இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

02/02/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தீராதவை-சபீர்
அம்மாகைகளில்
குழந்தை
சும்மாச்சும்மா
உம்மா
கொடுத்துக்கொண்டிருந்தது
அம்மா.கன்னங்களிலோ
நெற்றியிலோ
குத்துமதிப்பாகமுகத்திலோ
இன்னஇடம்தான்என்றில்லாமல்
வாகாகவாய்க்கும்
எந்தஇடத்திலுமோ
வென

வாகனங்களைக்
காட்டியொருஉம்மா
வானத்தைக்
காட்டியொருஉம்மா
மரங்களைக்
காட்டியொருஉம்மா
மனிதர்களைக்
காட்டியொருஉம்மா

கத்தும்
குருவியைக்காட்டியும்
கொத்தும்
கோழியைக்காட்டியும்
கழுவும்
கறிமீனைக்காட்டியும்
காத்திருக்கும்
கரும்பூனையைக்காட்டியும்
உம்மா
கொடுத்துக்கொண்டிருந்தது
அம்மா.

இடதுகையிலிருந்து
வலதுகைக்கு
மாற்றும்போதொருஉம்மா
மயங்கும்
விழிகளில்உம்மா
மெல்லச்சுமந்து
தூளியில்இட
கிடத்தும்போதொருஉம்மா
கிடத்தியபின்னொருஉம்மா

தூளியைத்தூக்கி
கொத்துக்கொத்தாக
பலமுறைஉம்மா
என
சும்மாச்சும்மா
உம்மாகொடுத்தும்
தீர்ந்துபோனதா
அம்மாவின்உம்மா?
b.sabeer
, ,