குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

20.11.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்லாஹ்வும் அவனது தூதரும்
almighty-arrahim.blogspotcom
(நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்குர்ஆன் 3:31


(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால்அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். அல்குர்ஆன் 48:16


அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றை யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே. அல்குர்ஆன் 58:13, 3:33

நீங்கள் இறை நம்பிக்கையுடையோர் (மூஃமீன்)களாயின் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 8:1

(மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 24:56

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான பாக்கியத்தை வெற்றிகொண்டு விட்டார். அல்குர்ஆன் 33:71

நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அவன் உங்களது நற்செயல்களில் எதனையும் உங்களுக்கு குறை வைக்கமாட்டான். அல்குர்ஆன் 49;14

இறைனம்பிக்கைக் கொண்டோர்(மூஃமீன்)களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; மேலும் அவனது தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் பினக்கு ஏற்பட்டு விட்டால், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்குமிகவும் சிறப்பான அழகான முடிவாகும். அல்குர்ஆன் 4:59

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிளில் பிரவேசிக்கச் செய்வான்; அங்கு கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் இது மகத்தான பாக்கியமாகும். அல்குர்ஆன் 4:13

, ,