- இந்தியாவை முடிச்சுவிட்ட டிரம்ப்.. ஐடி துறைக்கு பெரும் சிக்கல்!.. இன்னும் 6 மாசம்தான் எல்லாம் போச்சு - Oneindia Tamil
- வக்ஃப் மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: தொல் திருமாவளவன் - Dinamani
- அண்ணாமலை தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பற்றி கூறியது என்ன? இன்றைய டாப்5 செய்திகள் - BBC
- இலங்கையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - Makkal Kural
- சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் மாற்றம்.. காரணம் என்ன? - polimernews.com
பதிவுகளில் தேர்வானவை
9.8.13
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஈகை பெருநாள்

ஈந்துவக் கும்திரு நாளாம்இகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே
புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே
இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
சற்று முயற்சி எடுப்பதில் நீயும் தயங்கிடாதே
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்