குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

24.5.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜிஹாத்
ஜிஹாத் (புனிதப் போர்)
1284 ''எவன் (சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காகப்) போர் புரியாமலும், அதைப் பற்றி நாட்டங்கூட கொள்ளாமலும் இறந்து விடுகிறானோ அவன் நயவஞ்சகத்தின்
ஓர் அம்சத்துடன் தான் இறக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1285 ''நீங்கள் உங்கள் பொருட்கள், உங்கள் உயிர்கள் மற்றும் உங்கள் நாவுகள் மூலம் இணை வைப்பாளர்களுடன் அறப்போர் புரியுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், நஸயீ. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1286 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா?'' என்று நான் கேட்டதற்கு, ''ஆமாம் அவர்களுக்கு யுத்தமில்லாத ஜிஹாத் உண்டு. அது ஹஜ் மற்றும் உம்ராவாகும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
1287 ஒருவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் வந்து ஜிஹாதில் (கலந்து கொள்ள) அனுமதி கேட்டார். அதற்கு, ''உன்னுடைய பெற்றோர் உயிருடன் உள்ளனரா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ''ஆமாம்'' என்றார். ''நீ அவர்களுக்கு உறுதுணையாக இருந்து நீர் ஜிஹாத் செய்வீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1288 அபூ ஸயீத்(ரலி) வாயிலாக அஹ்மத் மற்றும் அபூதா¥தில், ''திரும்பச் செல்! அவர்கள் இருவரிடமும் அனுமதி கேள்!'' அவர்கள் உனக்கு அனுமதியளித்தால் (வா!) இல்லையெனில், அவர்கள் இருவருக்கும் நன்மை செய்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
1289 ''இணை வைப்பாளர்களுக்கு மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் விலம்க் கொள்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள என ஜரீர்(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த், நஸயீ மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முர்ஸல் எனும் தரமே மேலோங்கியிருப்பதாக புகாரீயில் உள்ளது.
1290 ''வெற்றிக்குப் பின்பு ஹிஜ்ரத் இல்லை! மாறாக, ஜிஹாத் மற்றும் (அதற்கான) எண்ணம் (கொள்ளுதல்) தான் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரீ, முஸ்லிம்
1291 ''அல்லாஹ்வின் வாக்கை உயர்த்த வேண்டுமென எவர் போர்புரிகிறாரோ அவர், அல்லாஹ்வின் பாதையில் உள்ளவராவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல் அஷ் அரி(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1292 ''எதுவரையில் பகைவர்களுடன் யுத்தம் தொடர்கிறதே, அதுவரை ஹிஜ்ரத் முடிவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1293 நபி(ஸல்) அவர்கள் பன} முஸ்தலிக் கூட்டத்தார் மீது (தீடீரெனப்) படை எடுத்தார்கள். அப்போது அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். அவர்களில் போரிடக் கூடியவர்களைக் கொன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடித்துக் கொள்ளப்பட்டார்கள். இதை எனக்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் என நாஃபிஉ(ரலி) அறிவிக்கிறார்.
1294 எவரை நபி(ஸல்) அவர்கள் படைத்த தளபதியாகவோ அல்லது சிறு படைக்குழுவின் தலைவராகவோ நியமிக்கின்றார்களோ அவருக்கு, அவருடைய அகவாழ்விலும் இறையச்சத்தைக் கைக்கொள்ளும் படியும் மற்றும் முஸ்லிம்களுடன் நன்றாக நடந்து கொள்ளும் படியும் உபதேசம் செய்வார்கள். பின்னர், ''எவர் அல்லாஹ்வை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுடன் அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள். அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுடன் போரிடுங்கள். போர்ச் செல்வங்களை மோசடியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏமாற்றாதீர்கள். அங்கங்களைச் சிதைக்காதீர்கள். மேலும் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். மேலும் இணை வைப்பாளர்களில் உங்கள் எதிரியை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் மூன்று நிபந்தனைகளின் பக்கம் அவர்களை அழையுங்கள். அவர்கள் அவற்றில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டால் நீங்கள் (அவர்களைத் தாக்காமல்) விட்டு விடுங்கள். 1. அவர்களை இஸ்லாத்தின்பால் அழையுங்கள் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் நீங்கள் அவர்களிடமிருந்து (முஸ்லிம்கள் என) ஒப்புக் கொள்ளுங்கள். 2. பின்னர் அவர்களை நீங்கள் முஹாஜிர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து வசிக்கும் படி அழைப்புக் கொடுங்கள். அவர்கள் அதை ஏற்க மறுத்தால் கிராமப் புறத்து முஸ்லிம்களின் நிலை போன்றது தான் அவர்களின் நிலையும். அதாவது எதுவரை அவர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து போருக்குச் செல்லவில்லையோ, அதுவரை அவர்களுக்கு கனீமத் மற்றும் ஃபய்உ பொருட்களில் எந்தப் பங்கும் கொடுக்கப்படாது என்று அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள். அவர்கள் இதையும் ஏற்க வில்லை என்றால், 3. அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இதை ஏற்க மறுத்து விட்டால் நீங்கள் அவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் உதவியைக் கோரி அவர்களுடன் போர் புரியுங்கள். முஸ்லிம்.
1295 நபி(ஸல்) அவர்கள் போருக்கான எண்ணங் கொண்டால் வேறு எதனையோ நாடியிருப்பதாகக் காட்டிக் கொண்டு அதை ரகசியமாக வைத்து விடுவார்கள் என கஅப் இப்னு மஸாக்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1296 நபி(ஸல்) அவர்களுடன் பல போர்களில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் முற்பகல் நேரத்தில் போர்புரியவில்லை என்றால், சூரியன் உச்சிசாய்ந்து காற்றுவீசி இறைவனின் உதவி இறங்கும் வரை காத்திருப்பார்கள் என நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) கூறியதாக மஅகில் அறிவிக்கிறார். அஹ்மத், அபூதா¥த், நஸயீ மற்றும் திர்மிதீ. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
1297 இணைவைப்போர் மீது இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தும் போது அவர்களின் பெண்களும் குழந்தைகளும் கூட (சில நேரங்களில்) பாதிக்கப்படுவது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ''அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களே'' என்று நபி(ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள் என ஸஅப இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1298 பத்ருப் போரின் போது தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள், ''நீ திரும்பிச் சென்றுவிடு! இணை வைப்பாளனிடம் நான் ஒரு போதும் உதவி பெறமாட்டேன்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1299 ஒரு யுத்தத்தில் பெண் ஒருத்தி கொல்லப்பட்டுக் கிடந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்வதைத் தடை செய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1300 ''இணை வைப்பாளர்களில் (போரிடும் வலிமை கொண்ட) பெரியவர்களைக் கொன்று விடுங்கள்; சிறுவர்களை விட்டு விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸமுரா(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த்
இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1301 பத்ருப் போரின் போது நாங்கள் எதிரியை நேருக்கு நேர் சந்தித்து யுத்தம் செய்யச் சென்றோம் என்று அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
இது அபூ தா¥தில் நீண்ட ஹதீஸாக உள்ளது.
1302 ''(கான்ஸ்டான்டி நோபிளில் நடந்த) ஒரு போரின் போது ரோமப் படைக்குள் புகுந்து அவர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு, (''உங்கள் கரங்களை அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்'' என்னும் இறைவசனத்தை ஆதாரமாகக் காட்டி, 'இவர் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறாரே' என்று கண்டனம் தெரிவித்தவர்களுக்கு மறுப்புக் கூறும் விதத்தில், ''அன்சாரிகளே! இந்த வசனம் நம்முடைய விஷயத்தில் தான் இறக்கியருளப்பட்டது (நீங்கள் நினைப்பது போல் இறைவழியில் உயிரை அர்ப்பணித்துப் போராடுவதைக் கண்டிப்பதற்காக அல்ல)'' என்று அபூ அய்யூப் அல் அன்சாரி கூறினார்கள். அபூதா¥த், நஸயீ மற்றும் திர்மிதீ
இது திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1303 நபி(ஸல்) அவர்கள் ''பன} நளீர் குலத்தாருடைய பேரீச்ச மரங்களை எரித்து, துண்டு துண்டாக வெட்டி விட்டார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1304 கனீமத் பொருள்களில் மோசடி செய்யாதீர்கள்! ஏனெனில் மோசடி, இம்மையிலும் மறுமையிலும் மோசடி செய்தவரை வாட்டும் நெருப்பாகவும் இழிவு தரக்கூடியதாகவும் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், நஸயீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1305 (போரில் எதிரியைக்) கொன்றவருக்கே கொலை செய்யப்பட்டவனுடைய பொருட்கள் சொந்தம் என நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த்
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
1306 அபூஜஹல் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகையில், ''அவர்கள் இருவரும் விரைவாக வாளைச் சுழற்றி(வெட்டி)னார்கள். அவன் இறந்துவிட்டான். பின்னர் அவர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து செய்தியைச் சொன்னார்கள். ''உங்கள் இருவரில் அவனை யார் வெட்டியது?'' நீங்கள் வாளைத் துடைத்து (சுத்தப்படுத்தி) விட்டீர்களா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், ''இல்லை'' என்று சொன்னார்கள். உடனே நபியவர்கள் அந்த வாளைக் கூர்ந்து பார்த்து விட்டு, ''நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள்'' என்று (ஆறுதலாகச்) சொன்னார்கள். பிறகு அவனது பொருட்களை (அபூஜஹ்லைக் கொல்லத் துணை புரிந்த மூன்றாமவர்) முஆத் பின் அம்ர் பின் ஜமூஹ்(ரலி) அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் எனத் தீர்ப்பளித்தார்கள் என்று அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1307 தாயிஃப் நகரவாசிகளுடன் நிகழ்ந்த யுத்தத்தில் மிஞ்ஜனீக் எனும் ஆயுதத்தை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள் என மக்ஹூல்(ரலி) அறிவிக்கிறார்.
இது அபூதா¥தில் முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். அலீ(ரலி) வாயிலாக உகைலி எனும் நூலில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1308 நபி(ஸல்) அவர்கள் (மக்கா நகரை வெற்றி கொண்ட பின்) மக்காவினுள் நுழையும் போது தன் தலையில் இரும்புத் தொப்பி அணிந்திருந்தார்கள். அவர்கள் அதைக் கழற்றிய போது ஒருவர் வந்து, ''இப்னு கதில் என்பவன் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றான்'' என்ற கூறினார். (அதைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ''அவனைக் கொன்று விடுங்கள்'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1309 நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போரின் போது மூன்று நபர்களைக் கட்டி வைத்துக் கொன்றார்கள் என ஸயீத் இப்னு ஜுபைர்(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥தில் முர்ஸல் எனும் தரத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1310 இரண்டு முஸ்லிம் ஆண்களை (எதிரிகள்) விடுதலை செய்வதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒரு முஷ்ரிக்கை (இணைவைப்பாளரை) விடுதலை செய்தார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
1311''மக்கள் இஸ்லாத்தை ஏற்று இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் அவர்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸக்ர் இப்னு அய்லா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
1311 ''மக்கள் இஸ்லாத்தை ஏற்று இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் அவர்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸக்ர் இப்னு அய்லா(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
1312 நபி(ஸல்) அவர்கள் பத்ருப் போர்க் கைதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் ''முத்இம் இப்னு அதீ அவர்கள் உயிருடன் இருந்திருப்பின் இந்த நாற்றம் பிடித்த கைதிகளுக்காக என்னிடம் பேசியிருப்பார். நான் அவருக்காக இவர்களை விடுவித்து விட்டிருப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
1313 அவ்தாஸ் கணவாய் யுத்தத்தின் போது எங்களுக்குச் சில (கணவனியிருக்கும்) பெண்கள் கைதிகளாகக் கிடைத்தனர். அவர்களுடன் உறவு கொள்வதை நபித்தோழர்கள் பாவம் என்று கருதினர். அப்போது 42:4 வசனம் அருளப்பட்டது. என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1314 நஜ்தை நோக்கி ஒரு சிறு படையை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அதில் நானும் இருந்தேன். அந்தப் போரில் நாங்கள் அதிகமான ஒட்டகங்களை கைப்பற்றிக் கொண்டு வந்தோம். அதில் ஒவ்வொருவருக்கும் பன்னிரெண்டு ஒட்டகங்கள் பங்கு கிடைத்தது அவர்களுக்கு ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகவும் கொடுக்கப்பட்டது என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1315 கைபர் போரின் போது நபி(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களுக்கு இரண்டு பங்குகளும், வாகனமில்லாத வீரர்களுக்கு ஒரு பங்கும் என, கனீமத் பொருளைப் பங்கிட்டார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1316 நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கும் அவரது குதிரைக்கும் மூன்று பங்குகள் கொடுத்தார்கள். (அதில்) இரண்டு பங்குகள் அவரது குதிரைக்கும், ஒரு பங்கு அவருக்கும் ஆகும் என அபூ தா¥தில் உள்ளது.
1317 ''(கனீமத் பொருள்) அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரிய குமுஸ் ஐந்திலொரு பங்கைக் கொடுத்து விட்ட பின்னர் மட்டுமே அதிகப்படியாக கொடுக்க வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என மஃன் இப்னு யத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதா¥த். இது தஹாவீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1318 நபி(ஸல்) அவர்களுடன் நான் முதலில் ஒரு யுத்தத்தில் கலந்து கொண்டதற்கு நான்காவது கலந்து கொண்டதற்கு நான்காவது பங்கு அதிகப்படியாகவும், இரண்டாவது முறை கலந்து கொண்டதற்கு மூன்றாவது பங்கு அதிகப்படியாகவும் கொடுத்தார்கள் என ஹபீப் இப்ன மஸ்லமா(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த்
இது இப்னுல் ஜாரூத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1319 நபி(ஸல்) அவர்கள் படைக் குழுக்களில் தாம் அனுப்பி வைக்கும் வீரர்களில் சிலருக்கு பிரத்யேகமான முறையில் (போர்ச் செல்வங்களில்) பொதுவாகப் படைவீரர்களுக்கெனக் கொடுக்கும் பங்கு போக அதிகப்படியாகவும் கொடுப்பார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1320 நாங்கள் கலந்து கொள்ளும் புனிதப் போர்களில் தேன் மற்றும் திராட்சையைப் பெறுவோம். அதை நாங்கள் சாப்பிட்டுவிடுவோம்; எடுத்துவரமாட்டோம் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
''அதில் 'குமுஸ்' ஐந்திலொரு பங்கு எடுக்கப்படவில்லை'' என அபூதா¥தில் உள்ளது. இன்னும் இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1321 கைபர் யுத்தத்தில் எங்களுக்கு உணவுப் பொருள் கிடைத்தது. எங்களில் ஒவ்வொருவரும் வந்து, தங்களுக்குப் போதுமான அளவு எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்று விடுவர் என அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த்
இது இப்னு அல் ஜாரூத் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1322 ''எவர் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ, அவர் முஸ்லிம்களின் வெற்றிச் செல்வத்திலிருந்து எந்த (கால்நடை) வாகனத்திலும் சவாரி செய்ய வேண்டாம். அதை (நன்கு பயன்படுத்திக் கொண்டு) மெலியச் செய்த பின்பு, அதைத் திருப்பித் தர வேண்டாம். மேலும், அவர் முஸ்லிம்களின் வெற்றிச் செல்வத்திலிருந்து எந்த ஆடையையும் எடுத்து அணிய வேண்டாம். அதை (நன்கு உடுத்திப்) பழையதாக்கி விட்டுப் பின்னர் திருப்பித் தர வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ருவைஃபிஉ இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த், தாரிமீ. இதன் அறிவிப்பாளர்களில் குளறு படி ஏதும் இல்லை.
1323 ''முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அபயம் அளித்துக் கொள்ளலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபூ உபைதா (ரலி) அறிவிக்கிறார். இப்னு அபீஷைபா, அஹ்மத். இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
1324 ''முஸ்லிம்களில் கடைசித் தரத்தில் இருப்பவரும் அபயம் அளிக்கலாம்'' என்பதாக அம்ர் இப்னு ஆஸ்(ரலி) வாயிலாக தயாலிஸ் எனும் நூலில் உள்ளது.
1325 ''முஸ்லிம்களில் அளிக்கும் அபயம் (அவர்களில் எவர் அளித்திருந்தாலும் ஒன்றுக்கொன்று சமமாகும். அவர்களில் கடைசி தரத்தில் உள்ளவரும் அபயம் அளிக்கலாம்'' என்று அலீ(ரலி) வாயிலாக புகாரீ முஸ்லிமில் உள்ளது. மற்றோர் அறிவிப்பில் ''அவர்களில் கடைநிலையில் உள்ளவரும் பாதுகாப்பு அளிக்கலாம்'' என்று உள்ளது. புகாரீ, முஸ்லிம்
1326 ''நீ யாருக்குப் பாதுகாப்பு அளித்தாயோ நாமும் அவருக்கு பாதுகாப்பளித்தோம்'' என்று உம்முஹானீ(ரலி) புகாரீ அவர்களிடம் முஸ்லிமில் உள்ளது.
1327 ''முஸ்லிம்களைத் தவிர்த்து வேறெவரையும் விட்டு வைக்காத நிலை வரும் வரை هதர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் நான் அரபு தீபகற்பத்தை விட்டு வெளியேற்றி விடுவேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
1329 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபர் மீது போர் தொடுத்தோம். கைபரில் எங்களுக்கு ஆடுகள் கிடைத்தன. இறைத்தூதர் அவர்கள் அவற்றில் ஒரு மந்தையை எங்களிடையே பங்கிட்டுவிட்டு, மீதமிருந்ததை கனீமத் பொருளுடன் சேர்த்து விட்டார்கள் என, முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த். இதன் அறிவிப்பாளர்களில் குளறுபடி ஏதுமில்லை.
1330 ''நான் ஒப்பந்தத்தை முறிக்க மாட்டேன்! மேலும், பிறநாட்டுத் தூதர்களை (வெளியுறவுத் துறை அதிகாரி களைத்) தடுக்கமாட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ராஃபிஃஉ அறிவிக்கிறார். அபூதா¥த், நஸயீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1331 ''(முஸ்லிம்களே!) நீங்கள் எந்த ஊருக்குச் சென்று தங்கிவிடுகிறீர்களோ அதில் தான் உங்களுக்குப் பங்கு கிடைக்கும். இன்னும் எந்த ஊர் அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்குரியது. பின்னர் (மீதமுள்ளது) உங்களுக்குரியது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
, ,