- வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு! - Dinamani
- இபிஎஸ் OUT; செங்கோட்டையன் IN; `காலில் விழுந்த EPS' - `பொம்மை முதல்வர்' - சட்டசபையில் நடந்தது என்ன? - Vikatan
- மாமியாரை முதியோர் இல்லத்தில் விடனும்; மறுத்த கணவன் - மனைவி கொலைவெறி தாக்குதல் - IBC Tamilnadu
- உக்ரைனுக்கு மருத்துவ உதவிக்கருவிகள் அடங்கிய வாகனங்கள் அன்பளிப்பு - Vatican News
- பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு! சென்னையில் விலை எவ்வளவு? - ETV Bharat
பதிவுகளில் தேர்வானவை
22.6.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
விழிப்புணர்வின் முதல் படி
கல்வி வசப்பட வேண்டும்!
கற்க நினைப்ப தெல்லாம் - நாம்
கற்றவ ரெல்லாம் வென்றார் - இதை
கருத்தினில் ஏற்றிட வேண்டும்
கல்லாதோரே தோற்றார் - என
கவனத்தில் கொண்டிட வேண்டும்!
கருத்தினில் ஏற்றிட வேண்டும்
கல்லாதோரே தோற்றார் - என
கவனத்தில் கொண்டிட வேண்டும்!
பட்டம் படித்திட வேண்டும் - அதில்
பதக்கம் கிடைத்திட வேண்டும்
விட்ட உரிமைகள் ளெல்லாம் - நாம்
மீட் டெடுத்திட வேண்டும்!
தொழிலுக் கென்று கல்வி - நாம்
தேடிக் கற்றல் வேண்டும்
பதவிக் கென்று படிப்பை - இனி
பார்த்துப் படித்திட வேண்டும்!
ஆட்சி அதிகாரம் வேண்டும் - நமக்கு
அரசாங்க வேலையும் வேண்டும் அன்றாடங் காய்ச்சியேயாயினும் - நாம் வென்றாள கல்வியே வேண்டும்.
அதிக மதிப்பெண் வேண்டும் - அதை அடைய முனைப்பு வேண்டும்
சிகரம் தொடும் வித்தை - நாம்
சேர்ந்து பயின்றிடவேண்டும்
கல்லாமை வெளியேற வேண்டும் - உடன் அறியாமை புறந்தள்ள வேண்டும்
கற்றுத் தெளிந்து நாமும் - எதிர் காலத்தை வென்றிட வேண்டும்!
மகத்துவம் மிக்க மருத்துவம் - கற்று மக்களைக் காத்திட வேண்டும் மடமை போக்கிடும் அறிவியல் - படித்து மாட்சிமை பெற்றிட வேண்டும்
சதிகளை எதிர்த்திட சட்டம் - நம் விதியென படித்திட வேண்டும்
சமூகம் காத்திட அரசியல் - முழு
சாஸனம் கற்றிட வேண்டும்!
கல்வி விழிப்புணர்வு வேண்டும் - அது பல்கிப் பெருகிடவும் வேண்டும்!
கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து கைதூக்கி கரையேற்ற வேண்டும்!
சபீர்அஹ்மது
அபுஷாஹ்ருக்