பதிவுகளில் தேர்வானவை
30.10.14
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
கர்பலா
கர்பலா வரலாறு
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் ஆட்சி 11 ஆண்டுகள்.
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் ஹதீஸ்களின் அடிப்படையில் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சித் தலைவராகுதல் அவர்களின் மரணம் ஹிஜரி 13 ஜமாதுல் ஆகிர் 23ஆட்சி செய்த ஆண்டுகள் 2 வருடம் மூன்று மாதங்கள்
3. ஒருமித்த கருத்தில் உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கலீஃபா ஆகின்றார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய சாசனத்தை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹுமக்களிடம் படித்துக் காட்டினார்கள். அவருடைய மரணம் ஹிஜிரி 23 துல்ஹஜ் 23 ஆட்சிக்காலம் 10ஆண்டுகள்.
4. ஆலோசனைக் குழு மூலம் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சித் தலைவராகுதல்.இவருடைய மரணம் ஹிஜிரி 35துல்ஹஜ் பிறை 18. ஆட்சிக் காலம் 12 ஆண்டுகள்.
5. அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி.பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்தல் - ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஜமல் யுத்தம்.
ஸிரியா ஆளுநர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஸிஃப்பீன் யுத்தம்.அவருடைய மரணம் ஹிஜிரி 35 துல்ஹஜ் பிறை 18. ஆட்சிக் காலம் 4 ஆண்டுகள் 9 மாதங்கள்.
6. ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சித் தலைவர் ஆகுதல். 1. அதர்பைஜான் ஆளுநர் கைஸ் பின் ஸஃத் பின் உப்பாதா முதலில் பைஅத் செய்தவா.இவருடைய தூண்டுதலினால் சிரியாவை நோக்கி முஆவியாவிற்கு எதிராக 12000 பேர கொண்ட படை கிளம்புவதும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹுவுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதும். 2.ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு மூலம் சமாதானம் ஏற்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு.
3. ஆனால் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹுபோருக்கு தூண்டினார். இந்த சமாதான ஒப்பந்தம் முடியும் வரை உன்னை சிறைவைத்து முடிந்த பிறகு விடுதலை செய்யலாம் என நினைக்கிறேன் என ஹஸன் ஹீசைனுக்கு கூறினார்
4. இவர் 8 ஆண்டுகள் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு ஆட்சியின் கீழ் வாழ்ந்தார். ஹிஜிரி 49-ல் மரணமடைந்தார்கள்.
5. முஆவியா ரளியல்லாஹு அன்ஹு ஹிஜிரி 60 ல் மரணமடைந்தார்கள்.
7. யஸீதின் ஆட்சி. இப்னு உமர் இப்னு அப்பாஸ் ஹுசைன் அப்துல்லாஹ் பின் ஜுபைர் அப்துர் ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹூம்) ஆகியோர் பைஅத் செய்ய மறுத்தனர்.
8. இராக் வாசிகள் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவில் சந்தித்து 150கடிதங்களை கொடுத்து ஆட்சி நடத்த வரும்படி அழைப்பு விடுத்தனர். தோப்புத் துறவுகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. கனிகள் கனிந்து கிடக்கின்றன. நீங்கள் விரும்பினால் படைபட்டாளத்தோடு வாருங்கள் என கடிதம் எழுதினர்.
9. ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம் பின் அகில் அவர்களை இராக்கிற்கு அனுப்புதல்.
10. முஸ்லிம் பின் அகில் கூஃபா வருமாறு ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு-க்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் கூஃபா ஆளுநர் நுஃமான் பின் பஷர் ரளியல்லாஹு அன்ஹு மாற்றப்பட்டு உபைதுல்லாஹ் பின் இப்னு ஸியாத் கூஃபா ஆளுநராகின்றார்
11. ஹானி பின் ஹமீத் வீட்டில் முஸ்லிம் பின் அகில் தங்கியிருக்கிறார். அப்பொழுது அவரை ஒருவா சந்தித்து ஆயுதங்கள் வாங்க 3000திர்ஹம்கள் அன்பளிப்பு செய்கிறார். அவாதான் உளவாளி அபூரஹ்ம் என்பவன்.
12. முஸ்லிம் பின் அகில் 4000 பேர்களோடு இப்னு ஸியாத்தை சந்திக்க வருகிறார். அனைவரும் அவரை அம்போ என விட்டு விடுகின்றனர். அவா கொல்லப் படுகிறா.
13. துல்ஹஜ் பிறை 8 ல் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு கூஃபா வை நோக்கி தன்னுடைய குடும்பத்தாருடன் புறப்படுகிறார்கள். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு, அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, அம்ர் பின் ஸைத் பின் கைஸ் ஆகியோர் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்றனர்.யஸீதும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுஅவாகளுக்கு கடிதம் எழுதி ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தடுக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் அனைத்து எச்சரிக்கைகளையும் மீறி ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு புறப்படுகிறார்கள்.
14. கூஃபா வாசிகளுக்கு தான் புறப்பட்டு விட்டதாக கைஸ் பின் மஸ்ஹர் என்பவர் மூலம் கடிதம் அனுப்புகிறார். ஆனால் இவா இப்னு ஸியாத் ஆல் சிறைபிடிக்கப் பட்டு கொல்லப் படுகின்றார்கள். 15.முஸ்லிம் பின் அகில் கூஃபா வரவேண்டாம் என எழுதிய கடிதமும் கைஸ் பின் மஸ்ஹா கொல்லப்பட்ட செய்தியும் ஹூசைன் அவாகளுக்கு கிடைக்கின்றது. கூஃபா வாசிகள் காலைவாரி விட்டனர். நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர்.என்னோடு வந்தவாகளில் திரும்ப நினைப்பவர் திரும்பலாம் என் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள்.
16. வாகனத்தில் செல்லும் போது ஒரு குதிரை வீரர் இம்மக்கள் கூஃபாவை நோக்குகிறார்கள் .மரணம் அவாகளை நோக்கு கிறது. என கூறுவதாக கனவு காண்கிறார்.
17. கர்பலாவில் தங்குதல் கர்ப்-வ-பலா (கஷ்டமும் சோதனைகளும்) என விளக்கம் கொடுத்தல்
18. இப்னு ஸியாத் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தடுக்க 4000 போ கொண்ட படையை அனுப்புகிறார்.
19. ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் படையில் மொத்தம் 70 நபர்கள்தான். 30குதிரைப்படை 40 காலாட் படையினர்.
20. போர் நடக்கும் போது ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு ஆற்றிய உரையும் முன்வைத்த 3கோரிக்கைகளும்.
21. ஆனால் இப்னு ஸியாத் இதனை மறுத்து விடுகின்றார்
22. முதல் மகன் பெரிய அலி அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் அகில் ஹஸன் மகன் காஸிம் அப்துல்லாஹ் என்ற கைக்குழந்தை அபூபக்கர் பின் ஹஸன் அலி ரளியல்லாஹு அன்ஹு மகன்கள் அப்துல்லாஹ் அப்பாஸ் உஸ்மான் ஜாபிர முஹம்மத் ஆகியோர் கொல்லப்படுகின்றனா.
23. ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு புராத் நதியில் நீரருந்த போகும்போது குரல் வளையில் அம்பு பாய்கின்றது. ஜூஆ பின் ஷாக் என்பவன் வலது தோள் புஜத்தை வெட்டுகிறான். ஸினான் பின் அனஸ் என்பவன் ஈட்டியால் குத்தி தலையை துண்டாக வெட்டுகிறான்.
24. ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவாகளின் குடும்பத்தில் ஜைனுல் ஆபிதீன் என்பவரைத் தவிர அனைவரும் கொல்லப் படுகிறார்கள்.
25. இப்னு ஸியாத்தின் அவையில் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தினர் பட்ட சோதனைகள்.
26. ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலை யஸதிடம் வருகிறது. அதைப் பார்த்த யஸதின் கண்களில் கண்ணர் கரைபுரண்டோடியது.ஹூசைன் கொல்லப்படாமல் எனக்கு கட்டுப்பட்டு வருவதையே நான் விரும்பினேன்.அல்லாஹ் இப்னு சுமையாவை(இப்னு ஸியாத்) சபிப்பானாக. நான் ஹுசைனுடன் இருந்திருந்தால் அவர் எனக்கு எதிராக கிளம்பியதற்காக அவரை நான் தண்டித்து இருக்க மாட்டேன். மன்னித்து இருப்பேன். அல்லாஹ் ஹுசைனுக்கு அருள் செய்வானாக என்று கூறினார்.
27. யஸீத்; ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்திற்கு அதிகமான உதவிகள் செய்தார்.
28. இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்களிடம் ஒருவர் நீங்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அணியா? முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அணியா என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவாகள் அந்த இரத்தக்கறை படிந்த காலத்தில் வாழாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி விட்டான். இப்போது அந்த விஷயத்தைப் பற்றி யார் செய்தது சரி என்று விவாதிப்பது அந்த இரத்தத்தை நாவால் ருசிப்பது போன்றதாகும்.என்று கூறினார்கள். இவ்வாறு கூறிவிட்டு அது சென்று போன சமுதாயம். அவாகள் செய்தது அவாகளுக்கு நீங்கள் செய்தது உங்களுக்கு.அவாகள் செய்ததைப் பற்றி உங்களிடம் விசாரிக்கப் படாது என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
www.nidur.info