பதிவுகளில் தேர்வானவை
19.5.16
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
ஸலவாத்துன்-னாரிய்யா
ஸலவாத்துன்-னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும்.
னாரிய்யா என்றால் நரகம், நெருப்பு என்று பொருள், ஸலவாத்துன்-னாரிய்யா என்றால் நரகத்து
ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்வித சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள்தான்
இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய(?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பை மார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர், இந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்கத்தை விற்று பிழைப்பு நடத்தக்கூடிய சில முல்லாக்களால் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இதன் காரணமாகத்தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறியதில்லை.
இந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துகள் எந்த அளவிற்கு மார்கத்தோடு மோதுகிறது என்பதைப் பாருங்கள்.
நரகத்து ஸலவாத்தின் அரபி மூலம்…
அல்லாஹும்மஸல் ஸலாத்தன் காமிலத்தன் வஸல்ம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினாமுஹம்மதின் தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில்ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமுமின் வஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆஹி வஸஹ்பிஹி ஃபீ குல் லம்ஹத்தின் வ நஃபசின்பி அததி குல் மஃலூமின் லக்க
பொருள் :
அல்லாஹ்வேஎங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர்மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண்சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும்நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்கு பரிபூரமாணஅருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக. அந்த முஹம்மத் எப்படிப் பட்டவர் என்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கிறது. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகிறது. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப் படுகிறது. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திருந்து மழை பெறப்படுகிறது.
சிக்கல்களையும் துன்பங்களையும் நீக்குபவன் யார்?
மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபி (ஸல்) அவர்கள் மூலம்தான் சிக்கல்கள் அவிழ்கிறது என்றும் துன்பங்கள் நீங்குகிறது என்றும் தேவைகள் நிறைவேறுகிறது என்றும் வருகிறது. உண்மையில் சிக்கல்கள் துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு, இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக்கூடிய இணைகற்பிக்கின்ற காரியமாகும்.
அனைத்து துன்பங்களிருந்தும் காக்கக்கூடியவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறுயாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.
ஒவ்வொரு துன்பத்திருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். (அல்குர்ஆன் 6 : 64)
நபி (ஸல்) அவர்களாகவே இருந்தாலும் தனக்கோ மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறைக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
”அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7 : 188)
”நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்” என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 20,21,22)
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10 : 107)
அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களால் துன்பங்களை சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27 : 62)
நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா? இதனை ஓதிவருகின்ற இஸ்லாமியப் பெருமக்கள் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
– நன்றி: ThoheedArangam