குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

10.5.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சிறந்த முஸ்லிம்!
சிறந்த முஸ்லிம்!
(தொகுப்பாளர். கீழ்க்கரை. முஹம்மதுமதார்) அபுதாபீ.

--------------------------------------------------------------------------------

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார். அவர் மிகவும் கெட்டவர் எனக் கூறிய நபி(ஸல்), அவருக்கு அனுமதியளியுங்கள் என்றனர். அவர் வந்ததும், அவரிடம் மென்மையாகப் பேசினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவரைப் பற்றி ஒரு விதமாகக் கூறிவிட்டு, அவரிடம் மென்மையாகவும் பேசினீர்களே'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆயிஷாவே! ஒருவனது (கை மற்றும் வாயால் ஏற்படும்) தீங்குக்கு அஞ்சி மக்கள் எவனை (விமர்சிக்காது) விட்டு விடுகிறார்களோ அவன்தான் மறுமை நாளில் மனிதர்களின் மிகவும் கெட்டவன்'' என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்
எவரது நாவால், கரத்தால் ஏனைய முஸ்லிம்களுக்குத் தீங்கு ஏற்படவில்லையோ அவர் தான் முஸ்லிம் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மக்களிடம் நெருக்கமாகவும் மென்மையாகவும் எளிமையாகவும் நடப்பவருக்கு நரகம் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த்(ரலி) நூல்கள்: அஹ்மத்
நல்லவற்றில் எதையும் அற்பமாக நினைத்து விடாதே! உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே என்பதும் நபிமொழி. அறிவிப்பவர். அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்
, ,