்டு கடினமான பிரச்னைகளை, அதாவது மரணத்தின் மூலம்; பெற்றுக் கொண்ட இந்த அடிமைகளுடைய வளங்களைப் பற்றி, இன்றுள்ள சமூகமும், கடந்து போன சமூகமும் சந்திக்க இருக்கின்றன, என்று கூறிய பொழுது, மக்கள் அவரிடம் அவை யாவை என்று கேட்டனர். ஒருவர் மரணமடைந்த பின் அவரது சொத்துக்கள் வாரிசுகளால் எடுத்துக் கொண்டு அவர்களிடையே பங்கீடு செய்யப்பட்டுவிடினும், அவர் அந்த சொத்துக்களைச் சேர்த்தது பற்றியும், அவற்றைப் பங்கீடு செய்ததது பற்றியும் வினவப்பட இருக்கின்றார். மரணத்தின் காரணமாக அவருக்கும் சொத்துக்கும் சம்பந்தம் அற்றுப் போனாலும், அவர் அது குறித்து மறுமையில் வினவப்பட இருக்கின்றார் என்று பதில் கூறினார்கள்
அப்துல்லா பின் உமர் அவர்கள் ஒரு முறை, அன்சாரிகளில் இன்ன பெயருடைய நபர் இறந்து விட்டார். இறைவன் அவருக்குத் தன்னுடைய கருணையை வழங்கட்டும் என்று கூறி விட்டு, அவர் ஒரு லட்சம் மதிப்புள்ள பணத்தை விட்டுச் சென்றுள்ளார், என்று கூறி விட்டு இவ்வாறு கூறினார்கள். (அவர் இறந்து அவருக்கும் அவருடைய பொருளுக்கும் தொடர்பு அறுந்து இருப்பினும்) இந்தப் பணம் அவரை விட்டு விடாது. எதையுமே பதிவு செய்யாமல் விட்டு விடாத ஒரு புத்தகம் இருக்கும் பொழுது, எப்படி அந்தப் பணம் பற்றி வினவப்படாமல் இருக்கும்? அந்தப் புத்தகமானது எந்தச் சிறிய அல்லது பெரிய செயல்களைக் கூட விட்டு விடாது, பதிவு செய்யக் கூடியதாக அல்லவா இருக்கின்றது?
அந்த மரணமானது இவர்களுக்கு வேதனையையும், அச்சத்தையும், பயத்தையும், நடுக்கத்தையும் கொண்டு வந்தாலும், சொர்க்கத்தை விரும்பக் கூடியவர்கள், தன்னுடைய மரணத்திற்குப் பின்தான் அந்த சொர்க்கத்தை அடைந்து கொள்ள முடியும். இப்னு அப்துஹு ரப்பிஹீ என்பவர் மஃகூல் என்பவரைப் பார்த்து, நீங்கள் சொர்க்கத்தை விரும்புகின்றீர்களா? என்றவுடன், மஃகூல் அவர்கள் யார் தான் சொர்க்கத்தை விரும்ப மாட்டார்கள்? என்று பதில் கூறினார்கள். அப்படியானால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள். நீங்கள் மரணமடையாதவரை சொர்க்கத்தைக் காண முடியாது, அதாவது, மரணத்திற்குப் பின்பு தான் நீங்கள் சொர்க்கத்தைக் காண முடியும், என்று பதில் கூறினார்கள்.
மேலே உள்ள கேள்விக்கான பதிலில் மரணமடைவதற்கு ஒருவரை வற்புறுத்துவது அதன் நோக்கமல்ல. மரணத்தை ஒருவன் விரும்பும் போது தான், அவன் தன்னுடைய மறுமை வாழ்வை நினைத்துப் பார்க்க முடியும். மறுமை வாழ்வு தன் கண் முன்னே நிழலாடும் பொழுது தான், அவனுடைய செயல்கள் சீர்திருத்தம் பெரும். ஏனெனில் மறுமையானது, சொர்க்கம், நரகம் என்று இரண்டு வெகுமதிகளைக் கொண்டதாக இருக்கின்றது.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்கு விரும்பக் கூடிய ஒருவன், அவன் தன்னுடைய மன இச்சைகளுடனும், மறுமை என்ற ஒன்று இருக்கின்றதா என்ற சந்தேகத்துடனும் பயணம் செய்து அந்த மறுமையின் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. இறைவனுடைய வெகுமதிகளை அடைந்து கொள்ளக் கூடிய வழிமுறைகள் என்பது ஈமானிய உறுதியையும், அதில் நிலைத்த தன்மையையும், பொறுமையையும் கொண்டதான பாதையால் அமைக்கப்பட்டது. அவைகள் யாவும் இறைவனுடைய திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிகாட்டிகளாகும்.
மேலும், அவர்கள் (யூதர்கள்) பொறுமையாக இருந்த பொழுது, நம்முடைய கட்டளையைக் கொண்டு நேர்வழி நடப்பவர்களான தலைவர்களையும் அவர்களில் இருந்து நாம் ஆக்கினோம். அவர்கள் நம்முடைய வசனங்களை (ஆதாரங்களை, படிப்பினைகளை, அடையாளங்களை,) உறுதி கொள்பவர்களாகவும் இருந்தனர். (அல் குர்ஆன். 32:24)
ஒரு நாள் அலி (ரலி) அவர்கள் மிம்பரில் உட்கார்ந்து கொண்டு, இறைவனைத் துதித்தவர்களாக, அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, மரணத்தைப் பற்றி மக்களுக்கு ஞாபகமூட்டினார்கள். ஓ!! அல்லாஹ்வினுடைய அடிமைகளே!!! மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு எந்த வழியும் கிடையாது. நீங்கள் அதை விரும்பினாலும் அது உங்களை அணைத்துக் கொள்ளவும், நீங்கள் அதை வெறுத்து ஓடினாலும் உங்களை அணைத்துக் கொள்ளவும் தாயராக இருக்கின்றது. எனவே, உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். அது உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும், விடாமல் உங்களைத் துரத்திக் கொண்டும் இருக்கின்றது. மண்ணறையைப் பற்றி, அதன் மிகச் சிறிய, இருளான, தனிமையை எண்ணி நீங்கள் மிகவும் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, மண்ணறையானது, சுகங்களைத் தரவிருக்கின்ற சொர்க்கச் சோலையாகவோ அல்லது நரக நெருப்பைக் கொண்டுள்ள ஒரு புதை குழியாக இருக்கின்றது. நிச்சயமாக, ஒவ்வொரு நாளும் அந்தப் புதைகுழியானது இவ்வாறு அறிவிக்கக் கூடியதாக இருக்கின்றது, ஷநான் தான் இருட்டான வீடாகவும், நான் தான் நெளிகின்ற புழுக்களைப் பெற்றதாகவும், நான் தான் தனிமையான வீடாகவும் இருக்கின்றேன் என்று அறிவிப்புச் செய்து கொண்டே இருக்கின்றது. நிச்சயமாக அந்த (மறுமை) நாள் வந்து விட்டதென்றால், (அதன் கொடுமைகளையும், அதன் கொடூரத்தையும் கண்டு விட்டால், அதன் பயங்கரத்தால்) பிறந்த குழந்தைக்குக் கூட நரைத்து விடும், (உறுதியான உடலைப் பெற்ற) வாலிபர்கள் போதை மயக்கம் கொண்டு தள்ளாடுபவர்களாகவும் ஆகி விடுவார்கள்
அதனை நீங்கள் காணும் அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள்: கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் சுமையை வைத்து விடுவாள். மேலும் மனிதர்களை (பீதியின் கடுமையால்) மதி மயக்கம் கொண்டவர்களாக இருக்க நீர் காண்பீர். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியவர்களும் அல்லர். எனினும் அல்லாஹ்வுடைய வேதனை மிகக் கடினமானது. (அல்குர்ஆன் : ஹஜ்-02)
நிச்சயமாக இந்த வேதனையானது இதைவிட அதிகமாகவும் இருக்கும்: அந்த நரக நெருப்பானது மிகவும் சூடானது, அதன் அடித்தளம் மிகவும் ஆழமானது. அதில் தண்டனைக் கருவிகளாக பழுக்கக் காய்ச்சப்பட்ட, கூர்மையான ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும். தாகத்திற்கு தண்ணீருக்குப் பதிலாக அங்கே சீழும், சலமும் தான் கிடைக்கும். அதில் மலக்குகள் தான் காவலாளிகளாக நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் உங்கள் மீது எந்தக் கருணையையும் காட்ட மாட்டார்கள். இதைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, அலி (ரலி) அவர்கள் அழுக, அங்கு கூடியிருந்தவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். பின் மீண்டும் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக, சொர்க்கமும் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. அது நீள, அகலங்களில் இந்தப் பூமியைக் காட்டிலும் மிகப் பெரியது. அது நல்லடியார்களுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இறைவன் நம் அனைவரையும் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்து வைத்தும், அந்த கொடுமையான நரக நெருப்பில் இருந்து நம் அனைவரையும் பாதுகாக்கவும் துஆச் செய்து கொள்வோமாக என்று தன்னுடைய உரையை முடித்தார்கள். யுட-டீனையலயா றயn-Nihயலயாஇ எழட. 7p.149).
என்னுடைய சகோதர சகோதரிகளே!!! நீங்கள் எப்பொழுது பாவ மன்னிப்புக் கோரப் போகின்றீர்கள்? இந்தக் கேள்வியை நீங்களே உங்களிடம் என்றைக்குக் கேட்டுக் கொள்ளப் போகின்றீர்கள்?
பிலால் பின் ஸஅது (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
நம்மில் ஒருவர் ஒருவரிடம், நீங்கள் மரணமடைவதற்கு விரும்புகின்றீர்களா? என்று கேட்க வேண்டும். அவர் சொல்வார். நான் மரணமடைய விரும்பவில்லை என்று கூறுவார். நாம் மீண்டும் அவரிடம், ஏன்? என்று கேட்க வேண்டும். அதற்கு அவர், நான் பிராயச்சித்தம் தேடவும், நல்லமல்கள் செய்யவும் உயிருடன் இருந்தாக வேண்டும் என்று கூறுவார். மீண்டும் அவரிடம், சரி, நல்லது!! நல்லமல்கள் செய்து கொள்ள ஆரம்பித்து விடுங்கள் என்று கூறப்பட்டால், அவன் நான் இனிமேல் செய்வேன் என்று கூறுகின்றான். இதன் மூலம் அவன் மரணமடைய விரும்பவும் இல்லை. நல்லமல்களைச் செய்யவும் விருப்பம் கொள்ளவில்லை. இறைவனுடைய பாதையில், அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள அவனுக்கு விருப்பமில்லாமல், நல்லமல்கள் செய்து கொள்வதைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றான். ஆனால், அவன் தாமதப்படுத்திக் கொண்டிருப்பது போல், எந்த வேலையும் செய்யாமல் காலங்கள் அவனுக்காகக் காத்திருப்பதில்லை, அவனது நேரத்தை (மரணத்தை)த் தாமதப்படுத்துவதில்லை. யுட-'யுஙiடியா. p.91.
உத்பா அவர்கள் இவ்வாறு ஒரு முறை கூறினார்கள் :
மரணத்தைப் பற்றி அடிக்கடி ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் ஏராளமான செல்வங்களைப் பெற்றிருக்கும் பொழுது, மரணமானது அந்தச் செல்வங்களை மிகச் சிறியதாக ஆக்கி விடும். மேலும், நீங்கள் குறைவான செல்வத்தைப் பெற்றிருக்கும் பொழுது, அது உங்களது செல்வங்களை உங்களுக்குப் போதுமானதாக ஆக்கி வைத்து விடும். யுட-'யுஙiடியா. p.40.
நாம் கவனிக்கத்தக்க ஒரு உண்மை என்னவென்றால், நம்மில் அநேகம் பேர் இந்த உலக வாழ்க்கையில் அலங்காரத்தில் நம்மை மூழ்கடித்து விடுகின்றோம். ஒரு நேரத் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நிறைவேற்ற முடியாததாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நல்லமல்களைச் செய்வதற்காகத் தவறியவர்களும், அதற்காகத் தங்களது இயலாமையைக் கடிந்து கொண்டு தங்களைத் தாங்களே வருந்திக் கொள்பவர்களை நாம் கவனிக்கத் தவறி விடுகின்றோம். இருப்பினும், இந்த வாழ்க்கையானதில் எல்லாவற்றையும் செய்து கொண்டு, அதாவது நன்மைகளையும் செய்து கொண்டு, அதே நேரத்தில் தீமைகளிலிருந்து தங்களைத் தவிர்த்துக் கொள்ளாத வாழ்க்கையைத் தான் நம்மில் அநேகம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஒரு முறை ஒரு பெரியார் இவ்வாறு கூறினார் :
எனதருமை மக்களே!! உங்கள் மீது ஒரு முடிவு சுமத்தப்பட்டு விட்டது. அந்த முடிவான மரணம் என்பது மிக அருகில் இருக்கின்றது. இந்த உங்களது உலக வாழ்க்கையானது ஒரு முடிவுக்கு வர இருக்கின்றது. (நல்லமல்கள் செய்யாமல்) இழந்து விட்ட நாட்களைப் பற்றி உங்களில் எத்தனை பேர் நினைத்து வருந்தியிருக்கின்றீர்கள்? இந்த முடிவு பெற இருக்கின்ற இந்த உலக வாழ்க்கையின் நினைவானது நல்லோர்களின் எதிர்பார்ப்புகளைச் சுருக்கி விட்டது. வரவிருக்கின்ற வாழ்க்கையை நாம் எவ்வாறு எதிர்கொள்வோம் என்ற பயத்தின் காரணமாக அவற்றை எதிர் கொள்வதற்கான ஆயத்தங்களை அதிகப்படுத்தியும், தாங்கள் செய்து விட்ட பாவங்களுக்காக அவர்களது கண்கள் வருத்தத்தால் கண்ணீரை வடிக்கின்றன. அவ்வாறு தான் செய்த பாவங்களை நினைத்து வருந்திக் கண்ணீர் வடிக்கின்ற அந்த அடியானின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான். அவன் தன்னுடைய பாவங்களுக்காக அவனால் தான் கண்ணீர் வடிக்க முடியும், அவனது பாவங்களுக்காக வேறு யாரும் கண்ணீர் வடிக்க இயலாது. அவனது செயல்களுக்கு அவன் மட்டுமே பொறுப்பாக்கப் பட இருக்கின்றான். அவனுக்காக வேறு யாரும் பிணையாக்கப்பட மாட்டார்கள். எனவே, நாம் அனைவரும் அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமே திரும்ப இருக்கின்றோம் என்று நினைத்து, அது பற்றி ஆழ்ந்து சிந்தித்து, அவனது திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றே நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நமக்கு முன்னால் சென்று விட்ட நல்லடியார்கள் எவ்வாறு அந்த மறுமையைப் பற்றியும், நாம் சென்றடையக் கூடிய இடம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியும் சிந்தித்து, அதன்படி தங்களது செயல்பாடுகளை இறைப் பொருத்தத்திற்கு உவப்பானதாக ஆக்கிக் கொண்டார்களோ அவ்வாறு நாம் ஆக்கிக் கொள்ள வேண்டாமா?
விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வோர் ஆத்மாவும் (மறுமை) நாளைக்காக தான் எதனை முற்படுத்தியிருக்கின்றததென்பதைப் பார்க்கட்டும். இன்னும், அல்லாஹ்வை நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன். (அல்குர்ஆன்:அல் ஹஷ்ர்:18).
அர்-ராபிஃ பின் குதைம் என்பவர், இந்த மரணத்தைப் பற்றிக் கூறும் பொழுது, மரணமானதை நீங்கள் எப்பொழும் சுவைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள், அதிலும் அதை ஒரே ஒரு முறை தான் சுவைத்துப் பார்க்க இருக்கின்றீர்கள், என்று கூறினார்கள்.
ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ஓ ஆதமின் மகனே!! மறுமைக்காக இந்த உலக வாழ்க்கையை நீங்கள் விற்று விடுங்கள், நீங்கள் இரண்டையும் வெற்றி கொண்டவர்களாக ஆகி விடுவீர்கள். இந்த உலக வாழ்க்கைக்காக, அந்த வரவிருக்கின்ற மறுமையை நீங்கள் விற்று விடாதீர்கள். இரண்டிலும் நீங்கள் தோல்வியடைந்து விடுவீர்கள். நாம் வாழக்கூடிய இந்த உலக வாழ்க்கையானது மிகவும் குறுகியது. நல்லோர்களாக வாழ்ந்தவர்கள் எல்லாம் நமக்கு முன் (வாழ்ந்து காட்டி விட்டுச்) சென்று விட்டார்கள். (சொர்க்கம் அல்லது நரகம் இரண்டில்) நீ எதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னுடைய தவணைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றாயா? இறைவன் மீது சத்தியமாக, (மரணமானது) நிச்சயமாக வரவிருக்கின்றது, அது உங்களை அடைந்து விட்ட பின்னால், உங்களில் பிந்தியவர்கள் உங்களை முந்தியவர்களைச் சந்திக்க இருக்கின்றீர்கள், என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த மறுமையைப் பற்றி நீங்கள் பயந்து கொள்ளுங்கள். அதன் பயத்தால் உங்களது இதயங்கள் நடுநடுங்கக் கூடியதாக இருக்க வேண்டும். மறுமை என்பது மிகவும் கடினமானது. இந்த உலகத்திலே இறை உவப்பிற்குரியவர்களாக வாழ்ந்தவர்கள், மிகவும் எளிதாக அந்தச் சோதனைக் களத்தைக் கடந்து விடுவார்கள். இந்த உலக வாழ்க்கையைப் பொடுபோக்காகவும், வீணாகவும் கழித்தவர்களது நிலமை மிகவும் சிரமமானதாக இருக்கும். அவர்கள் நரக நெருப்பின் பக்கம் ஓட்டப்பட்டு கொண்டு செல்லப்படும் பொழுது, அதன் எரியும் நாக்குகளில் இருந்து வெளிப்படும் சத்தம், நம்மைக் குலைநடுங்க வைக்கக் கூடியதாக இருக்கும். உங்களது கால்கள் தடுமாறும், உங்களது பாவங்களால் உங்களது முதுகுகள் மிகப் பெரும் சுமையைச் சுமந்து நிற்கும்.
யா அல்லாஹ்!! எங்களில் யார் யாருக்கெல்லாம் உன்னுடைய கருணையைச் சொறிந்தாயோ அத்தகையவர்களான நபிமார்கள், உண்மையாளர்கள், 'ஹீதுகள், நேர்வழி பெற்ற நல்லடியார்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர்களை அந்தச் சொர்க்கச் சோலைகளிலே தோழர்களாகப் பெற்றவர்களாக எங்களை ஆக்கி அருள்வாயாக!! யார் யாரையெல்லாம் அந்தச் சொர்க்கச் சோலைக்குச் சொந்தக் காரர்களாக ஆக்கி வைத்திருக்கின்றாயோ அத்தையவர்களுடன், எங்களையும், எங்கள் தந்தைமார்கள், எங்கள் தாய்மார்கள், எங்களது சகோதரர்கள், எங்களது மனைவிமார்கள், எங்களது வழித்தோன்றல்கள், மற்றும் முஃமினான முஸ்லிம்கள் அனைவரையும் சேர்த்தருள்வாயாக!! மேலும் நரக நெருப்பில் இருந்து எங்களது முகங்களைப் பாதுகாத்து அருள்வாயாக!!!!!
ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ஆதமினுடைய மகன் இந்த மூன்று விசயங்களுக்காக அன்றி வேறு எதற்கும் தன்னுடைய தலையைத் தொங்க விடுவதில்லை. 1) மரணம் 2) நோய் 3) வறுமை. இதுவன்றி வேறு எதற்கும் அவன் தலைகுனிவதில்லை. இவற்றை அவன் சந்திக்காத வரை பெருமையுடன் தன் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிகின்றான். யுட-ர்யளயn யட டீயளசiஇ p.41.
மரணமென்பதை அனைத்து உயிர்களும் ஒரு முடிவைச் சந்திக்கக் கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கின்றான். இதன் மூலம் இறைவன் தன்னுடைய வல்லமையையும், தன்னுடைய அதிகாரத்தையும், தன்னுடைய ஆற்றலையும் இந்த படைப்பினங்களுக்கு முன்பாக நிரூபித்துக் காண்பித்துக் கொண்டிருக்கின்றான். மிகப் பெரும் மன்னனாக விளங்கிய ஸீஸர் போன்றவர்களின் கழுத்துக்கள் துவண்டு, மரணத்தின் மூலம் இந்த மண்ணில் விழ வைத்தானே, அத்தகைய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! தங்களுக்கு மரணமே வராது என்று இறுமாப்புக் கொண்டிருந்தவர்களான இவர்களை இறைவன், தன்னுடைய மரணம் என்னும் தீர்ப்பு மூலம் அவர்களது ஆணவத்தை ஒழித்துக் காட்டினான். இத்தகைய பெரும் பெரும் வல்லரசர்களைத் தன்னுடைய இறுதி முடிவின் மூலம், அவர்களது கோட்டைகளிலிருந்து அவர்களை ஒரு சிறு ஓட்டைக்குள் இறைவன் மாற்றி விட்டான். பெரும் பெரும் ஆடம்பரமான உல்லாசமான பளீரென்ற அரண்மனைகளிலிருந்து கும்மிருட்டானதொரு மண்ணறைக்குள் அவர்களை வசிக்கச் செய்து விட்டான்.
யா அல்லாஹ்!! உன்னைச் சந்திக்கின்ற அந்த இறுதி நாளில், எங்களது கடைசி நிமிடத்தில் கூட உன்னுடைய பொருத்தத்திற்காக நல்லமல்களைச் செய்து விட்டு உன்னைச் சந்திக்கின்றவர்களாக எங்களை ஆக்கி அருள்வாயாக!!! யா அல்லாஹ்!!! எங்களது கடைசி நிமிடத்தில் i'த்தானின் ஊசலாட்டத்தின் மூலம் எங்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான குழப்பங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக!! அந்தக் குழப்பத்தில் எங்களை நாங்கள் இழந்து விடாமல் இருக்கவும், நாங்கள் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றோம். எங்களது பாவங்களை மன்னித்து இம்மை, மறுமை வெற்றியாளர்களாக எங்களை ஆக்கி அருள்வாயாக!! நரக நெருப்பில் இருந்து எங்களைப் பாதுகாத்தருள்வாயாக!! சொர்க்கச் சோலைகளிலே வீற்றிருக்கும் நல்லடியார்களுடன் எங்களையும் சேர்த்தருள்வாயாக!! உன்னை நீ புகழ்ந்தவாறு நாங்கள் உன்னைப் புகழவும், நீ எங்களை எவ்வாறு அமல்கள் செய்யப் பணித்தாயோ, அதில் எந்தவித இடைச்செறுகளும் இன்றி அவற்றைப் பேணக் கூடியவர்களாகவும் எங்களை ஆக்கி அருள்வாயாக!! ஆமீன்!!! ஆமீன் யாரப்பில் ஆலமீன்!