இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

23/02/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

குர்ஆனின் ஒளியில் இசையும் பாடலும்
கவிஞர்களும் கவிதைகளும்


நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெரும் பெரும் கவிஞர்கள் இருந்துள்ளனர் என்பதை திருமறையில் இறைவன் கவிஞர்களைப் பற்றி ஒரு சூராவே இறக்கியருளியிருப்பதிலிருந்து புலனாகிறது. மேலும், மக்காவில் இறங்கிய குர்ஆனிய வசனங்கள் (மக்கி வசனங்கள்) யாவும் கவித்துவம் உடையனவாகவும இருக்கக் காணலாம். முதினாவில் இறங்கிய வசனங்கள் உரைநடை போலவும், மக்காவில் இறங்கிய வசனங்கள் கவிதை நடையிலும் அமைந்திருப்பதைக் காணலாம்
.
மேலும், ஒருவனது வயிற்றில் சீழ் நிரம்பி இருப்பது தெரிந்தும், அவனது இதயத்தில் கவிதை நிரம்பி இருப்பதை விட, அந்த சீழ் நிரம்பி இருப்பது சிறந்தது என்ற ஹதீஸின் மூலம் கவிதை எவ்வாறு வெறுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.
மேலும், அந்தக் காலத்திலும் கவிதைகள் யாவும் புனைந்துரைக்கப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட, பொய்களைச் சுமந்ததாகவே அமைந்துள்ளது.
(விசுவாசிகளே!) ஐஷத்தான்கள் எவர் மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
(செயலால்) பாவியான, (சொல்லால்) அதிகமாகப் பொய் கூறும் ஒவ்வொருவரின் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
தாங்கள் கேள்விப்பட்டதை, (அப் பொய்யர்களின் காதுகளில்) போடுகிறார்கள்| அவர்களில் பெரும்பாலோர் (பெரும்) பொய்யர்களே!
இன்னும் கவிஞர்கள் - அவர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். (அஷ்ஷுஅரா :221-224)
நிச்சயமாக, இது சங்கை மிக்க ஒரு தூதரின் கூற்றாகும். இது எந்தக் கவிஞரின் கூற்றுமல்ல. (அல்ஹாக்கா. 40-41)
கவிஞர்களைப் பொய்யர்கள் என்றும் அவர்கள் கூறுவது ஐஷத்தானின் பொய் நிரம்பிய கபட வார்த்தைகள் தான் என்பதையும் மேற்கண்ட குர்ஆன் வசனம் எடுத்துரைக்கின்றது.
மேலும், கவிஞர்கள் எந்தளவு வெறுக்கப்பட்டனர் என்பதையும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் எந்தளவு அவர்களின் கவிதைகள் இஸ்லாத்திற்கு முரண்பாடாக இருந்தன என்றால்,
நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த தாயிப் நகர வாசியும், கவிஞருமான கஃப் பின் சுஹைர் என்பவருடைய சம்பவம் நமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டும் பாடமுமாகும்.
கஃப் பின் சுஹைர் இஸ்லாத்தைத் தழுவுமுன் இஸ்லாத்திற்கு எதிராக கவிதை புனைந்து பாடுவதில் மிகவும் பிரபலமானவர். எந்தளவுக்கு என்றால் அவரைக் கண்ட இடத்தில் கொலை செய்து விடும்படி தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆனால் இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்தது. இதைக் கேள்விப்பட்ட கஃப்பின் சுஹைர் அவர்கள் தன்னை மறைத்தவராக நபி (ஸல்) அவர்களின் சமூகம் வந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு,அ ந்த இடத்திலேயே இஸ்லாத்தைப் பற்றி தூய முறையில் 25 அடிகள் கொண்ட ஒரு பாடலைப் பாடுகின்றார்கள். அப்பாடலின் வரிகளைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் தம் மேலங்கியை எடுத்து, கஃப் பின் சுஹைர் (ரலி) அவர்களுக்குப் போர்த்தி அவரைக் கௌரவித்தார்கள் என்ற செய்தியை கீழ்;க்காணும் நூல் மூலம் அறிய முடிகின்றது.زادا لمعاد - بانت سعاد 
ஆக, கவிஞர்களையும், கவிதைகளையும் வெறுத்த இஸ்லாம், ஒரு சில வரையறைக்குட்பட்டு,இஸ்லாத்தின் தூதையும், இஸ்லாமிய ஆன்மீக சிந்தகை கொண்ட பாடல்களையும் அவை இசை கலக்காமல் இருக்கும் போது, அத்தகைய பாடல்களையும் கவிஞர்களையும் இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது.
ஒரு முறை ஹஸன் பின் தாபித் (ரலி) அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்னு கதீர் - ல் காண  முடிகின்றது.
உனது பாடலைக் கொண்டு காஃபிர்களை வீழ்த்துவீராக! ஜிப்ரீல் (அலை) உன்னுடன் இருக்கிறார்! இப்னு கதீர். புhகம்.3. பக்.391.
மேலும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கவிஞர்களும், பாடகர்களும் இருந்துள்ளனர். ஆவர்களில் முக்கியமானோர் அப்துல்லா பின் ரவாஹா, கஅப் பின் சுஹைர், அபு சுப்யான், ஹஸ்ஸான் பின் தாபித் போன்றோர்களாவார்.
அஷ்ஷுஅராவில், 221 - 224 வசனம், கவிஞர்கள் பொய்யர்கள், அவர்கள் பேசுவதும், பாடுவதும் ஐஷத்தானின் வார்த்தைகள் என இறங்கிய போது, மேற்கண்ட ஸஹாபாப் பெருமக்கள் அழுத வண்ணம் ரசூல் (ஸல்) அவர்களிடம் சென்று, யா! ரசூலுல்லாஹ்! நாங்களுமா? ஏன வினவ, இவர்களைத் திருப்திப்படுத்து முகமாக இறைவன் கீழ்க்கண்ட வசனத்தை அதன் தொடராக இறக்கியருளினான் என்பதைக் குர்ஆன் விளக்கவுரைகளிலிருந்து அறிய முடிகின்றது.
ஆயினும் அவர்களில்) விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்து அல்லாஹ்வையும் நினைவு கூர்ந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின பழி தீர்த்துக் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர .. .. .. (அஷ்ஷுஅரா : 227) ஆதாரம் : இப்னு கதீர்)
மேலும், அறிஞர் பெருமக்களால் சில சந்தர்ப்பங்களைச் சுட்டிக் காட்டப்பட்டு, அத்தகைய சந்தர்ப்பங்களில் வெகுளித்தனமான, இஸ்லாத்திற்கு முரனில்லாத வகையில் பாடப்படும் பாடல்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளன.
கடினமான வேலையின் போது, அந்த வேலையின் கடினத்தை மறப்பதற்காகப் பாடப்படும், கோரஸான பாட்டுக்கள், இதற்கு உதாரணமாக அகழ்ப் போரின் போது, மதினாவைச் சுற்றி அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஸஹாபாப் பெருமக்கள் தம் களைப்பை மறக்கப் பாடிய பாடலும்| அது சமயம் நபி (ஸல்) அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல், அவர்களுக்காக துஆச் செய்தது| இந்த சம்பவமே அனுமதிக்கான உதாரணமாகும்.
அடுத்து, நீண்ட தூர பயணத்தின் போது, அதாவது அன்றைய நாளில் ஒட்டகம், மாடு, குதிரை போன்றவற்றில் பயணம் செய்யும் போது, களைப்புத் தெரியாமலும், சோர்வடையாமலும் இருக்கப் பாடும், இஸ்லாத்திற்கு முரணில்லாத பாடல்களும் ஆகும்.
நபி (ஸல்) அவர்களின பயணத்தின் போது, ஒட்டகத்தை வழி நடத்திச் செல்பவரான அன்ஜாஸா அவர்கள் குறிப்பிடுவதாவது,
நாங்கள் பயணத்தின் போது, எங்களது பயணப் பிராணிகளை வேகமாக ஓட்டுவதற்கு பாட்டுப் பாடி பயணம் செய்வோம். (புகாரி,முஸ்லிம்)
மேலும், தனிமையில் இருப்பவர் தன் தனிமையைப் போக்கிக் கொள்ளவும், தாம் தன் குழந்தையைத் துயில் கொள்ளச் செய்யவும், அழும் குழந்தையைத் தாலாட்டிச் சமாதானம் செய்யவும், பாடக் கூடிய வெகுளித்தனமான பாடல்களும் ஆகிய இவைகள் இஸ்லாத்திற்கு முரணாகாத வகையில் பாடப்படுமானால், அவற்றை அறிஞர் பெருமக்கள் அனுமதித்துள்ளனர்.
மேலும், அத்தகைய பாடல்கள் ஆன்மீகத்தைப் போதிக்கக் கூடியதாகவும், மக்களிடம் நன்னடத்தையை உருவாக்கக் கூடியதாகவும், தொழுகை, ஜகாத், ஜிஹாத் போன்ற இறைவழிப்பாடுகளை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம்.
ஆது தவிர, இதற்கென நேரம் குறிப்பிட்டு வழமையான முறையில் பாடப்படுமானால், அது நூதனச் செயலாகும். (பித்அத்). மேலும், இதற்கெனவே, தனியாகப் பாடல்களை உருவாக்கி அதையே பாடுவதை வழமையாகவும் கொள்ளக் கூடாது.
, ,