குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.8.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-06
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துக்களை
அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும் 'இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்' எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள். நூல் : புகாரி 3906

12.8.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-05
நூலாசிரியர்: பீ.ஜைனுல்ஆபிதீன்.அவர்கள்

சுகபோகங்களில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் : புகாரி 5386, 5415

28.7.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-04
நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.


சக்தி வாய்ந்த இரண்டு தலைமை
ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.

27.7.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர்-03
நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

சக்தி வாய்ந்த இரண்டு தலைமைஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது.
அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இமாம் அபூ ஹனீஃபா அன் நுஃமான் (ரஹ்)
இமாம் அபூ ஹனீஃபா அன் நுஃமான் (ஹிஜ்ரி 80-150)

இன்றைக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, ஏதாவதொரு மத்ஹபின் வழிமுறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத ஒன்று. ஆனால் அவர்கள் பின்பற்றக் கூடிய நடைமுறைகள் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளுக்கு மாற்றமில்லாதிருந்தால் அவை விவாதத்திற்கிடமின்றி அவற்றைப் பின்பற்றுவதில் எந்தத் தவறுமில்லை.

20.7.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
              (வரலாற்றுச் சுருக்கம்)

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
குலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்' என்னும் குலத்தில் பிறந்தார்கள். தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் பறி கொடுத்து அனாதையாக நின்றார்கள்.

3.5.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)
சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)

நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

19.1.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பெண் ஸஹாபி
பெண் ஸஹாபிகளும் அவர்களைப்பற்றிய முக்கிய குறிப்புகளும்

1.உம்மு உமாரா(ரலி)

இவரது பெயர் - நுஸைபா பின்த் கஅப்(ரலி)

1.1.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள்
 உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள்

almighty-arrahim.blogspot.com
மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும்,

29.12.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை சௌதா பின் சமாஆ (ரலி)
அன்னை சௌதா பின் சமாஆ (ரலி)

கதீஜா (ரலி) அவர்களின் மரணத்தை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கைத் துணைவியாக வாழ்க்கைப்பட்ட இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில், சௌதா பின் சமாஆ (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

19.11.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பிலால் (ரலி)
பிலால் (ரலி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரலி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.

27.8.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :
யா அல்லாஹ்..!
(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான, குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!

16.7.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அம்மார் பின் யாசர்(ரலி)
தாயார் பெயர் சுமைய்யா(ரலி) தந்தை பெயர் யாசிர்(ரலி). யாசிர்(ரலி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரலி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாசீர்(ரலி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரலி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாசிர்(ரலி) சுமைய்யா(ரலி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர்.

ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரலி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரலி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாசிர்(ரலி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார்(ரலி) ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்(ரலி) ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும் படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார்(ரலி). தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்(ரலி) அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார்(ரலி) அவர்கள். விட்டு விடுகின்றனர். அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்(ரலி) நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.




அம்மார்(ரலி) அவர்களை தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராகீம்(அலை) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபி(ஸல்)துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்(ரலி) கூறுகின்றார்கள். அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது. யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத்(ரலி) அம்மார்(ரலி)அவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்.. சிறந்த போர் வீரரான அம்மார்(ரலி) அபூபக்கர்(ரலி)ஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார்(ரலி), முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள் என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார்(ரலி)அவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.




உமர்(ரலி) ஆட்சி காலத்தில் கூஃபாவின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்மார்(ரலி) அவர்களை ஒருவன் ஒற்றைச் செவியன் எனக் கூறினான். அவனை அம்மார்(ரலி)அவர்கள் தண்டிக்கவில்லை. ஹுதைபத்துல் யமான்(ரலி) அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார்(ரலி) அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார்(ரலி) இருப்பார் எனக் கூறினார்கள். ஹிஜ்ரத்க்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார்(ரலி) இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்)அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள். (புகாரி)




அம்மார்(ரலி) அவர்கள் அக்கிரமக்காரர்களால் கொல்லப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒருமுறை சுவர் இடிந்து விழுந்து மூர்ச்சையான அம்மார்(ரலி) அவர்களைக் குறித்து நபித்தோழர்கள் அவர் இறந்து விட்டதாக எண்ண மீண்டும் நபி(ஸல்) அவர்கள் சுமையாவின் மகனை அக்கிரமக் காரர்கள் கொலை செய்யப் போகின்றனர் எனக் கூறினார்கள். ஹிஜ்ரி 37 ல் அலி(ரலி) அவர்களுக்கும் முஆவியா(ரலி) அவர்களுக்கும்மிடையே நிகழ்ந்த ஸிப்பீன் போரில் அலி(ரலி)அவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்(ரலி)அவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை கான சுவனம் ஆசைப்படுகிறது-திர்மிதியில் காணப்படும் நபி மொழி.




படிப்பினை :




உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? 3:142 வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அம்மார்(ரலி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினை ஈமானிய உறுதியே. ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றது முதல் இஸ்லாம் மேலோங்கவேண்டும். சத்தியம் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தம் உடலாலும், உள்ளத்தாலும் போராடி தமது 93 வது வயதிலும் வாளேந்திப் போர் புரிந்து தம் உயிரையும் அல்லாஹ்விற்காகத் துறந்த தியாகச் செம்மல் அம்மார்(ரலி) அவர்களைப் போன்றே நாமும், நம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அல்லாஹ்விற்காகவே அர்பணிக்கக் கூடிய மக்களாக நம்மை ஆக்கியருள வல்ல நாயனிடமே பிரார்த்திப்போம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஆதம்(அலை)
வரலாறு சுருக்கம்:

ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுவர்தான் நபி ஆதம்(அலை) அவர்கள். அல்லாஹ் நபி ஆதம்(அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக இப்பூவுலகிற்கு அனுப்பி கண்ணிப்படுத்தினான். அவனால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை நபி ஆதம்(அலை) அவர்களுக்கு கற்று கொடுத்தான். அவ்வாறு கற்றுக்கொடுத்த பொருட்களின் பெயர்களை அதனை அறியாத மலக்குகள் முன்பு விவரிக்குமாறு பணித்தான். பின்னர் மலக்குகளை நபி ஆதம்(அலை) அவர்களுக்கு சிரம்பணிய அல்லாஹ் உத்தரவிட்டான். மலக்குகளுடன் இருந்த இப்லீஸ் தவிர.

16.5.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உமர் (ரலி) அவர்கள்
உமர் (ரலி) அவர்கள்

உமர் (ரலி) அவர்களது வாழ்க்கை எந்தளவு இறையச்சம் மிகுந்ததாக இருந்தது என்பது பற்றி கீழ்க்கண்ட சம்பவம் நமக்கு மிகுந்த படிப்பினையாக உள்ளது. ஸூபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், என்னுடைய சுற்றுப்புறங்களின் மீதும், அவற்றின் தாக்குதல்கள் என்னைப் பாதித்து விடாத அளவுக்கு, நான் மிகவும் கவனமுள்ளவனாக இருப்பேன், அப்படி இருக்கக் கூடிய நிலையில்,

உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அளித்த துன்பத்தைப் போல வேறு எந்தத் துன்பமும் எங்களைப் பாதித்ததில்லை. உமர் (ரலி) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், இ'h ஆகிய நேரத் தொழுகைகளை முன்னின்று நடத்தியது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அளித்துக் கொண்டிருந்த நிலையில், அன்று அதிகாலை பஜ்ர் நேரம், ஒரு மனிதர் வித்தியாசமான முறையில் அந்த பஜ்ர் நேரத் தொழுகைக்கான தக்பீர் கூறினார். (ஆனால் அவர் உமர் இல்லை என்பதை அவரது குரல் மூலமாக உணர்ந்து கொண்டோம்.).; எங்களுக்குத் தொழுகை வைத்தவர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்பதை அறிந்து கொண்டோம். பின் மக்கள் தொழுது முடித்ததும், மூஃமின்களின் தலைவர் உமர்(ரலி) அவர்கள் தாக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொழுகையை முடித்திருந்த நிலையில், உமர் (ரலி) அவர்கள் இன்னும் தொழுகையை நிறைவேற்றியிருக்காத நிலையில், இரத்தம் அவர்களது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த நிலையில், ஓ! மூமின்களின் தலைவர் அவர்களே! தொழுகை! தொழுகை! (நீங்கள் இன்னும் தொழவில்லையே!) என்று மக்கள் கூறவும், ஆம்! இறைவன் மீது சத்தியமாக! தொழுகையை மறந்தவனுக்கு இஸ்லாத்தில் எந்தவிதப் பங்கும் கிடையாது என்று கூறி விட்டு, தொழுகைக்காக எழுந்திருக்க முயற்சி செய்தார்கள், ஆனால் இரத்தம் அதிகமாக வழிந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து, நீங்கள் அறிந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ததா? என்று கேட்டார்கள். அலி பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நாங்கள் அறிந்திருந்தாத நிலையில் தான் நடந்தது, இறைவன் மீது சத்தியமாக! இறைவனுடைய படைப்பினங்களில் உங்களைத் தாக்கியவர் யார் எனபதை நாங்கள் அறிய மாட்டோம் என்று பதில் உரைத்தார்கள். உங்களுக்காக நாங்கள் எதையும் செய்யத் தாயாராக இருக்கின்றோம். உங்களது இரத்தம் எங்களது இரத்தமாகும். (அதாவது உங்களைத் தாக்கியவர், உங்களை மட்டும் தாக்கவில்லை எங்களையும் தாக்கியுள்ளார். உங்கள் உடம்பிலிருந்த வழிந்து கொண்டிருப்பது உங்களது இரத்தம் மட்டுமல்ல, எங்களது இரத்தமும் இணைந்தே வழிகின்றது என்ற பொருள்படி அலி (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்). பின் உமர் (ரலி) அவர்கள் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து, வெளியில் சென்று மக்களுக்கு (நடந்திருப்பவைகள் பற்றிய) உண்மையைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். வெளியில் சென்று விட்டுத் திரும்பிய அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்: அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறி, சொர்க்கத்திற்கான நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நற்செய்தியை உமர் (ரலி) அவர்ளுக்கு அறிவித்தார்கள். இறைவன் மீது சத்தியமாக! ஆணோ அல்லது பெண்ணுக்குரியதேர்! அசைகின்ற ஒவ்வொரு கண்களும் உங்களுக்காக கண்ணீரைச் சொறிந்து அழுது கொண்டிருக்கின்றன. கண்ணீரைச் சிந்தாத, அழாத கண்களை என்னால் காண முடியவில்லை. ஒவ்வொருவரும் உங்களுக்காக தங்களது தாய்மார்களையும், தந்தைமார்களையும் அர்ப்பணம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். நெருப்பு வணங்கியான முகீரா பின் சுப்பாவினுடைய அடிமை தான் உங்களைத் தாக்கியது என்பதை அறிந்து கொண்டோம், அவனும் இன்னும் பன்னிரண்டு நபர்களும் இப்பொழுது இரத்தம் வழிந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், அவர்களது நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை இறைவன் திர்மானித்துக் கொள்வான் என்று அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்து விட்டு, ஓ! அமீருல் முஃமினீன் அவர்களே! சொர்க்கம் உங்களுக்கு! என்று நாங்கள் வாழ்த்துகின்றோம் என்று கூறியவுடன், இத்தகைய வார்த்தைகள் மூலம் யார் உங்களை வழிகெடுத்தது ஓ! இப்னு அப்பாஸ்! அவர்களே! இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள், ஏன்? நான் அவ்வாறு கூறக் கூடாது, இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியது எங்களுக்கு பலத்தைத் தந்தது, உங்களது ஹிஜ்ரத் வெற்றியைத் தந்தது, உங்களது ஆட்சி நீதி வழுவாத ஆட்சியாக இருந்தது, ஆனால் நீங்கள் அநீதியான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றீர்கள். இப்னு அப்பாஸ் அவர்களே! சற்று முன் என்னிடம் கூறியவைகளை, நாளை மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் எனக்காக நீங்கள் சாட்சி சொல்வீர்களா?! அலி பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக! ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த வார்த்தைகளை நாளை மறுமை நாளிலே இறைவன் முன்னிலையில் உங்களுக்காக நாங்கள் சாட்சி சொல்வோம் என்று கூறினார்கள். பின் உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய மகன் அப்துல்லாவைப் பார்த்து, என்னுடைய மகனே! என்னுடைய நெற்றியை இந்த நிலத்தில் வைப்பீராக! என்று கூறினார்கள். இந்த சம்பவம் நடந்து முடிந்து, பின்பு ஒரு நாள் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். என்னுடைய தந்தையார் தாக்கப்பட்டுக் கிடந்த அந்த வேளையில், முதலில் அவர்கள் அவர்களுடைய நெற்றியைத் தரையில் வைக்குமாறு என்னை நோக்கிக் கூறினார்கள். அந்த பரபரப்பான அந்த நிலமையில், என் தந்தையார் என்னை நோக்கிக் கூறியவற்றை நான் கவனிக்கவில்லை. எனவே மீண்டும் அவர்கள் என்னை நோக்கி, அவர்களது நெற்றியைப் நிலத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார்கள். அப்பொழுதும் நான் அதைச் செய்யவில்லை. மீண்டும் மூன்றாம் முறையாக அவர்கள் என்னை நோக்கி, உன்னுடைய தாயார் உன்னை இழப்பாளாக! என்னுடைய நெற்றியை நிலத்தில் வை! என்று எனக்கு உத்தரவிடவும், சுயநினைவற்று நான் நின்றிருந்ததை விட்டும் உணர்வு பெற்றவனாக, என்னுடைய தந்தையின் நெற்றியை நிலத்தில் வைத்தேன். இறைவன் என்னை மன்னிக்கா விட்டால், உமருக்குக் கைசேதமே! உமருடைய தாயுக்கும் கைசேதமே! என்று கூறியவர்களாக, அவர்களது கண்களை மண் மறைக்கும் அளவுக்கு உமர் (ரலி) அழுதார்கள்.




அடுத்து அமீருல் முஃமினீன் என்று நம்மால் மிகவும் கண்ணியமாக அழைக்கப்படும் உமர் (ரலி) அவர்களது சம்பவம் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு படிப்பினையாகும். உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டு மரணதருவாயில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கச் செல்கின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இருந்த நிலையைப் பார்த்த அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், நம்பிக்கையாளர்களின் தலைவரே! யா அமீருல் முஃமின் அவர்களே!! நீங்கள் நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! மக்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த பொழுது நீங்கள் நாயகம் ரசூலே கரீம் முஹம்மது (ஸல்) அவர்களது திருக்கரங்களில் நம்பிக்கை தெரிவித்து இஸ்லாத்தில் நுழைந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்களை அந்த நிரகாரிப்பாளர்கள் தாக்கிய பொழுது, முஹம்மது (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் நின்று போர் புரிந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களுடன் நல்லமுறையில் இருந்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தங்களது மரணத்தைச் சந்தித்துக் கொண்டார்கள், நீங்கள் கலீபாவாக நியமிக்கபட்ட பொழுது எந்த மனிதரும் உங்களுக்கெதிராக எழுந்ததில்லை. இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், நீங்கள் கூறியவற்றைத் திருப்பிக் கூறுங்கள் என்று கூறி விட்டு, உங்களை யார் இந்த தப்பெண்ணம் கொள்ளச் செய்தானோ அவனே வழிகேடன் என்று கூறி விட்டு, இந்த பூமி முழுவதும் தங்கமும் வெள்ளியும் எனக்குச் சொந்தமாக இருப்பின், வரவிருக்கின்ற வேதனைக்கெதிராக நான் அவற்றைக் கைமாறாகக் கொடுக்கத்து விடுவேன் என்று பதில் கூறினார்களாம






21.4.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கஅப்பின் மாலிக் (ரலி)
நபி தோழரின் நற்பண்பு

நபி அவர்கள் முஸ்லிம்களைத் தபூக் போருக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, புறப்படத் தயாராக வேண்டியது தான் என்று நானும் எண்ணினேன். ஆனால் சோம்பல்பட்டுக் கொண்டிருந்தேன். இதற்குள் என்ன அவசரம்? நேரம் நெருங்கும் பொழுது தயாராகிக் கொள்வோம். அதற்கு வெகு நேரமா பிடிக்கப் போகின்றது? என்று எண்ணினேன். இப்படியே புறப்படுவதற்குத் தாமதமாகிக் கொண்டு போயிற்று. இறுதியில்

27.3.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சுவனத்துச் ஜோடிப் புறாக்கள்!
அபுதல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி)

ஜைத் இப்னு ஸஹ்ல் அந்நஜ்ஜாரி என்ற அபுதல்ஹா (ரலி) அவர்கள் ஒரு சின்னதொரு செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். அவரைச் சந்தோஷத்திலாழ்த்திய அந்தச் செய்தி என்னவென்றால், அர்ருமைஸா பின்த் மில்ஹான் அந்நஜ்ஜாரி என்ற, உம்மு சுலைம் (ரலி) என்றும் அழைக்கப்படக் கூடிய அந்தப் பெண்மணி விதவையாக இருக்கின்றார் என்றும், இப்பொழுது தனக்கேற்ற மணமகன் ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்றும் கேள்விப்படுகின்றார்.

29.1.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அபுபக்கர் (ரலி) அவர்களின் வாழ்விலிருந்து
அபுபக்கர் (ரலி) அவர்களின் வாழ்விலிருந்து 
இஸ்லாத்திற்கு முன்பு..!
இஸ்லாத்திற்கு முந்தைய நாட்களில் அபுபக்கர் (ரலி) அவர்களின் இயற் பெயராக அப்துல் கஃபா என்ற பெயர், இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதன் பின் மாற்றம் செய்யப்பட்டு, அப்துல்லாஹ் என்றழைக்கப்பட்டார். ஆனால் இன்றைக்கு இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலும் சரி, அதன் பின்னாளிலும் சரி அவரது இயற் பெயர் மறைந்து, அபுபக்கர் சித்தீக் என்றழைக்கப்பட்டார்கள்.

20.12.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை ஆயிஷா (ரலி)
அன்னை ஆயிஷா (ரலி)
அன்னையின் சிறப்புக்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரலி) ஆவார்கள்.
திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களின் பொருட்டால் பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும்

21.9.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)

இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா ஆட்சித் தலைவரான உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் மகள் தான் அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்கள்.
, ,