இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

17/05/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தொண்டை வலி

தொண்டை வலி என்பது என்ன?
உங்கள் பிள்ளை தொண்டை வலிக்கிறது என்று முறையிடும்போது அவனுக்கு தொண்டை வலி வியாதி இருக்கலாம். உங்கள் பிள்ளை தொண்டையில் வறட்சியை , அரிப்பை, கடியை அல்லது வலியை உணரலாம்.
தொண்டை வலிக்கு பல காரணங்கள் அல்லது தூண்டுதல்கள் இருக்கலாம்.
·         தடிமல் அல்லது ஃப்ளூ போன்ற நோய்கள் பெரும்பாலும் தொண்டை வலிக்குக் காரணமாக இருக்கிறது.
·         சிலவேளைகளில் பிள்ளைகள் தங்கள் வாயை திறந்து கொண்டு நித்திரை செய்து பின் உலர்ந்த வாயுடன் விழிப்பதும் தொண்டை வலிக்குக் காரணமாகலாம்.

·         உள் மூக்கில் சளி ஒழுகும் பிள்ளைகளுக்கு அவர்கள் தொண்டையைத் தெளிவாகும்போது அல்லது இரவில் இருமும்போது தொண்டை வலி உண்டாகலாம்.
·         குறிப்பிட்ட சில வைரஸ்கள் வாயையோ அல்லது தொண்டையையோ சேதப்படுத்தியிருக்கலாம்(லீஷன்ஸ்) அல்லது புண்ணாக்கியிருக்கலாம்.
·         ஸ்றெப்டோகோகஸ் என்றழைக்கப்படும் ஒரு பக்ரீரியாக் குடும்பம், 10 இல் 1 வரையான தொண்டை வலி நோய் தொற்றக் காரணமாக இருக்கிறது. இது தொண்டை அழற்சி(ஸ்றெப் துரோட்) நோய் என்று அறியப்படுகிறது. இந்தக் குடும்பதில், பிரிவு A பீற்றா-ஹெமோலிற்றிக் ஸ்றெப்ற்றோகோகஸ் (GABS) ஆனது சிக்கலுடன் கூடிய மிகக் கடுமையான தொற்று நோயை உண்டாக்கும். பிரிவுC மற்றும் பிரிவுG உம் கூட தொண்டை அழற்சி நோய்க்குக் காரணமாகலாம். ஆனால் நேரிடக்கூடியGABS சிக்கல் இருக்காது
·         தொண்டையிலுள்ள உள்நாக்கில் நோய் தொற்றிக்கொள்ளலாம். இது உள்நாக்கு அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்படும்போது, உள்நாக்கு புண்ணாகலாம், பெரிதாகலாம், மற்றும் வழக்கத்துக்கு மாறாக பளபளக்கும் சிவப்பு நிறமாக மாறலாம்.
தொண்டை வலிக்கான அடயாளங்களும் அறிகுறிகளும்
·         உங்கள் பிள்ளை தொண்டை அல்லது கழுத்து வலிக்கிறது என்று சொல்லலாம்.
·         உங்கள் பிள்ளை விழுங்கும்போது, பானங்கள் பருகும்போது, அல்லது உணவு உண்ணும்போது வலிக்கிறது என்று சொல்லலாம்.
·         சிறு பிள்ளைகள் உணவு உண்ணவோ அல்லது பானங்கள் குடிக்கவோ மறுக்கலாம், வழமையைவிட சிறிய அளவுகளையே உட்கொள்ளலாம் அல்லது பாலூட்டும்போதும் விழுங்கும்போதும் அழலாம்.
உங்கள் பிள்ளைக்கு வேறு அறிகுறிகளும் இருக்கலாம்.
·         சில பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல்,மற்றும் தொண்டைக் கரகரப்பு இருக்கலாம்.
·         சில பிள்ளைகளுக்கு குமட்டல் மற்றும் வயிற்று வலி இருக்கலாம். அவர்கள் தொண்டை வழக்கத்தை விட அதிக சிவந்ததாக இருக்கலாம். அங்கு சீழும் இருக்கலாம். இந்த அறிகுறிகளெல்லாம் தொண்டை அழற்சி நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.
எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்
பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் பிள்ளையை உங்கள் வாடிக்கையான மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள் :
·         உங்கள் பிள்ளைக்கு 24 மணி நேரத்துக்கு மேலாக (1நாள்) தொண்டை எரிச்சல் நோய் இருந்தால், விசேஷமாக காய்ச்சலும் இருந்தால்
·         உங்கள் பிள்ளை தொண்டை அழற்சி நோய் உள்ள எவருடனாவது தொடர்பு வைத்திருந்திருந்தால்
·         உங்கள் பிள்ளைக்கு கடந்த காலங்களில் தொண்டை அழற்சி நோய் இருந்திருந்தால்
·         உங்கள் பிள்ளைக்கு தொண்டை அழற்சி நோய் இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், தொண்டையொற்றி சோதனை செய்வார். அதாவது, மருத்துவர் ஒரு நீண்ட மருந்திட்ட பஞ்சுறையை உபயோகித்து உங்கள் பிள்ளையின் தொண்டையின் பக்கங்களில் கசியும் திரவத்தில் கொஞ்சத்தை சோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைப்பார். இது தான் உங்கள் பிள்ளைக்கு தொண்டை அழற்சி நோய் இருப்பதை உறுதிசெய்யும் ஒரே ஒரு வழியாகும். ஆயினும் பெரும்பாலான தொண்டை வலி நோய்க்கு தொண்டையொற்றி சோதனை தேவையில்லை.
·         தொண்டையொற்றி சோதனை உங்கள் பிள்ளைக்கு பிரிவு A தொண்டை அழற்சி நோயிருப்பதாகக் காண்பித்தால் மருத்துவர் அன்டிபையோட்டிக் மருந்தை எழுதிக் கொடுப்பார். ஆனால் தொண்டை எரிச்சல் வைரஸ் அல்லது வேறு காரணங்களால் உண்டாயிருந்தால் அன்டிபையோட்டிக் மருந்து பயன்படாது.
thanks aboutkidshealth.ca

, ,