இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/12/2010

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கடல்கள் மற்றும் ஆறுகளைப் பற்றித் திருமறை
 தற்போதைய நவீன அறிவியலில் கடலாய்வும் ஒன்று. கடலில் ஒரு இடத்தில் இரு வேறு கடல்கள் சங்கமிக்கின்றன, அவ்வாறு அவைகள் சங்கமித்தாலும் இரண்டு கடல்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது என்றும், மேலும் அவற்றின் வெப்பம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவற்றிலும் தங்களது தனித்தன்மைகளுடனேயே உள்ளன என்றும், சமீபத்திய தமது ஆய்வில் கடலாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்..
உதாரணமாக,
மத்திய தரைக்கடலை அட்லாண்டிக் கடலுடன் ஒப்பிடுவோமானால், மத்தியதரைக்கடல் வெதுவெதுப்பான, உப்புத்தன்மையான மற்றும் குறைந்த அடர்த்தியும் கொண்டது. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் மத்திய தரைக்கடல் அட்லாண்டிக் கடலுடன் சங்கமிக்கும் போது, 1000 அடி ஆழத்தில் பல நூறு மைல்கள் தூரம் அட்லாண்டிக் கடலுக்குள் பயணம் செய்கின்றது. அவ்வாறு பயணம் செய்யும் மத்திய தரைக்கடல், வெப்பம், உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி ஆகியவற்றில் எந்த மாற்றமும் அடையாமலேயே தன் பயணத்தை அட்லாண்டிக் கடலினுள் தொடர்கின்றது. ஆழத்திலும் மத்திய தரைக்கடல் தனது தன்மையில் மாறாத நிலையையே பெற்றிருக்கிறது.
இதனிடையே இரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை.
இதையே திருமறையில் இறைவன், கடல்களுக்கிடையே அவை சந்திக்கும் இடத்தில் ஒரு தடுப்புச் சுவர் உண்டு, ஆனாலும் அவை ஒன்றையொன்று மீற மாட்டா! என்று கூறுகின்றான். அதாவது,
இரு கடல்களை - அவை இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டு விட்டான். (ஆயினும்) அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு: (அத் தடுப்பானதை) அவ்விரண்டும் மீறி விடாது. (அல் குர்ஆன்: 55:19-20).
ஆனால், மேலே நாம் பார்த்த இறைவசனத்தில் இறைவன் கடலும் கடலும் சந்திக்கும் இடத்தில் தடுப்புச் சுவர் உண்டு எனக் கூறிய இறைவன், நல்ல தண்ணீர் மற்றும் கடல் நீரைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவை இரண்டுக்கும் இடையே உள்ள தடையில் ஒரு ஷமீற முடியாத தடுப்பை
அமைத்துள்ளோம் எனக் குறிப்பிடுகின்றான். இதையே இறைவன் தனது திருமறைக் குர்ஆனில்,
இன்னும் அவன் எத்தகையவனெ;னறால், இரு கடல்களையும் அவன் ஒன்று சேர்த்திருக்கின்றான்: (அதில் ஒன்றான) இது மிக்க மதுரமானது, தாகம் தீர்க்கக் கூடியது: (அதில் மற்றொன்றான) இது உப்புக்கரிப்பானது, கசப்பானது: இவ்விரண்டிற்குமிடையில் (அவை ஒன்றொடொன்று கலந்திடாமல்) திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் அவன் ஆக்கியிருக்கின்றான். (அல் குர்ஆன்.25:53).
திருமறையானது, கடலும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அவையிரண்டுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளோம் எனக் கூறும் அதே வேளையில், கடலும் நதியும் (நல்ல தண்ணீர்) கலக்கும் போது அவையிரண்டுக்கும் இடையே திரையையும் அதையடுத்து ஒரு மீற முடியாத தடையையும் ஏறபடுத்தியுள்ளோம் என ஏன் கூற வேண்டும்? என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். இதற்கான பதிலை நவீன அறிவியலாளர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
கடலும் நதியும் சங்கமிக்கும் கழிமுகங்களில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்ட அறிவியலாளர்கள், கடலும் கடலும் சங்கமிப்பதற்கும், கடலும் நதியும் சங்கமிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியலானார்கள். அதாவது இங்கே தண்ணீரின் மாறுபட்ட அடர்த்தியின் விகிதம் ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டு, ஒரு விகிதத்தல் இருந்து இன்னொரு விகிதத்திற்கு மாறக்கூடிய நிலையில் அவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட அதனதன் விகிதத்தைப் பிரித்துக் காட்டக் கூடிய பகுதி தான், நல்ல தண்ணீரையும், கடல் நீரையும் பிரித்துக் காட்டும் திரையாகச் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.ழூ இவ்விரண்டு கடல் நீர் மற்றும் நல்ல தண்ணீர் ஆகியவற்றின் உப்புத் தன்மையை விட, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் நீரின் உப்புத்தன்மையின் அளவில் மாறுபாடும் காணப்படுவதால்,ழூழூ திருமறையில் இறைவன் கூறியுள்ளபடி, கடல் நீருக்கும் நல்ல தண்ணீருக்குமிடையே திரையையும், மீற முடியாத தடையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம், என்ற திருமறைக் குர்ஆனின் வசனம் அறிவியலாளர்களால் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் யாவும் இன்றைய நவீன அறிவியல் கருவிகளின் துணை கொண்டு, நீரின் வெப்பம், உப்புத் தன்மை, அடர்த்தி, மற்றும் ஆக்ஸிஜன் கரையும் அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் தகவல்களின் துணை கொண்டு தான் அறிவியல் அறிஞர்கள் இந்த பேருண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இரண்டு கடல்களையும் பிரிக்கும் தடுப்பை மனிதக் கண்கள் கொண்டு காண முடியாது, கடலின் மேற்பரப்பு யாவும் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும். இதே போல கழிமுகத் துறைகளில் நின்று கவனித்தால் கூட நல்ல தண்ணீர் ஒரு பிரிவாகவோ, கடல் நீர் ஒரு பிரிவாகவோ, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி (Pலஉழெஉடiநெ ணழநெ) ஒரு பிரிவாகவோ நமக்குத் தோற்றமளிக்காமல், ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும்.
கடல் பயணமே செய்தறியாத எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வளவு துள்ளிதமாக கடலின் தன்மைகள் பற்றி எவ்வாறு கூற முடிந்தது!!? நம்மை வியக்க வைக்கும் திருமறையை அதன் அற்புதங்களை நமது சிந்தனைக்கு வழங்கியவன் இந்த பேரண்டத்தைப் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்து வரும் ஏக இறையோனாகிய அல்லாஹ் அல்லவா!!!!! (ஆசிரியர்).
, ,