குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.2.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நேரங்களைப் பேணுதல்
நேரங்களைப் பேணுதல்


1. நேரங்களைப் பேணுதல்
இரண்டு பாக்கியங்களில் பெரும்பாலான மக்கள் அலட்சியமாய் இருக்கின்றனர். அவை ஆரோக்கியமும் ஓய்வுமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரீ (6412)
ரமலானில் கடைசிப் பத்து நாட்கள் வந்து விட்டால், நபி (ஸல்) அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு இரவு நேரங்களை (இறைவணக்கங்களால்) உயிர்பிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் இரவில் விழிக்கச் செய்வார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) : நூல் : புகாரீ (2024) மற்றும் முஸ்லிம்.
வாழ்நாளை எப்படிக் கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதைச் செயல்படுத்தினான்? என ஐந்து விசயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த  மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : திர்மிதி (2531)
பயணம் செய்யும் யாரேனும் (கொள்ளையர்களை) அஞ்சினால் முன்னிரவிலேயே பயணத்தை மேற்கொள்ளட்டும். யார் முன்னிரவில் பயணம் செய்கிறாரோ அவர் இலக்கை அடைகின்றார். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பொருள் மதிப்பு மிக்கதாகும்! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பொருள் மதிப்புமிக்கதாகும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (2567).

பயன்கள் :
   பயனுள்ள வழிகளில் நேரங்களைப் பேணுவது அவசியம்
   மனிதன் தன் நேரங்கள் பற்றி விசாரிக்கப்படுவான்
   பெரும்பாலோர் நேரங்களை வீணடிக்கின்றார்கள். அதை அலட்சியம் செய்கின்றார்கள்.
, ,