இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

12/03/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மரீச்சாசனம்
செய்முறை
முதலில் விரிப்பில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல் நோக்கி மடக்கி வைக்க வேண்டும்.
வலது கால் பாதம் இடது தொடையை உள்பக்கமாக தொட்டு கொண்டு இருக்க வேண்டும்.

வலது தொடைப்பகுதி தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். பிறகு முன்பக்கமாக குனிந்து வலது கையை வலது முழுங்காலை சுற்றி வளைத் உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது கையை பின்பக்கமாக கொண்டு சென்று வலது கை மணிக்கட்டை பிடிக்கவும். 

இந்நிலையில் மூச்சை ஆழ்ந்து உள் இழுத்து கொண்டே முதுகை நன்கு நிமிர்த்தி மேலே பார்க்க வேண்டும். பிறகு மூச்சை வெளியிட்டு கொண்டே முன்னே குனிந்து நெற்றியை அல்லது கீழ்த்தாடையை இடது முழங்காலில் வைத்து 20 விநாடிகளுக்கு அதே நிலையில் சாதாரண சுவாசத்தில் இருக்க வேண்டும். 

பிறகு ஆழ்ந்த உள் மூச்சுடன் நிமிர்ந்து கைகளை விடுவித்தவுடன் கால்களை மாற்றி மேலே செய்தது போல் செய்யவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். 

பயன்கள் 

உள் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவற்றை நன்கு வேலைசெய்ய வைக்கிறது. கொழுப்பை கரைத்து உடலின் எடையை குறைக்க உதவுகிறது. 

முதுகெலும்பு, இடுப்பெலும்பு, கழுத்து இவற்றை வன்மை அடைய செய்கிறது. கைகளில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் வலிமை கொடுத்து அவற்றை எளிதாக இயக்க உதவுகிறது. தண்டுவடத்தின் இயக்கத்தை தூண்டச் செய்கிறது.

, ,